நம்புங்க டீச்சர்!

அந்தத்தனியார் பள்ளியில் போய் 9ம் வகுப்பில் சேர்கிறார்கள் இரண்டு சிறுமிகள். முதல் நாள் ! முதல் வகுப்பு!

ஆங்கில ஆசிரியை வருகிறார்.. அனேகமாக எல்லோரும் அந்தப்பள்ளியிலேயே 8ம் வகுப்பு படித்துவிட்டு 9ம் வகுப்புக்கு வரும் மாணவிகள். புதிதாகச்சேர்ந்த சொற்ப மாணவிகளை எழுந்து அறிமுகப்படுத்திக்கொள்ளச்சொல்கிறார் ஆசிரியை ! அதில் இந்த இருவரைத்தவிர மீதமுள்ளவர்கள் எல்லோரும் முன்னர் படித்ததாக,ஒரு தனியார் பள்ளியின் பெயரைச்சொல்கிறார்கள். இவர்கள் முறை வரும்போது..எழுந்து தங்கள் பெயர் சொல்லிவிட்டு...8ம் வகுப்பு படித்தது...அரசு நடுநிலைப்பள்ளி என்று சொல்கிறார்கள்.

உடனே அந்த ஆசிரியை எகத்தாளமாக சிரிக்கிறார். கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சுட்டு வந்துட்டு...எந்த நம்பிக்கைல இந்த் ஸ்கூல்ல வந்து சேந்த? எங்க ஸ்டாண்டர்ட் என்னன்னு தெரியுமா?

இல்ல டீச்சர்..நாங்க நல்லா படிப்போம்.!

ஆமா..கிழிச்சீங்க! எங்க நான் ஒரு கேள்வி கேக்குறேன் பதில் சொல்லுங்க பாப்போம். ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்!
ஆங்கில உயிரெழுத்துக்கள் எல்லாம் வர்ற மாதிரி ஒரு வார்த்தை சொல்லு!

EDUCATION என்று பட்டென்று பதில் வருகிறது..

ஆமா.. இது மட்டும் சொல்லிக்கொடுத்திருக்காங்க...அந்த ஸ்கூல்ல இங்கிலீஷ் டீச்சர் மட்டும் நல்லா நடத்தி இருப்பாங்க! போகப்போக பாப்போம்! ஒரு கேள்விக்கு பதில் சொல்லிட்டா புத்திசாலின்னு அர்த்தமாயிடுமா?
அமிலமாய்த்தெரிக்கின்றன வார்த்தைகள்!

அடுத்த பாட நேரம்...
இப்போது கணித ஆசிரியை..

முதலில் எல்லாம் அச்சுப்பிறழாமல்... இதே விசாரிப்புகள், இதே நக்கல்கள்...இதே சாடல்கள்..!

கணிதம் நடத்த ஆரம்பித்து....ஏதோ ஒரு வழிமுறையில் ஆசிரியை திணறி நின்று....கரும்பலகையையே முட்டிக்கொண்டு நிற்க...

அழகாக எழுந்து சென்று...டீச்சர்..என்று அருகில் சென்று அழைத்து..அவர்கள் செய்த தவறைச்சுட்டி அந்த இடத்தில் திருத்துகிறாள் அந்த அரசுப்பள்ளியிலிருந்து வந்த பெண்ணில் ஒருத்தி!

இவரும் அதையே சொல்கிறார்.... ஆமா..உங்க கவர்மெண்ட் ஸ்கூல்ல கணக்கு டீச்சர் மட்டும் ஒழுங்கா நடத்தி இருப்பாங்க!

ஏற்கனவே அரசுப்பள்ளி என்றால் மட்டம் என்பதுபோல் அனைவரும் பார்த்திருக்க...இரண்டாவது ஆசிரியையும் இவ்வாறு கூறுவதைக்கேட்ட மறுவிநாடி...அந்தப் பெண் பிள்ளைகள் இருவரும் ஓ..என அழுக ஆரம்பிக்கின்றனர்...

அன்று முழுவதும்...பல்லைக்கடித்துக்கொண்டு ஓட்டிவிட்டு...மாலை நேராக அவர்கள் சென்ற இடம்..!?

(தொடரும்)


Comments

  1. இப்ப்டியெல்லாம் ஆசிரியர்கள் இருக்கக் கூடாது என்பதுதான் என் வேண்டுதல்.

    ReplyDelete
  2. if it was a story , then it will be good lesson . but true it can't be digest. in real, teachers are not treat like that. any how ur imagine is good.

    ReplyDelete
  3. அன்பின் சுரேகா

    கதை அருமை - தொடரும் வர வேண்டிய இடத்தில் வந்திருக்கிறது - பொறுத்திருந்து பார்ப்போம்

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  4. வாங்க ஏஞ்சல்..

    இடம்..இதோ அடுத்த பாகத்தில் சொல்றேன்.

    ReplyDelete
  5. வாங்க அருணா...

    இருக்காங்க என்பதுதான்
    நிதர்சனம்..!

    ReplyDelete
  6. வாங்க மதுரை சரவணன்...



    லேபிள் பாருங்க..நடப்புன்னு போட்டிருக்கேன்.

    இது சத்தியமான உண்மைங்க! இது கதை இல்லை! அடுத்த பாகத்தில் மத்த விஷயங்களைப்பாருங்க!

    ReplyDelete
  7. வாங்க சீனா சார்..

    இது கதை இல்லை சார்...உண்மையில் நடந்தது. !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!