இப்படியும் நடக்கலாம் ...!
அது ஒரு
தொடர்வண்டி நிலையம்!
அவன் எங்கோ போகவேண்டும்
அவளும் வந்திருந்தாள் வழியனுப்ப!
திருமணம் ஆன புதிது!
விட்டுச்செல்ல மனமில்லை!
விலகி இருக்கவும் திறனில்லை!
கண்கள் கலங்கவும்,
கைகள் நடுங்கவும்,
ஒருவரை ஒருவர்
உயிராய் உருகி
ஒன்றிப்போய் பார்க்க்கிறார்கள்.
அந்தச்சிறு அணைப்பிலேயே
அழுத்தம் கொடுத்து
சொல்லுகிறான்.
கவலைப்படாதே!
நிறைய நாட்களில்லை!
சீக்கிரம் வந்துவிடுவேன்.!
நீங்கள் செல்வதே
எனக்கு நரகம்தான்!
அப்புறம் என்ன
கொஞ்சம் ,நிறைய ?
கண்ணீர் உகுத்து
கரைகிறாள் அவள்!
வண்டி புறப்படும்
நேரம் வர
மனமின்றி அவனும்
ஏறி விட
புறப்பட்ட வண்டியையே
நீர் படரப் பார்க்கிறாள்!
அவ்விடத்திலேயே நின்று
ஆசுவாசப்படுத்த,
வண்டியும் சென்றுவிட..
அதிசயமாய் எதிரில்
பெட்டியுடன் அவன்!
ஓடிப்போய் முத்துகிறாள்!
என்னவனே!
இவ்வளவு காதலா?
என்னைவிட மனமிலையா?
நான் என்ன தவம் செய்தேன்?
இப்படி நீ இருப்பதால்தான்
இதயம் முழுதும் நிறைகின்றாய் !
இறுக்கமான முகத்துடன்
அவன் சொன்னான்..!
அதெல்லாம் சரி!
வண்டியின் டிக்கெட்டை
உன் பைக்குள் வைத்திருக்கிறாய் !
இனியெப்படி போவது?
ஹி..ஹி.. கவிக்கதை சூப்பரா இருந்தாலும் லேபிள்ல இருக்குற ரெண்டாவது ஐட்டம்தான் கரெக்டா பொறுந்துது.. :))))
ReplyDeleteதமிழாசிரியர்கள் திட்டவேண்டாம்.. போன பின்னூட்டத்தோட கடைசி வார்த்தை "பொருந்துது" :)))
ReplyDelete:-)..ஜோக்-கவிதையா இது! நல்லாருக்கு!!
ReplyDeleteஎம்பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா ஜோக்குதானே இது?
ReplyDeleteமுதல் பார்ட்டு நம்ம அனுபவிச்ச கதை. இரண்டாம் பகுதி ஹிஹிஹிஹி துக்கத்தை மறைக்க
ReplyDeleteஅட!
ReplyDeleteஅன்புடன் அருணா
திருமணம் ஆன புதிது!
ReplyDeleteவிட்டுச்செல்ல மனமில்லை!
விலகி இருக்கவும் திறனில்லை!
இறுக்கமான முகத்துடன்
அவன் சொன்னான்..!
எல்லாம் ஒரு லவ்வுதான்
உயிராய் உருகி
ReplyDeleteஒன்றிப்போய் பார்க்க்கிறார்கள்.
அப்புறம் என்ன
கொஞ்சம் ,நிறைய ?
ஆசுவாசப்படுத்த,
வண்டியும் சென்றுவிட..
நன்று,,,, மிக நன்று....
:))
ReplyDeleteபுதுக்கோட்டையில் இருந்து தினமும் திருச்சிக்கு ஒரு மணி நேரம் போய்ட்டு வர்றதுக்கு இவ்வளவு பில்டப்பா??
ReplyDelete:))))))))))))))))
கவிதையையும் பின்னூட்டங்களையும் ரசித்தேன்.
ReplyDelete/
ReplyDeleteபுதுகை.அப்துல்லா said...
புதுக்கோட்டையில் இருந்து தினமும் திருச்சிக்கு ஒரு மணி நேரம் போய்ட்டு வர்றதுக்கு இவ்வளவு பில்டப்பா??
:))))))))))))))))
/
ripeettu
வாங்க வெண்பூ ...!
ReplyDeleteகவிக்கதைன்னு போட்டதும் ஒரு மொக்கைதானே!
ஹி..ஹி..!
வாங்க சந்தனமுல்லை!
ReplyDeleteநன்றிங்க!
//வடகரை வேலன் said...
ReplyDeleteஎம்பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா ஜோக்குதானே இது?//
வாங்க வடகரை வேலன்.
இல்ல...என் வூட்டுக்கார் ஊருக்குப்போயிட்டார்..!
:))
//தமிழ் பிரியன் said...
ReplyDeleteமுதல் பார்ட்டு நம்ம அனுபவிச்ச கதை. இரண்டாம் பகுதி ஹிஹிஹிஹி துக்கத்தை மறைக்க//
வாங்க தமிழ்பிரியன்..!
இதை எழுதினதே 2வது பார்ட்டுக்காகத்தான்..!
:)
//அன்புடன் அருணா said...
ReplyDeleteஅட!//
வாங்க அருணா..!
அடவுக்குள்ள இருக்கும் ஆச்சர்யத்துக்கு நன்றிங்க!
வாங்க SUREஷ்..!
ReplyDeleteபிரிச்சு மேஞ்சிருக்கீங்க!
நன்றிங்க!
அட...ராம் சார்..! எப்படி இருக்கீங்க!
ReplyDeleteரொம்ப நாளாச்சு வூட்டுப்பக்கமே காணோம்..!
அடிக்கடி வந்து போங்க! (அடிக்கடி பதிவும் போடறேன்.)
ஸ்மைலிக்கு நன்றி! :)
//புதுகைத் தென்றல் said...
ReplyDeleteகவிதையையும் பின்னூட்டங்களையும் ரசித்தேன்.//
வாங்க புதுகைத்தென்றல்..!
நன்றிங்க!
அப்துல்லா...! இது டெம்ப்ளேட் மாதிரி இல்ல??
:)))))
//புதுகை.அப்துல்லா said...
ReplyDeleteபுதுக்கோட்டையில் இருந்து தினமும் திருச்சிக்கு ஒரு மணி நேரம் போய்ட்டு வர்றதுக்கு இவ்வளவு பில்டப்பா??
:))))))))))))))))//
வாங்கப்பூ!
அடக்கெரகமே!
ஒரு தடவைதான்ப்பா அந்த ரயிலில் போயிருக்கேன்.
ச்சும்மா கலாய்ச்சு வைக்கலாமேன்னு போட்டேன்..!
அம்புட்டுதேன்..!
:)
//மங்களூர் சிவா said...
ReplyDeleteripeettu//
வாங்க சிவா!
:)
சொந்தமா பின்னூட்டம் போடக்கூட நேரமில்ல???
நீங்கதான் கவிதை நாயகனோ??
:))))))
//திருமணம் ஆன புதிது!
ReplyDeleteவிட்டுச்செல்ல மனமில்லை!
விலகி இருக்கவும் திறனில்லை!
கண்கள் கலங்கவும்,
கைகள் நடுங்கவும்,
ஒருவரை ஒருவர்
உயிராய் உருகி
ஒன்றிப்போய் பார்க்க்கிறார்கள்.
//
திருமணம் முடிந்து சில தினங்களிலேயே மனைவியை தனியே விட்டு வெளிநாடு செல்பவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..