நெஞ்சுரமிருந்தால், லஞ்சம், பஞ்சாகும்!
’அன்புடன்
கிரண்பேடி’ நிகழ்ச்சியை விஜய் டிவிக்காக நான் இயக்கியபோது அறிமுகமான நண்பர் ஆண்ட்ரூ தனூஜ்
குமார்.! ஒரு தனியார் விளம்பர நிறுவனம் மற்றும் ஆலோசனை நிறுவனம் நடத்திவருகிறார். அவரது
CHIC CONSULTANCY என்ற நிறுவனம்தான் அந்த கிரண்பேடி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
உண்மையில்
நாட்டில் ஊழல் குறையவேண்டுமென்றால், மக்களின் தட்டிக்கேட்கும் மனோபாவம் வளரவேண்டும்
என்ற கருத்தை ஆழமாகக் கொண்ட மனிதர்.! ஒத்த கருத்துடையவர்கள் நாங்கள் என்பதால், மிகவும்
எளிதாக ஒட்டிக்கொண்டோம். மிக அருமையாக கிதார் வாசிப்பார்.(என் கிதார் குரு! J ) கடந்த கிறிஸ்துமஸின் பொழுது, எங்கள் வீட்டுக்கு ஒரு
அற்புதமான நண்பர்கள் குழாத்தோடு வந்து, கீதங்கள் இசைத்துச் சென்றார். நேர்மை பற்றி
பேசிக்கொண்டிராமல், செயலில் காட்டும் நல்ல நண்பர்.! கேட்டால் கிடைக்கும் என்பது பற்றி
நாங்கள் பலமுறை பேசியிருக்கிறோம்.
அவர் புதிதாக ஆரம்பித்த தனது நிறுவனத்துக்காக
TIN எண் வாங்குவதற்காக, ஆயிரம் விளக்கு வணிகவரித்துறை அலுவலகம் சென்றிருக்கிறார். உண்மையில்
அந்த வேலைக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் ரூ.500 மட்டுமே. ஆனால், அங்கிருந்த துணை வணிகவரி
ஆணையர் ஜெயலட்சுமி மேலும் 5000 ரூபாய் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்று சொல்லியிருக்கிறார்.
இவர்,
அதெல்லாம் எங்க கம்பெனியில் தர வழியில்லை. அரசாங்கம் என்ன தொகை கட்டச்சொல்லியிருக்கோ
அதான் கட்டிட்டேனே என்று பொறுமையாக பதில் சொல்ல,
உடனே,
இவர் விண்ணப்பத்தைப் பார்த்துவிட்டு இது நொட்டை,
இது நொள்ளை என்று குறை சொல்லி திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள். இவரும் விடாக்கண்டராய்
நொட்டை , நொள்ளையெல்லாம் சரிசெய்துவிட்டு மீண்டும் சென்றிருக்கிறார். அந்த பெண்மணி
நக்கலாக..
’ஏன் சார்..! படிச்சிருக்கேங்கிறீங்க…! இந்த ஃபார்மாலிட்டி எல்லாம் உங்களுக்குத் தெரியாதா?’ என்று
சொல்ல..
’விண்ணப்பத்தை
பூர்த்தி பண்ணி, பணம் கட்டறதுதானே ஃபார்மாலிட்டி! அதைத்தான் செஞ்சுட்டேனே’?… என,
’உங்களோட
பெரிய தொந்தரவா(!) போச்சு! அது தவிர, தரவேண்டிய அமவுண்ட் கொண்டு வந்தீங்களா? சரி தொலையுது..உங்களுக்காக(?)
ஆயிரம் குறைச்சுக்கிறேன். நாலாயிரமா தாங்க!’
’அந்த
அமவுண்ட்டுக்கு ரசீது குடுப்பீங்கன்னா நான் தரேன் மேடம்..!’
’யோவ்!
அதெல்லாம் தரமுடியாது.. ! நீங்க எப்படி டின் நம்பர் வாங்குறீங்கன்னு பாக்குறேன் என்று
வம்பாகப் பேசியிருக்கிறார்
இதில்
பெரிய விஷயம் என்னவென்றால், இரண்டாம் முறை பணம் கேட்டது முதல், நொட்டை சொன்னது வரை
ஆண்ட்ரூ தன் மொபைல் போனில் அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ பதிவாக எடுத்துவிட்டார்.
அதை எடுத்துக்கொண்டு
அன்றே லஞ்சஒழிப்புத்துறை அலுவலகத்துக்குச் சென்றுவிட்டார். அங்கு அந்த வீடியோவைப் போட்டுக்காட்டி,
விபரம் சொல்ல, அவர்கள் மிகவும் சிறப்பாக நடந்துகொண்டு, புகாரை எழுதி வாங்கிக்கொண்டு,
அந்த பெண்ணிடம் செல்பேசியில் பேசச் சொல்லியிருக்கிறார்கள்.
அதன்படி
பேச ஆரம்பித்து, ஸ்பீக்கர் போனில் போட்டு மொத்தத்தையும் போட்டு வாங்கி, மேலும் அந்த
அதிகாரிகளில் ஒருவரே, ஆண்ட்ரூவின் ஆடிட்டர் போலப் பேசியிருக்கிறார்.
’என்ன
சார்! உங்க க்ளையண்ட்டுக்கு எந்த விபரமும் தெரியாதா? கமர்ஷியல் டாக்ஸ் ஆபீசுக்கு வந்தா
இதெல்லாம் சகஜம்ன்னு சொல்லுங்க சார்! நாளைக்கு வந்து பணத்தைக் குடுத்துட்டு வேலையை
முடிச்சுக்குங்க சார்!’ என்று அந்த பெண்ணும் அதிகாரமாகப் பேசிவிட…முதல் ஆதாரம் சிக்கியது.!
பற்றிக்கொண்டது
பரபரப்பு!
அடுத்தநாள்,
லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆண்ட்ரூவிடம் ரசாயனம் தடவப்பட்ட நான்கு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களைக்
கொடுத்து, எப்படிக் கொடுக்கவேண்டும் என்று ஒத்திகையும் பார்க்க வைத்து, கல்வித்துறையிலிருந்து
இரண்டு அதிகாரிகளை சாட்சியத்துக்கு தயார் செய்து, அதில் ஒருவரை அவர் கூடவே அனுப்பி
வைத்துவிட்டு, பின்னாலேயே வந்துவிட்டனர்.
அந்த அம்மாவின்
டேபிளுக்கு ஆண்ட்ரூ செல்கிறார். கூட வந்திருப்பவரைக் காட்டி,
இவர் யாரு?
என்று அந்தப் பெண்மணி கேட்க,
எங்க அக்கவுண்ட்டட்
மேடம்.! இனிமே கமர்ஷியல் டாக்ஸ் மேட்டரெல்லாம் இவர்தான் பாக்கப்போறாரு..!
ஓஹோ..!, சரி..நம்ப மேட்டர் என்னாச்சு?
ஸாரி மேடம்..!
எனக்கு உங்க ஃபார்மாலிட்டி தெரியலை ! இப்ப நீங்க சொன்ன நாலாயிரம் கொண்டுவந்திருக்கேன்.
ஸ்…ஏன்
சத்தமா பேசுறீங்க..? ஓக்கே. அதை அப்படியே டேபிள் மேல் வையுங்க!
இவர் வைக்க,
அந்த பணத்தின் மீது தனது கால்குலேட்டரை வைக்கிறார்.
எப்ப மேடம்
என் டின் நம்பர் கிடைக்கும்?
செக்ஷன்
க்ளார்க் இன்னிக்கு லீவு! நாளைக்கு வந்து வாங்கிக்குங்க!
சரி மேடம்
என்று சொல்லிக்கொண்டே , அந்த அம்மா, பணத்தை கையால் தொடவில்லையே என்று நினைத்துக்கொண்டே,
கீழே நின்றுகொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு போன் செய்ய… அவர்கள் மாடியேறி
தபதபவென வந்துவிடுகிறார்கள்.
மூத்த
அதிகாரி..
மேடம்..
நாங்க லஞ்ச ஒழிப்புத் துறைலேருந்து வரோம்..! மிஸ்டர் ஆண்ட்ரூகிட்ட TIN நம்பர் தர்றதுக்காக,
லஞ்சம் வாங்கின குற்றத்துக்காக உங்களைக் கைது பண்றோம்.’
எது..?
நான் எப்ப லஞ்சம் வாங்கினேன். அவர்தான் பணத்தை என் டேபிள் மேல வச்சாரு! என்று அந்த அம்மா பதற..
அதெல்லாம்
எங்களுக்குத் தெரியும்..! நீங்க வக்கச்சொன்னீங்க! வச்சாரு! அப்புறம் கால்குலேட்டரை
எடுத்து ஏன் அதுக்கு மேல வச்சீங்க! என்று ஆண்ட்ரூவுடன் வந்த சாட்சிய அதிகாரி சொன்னபிறகுதான்…தான்
வலையில் சிக்கிக்கொண்டது உறைத்திருக்கிறது அந்த லஞ்சப் பெருச்சாளிக்கு!
பின்னர்…ஆண்ட்ரூவைப்
பார்த்து..ஒரேயடியாய் அழுது..அரற்றி..
என்ன சார்.
இப்படி பண்ணிட்டீங்க! அய்யய்யோ அய்யய்யோ..! என் மரியாதை போச்சே..மானம் போச்சே என்று
அலறிக்கொண்டே போலீஸ் வண்டியில் ஏறியிருக்கிறார். அன்றே, நீதிமன்ற உத்தரவுப்படி புழலில்
அடைக்கப்பட்டார்.
ஆண்ட்ரூவின்
TIN எண் தானாக அடுத்த நாள் கடிதத்தில் வந்து சேர்ந்துவிட்டது. வெறும் ஐநூறு ரூபாய்
செலவில்..!!
இதில்..பணத்தை விட்டுவிடுவோம். ஏதோ ஒருமுறை நுழைவுத்தேர்வு
எழுதி ஒரு அரசு நாற்காலி கிடைத்துவிட்டது என்பதற்காக ஆண், பெண் பேதமின்றி ஆட்டம்போடும்
இதுபோன்ற சொறிநாய்களிடம், நம் படிப்பு, அறிவு, அனுபவம் இவற்றையெல்லாம் அடகு வைக்கவேண்டுமா
என்று ஒரு நிமிடம் யோசித்தால், லஞ்சம் கொடுக்க மனது வராது. அப்படிக் கொடுத்துப் பழக்கியதால்தான். இவர்கள் ஆட்டத்துக்குத்
துணைபோக அரசியல்வாதிகளையும் சேர்த்துக் கெடுத்து நாட்டையே சூறையாடுகிறார்கள். பந்தாவுக்கு மட்டுமே மயங்கிய அரசியல்வாதிகளுக்கு பணத்தைக் காட்டியவர்கள் அதிகாரிகள்தான்!
எல்லாவற்றையும்
விடுவோம். அரசு அலுவலகத்தில், அந்த வேலைக்குரிய பணத்தை மட்டும் கட்டிவிட்டு, லஞ்சமில்லாமல்- முடிந்தால்
அந்த ஆளை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் மாட்டிவிட்டு- வேலையை முடித்துப்பாருங்கள். அன்றிரவு தூக்கத்தின்
நிம்மதிக்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.
டிஸ்கி:
நண்பர் ஆண்ட்ரூவுக்கு
வாழ்த்துச் சொல்ல விரும்பினால் aliceandy@gmail.com
க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம். நல்ல உள்ளங்கள் துணைக்கு இருப்பது அவரை பயமின்றி, இன்னும் உற்சாகமாகச் செயல்பட வைக்கும்.
தொடர்பான
செய்திகள் :
லஞ்ச ஒழிப்பில்
உதவி தேவையென்றால் கேட்டால் கிடைக்கும் அமைப்பை kettaalkidaikkum@gmail.com என்ற மின்னஞ்சலில்
அணுகினால், ஆட்டம் களைகட்டும்.!
அவரோட தைரியத்துக்குன்னு சொல்றதை விட, நேர்மைக்கு ஒரு சல்யூட்... அவரோட நடவடிக்கையை எங்களுக்கு சொன்ன உங்களுக்கும் சின்னதா ஒரு சல்யூட் :)
ReplyDeleteவாங்க! நன்றி வெண்பூ அண்ணே..!!
Deleteஇனிமே செல்ஃபோன் கேமெரா இதெல்லாத்தையும் வெளியே செக்யூரிட்டிகிட்டே கொடுத்துட்டு அதிகாரியைப் பார்க்க உள்ளே போகணும் என்ற விதி(!!!!!) வந்தாலும் வந்துரும்.
ReplyDeleteஅப்புறம் ஏர்ப்போர்ட்லே செய்வது மாதிரி முழு செக்கப். எக்ஸ்ரே மெஷீன்........
நண்பருக்கு மடல் அனுப்பறேன்.
வாங்க துளசி டீச்சர்!
Deleteஆமா.!! அதுவும் நடந்தாலும் நடக்கும்!!
கெரகம் பிடிச்சவனுங்க! செஞ்சாலும் செய்வானுங்க!
:))
அதுக்கும் நம்மகிட்ட தான் பணம் வசூல் செய்யப்படும் ;)
Deleteகிரேட் ஆண்ட்ரூ... வாழ்த்துக்கள்.. விழிப்புணர்வுக்கு நன்றி சுரேகா.
ReplyDeleteவாங்க காவேரி கணேஷ் அண்ணே!
ReplyDeleteமிக்க நன்றி!!
nice sureka.
ReplyDeleteதுளசி மேடம் கமெண்ட்படி நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை :((
வாங்க மங்களூர் சிவா..!
Deleteநன்றிப்பா!
ஆமாமா!
தவறு செய்த அவர்களே அப்படி யோசிக்கும்போது அதை தட்டி கேட்குற நாம எவ்வளவு யோசிப்போம்
Deleteநன்றியுடன்
ரஞ்சித் (ரியாத் - சவுதி )
aakaa aakaa - நல்ல்தொரு விழிப்புணர்வுக் கட்டுரை - ஆண்ட்ரூவிற்கு நல்வாழ்த்துகள் - பகிர்ந்த சுரேகாவினிற்கும் நப்றி - சற்றே சிந்திக்கலாம். இன்றைய சூழ்நிலையில் - அரசு ஊழியர்கள் எய்த்தனை நாட்கள் கடத்த முடியுமோ அத்தனை நாட்கள் கடத்தி - இறுதியில் அது தவறு - இதி தவறென அடியப் பிடிடா பாரத பட்டா என முதலில் இருந்து துவங்குவர். நம்மால் அவர்களுக்கு ஈடு கொடுத்து அலைய இயலாது. நம் நேரம் அனுமதிப்பதில்லை. தொலயுறான் எனத் திட்டிக் கொண்டே இலஞ்சம் கொடுத்து விடுகிறோம். திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க இயலாது - திட்டம் - திருடன் - திருடுவான் - சட்டம் - கூட்டம் - தடுக்கும் - ஒன்றும் பலனில்லை சுரேகா - நட்புடன் சீனா
ReplyDeleteவாங்க சீனா சார்..! மிக்க நன்றி!
Deleteகொஞ்சம் அலைச்சலைப் பற்றி யோசிக்காமல், ஒருதடவை மாட்டிவிட்டால், நமக்கு மற்ற எல்லாவேலைகளும் சுலபமாக நடக்கும் சார்!
அதேபோல், திருடனாப் பாத்து திருந்தவேண்டும் என்று எண்ணுவதைவிட, திருடவிடாமல் செய்வதில்தான் பலன் கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன்.
இதில் நான் திரு சீனாவுடன் தான் ஒத்துப் போகிறேன். இவராவது இவ்வளவு கொடுங்கள் என கேட்டார். எத்தனையோ நிகழ்வுகளில் நன்றாக அலையவிட்டு அப்ளிகேசனையே தொலைத்து மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்கும் காட்சிகள்தான் அதிகம். வாய்விட்டு கேட்டுவிட்டால் அவர்களுக்கு அசிங்கமாம். நாமாக புரிந்துகொண்டோ அல்லது கீழே வேலைசெய்யும் ஒருவர் மூலமாகவோ அல்லது ஒரு புரோக்கர் மூலமாகவோ அணுகினால் உடனே வேலை நடக்கும்.
ReplyDeleteஎதெதுக்கோ ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்குறாங்க. இந்த லஞ்சத்தை எந்த துறையில் எப்பிடி சுழுவாக கொடுத்து விரைவாக வேலை முடிக்க முடியும் என்ற தலைப்பில் யாராவது தீசிஸ் செய்தால் அதை கோடிக்கணக்கில் விலை வைத்து விற்க கூட முடியும்.. வாங்குவதற்கும் கியூவில் நிற்பார்கள்..
இதுதான் நம் பாரத சுதந்திர தேசத்தின் இன்றைய நிதர்சன நிலை..
பகிர்வுக்கு மிக்க நன்றி...
http://anubhudhi.blogspot.in/
வாங்க சங்கர் குருசாமி சார்!...
Deleteஉண்மையில் தப்பு பண்றவனை விட, நேர்மையா இருக்குறவன் பயப்படும் காலம் ஆகிவிட்டது.
நேர்மையாளர்கள் நிமிர்ந்தால், தப்பு பண்றவன் பதுங்க ஆரம்பிப்பான் என்பதுதான் நிதர்சனம்.!
நாமே அரசு அதிகாரிகள் என்றால் மிகப்பெரிய பிஸ்து என்று எண்ணிக்கொண்டு பம்முவதை நிறுத்தினாலே பாதி பிரச்னை குறையும்.
என்ன சார்..! கட்டாயம் லஞ்சம் வேணுமா? என்று சத்தமாக ஒரு முறை கேட்டே நான் காரியம் சாதித்திருக்கிறேன்.
தங்களது 'கேட்டால் கிடைக்கும் ASK' குழுவில் இணைந்த பிறகு இது போன்ற அநீதிக்கு எதிராக செயல்படும் எனது சிந்தனை வலுப்பெற்று வருகிறது. தொடர்ந்து தங்கள் எழுத்துக்கள் மூலம் அந்த தைரியத்தை வளர்த்து வரும் தங்களுக்கு எனது நன்றிகள்..!!
ReplyDeleteமிக்க நன்றி நல்லவன் !!
Deleteநெஞ்சுரம் நேர்மையும் இருந்தால் எதையும் எதிர்கொண்டு சாதிக்கலாம்.உங்கள் நண்பரின் உண்மையான நேர்மையை பாராட்டுகிறேன்.இதை பதிவாக எழுதியதற்க்கு மிக்க நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி நந்தா...! அவருக்கும் ஒரு பாராட்டு மெயில் அனுப்பிவிடுங்கள்!
Deleteபந்தாவுக்கு மட்டுமே மயங்கிய அரசியல்வாதிகளுக்கு பணத்தைக் காட்டியவர்கள் அதிகாரிகள்தான்
ReplyDelete//
100% true
வாங்க அப்து அண்ணே!
Deleteஆமா.!! எனக்கு உண்மையிலேயே எப்போதும் அரசியல்வாதிகள் மேல் ஒரு சிறு கருணை உண்டு... துண்டு போட்டு காலில் விழுந்தால் அவனுக்காக, என்னவேண்டுமானாலும் செய்யும் உள்ளம் படைத்தவர்களை காசு காட்டி அதீத தவறுசெய்பவர்களாக மாற்றியது கேடுகெட்ட அதிகாரிகள்தான்!!
Dear Suresh
ReplyDeleteNice to read about our Andrew's dedication towards sincerety towards not paying the bribe. Here I would like to tell one thing. These corrupted officials will normally have link with police, anti corruption bureau authorities and even in ministrial levels too.
So, it all depends on our luck whether to accomplish/succeed in our target of getting the work done from Govt Officials without bribe or not.
There are chances of getting trapped by the person who is laying the trap to others, so we must be very much careful while doing so.
Thanks for sharing the experience of our friend Mr. Andrews. Please convey our best wishes and good luck to our friend Mr. Andrews.
வாங்க பாஸ்கர் அண்ணா!
Deleteநீங்கள் கூறுவது முற்றிலும் சரி!
They have link with everybody.
I have warned My friend Mr.Andrew about this backfire activities also. That's what i am appealing our internet friends support to him.this can be a moral support to mr.andrew.
thank you for a great concern..!
thanks for a great post good information
ReplyDeleteThank you arul!
DeleteThis Cheena and Sankar Guruswamy must be some gvt servants who demand bribes from common people.
ReplyDeleteதவறு... !
Deleteஅவர்களது கருத்தை வேறுவகையில் திரிப்பதும்..
அதற்கு முகமின்றி வருவதும்..!!
இரண்டுமே தவறு!
சுரேகாஜி,
ReplyDeleteநல்ல விழிப்புணர்வுப்பதிவு. அனைவருக்குமே லஞ்சம் கொடுக்க விருப்பம் இருப்பதில்லை. ஆனால் அலைச்சலுக்கு சோம்பல்ப்பட்டுக்கொண்டு அடிப்ணிந்துவிடுகிறார்கள்.
உங்கள் நண்பர் பொறுமையாக செயல்ப்பட்டு இருக்கிறார் வாழ்த்துகள்.
அந்தம்மாவுக்கு வாங்குவதில் அனுபவம் கம்மினு தான் எனக்கு தோன்றுகிறது. பெரும்பாலும் நேராக வாங்குவதில்லை அதிகாரிகள்.ஒரு வேளை வாங்கிக்கொடுப்பவனுக்கு ஏன் பங்கு தரவேண்டும் என அவரே மொத்தமாக அள்ள நேராக களத்தில் குதித்துவிட்டார் போல :-))
தானே புயலில் ஊரில் இருந்த வீட்டின் மின்கம்பிகள் அறுந்துவிட்டது. தெரு முழுக்கவே அதான் நிலை.மின்வாரியத்தில் இருந்து வந்தவர்கள் அந்த ஏரியாவில் ஒருவரிடம் வசூலித்து கொடுக்கும் பொறுப்பை கொடுத்துவிட்டார். வீட்டுக்கு 150 ரூ கொடுக்க வேண்டும் என சொல்லிவிட்டார்கள்.ஏன் இந்த மாதிரி நேரத்திலும் லஞ்சமானு கேட்டேன். சக குடியிருப்பாளர்களே, அப்படினா உங்களுக்கு கரண்ட் வராது, எல்லாம் கொடுக்கிறாங்க, கொடுக்கிர்ர வீட்டுக்கு தான் கராண்ட் சொல்லிட்டாங்க. அப்புறம் கொடுத்து தொலைச்சோம்.
ஒரு வீட்டுக்கு 150 என்பது அவங்களுக்கு டீ, டிபன் செலவுக்காம். அதிகப்படியான வேலை செய்கிறார்களாம், சரியான நேரத்தில் வீட்டுக்கு போய் சாப்பிட முடியவில்லை அரசாங்கம் சாப்பாடுக்குமா காசுக்கொடுக்கிரது என்றார்கள்.
வாங்க வவ்வால் !!
Deleteஆமா...சிலபேர் அப்படித்தான் இருக்காங்க.. ஆள்வச்சு லஞ்சம் வாங்கினா மாட்டமாட்டோம்னு நினைப்பு..! அதுக்கும் Lock வச்சிருக்கோம்.. அதை தனியா சொல்றேன்.
மேலும்..
கடலூரில் நடந்தது மிகவும் ஆவேசம் தரும் விஷயம்..!!
இவர்கள் பிணத்தைக்கூட விலைபேசும் அயோக்கியர்கள்!
சுரேகாஜி,
Delete//கடலூரில் நடந்தது மிகவும் ஆவேசம் தரும் விஷயம்..!!
இவர்கள் பிணத்தைக்கூட விலைபேசும் அயோக்கியர்கள்!//
நான் சொன்னது ஒரு துளி தான். எப்படி லஞ்சத்தை தவிர்க்க முடியவில்லை என்பதற்கு சொன்னேன்.
விவசாயிகள், சிறு தொழிற்கூடங்கள் , மேலும் அவசர தேவை என அழைத்தவர்கள் எல்லாம் ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும்.
உதாரணத்துக்கு சொந்தக்காரர் வயலுக்கு மின் இணைப்பு சரி செய்ய நடந்த கதையை சொல்கிறேன். வயல் பகுதிகளில் மின் கம்பம், டிரான்ஸ்பார் எல்லாம் விழுந்து விட்டது.
நகர்ப்பகுதிக்குள் தான் முதலில் வேலை செய்தார்கள். பின்னர் மின்கம்பம் ,டிரான்ஸ்பார்மர், பொருட்கள் இல்லை வந்தால் தான் கிராமத்திற்கு என்று சொல்லிவிட்டார்கள். அடிக்கடிப்போய் கேட்கவும், மின்கம்பத்திற்கு, எடுத்து வரும் செலவுக்கு எல்லாம் காசு கொடுக்க சொல்லிவிட்டார்கள். பின்னர் பேரம் பேசி , வேலை முடித்தார். அதுவும் மின்கம்பத்தை அவரே டிராக்டர் வைத்து எடுத்து வந்தார்.நான்கு ஐந்து பேராக சேர்ந்து செலவு செய்தால் மட்டுமே வேலை நடந்தது. மற்றவர்கள் காத்திருக்க வேண்டும்.
ஏற்கனவே பாதி பயிர்கள் புயல் கொண்டுப்போயிற்று,மீதி பயிர்கள் வாடிவிட்டன இப்படி முயற்சி செய்யவில்லை என்றால் அவ்வளவு தான் , கிணற்றில் போட்டக்கல்லாக கிடக்கும். இன்னும் முழுசாக கிராமப்பகுதியில் மின்சாரம் திரும்பவில்லை. பல இடங்களில் டிரான்ஸ்பர்மர் இல்லைனு அப்படியே பணிகள் பாதியில் நிக்குது.
மேலும் நிவாரன நிதி கொடுக்கும் போதே 200 ரூ க்கு குறையாமல் எடுத்துக்கொண்டே கொடுத்தார்கள்.பலருக்கும் நிதி கொடுக்கவில்லை என அடிக்கடி சாலை மறியல் எல்லாம் நடந்தது.
இதற்கும் லஞ்ச ஒழிப்புத்துறையை அழைக்கலாம்.
Deleteஅதுவும் நான்குபேர் சேர்ந்து செய்தால்... சூப்பராக அவர்களுக்கு புயல் வீசச் செய்யலாம்..!!
sureka,
ReplyDeletei would like to thank to this nice and great initiative,
I wish you all the best to continue this.
நன்றி செந்தில்குமார் பாண்டியன்!
DeleteExcellent Andrew!!! Public awareness is very important to eradicate public servant greediness. Great to see Mobile Technology used in right way.
ReplyDelete