ஒரு நல்ல செய்தி!
சிறுவயதில் எல்லோருக்கும் அறிவுரை சொல்லும் சிலரைப்பார்த்திருக்கிறேன். அப்படிச் சொல்பவர்கள், தான் சொல்லியபடி நடந்துகொள்கிறார்களா என்றால், அதுவும் இருக்காது. ஆனால் தன் கடமையை விடாமல் செய்வார்கள். அறிவுரை கேட்டவர்கள் உண்மையிலேயே அதை எடுத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்து, வளர்ந்துவிடுவார்கள். அறிவுரை சொன்னவர், இன்னும் சொல்லிக்கொண்டிருப்பார். வளர்ந்தவர்கள் மீண்டும் அவரிடம் வந்து கேட்பார்கள். அதைப்பார்த்துவிட்டு , அறிவுரை சொல்வதில் ஒரு போதை ஏற்பட்டது. ஆனால் ஒரு சிறிய மாற்றமாக, ’நாமும் வளரணும், அடுத்தவங்களுக்கும் அறிவுரை சொல்லணும்’ என்று எண்ணிக்கொண்டு, சின்னச்சின்ன விஷயங்களில் சரியாக இருக்க ஆரம்பித்தேன்.
எது சரி, தவறு என்று பல்வேறு புத்தகங்கள் கற்றுக்கொடுத்தன. எப்படி கற்றுக்கொடுக்கவேண்டுமென்று ஜேஸிஐ ( Junior chamber International) மிகவும் உதவியது.தன்னம்பிக்கைப் பயிற்சியாளனாக 8 ஆண்டுகள் ஓடிவிட்டது. இன்றுவரை என்னைச் சரி செய்துகொண்டுதான் இருக்கிறேன். . யாருக்காவது அறிவுரை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். என் குறை என்று எண்ணிய -அதிகம் பேசும்- குணத்தை ,பல்வேறு தலைப்புகளில் நாள்கணக்கில் பேசும் அளவுக்கு நிறையாக , வளர்த்துக்கொள்ள முடிந்திருக்கிறது. சொல்லும் விஷயங்களையே எழுத ஆரம்பித்தபோதுதான் , நாகரத்னா பதிப்பக உரிமையாளரும் நமது பதிவருமாகிய குகன் அவர்கள், ஒரு சுயமுன்னேற்றப்புத்தகம் எழுதுங்கள் என்று பணித்தார். அதன்படி , சின்னச்சின்ன கட்டுரைகள் அடங்கிய ஒரு புத்தகம் இப்போது தயார்!
ஆம் நண்பர்களே! ‘நீங்கதான் சாவி!’ என்ற தலைப்பில் , நாகரத்னா பதிப்பகம் வெளியிடும் எனது புத்தகம் வரும் 25ம் தேதி , சனிக்கிழமை மாலை 4:30க்கு , நமது டிஸ்கவரி புத்தக அரங்கில் வெளியிடப்பட இருக்கிற்து. புத்தகத்தை திரு.சீமான் அவர்கள் வெளியிடுகிறார். அவருக்கு அடுத்ததாக 5.30க்கு மணிக்கு எம்.ஜி.ஆர் நகரில் ஒரு பொதுக்கூட்டம் இருப்பதால் குறித்தநேரத்தில் கூட்டம் ஆரம்பித்துவிடும்.
தாங்கள் அனைவரும் , கண்டிப்பாக வந்திருந்து விழாவினை சிறப்பித்துத்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
முகவரி:
டிஸ்கவரி புக் பேலஸ்.
எண்:6 , மஹாவீர் காம்ளக்ஸ்
முனுசாமி சாலை,
கே கே நகர் மேற்கு. சென்னை- 78
செல்- 9940 44 6650
எண்:6 , மஹாவீர் காம்ளக்ஸ்
முனுசாமி சாலை,
கே கே நகர் மேற்கு. சென்னை- 78
செல்- 9940 44 6650
வாழ்த்துக்கள் சுரேகாஆஆஆஆஆஆ
ReplyDeleteவாவ்! வாழ்த்துக்கள்டா தம்பீ. அசத்து சொல்லுறேன். :))
ReplyDeleteவாழ்த்துக்கள் சுரேகாஜி..!
ReplyDeleteவாழ்த்துகள் சுரேகா.
ReplyDeleteவாழ்த்துக்கள் சுரேகா.. விழா அன்னிக்கு எனக்கான சாவியை வாங்கிக்கறேன் ....
ReplyDeleteHURRRRRRRRRRRRRRRRRAYYYYYYY!
ReplyDeleteவாழ்த்துக்கள்யா.. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு!
வாழ்த்துக்கள் சுந்தர்ஜி!
ReplyDeleteவாழ்த்துக்கள் சுரேகா.
ReplyDeleteவாழ்த்துகள் சுரேகா
ReplyDeleteமிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் சுரேகா....
ReplyDeleteசொல்ல முடியாத சந்தோஷம்.
ReplyDeleteபுதுகை ப்ளாக்கர்களின் தலைவர் நீங்க தான்.
மனமார்ந்த பாராட்டுக்கள்.
இன்னும் நிறைய்ய எழுத வாழ்த்துக்களும்
வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDelete// பரிசல்காரன் said...
ReplyDeleteHURRRRRRRRRRRRRRRRRAYYYYYYY!
வாழ்த்துக்கள்யா.. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு!//
அதேதான்..
வாழ்த்துகள். மகிழ்வாய் உணர்கிறேன்..