Posts

நன்றி நவிலல்!

இந்த வாரம் முழுமையும் எது எழுதினாலும் ரசித்து குறைகளோடு ஏற்று, வந்திருந்து வாழ்த்தி, அன்புகாட்டி அசத்தி, என்னுள்ளம் கொள்ளை கொண்ட பதிவுலக நண்பர்களுக்கு பணிவான நன்றிகள்! திடீரென்று இன்பம் தந்து திகட்டத்திகட்ட வாய்ப்பு தந்த தமிழ்மண நிர்வாகத்திற்கு தலைவணங்கி நன்றிகள்! இனியென் எழுத்தில் ஏதேனும் மாற்றத்தை இயன்றவரை கொண்டுவந்து எடுத்திருக்கும் நற்பெயரை எப்போதும் தக்கவைப்பேன்.! வாசிப்பில் வளர்ந்தாலும் வாசிக்கும்படி வளர்வது பதிவுலகம் எனக்குத்தந்த பரிசாக எண்ணுகிறேன்! சென்ற ஏழுநாட்களும் எனக்கு வாரமல்ல! வரம்!

புதுக்கோட்டை

Image
புதுக்கோட்டையைப்பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதானால், வாழ்ந்து கெட்ட ஊர்! கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைப்பெயர்களுடன் சதுரமாக, ராஜ வீதிகள்! அதன் உள்ளே பழைய அரண்மனை மற்றும் கோவில்! ஒவ்வொரு ராஜவீதிப்பக்கமும், 4 தொடர் வீதிகள். ஒவ்வொரு வீதியும் ஒன்றையொன்று சந்திக்குமாறு அமைந்த தெருக்கள். அந்தக்காலத்திலேயே கழிவுநீர் வாய்க்கால் வசதி மிகச்சிறப்பாக மன்னராட்சி நடந்த பகுதி இப்போது நாடாளுமன்றத்தொகுதி அந்தஸ்து கூட இல்லாமல் தடுமாறுகிறது. இங்கே மீதி விபரங்கள் மற்றபடி கலைகளில் ஆர்வமும், ஆச்சர்ய மனிதர்களும் நிறைந்த அற்புதமான ஊர்! வடிவமைத்து நிர்மாணிக்கப்பட்ட மிகச்சில இந்திய நகரங்களில் இதுவும் ஒன்று! இங்கு பார்ப்பதற்கும் பழகுவதற்கும் ஏராளமான அற்புத நபர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இந்த நகரத்தையும், மாவட்டமும் சார்ந்த நமது புதுகைத்தென்றல், அப்துல்லா, புதுகைச்சாரல், பாண்டியன், தெக்கிக்காட்டான், சுந்தரவடிவேல் போன்ற பதிவுலக நண்பர்களும் அடக்கம்! நேர்மையைப் பிரதிபலிக்கும் நாமக்கல் கலெக்டர் திரு.சகாயம் அவர்கள் ,மகசேசே விருது வாங்கியிருக்கும் அடையாறு கேன்ஸர் இன்ஸ்ட்டிட்யூட்டின் டா...

யான்பு அல் சினைய்யா

ஊர்களும் மனிதர்களும் என்னைச்செதுக்கியவர்களென்றால்...அது மிகையில்லை. கடல்கடந்த ஒரு தேசத்தில், அதன் கலாச்சாரம், மொழி, உணவுவகைகள் என்று எதுவுமே தெரியாமல் நான் போய் இறங்கிய ஊர்தான் யான்பு அல் சினைய்யா. சௌதி அரேபியாவின் மிகச்சிறந்த கடற்கரை நகரங்களில் இதுவும் ஒன்று.! சௌதி அரேபியாவின் பல கடற்கரை நகரங்கள் அரபிக்கடலில் அமைந்திருந்தாலும்..யான்பு என்ற அந்த நகரம் செங்கடல் ஓரத்தில் அமைந்திருக்கிறது. அதாவது தேசத்தின் மேற்கு எல்லையில்..! ஊருக்குக்கிளம்பும் முன்னால், சௌதியைப்பற்றி பல்வேறு வதந்திகளை சுற்றியுள்ளவர்கள் கிளப்பியிருந்தாலும், ஊர்களும், மனிதர்களும் தரும் போதையில் நான் ஆட்பட்டிருந்ததால், அவர்கள் சொல்லியவற்றை காதில் வாங்காமல், மனதை வெள்ளைக்காகிதமாய் வைத்துக்கொண்டு , எந்தவொரு முன்முடிவும் இல்லாமல் சென்று இறங்கினேன். அதற்கு பங்கம் வைக்காமல், ஒரு அழகான, சக மனிதர்களை மதிக்கும், உழைப்பை நம்புபவர்களுக்கு உயர்வளிக்கும், கட்டுப்பாடான வாழ்க்கையை வலியுறுத்தும், ஒழுங்கைக் கடைபிடிக்கும்,கடவுளை நம்பும் ஒரு அற்புத தேசம் என்னை வரவேற்றது. சௌதி அரேபிய மன்னராட்சி, இரண்டு நகரங்களை தொழில் வளர்ச்சிக்கென்...

அறந்தாங்கி

என் பட்டியலில் உள்ள ஊர்களைப்பற்றி நட்சத்திர வாரம் தாண்டியும் எழுதலாம் போலிருக்கிறது. :) என் வாழ்வில் கல்லூரி ஆண்டுகளைக்கழித்த ஊர். அறந்தாங்கி! புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில் செல்லும் வழியில் இருக்கும் ஒரு தாலுக்கா தலைமையகம்! (இந்த ஊர் மட்டும் நான் போகும்போதே தாலுக்கா) சிறிதாகத்தெரியும் பெரிய ஊர்! காரைக்குடியிலிருந்து ஒரு சாலையும், புதுக்கோட்டையிலிருந்து மற்றொன்றும் வந்து செக்போஸ்டில் சந்தித்து வி.எஸ் தியேட்டர் , எம் ஜி ஆர் சிலை வழியாக ஊருக்குள் போகும். அடுத்த சாலை ஆவுடையார்கோவிலிலிருந்து வந்து கோட்டை வழியாக எம் ஜி ஆர் சிலை வரும். அது இரண்டும் சேர்ந்து கட்டுமாவடியிலிருந்து வரும் சாலையோடு சேர்ந்துகொண்டு ஊருக்குள் பஸ்ஸ்டாண்ட் நோக்கி பயணிக்கும். மற்றபடி எதிர்த்திசையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி சாலைகளும் பேருந்து நிலையத்தில் முட்டும். நான் இருந்தது கோட்டைப்பகுதி! அந்தக்கோட்டையின் ஒரு பகுதியில் உயரத்தில் ஒரே ஒரு சிற்பம் இருக்கும். அதுவும் படு அடல்ட்ஸ் ஒன்லி ஐட்டம்! வெளியூரிலிருந்து நம்மைப்பார்க்க வரும் நண்பர்களிடத்தில் அதைக்காட்டி டெம்ப்ட் ஆக்குவதில் அலாதி மகிழ்ச்சி! வாணி தியேட்டர...

தென்காசி

திருநெல்வேலி மாவட்டத்தில், என் ஞாபக அடுக்குகளில் ஈரம் சேர்த்துவைத்திருக்கும் ஊர்! என் சிறுவயது அனுபவங்களில் நான் பார்த்த மிகப்பெரிய ஊர். நான் பிறந்தது அங்குதான். திருநெல்வேலி சாலையில், முனிசிபல் ஆபீஸுக்கு பின்னால் அபிஷேகபுரம் தெரு! தெருவின் இருமருங்கிலும் நேர் எதிர் வீடுகள். தெருவின் கடைசியில் ஒரு பெரிய பிள்ளையார்.! சிறிய கோவில்.! தெருவுக்குப்பின்னால் தாமிரபரணி. ஒவ்வொருவீட்டுக்கும் ஒரு படித்துறை! அங்கு அப்போது பரதன், பாக்கியலெட்சுமி, வாஹினி என மூன்று தியேட்டர்களில் லீவுக்குச்செல்லும் ஒரு மாதமும் திரையிடும் அனைத்துப்படங்களையும் பார்த்திருக்கிறேன். நினைச்சா குற்றாலத்துக்கு நண்பர்களுடன் நடந்தோ, சைக்கிளிலோ சென்று ஆட்டம் போட்டுவிட்டு நல்லபிள்ளையாக மதியம் சாப்பாட்டுக்கு வந்துவிடுவது.! அதைவிட்டால், சன்னதித்தெருவில் ஒரு மாடியில் இருந்த அரசு நூலகத்தில் சென்று கோகுலம், அம்புலிமாமா, பாலமித்ரா, முத்தாரம், யுனெஸ்கோ கூரியர் என்று பலவகைப் புத்தகங்களைப் படித்துவிட்டு வருவது! தென்காசியில்தான் நான் ரம்மி விளையாடக்கற்றுக்கொண்டேன். அப்புறம் ட்ரேட் என்றொரு விளையாட்டு! கிரிக்கெட் ஆடக்கற்றுக்க...

பொருள் ஒழுங்கு!

நம்ம மொத்த வாழ்நாள், சராசரியா 80 ஆண்டுகள்ன்னு வச்சுக்கிட்டா தூங்குறதில் சுமார் 30 ஆண்டுகள் போயிடும்! மீதமிருக்கும் 50 ஆண்டுகளில் நம்ப வேலை நேரமா சுமார் 15 ஆண்டுகள் போயிடும். அப்புறம் குளிக்க, சாப்பிட, சொந்த வேலைகள் பார்க்கன்னு தனித்தனியா கணக்குப்போட்டுக்கிட்டே வந்தா ஒவ்வொண்ணும் ஒரு கணிசமான இடத்தைப்பிடிச்சுக்கும். இந்த பட்டியலில் மொத்த வாழ்நாளில் 3 ஆண்டுகளைப்பிடிச்சுக்கிற ஒரு தேவையில்லாத விஷயம் இருக்குன்னு புள்ளிவிபர அறிஞர்கள் கண்டுபிடிச்சுருக்காங்க! அது எது தெரியுமா? நாம் ஏதாவது ஒரு பொருளை இடம் மாத்தி வச்சுட்டு தேடுறதுக்கு செலவழிக்கும் நேரம்தான்! மொத்த வாழ்நாளில் 3 ஆண்டுகளை நம்முடைய ஒரு தவறுக்காக செலவழிக்கும் நேரத்தில் என்னவெல்லாம் செய்யலாம்? ஆனா அதை நாம் ஜஸ்ட் லைக் தட் புறந்தள்ளிட்டுப் போயிடுறோம். ஏன் இப்படி நடக்குது? ஒரு பொருளின் தேவையும் , தேவையின்மையும் நமக்கு முதலில் தெரியலை! ஜப்பானிய தொழில் நேர்த்தி ஒண்ணு இருக்கு அதுக்கு 5எஸ் ன்னு பேரு! செய்ரி..செய்ட்டன்...செய்சோ..செய்கெட்ஸு...மற்றும் சிட்சுகே ஆகிய ஐந்துதான் அது! இதில் முதல் இரண்டு விஷயங்களைத்தான் நாம் இப்ப பாக்கப்போறோ...

அய்யனார் கம்மாவின் லெமன் ட்ரீ நிழலில் ஒரு டைரிக்குறிப்பு!

ஒரு சிறுகதைத்தொகுதியிலோ, ஒரு மாத, வாரப்பத்திரிக்கையிலோ புரட்டிக்கொண்டே வரும்போது ஒரு கதையைப்படிக்கிறோம். அது மிகவும் சுவையாக இருக்கிறது. உடனே அந்த எழுத்தாளர் யார் என்று பார்ப்போம். அவரைப்பற்றி நண்பர்களிடம் கேட்போம். அவர்களுக்கும் அவரைப்பற்றித்தெரிந்திருந்தால், அவர் எழுதிய மற்ற கதைகளைப்பற்றி தெரியவரும். அவற்றைத்தேடிப் படிக்க ஆரம்பிப்போம். பின்னர் அவர் எந்தப்புத்தகத்தில் எழுதினாலும், எதைப்புத்தகமாக எழுதினாலும் விரும்பி வாங்குவோம். அவரது படைப்புகளின் நடையைப்பற்றி சிலாகிப்போம். அவரை ஒரு நாள் சந்தித்து அவரது படைப்புகளைப்பற்றி பாராட்டியும் , கொஞ்சமாக விமர்சித்தும் பேசவேண்டும் என்று திட்டமிட்டு, அதே போல் ஒரு நாள் அவரைச் சந்தித்து, சிந்தித்ததில் பாதியளவாவது அவரிடம் பேசிவிட்டு, அந்த எழுத்தாளரை நேரில் சந்தித்தேன் என்று நண்பர்களிடம் கூறுவோம். பின்னர் (அவருக்கோ, நமக்கோ) பிடித்திருந்தால் அந்தச் சந்திப்பு நட்பாகத்தொடரும். இதுதான் பொதுவாக எல்லா வாசகர்களுக்கும் நடப்பது! பதிவுலகில் அது அப்படியே வேறு கோணம்! முதலில் ஒரு பதிவைப்படித்து, அது பிடித்ததால், அந்தப்பதிவருடன் நட்புக்கொண்டு, அந்த அன்பின் வெளிப்பா...