தெய்வத் தொழிலாளி !
அது ஒரு 55 கிலோமீட்டர் மோட்டார் சைக்கிள் பயணம்.
இரவு மணி 12:40 க்கு கிளம்பினேன்.
அதுவரை இரவு உணவு சாப்பிடவில்லை.
சரி வழியில் ஏதாவது ஒரு ரோட்டோர ஹோட்டலில் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டே பயணிக்க ஆரம்பித்தேன். காதில் 'முகுந்தா முகுந்தா....' வுடன் சென்று கொண்டிருக்கும்போது, மூன்று உணவு விடுதிகள் 3 கிலோமீட்டர் இடைவெளியில் கண்ணில் பட்டன. ஏனோ மனம் அதை நிராகரித்தது. பயணம் தொடர்ந்தது. முகத்தில் மோதிய வழிதவறிய வண்டொன்று கன்னத்தில் பளார் என்று அறைந்த அனுபவத்தைக்கொடுக்க, அதிர்ந்துபோய் நின்றபோது வலது பக்கம் அந்த உணவு விடுதி தெரிந்தது.
வாசலில், அடுப்பு தட்டுமுட்டுச்சாமான்களுடன் களேபரமாக இருந்தது. இடது பக்கம் டீ போடும் முஸ்தீபுகளுடன் ஒரு இடம். உள்ளே நுழைந்தேன். வண்டு அடித்த வலியை ஜீரணிப்பதற்காகவும், வயிற்றில் ஏற்பட்ட பசியை ஜீரணிப்பதற்காகவும்.!
'என்ன சார் சாப்பிடுறீங்க?' கேட்டவருக்கு 45 வயதிருக்கும். வளமாக இருந்தார்.
'என்ன இருக்கு?'
'புரோட்டா, தோசை அய்ட்டங்கள் இருக்கு சார்!'
'2 புரோட்டா போடுங்க! ஒரு ஊத்தப்பம்!'
சரி சார்.!
'முதலாளி ! தோசைமாவு புளிக்காம இருக்குல்ல!? ' - குரல் வந்த திசை பக்கம் திரும்பினேன். கல்லாப்பெட்டியில் அவர் அமர்ந்திருந்தார். நெற்றியில் குங்குமம்... கெச்சலாக இருந்தார். 55 வயதிருக்கும்.
என்ன இது ...? ஒரு சர்வரை கல்லாப்பெட்டியில் இருப்பவர் முதலாளி என்று கூப்பிடுகிறார்.! அல்லது இவர்தான் முதலாளியோ!? மனம் நினைத்துக்கொண்டிருக்கும்போதே பதில் இவரிடமிருந்து வந்தது.
'இல்ல குமரா! நல்லாத்தான் இருக்கு! கொஞ்சம் கொஞ்சமாத்தானே பிரிஜ்லேருந்து எடுத்துக்கிட்டு வரேன்.'
'அய்யய்யோ இல்ல முதலாளி! கஸ்டமருக்கு நல்லா இல்லாம போயிடக்கூடாதுன்னுதான் சொன்னேன்.'
'கவலையே படாத! சார் ரசிச்சு சாப்பிடுற மாதிரி செஞ்சுடுறேன்.'
'சரிங்க முதலாளி!'
இப்படியாக இவர்கள் சம்பாஷணை இருந்தது.
எனக்கு ஒன்று மட்டும் புரியவே இல்லை! இது என்னவிதமான உறவுமுறை? இதற்குப்பின்னணி என்னவாக இருக்கும். ஒரு நிர்வாகப்பாடத்தை இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளப்போகிறேனோ? ஒரு நாள் முதல்வர் போல் இது ஒரு நாள் முதலாளி அமைப்போ? மனிதவள மேம்பாட்டு ஆலோசகன் என்ற முறையில், ..ஒரு நல்ல நிர்வாகத்திறன் கொண்ட தன்முனைப்பு (EGO) அற்ற ஒரு முதலாளியின் எண்ண விருட்சமோ? எல்லாரும் எல்லா வேலையும் பார்க்கவேண்டும் என்று இப்படி செய்து கொண்டிருக்கிறாரோ!
புரோட்டாவுக்கு குருமா போட வந்தவரை நிறுத்திக்கேட்டேன். 'நீங்கதான் இந்தக்கடை முதலாளியா?'
'அட நீங்கவேற சார்...முதலாளி அதோ அவர்தான்.!'
'அப்புறம் ஏன் அவர் உங்களை முதலாளின்னு கூப்பிடுறார்.?'
'அதுவா....?'
'சார்...நாந்தான் இந்தக்கடை முதலாளி! ஆனா அவர்தான் எனக்கு முதலாளி!' என்றார் கல்லாப்பெட்டிக்காரர்.
எனக்கு தலை சுற்றியது.
சிரித்துக்கொண்டே....'ஏன் இன்னிக்கு வேற யாருமே சிக்கலையா? நடு ராத்திரி 1 மணிக்கு ஏன் இப்படி என்னை மண்டை காய வைக்கிறீங்க?' என்றேன்.
இருவரின் முகமும் கருத்துப்போனது.
யாரும் எதுவும் பேசவில்லை..இரண்டு நிமிடம் கழிந்தது. ஊத்தப்பத்தை எடுத்துக்கொண்டு வந்து என் இலையில் போட வந்தவர் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர். கட்டாயம் அது புகையால் வந்தது அல்ல!
'அய்யய்யோ என்ன சார் ஆச்சு? நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா?
மன்னிச்சுக்குங்க சார்!' என்று நான் பதறினேன்.
'அதெல்லாம் ஒண்ணுமில்லை சார்..! என் நிலைமை அப்படி...!'
என்று கலங்கிவிட்டு..தொண்டையை செருமிக்கொண்டு ஆரம்பித்தார்.
(தொடரும்)

கதையா, அனுபவமா? அடுத்த பகுதி எப்போ?
ReplyDeleteஇரண்டாவது பகுதிக்கு ஆவலோடு... இருந்தாலும் என்ன நடந்திருக்குமின்னு கொஞ்சம் யூகிக்க முடியுது.
ReplyDelete//கோகிலவாணி கார்த்திகேயன் said...
ReplyDeleteகதையா, அனுபவமா? அடுத்த பகுதி எப்போ?//
வாங்க ! முதல் வருகைக்கு நன்றி!
அனுபவம்தாங்க!
//*இயற்கை நேசி* said...
ReplyDeleteஇரண்டாவது பகுதிக்கு ஆவலோடு... இருந்தாலும் என்ன நடந்திருக்குமின்னு கொஞ்சம் யூகிக்க முடியுது.//
வாங்க!
உங்க யூகத்தை மீறி எதுவும் இருக்காது.
:)
சரிங்க பாஸ், நல்லா இருக்கு பாஸ் பதிவு பாஸ்.
ReplyDeleteநீங்க உம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க பாஸ் அந்த வண்டை சட்னி பண்ணி அந்த ஊத்தப்பத்துக்கு தொட்டுக்க போடறேன் பாஸ்
:))
நல்லா இருக்கு. அடுத்த பகுதி எப்போ வரும்?
ReplyDelete//முகத்தில் மோதிய வழிதவறிய வண்டொன்று கன்னத்தில் பளார் என்று அறைந்த அனுபவத்தைக்கொடுக்க, //
ReplyDeleteவண்டுக்கிட்ட போய் நீதான் பதிவர் பொண்வண்டான்னு கேட்டீரா ஒய்?
இந்த பதிவுக்கு
ReplyDeletehttp://kusumbuonly.blogspot.com/2007/12/blog-post_05.html
போய் பாருங்க எல்லாம் உங்களுக்குதான், இந்த கதைக்காகவே நான் அந்த பதிவை எழுதியது போல் இருக்கிறது.
அடுத்த பகுதி எப்போ?
ReplyDelete//மங்களூர் சிவா said...
ReplyDeleteசரிங்க பாஸ், நல்லா இருக்கு பாஸ் பதிவு பாஸ்.
நீங்க உம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க பாஸ் அந்த வண்டை சட்னி பண்ணி அந்த ஊத்தப்பத்துக்கு தொட்டுக்க போடறேன் பாஸ்
:))//
வாங்கப்பு !
இவ்ளோ நாளா வண்டு சட்னிதான் சாப்பிட்டு வளர்ற மாதிரி தெரியுது?
பாத்து....! :)
//இலவசக்கொத்தனார் said...
ReplyDeleteநல்லா இருக்கு. அடுத்த பகுதி எப்போ வரும்?//
வாங்க... வருகைக்கு நன்றி!
இப்பவே போட்டுட்டா போச்சு!
//குசும்பன் said...
ReplyDeleteவண்டுக்கிட்ட போய் நீதான் பதிவர் பொண்வண்டான்னு கேட்டீரா ஒய்?//
அப்படி கேக்காததாலதான் அடியோட விட்டுச்சு! கேட்டுருந்தா குடைஞ்சிருக்காது??? :)
ச்சின்னப் பையன் said...
ReplyDelete//அடுத்த பகுதி எப்போ?//
இதோ போட்டுறவேண்டியதுதான்...!
குசும்பன் said...
ReplyDelete//இந்த பதிவுக்கு
http://kusumbuonly.blogspot.com/2007/12/blog-post_05.html
போய் பாருங்க எல்லாம் உங்களுக்குதான், இந்த கதைக்காகவே நான் அந்த பதிவை எழுதியது போல் இருக்கிறது.//
அடப்பாவி மனுசா!
நான் ஏதோ நல்ல விசயமாக்கும்னு நினைச்சு போனா, எல்லாம் டெம்ப்ளேட் வகுப்பு! சரி..சரி..புதுசா
கல்யாணம் ஆகி கஷ்டத்தை அனுபவிச்சதால...விட்டுர்றேன்.
:))))
நல்லாயிருக்கு. Waiting for அடுத்த பகுதி
ReplyDelete