Posts

தசாவதாரம் - விமர்சனம் !

இன்று படத்தை முழுமையாகப்பார்த்தாகி விட்டது.அருமையாக வந்திருக்கிறது. இந்தப்படத்தில் வேலை பார்த்தவன் என்ற முறையில் நான் எழுதினால் பாராட்டித்தான் எழுதுவேன். படத்தை பார்த்துவிட்டு உடனே விமர்சனம் எழுதுங்கள். ஒரு முழுமையான திரை அனுபவத்தை திரை அரங்கில் உணருங்கள்.தயவு செய்து டிவிடி வேண்டாம்.படத்தின் பிரம்மாண்டத்தை உணராமலேயே போய்விடுவீர்கள்.எல்லா முன்செய்திகளையும் ஓரம் கட்டிவிட்டு, முழுமையாக திரைப்படத்தை பாருங்கள். கொஞ்சம் குழந்தை, கொஞ்சம் பெரிய மனித தோரணையுடன் , எந்த ஒரு முன்முடிவும் இல்லாமல் தியேட்டருக்குள் நுழையுங்கள்...! ஒரு அற்புத அனுபவம் காத்திருக்கிறது.

இரு திருமணங்கள்

இரு திருமணங்கள் நேற்று முகூர்த்த நாள்.. ஊருக்குள் பலப்பல விழாக்கள்.. நானும் சில விழாக்களில் கலந்துகொண்டேன். அது ஒரு மருத்துவர் குடும்ப திருமணம்.! அவரது மகனுக்கு ஈரோட்டில் உள்ள பிரபலமான தொழிலதிபர் குடும்பத்துப்பெண்ணை மணம் முடிக்கிறார்கள். நல்ல கூட்டம். சுமார் ஆயிரம்பேர் அமரக்கூடிய மண்டபம். ஆயிரம் பேர் அமர்ந்தும் இருந்தோம். முகூர்த்த வேளை நெருங்கியது. யாருக்கும் அட்சதை கொண்டு தரப்படவே இல்லை. ஏன் இப்படி செய்கிறார்கள்? மறந்துவிட்டார்களோ? என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். அந்த விஷயம் மணமகனின் தந்தை (மருத்துவர்) காதுக்குப்போனது. அவர் மேடையில் இருந்தே ' நான் இருக்கிறேன்' என்பதுபோல் ஒரு பாவனை செய்தார். முகூர்த்த நேரமும் வந்தது. தாலியும் கட்டியாகிவிட்டது. எல்லோரும் எழுந்து அமர்ந்தார்கள். அதற்குப்பிறகுதான் அந்த மருத்துவர் (மணமகனின் தந்தை) ஒரு அற்புதமான காரியம் செய்தார். மணமக்களை கீழே அழைத்துவந்தார். ஒவ்வொரு வரிசை நாற்காலிகளுக்கு அருகிலும் , அவர்களை நிறுத்தினார். அட்சதை தட்டை எடுத்துவரச்செய்து, அந்த வரிசைக்காரர்களிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கச்செய்தார். அதேபோல் மண்டபத்தில் இருந்த ஒவ்வொருவ...

தெய்வத் தொழிலாளி - பாகம் 2

நான் அவரை ஒரு நெற்றிச்சுருக்கலுடன் பார்த்தேன். ( முதல் பாகம் இங்கே ) 'என் பேரு சண்முகம் சார் ! எதுத்தாப்புல தெரியுற இடத்தைப்பாத்தீங்களா?' 'எதைச்சொல்றீங்க?' 'எதிர்க்கடைக்குப்பக்கத்துல ஒரு இடைவெளி தெரியுதே?' 'ஆமா!' 'அதுதான் சார் 10 நாள் முன்னாடி வரைக்கும் என் கடை!' நான் எழுந்து நின்று பார்த்தபோது அந்த இடம் முழுமையாகத்தெரிந்தது. சாலையின் அந்தப்பக்கம் தீயினால் எரிந்த ஒரு இடம். பலப்பல குழாய்களும்  அடையாளம் காணமுடியாத பொருட்களும் கருகிப்போய் குவிக்கப்பட்டிருந்தன. 'அதுதான் வடிவேலன் உணவகம்! வாசல்ல டீ ஸ்டால்! உள்ள டிபன் கடை! அன்னிக்கு காலங்காத்தால மண்ணெண்ணை ஸ்டவ்வை பத்தவச்சுட்டு பால   சுடட்டுமேன்னு வெளில வந்தேன். என்ன ஆனதுன்னே தெரியலை! ஒரு நிமிஷத்தில் ஸ்டவ் வெடிச்சு, வாசல் கூரையில் நெருப்பு பிடிச்சுக்கிச்சு! என்னால உள்ள போய் ஒரு சாமானைக்கூட எடுக்க முடியலை! உள்ளதான் கிரைண்டர் , மிக்ஸி, டேபிள் , சேர்ன்னு எல்லாம் சேத்து கிட்டத்தட்ட 2 லட்ச ரூபாய்க்கு பொருள் ! கொஞ்ச நேரத்தில் எல்லாமே நாசமாப்போச்சு சார்! 20 வருஷமா வச்சிருந்த கடை சார்.! அதை வச்சுத்தான் ...

தெய்வத் தொழிலாளி !

அது ஒரு 55 கிலோமீட்டர் மோட்டார் சைக்கிள் பயணம். இரவு மணி 12:40 க்கு கிளம்பினேன். அதுவரை இரவு உணவு சாப்பிடவில்லை. சரி வழியில் ஏதாவது ஒரு ரோட்டோர ஹோட்டலில் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டே பயணிக்க ஆரம்பித்தேன். காதில் 'முகுந்தா முகுந்தா....' வுடன் சென்று கொண்டிருக்கும்போது, மூன்று உணவு விடுதிகள் 3 கிலோமீட்டர் இடைவெளியில் கண்ணில் பட்டன. ஏனோ மனம் அதை நிராகரித்தது. பயணம் தொடர்ந்தது. முகத்தில் மோதிய வழிதவறிய வண்டொன்று கன்னத்தில் பளார் என்று அறைந்த அனுபவத்தைக்கொடுக்க, அதிர்ந்துபோய் நின்றபோது வலது பக்கம் அந்த உணவு விடுதி தெரிந்தது. வாசலில், அடுப்பு தட்டுமுட்டுச்சாமான்களுடன் களேபரமாக இருந்தது. இடது பக்கம் டீ போடும் முஸ்தீபுகளுடன் ஒரு இடம். உள்ளே நுழைந்தேன். வண்டு அடித்த வலியை ஜீரணிப்பதற்காகவும், வயிற்றில் ஏற்பட்ட பசியை ஜீரணிப்பதற்காகவும்.! 'என்ன சார் சாப்பிடுறீங்க?' கேட்டவருக்கு 45 வயதிருக்கும். வளமாக இருந்தார். 'என்ன இருக்கு?' 'புரோட்டா, தோசை அய்ட்டங்கள் இருக்கு சார்!' '2 புரோட்டா போடுங்க! ஒரு ஊத்தப்பம்!' சரி சார்.! 'முதலாளி ! தோசைமாவு ...

வார்த்தைகள் - பாகம் 2

ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி சொல்லுவாங்க! நட்பை பாதுகாத்துக்கணும்னா, நீ தவறு செய்தால் தயங்காமல் மன்னிப்புக்கேள் ! நண்பன் தவறு செய்தால் தயங்காமல் மறந்துவிடு! ன்னு அதாவது வார்த்தைகளைப்பிடிச்சு தொங்காம நிதானமா இருந்தாலே உறவுகளை அப்படியே வச்சுக்கலாம். ஏன்னா பதில் வார்த்தைகளால்தான் பிரச்னையே பெரிசாகும். நட்பு வேணும்னு நினைச்சா நல்ல சொற்களை மட்டுமே பேசினா போதும். அதேசமயம் வேறு ரெண்டுபேருக்கு இடையில் ஏற்படும் தகராறுக்கும் நாம காரணமா இருந்துடக்கூடாது. ஆனா அதுதான் நம்மிடையே அதிகமா நடக்குது. ரெண்டு பேரை சேத்துவைக்கத்தான் நமது வார்த்தைகள் பயன்படணும். அதில் கவனமா இருந்துட்டா அந்த ரெண்டுபேருக்குமே நாம கடவுளா தெரிவோம். பூவே உனக்காக படத்தில், நாகேஷுக்கும் நம்பியாருக்கும் குடும்பப்பகை இருக்கும். ஒருநாள் நாகேஷ் வண்டில பெட்ரோல் இல்லாம தள்ளிக்கிட்டு வருவார். அதே சமயத்தில் நம்பியாருடைய காரும் ரிப்பேராகி நிக்கும். அங்கிருந்து ஊருக்குள்ள போகணும்னா 5 கிலோமீட்டர் நடக்கணும். அப்ப அங்க வரும் விஜய் ,ரெண்டுபேரின் கௌரவமும் கெட்டுப்போகாம நாகேஷ்கிட்ட , அவர் பெட்ரோலைக்கொடுத்து உங்க வண்டில ஏறிக் கிறேங்கிறார். கூட்டிக்கிட...

வார்த்தைகள்

ரெண்டுபேருக்கு இடையிலே வாக்குவாதம் வந்தா... வார்த்தைய அளந்து பேசு ..என்ன பேசுறோம்கிறதை தெரிஞ்சுதான் பேசுறியான்னு ஒருத்தருக்கு ஒருத்தர் கேட்டுக்குவாங்க! அந்த அளவுக்கு நம்மை மீறி வெளிவரும் வார்த்தைகள் என்னிக்குமே மனிதர்களுக்கிடையில் உறவுகளை உடைக்கும் சுத்தியலாத்தான் பயன்படும். அதுனால எந்த பயனும் இருக்காது. சக மனிதர்களோட பேசுறதுங்கிறது ஒரு கலை! அதை சரி வர கையாண்டுட்டாலே நாம வாழ்க்கைல ஈஸியா ஜெயிச்சுக்கிட்டே இருக்கலாம். மொக்கச்சாமி ஒரு பெரிய தொழிலதிபர்க்கிட்ட பி ஏ வா வேலைபாத்தார். அப்ப வெளியூருக்கு போய் ஹோட்டல்ல தங்குறமாதிரி ஆகிப்போச்சு. முதல்நாள் மதிய சாப்பாட்டில் வெண்டைக்காய் போட்டு சாம்பார் வச்சிருந்தாங்க! அதை ருசிச்சு சாப்பிட்ட தொழிலதிபர், ஹோட்டல் சர்வரைக்கூப்பிட்டு ஆஹா வெண்டைக்காய் பிரமாதம்ன்னார்.உடனே மொக்கச்சாமியும் ஆமாமா பிரமாதம்ன்னார். அதை கவனிச்ச ஹோட்டல் முதலாளியும், இனிமே அந்த தொழிலதிபருக்கு வெண்டைக்காயில் செஞ்ச உணவுகளை அதிகமா பரிமாறும்படி சொல்லிட்டார். அடுத்தடுத்த நாள் வெண்டைக்காய் கூட்டு, வெண்டைக்காய் பொறியல், பச்சடி ன்னு சர்வம் வெண்டக்காய் மயம் ஆகிப்போச்சு ! ஒரு வாரம் நல்லா பார...

கயவாளிக் கனவான்கள்!

Image
ரோடு போட்ட மவராசன் பாதி ரோட்டை போட்டுப்புட்டு மீதி ரோட்டை தனக்கும், லஞ்சம்வாங்கி நாய்களுக்கும் போட்டுக்குடுத்துப்புட்டு மழை பேஞ்ச மறுநாளே பல்லிளிக்க வச்சுப்புட்டான். பல்லிளிச்ச ரோட்டில் போராடிப்போராடி நாத்தெல்லாம் நட்டு நாத்தமடிக்க வச்சபின்னே அவனுக்கு அப்பனான ஒரு ஒப்பந்தக்காரன் பள்ளமடைக்கும் பணி வாங்கி ஜல்லியடிச்சுக்கிட்டிருக்கான். அடைக்கும் பள்ளத்திலேயே அரைகுறையா விட்டுப்புட்டு அலட்டிக்காம வேலைபாக்கும் கேடுகெட்டவங்களை வச்சா வல்லரசா ஆகப்போறோம்!? அய்யா அப்துல் கலாம்! ஒருதடவை இந்தப்பக்கம் வந்துத்தான் பாருங்களேன். ஒப்பந்தம் எப்படி வேலை பாக்குதுன்னு தெரியும். இது ரொம்ப நாள் கதையில்ல! நேத்து நான் வந்தப்ப நின்னு எடுத்த போட்டோ! இதை மட்டும் செய்ய நான் ஈனப்பிறவி இல்ல! எல்லா பத்திரிகைக்கும் எழுதியாச்சு நகலோட! எவனுமே போடலைன்னா என்ன பண்ண சின்னவன் நான்! அதுனால இங்கயும் என்வீட்டில் பதிஞ்சு வச்சேன். உச்சகட்ட லச்சணம் என்னன்னு தெரியுங்களா? இதுதான் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை! கண்ணுமண்ணு தெரியாம கொள்ளை அடிக்கறது கயவாளிக்கனவான்களுக்கு கைவந்த கலை போல! அட...நாசமத்துப்போவாய்ங்களா! நாண்டுக்கிட்டு சாவுங்கடா!...