டெக்னாலஜி குலோத்துங்கன் - 5
இளவரசி என்ன யோசனை சொல்லவேண்டும் தந்தையே!?
மன்னர் வாம்மா..இளவரசி! உன் லேப்டாப் சரியாகிவிட்டதா..அந்த அடிமை வந்தானா?
இளவரசி வந்தார்..நன்றாக லேப்டாப்பை ரிப்பேர் செய்தார் (மனதுக்குள்)(என் மனத்தைத்தான் கெடுத்துவிட்டுப்போய்விட்டார்)
மன்னர் மிக்க மகிழ்ச்சி!
இளவரசி அது கிடக்கட்டும். என்னவோ யோசனை என்று அன்னையிடம் பேசிக்கொண்டிருந்தீர்களே அது என்ன?
மகாராணி : அதுவா! உன் தந்தை தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடிப்பது பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார்.
இளவரசி என்ன தும்பு? என்ன வால்? ஒன்றும் புரியவில்லையே!
மன்னர் இவளுக்கு எப்போது நேரம் கிடைத்தாலும் என்னை ஓட்டுவதில்தான் இன்பம்! அது ஒன்றுமில்லை மகளே! நாட்டில் உணவு உற்பத்தியை பெருக்கலாம் என்று யோசித்தேன். அதனைச்செயல்படுத்த தகுந்த ஆள் இல்லை..அதான்..!
இளவரசி நீங்கள் எப்போதுமே இப்படித்தான் அப்பா! கையிலேயே ஆளை வைத்துக்கொண்டு ஊரெங்கும் அலைவீர்கள்!
மன்னர் நீ யாரைச்சொல்கிறாய்? உங்கள் அம்மாவையா? அவளுக்கு உணவு உண்ணத்தான் தெரியுமே அன்றி உற்பத்தி பற்றிய யோசனைகள் எதுவும் தெரியாது!
இளவரசி அய்யோ ! தந்தையே! நான் சொல்லவந்தது வேறொரு ஆளைப்பற்றி!
மன்னர் வேறொரு ஆளா? யாரது?
இளவரசி நீங்கள் தண்டனை கொடுத்து என் லேப்டாப்பை சரி செய்ய வந்தாரே திரு.புவன் அவர்கள் -அவர்தான்!
மன்னர் யார்!? அரசுக்கு வருமானவரி கட்டாமல், என்னைத்திட்டிக்கொண்டே சென்றானே அவனா?
இளவரசி அவர் பக்க நியாயத்தை நீங்கள் யோசிக்கவே இல்லை !
மன்னர் கிடையவே கிடையாது! அவன் திமிர் பிடித்தவன். அவனை என் பக்கத்தில் வைத்துக்கொண்டால், நாட்டில் ஒரு புரட்சியையே கிளப்பிவிடுவான்.
மகாராணி ஆமாம் ஆமாம் ! நம் மன்னர் புத்திசாலி! மொபைல் மணிவாசகம் போன்ற மொக்கைகளைத்தான் தம் அருகில் வைத்துக்கொள்வார் நமது அரசர்! அவனைப்போன்ற நல்லவர்களை வைத்துக்கொள்வாரா? அவனை வைத்து பின்னர் நாடு விளங்கிவிட்டால் என்னாவது?
மன்னர் போதும்.எப்போதுபார்த்தாலும் என்னை கிண்டல் செய்துகொண்டே இருக்காதே! அவன் நல்லவன் என்று உனக்கெப்படித் தெரியும்.?
மகாராணி என் மகள் ஆட்களின் தரம் அறிவதில் வல்லவள்! சைக்காலஜி படித்திருக்கிறாள். அவள் சொன்னால் கண்டிப்பாக ச்சரியாகத்தான் இருக்கும்.
மன்னர் ஓ..அப்படியா? சரி..இளவரசி.! அவன் எப்படி என் பிரச்சனைக்கு உதவுவான் என்று சொல்லமுடியுமா?
இளவரசி அவரையே அழைத்துப் பேசுங்களேன்.
மன்னர் அதுதான் சரி! நாளைக்காலை அரசவை கொலுமண்டபத்துக்கு அவனை அழைத்து வரும்படி எல்லா காவலர்களுக்கும் எஸ் எம் எஸ் செய்துவிடு! ஆனால் அவனை நான் மன்னிப்பதாக இல்லை ! சரியா!?
இளவரசி சரி தந்தையே! மிக்க நன்றி!
காட்சி 7
(இளவரசி, புவன்)
(செல்போன் மணி அடிக்கிறது)
புவன் வணக்கம் ! புவன் பேசுகிறேன்!
இளவரசி வணக்கம் ! நான் இளவரசி பேசுகிறேன்!
புவன் : வணக்கம் ..சொல்லுங்கள் ! இதற்குமுன் இரண்டு மிஸ்டுகால் விட்டதும் நீங்களதானா?
இளவரசி ஆம். நான் தான் ! ஏன் நீங்கள அழைக்கவில்லை!
புவன் எனக்கு உங்கள் எண் என்று தெரியாது. மேலும் இளவரசியே ஆனாலும் பெண்கள் மிஸ்டு கால் விடுவதை நிறுத்தமாட்டீர்கள் போல!
இளவரசி சரி ! சரி ! என் தந்தையிடம் பேசி சம்மதம் வாங்கி விட்டேன்.
புவன் அதற்குள்ளாகவா? அவர் நம் திருமணத்துக்கு சம்மதித்துவிட்டாரா?
இளவரசி அய்ய! ஆசையைப்பாரேன்! நான் சொன்னது நீங்கள் நாட்டை வளப்படுத்த சொல்லப்போகும் யோசனைகளுக்கு !
புவன் ஓ..அதுவா? சரி ..சரி!
இளவரசி நாளைக்காலை ஷார்ப்பாக 9 மணிக்கு அரண்மனை கொலுமண்டபத்தில் உங்கள் யோசனைகள் அடங்கிய ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டுடன் போங்கள் வெற்றி நிச்சயம்.!
புவன் கண்டிப்பாக! தங்கள் உதவிக்கு இந்த நாடே நன்றி சொல்லும்!
இளவரசி தங்கள் உதவிக்குத்தான் நாடு நன்றிசொல்லும்.
புவன் சரி..சரி..வேலையைப்பார்க்கிறேன். பிறகு பேசலாம்!
இளவரசி ஓக்கே ! வாழ்த்துக்கள்!
(கடைசி பாகத்தை நோக்கிய பாய்ச்சலில்....)
மீ தி 1ஸ்ட்
ReplyDeleteமொக்கை சுரேகா வாழ்க வாழ்க!
ReplyDeleteநல்லாப் போகுது - சீக்கிரம் முடிங்க - நல்வாழ்த்துகள்
ReplyDelete