Posts

பண குணம்

Image
பணம்.. நம் அன்றாடத்தேவைகள் மட்டுமன்றி, நம் வாழ்க்கையையே நிர்ணயிப்பதாக அமைந்துவிட்டது. அதை வைத்து மனிதர்களுக்குள் வரும் பிரச்னை கொஞ்ச நஞ்சமல்ல.! ஒருவரது அடிப்படை குணத்தை, அவர் பணத்தைக் கையாளும் தன்மையையும் வைத்துத்தான் நாம் எடைபோடுகிறோம். அதுவும் அவர் எப்படி தனக்கான கொடுக்கல் வாங்கல்களைச் செய்கிறார் என்பதை வைத்து அவரது குணாதிசயத்தை நிர்ணயிக்கிறோம். உண்மையில், பண குணம்தான் எல்லோரையும் பற்றி நமக்கு உலகுக்கு எடுத்துரைக்கிறது. இதில் அடிப்படையாக இரண்டு விதம்.. கொடுப்பவர்,- 50 பைசா பிச்சை கொடுப்பவரிலிருந்து, அரை லட்சம் அவசரத்தேவைக்குக் கொடுப்பவர் வரை அனைவரும் கொடுப்பவரே!  வாங்குபவர்..!! -கடையில் சாக்லெட் வாங்குவதிலிருந்து, கால் கோடி கடன் வாங்குவது வரை – அனைவரும் வாங்குபவரே..! இருவருக்குமிடையேயான உறவில்தான் ஒருவருடைய பணகுணம் நிர்ணயிக்கப்படுகிறது. நம்மில் எத்தனையோ நண்பர்கள், உறவினர்களுடன் பல்வேறு காலகட்டங்களில் செலவுகளைப் பகிர்ந்துகொள்ளும் நிலை வரும். அது ஒரு உணவகத்தில் சாப்பிடும்போது இருக்கலாம். மொத்தமாக ஐந்தாறு குடும்பங்கள் ஒரு பிரயாணம் செய்யும்போது இருக்கல...

வலைப்பதிவர் திருவிழா – வாசற்படி நன்மைகள் # 2

Image
பதிவர் சந்திப்பு நடந்தேறி, அதைப்பற்றிய நேர், எதிர் விவாதங்களும் சூடேறி, கொதித்து, அடங்கி் மீண்டும் அவரவர்கள் அடுத்த வேலைகளைப் பார்க்கச் சென்றுகொண்டிருக்கும் இந்நேரத்தில்..எனது அடுத்த பாகம்… இந்தப் பதிவர் சமூகத்தை சமூகமும், ஊடகங்களும் ஒரு ஓரப்பார்வை பார்த்தபடிதான் உள்ளன. பதிவுலகத்துக்கென்று ஒரு சில பக்கங்களை ஒதுக்க ஆரம்பித்துவிட்டன. ஒரு புத்திசாலிகளின் ஒருங்கிணைப்பாகத்தான் பார்க்கின்றன. ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை கணிப்பொறியில் வேலை பார்த்துக்கொண்டே , அதிலேயே கருத்துக்களையும், படைப்புகளையும் எழுதுபவர்கள் மிகவும் அறிவாளிகளாகவும், சமூக சிந்தனை கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்பது அவர்களது கணிப்பு..!! பாவம்! J உண்மையில் நம்மில் பலர், அப்படித்தான் இருக்கிறார்கள். சமூக அக்கறையுடனும், நியாயமான படைப்புகளுடனும் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், எதிர்வினைகளாலும், எதிரிவினைகளாலுமே காலம் கடத்தும் பதிவுகளையும் மற்றவர்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். ஆனால் அப்படிப்பட்ட பதிவுகளை விலக்கிவிட்டுப் பார்த்தால், வலைப்பூக்கள் மிகப்பெரிய ஊடகமாக மிளிர்ந்...

அகவை 70ல் அப்பா!

Image
          எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் அவரை நான் பார்த்துவருகிறேன். ஒரு சாதாரணக் குடும்பத்தில் இரண்டு அண்ணன்கள், இரண்டு தங்கைகள், ஒரு தம்பியுடன் பிறந்து ஒரு அரிசி மில்லில் வேலைபார்த்துக்கொண்டே படித்து, பின்னர் பள்ளிக்கல்வியை மிகுந்த சிரமத்துக்கிடையே முடித்து, ஆசிரியக்கல்வியும் கற்று, ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றத்தொடங்கி, பின்னர் மாநில அரசின் ஊரக வளர்ச்சித்துறையில் கிராமசேவக் எனப்படும் பணியில் நிலைபெற்று வாழத்துவங்கி ஊராட்சி ஆணையராக பணி ஓய்வு பெற்றவர் அவர்.!      என்னிடம் அதிகம் பேசுபவரில்லை. நிறைய அறிவுரைகளும் சொல்பவரில்லை. நான் என்ன செய்யக்கூடாtது என்று பட்டும் படாமல் சொல்லிச் செல்வார். சிறுவயதில் இவர் எனக்கு சிம்ம சொப்பனம். அரசாங்க ஊழியராய் இருந்துகொண்டு லஞ்சம் வாங்காமல் இருந்தவர். ஒருமுறை லஞ்சம் கொடுக்க வந்த ஆளை அடிக்கச்சென்றவர். அந்த மனிதரிடமிருந்த நேர்மைதான் என்னை மிகவும் வியப்பிலாழ்த்தியது. எந்தக்காலகட்டத்திலும் அவர் நேர்மையை விட்டுக்கொடுத்து நான் பார்த்ததே இல்லை. தவறு யார் செய்திருந்தாலும், தைரிய...

முகமூடி.. – பாத்துட்டோம்ல..!

Image
மிஷ்கின் இயக்கத்தில் முகமூடி திரைப்படத்துக்கான டிக்கெட்டை’ அன்புடன் கொடுத்த ஒரு திரையுலகப் பிரபலத்துக்கு எனது நன்றி..! 12 மணி காட்சிக்குச் சென்றேன். கமலா தியேட்டர் நிரம்பி வழிந்தது. ‘நான்’ திரைப்படத்துக்கான டிக்கெட்டுகள் நிறைய இருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். நான் இணைய ஆதாரத்தைக் காட்ட, எனக்கு ஒரு டிக்கெட் கொடுத்தார்கள். என்னவோ நாந்தான் முகமூடி போல ஒவ்வொருவரும் நாலுமுறை டிக்கட்டைப் பார்த்து செக் செய்தார்கள். போய் இருக்கையில் அமர்ந்தேன். படம் பார்த்தேன். வில்லனின் பெயரும், ஜீவாவின் அப்பாவின் பெயரும் நரேன் என்று இருப்பதை இரசித்தேன். சிலருக்கு அப்பாதான் வில்லனே..!!  எனது நண்பரும், மிஷ்கினின் இணை இயக்குநருமான தெய்வா கை நிறைய பாட்டிலை வைத்துக்கொண்டு ஒவ்வொருவராகக் கொடுத்துக்கொண்டே வந்து கடைசியில் ஜீவாவுக்கும் ஒரு பாட்டில் கொடுத்ததை இரசித்தேன். போதிதர்மர் கற்றுக்கொடுத்ததை, ஜீவா நினைவுபடுத்திக்கொண்டிருந்ததை இரசித்தேன். நரேன் வைத்திருந்த ஹார்டுவேர் கடையையும் அதன் உபதளவாடங்களையும் இரசித்தேன். அம்பாசிடர் வைத்திருப்பவர்கள்தான் ரோட்டில் வாழைப்பழத்தோலை போடுவார்கள...

வலைப்பதிவர் திருவிழா – வாசற்படி நன்மைகள் 1

Image
சென்னை வலைப்பதிவர் திருவிழா இனிதே நிறைவுற்றிருக்கிறது. அதனை திறம்பட நடத்தி , வெற்றிகண்டிருக்கிற அத்துனை உள்ளங்களுக்கும் நம் உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள வேண்டும். இந்த நிகழ்வு பதிவூடகம் கொஞ்சம் மேலதான்   (க்ளிக்கிப் பாருங்கள்...காரணம் தெரியும்..)  என்று மீண்டும் நிரூபித்திருக்கிறது.      பதிவர் திருவிழா, ஒரு குடும்ப விழாவின் நேர்த்தியோடு நடந்தது. ஒரு பாடலாசிரியர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார். ஒரு மூத்த புலவர் வழிநடத்துகிறார் ஒரு மனிதவள மேம்பாட்டு அதிகாரி ஒத்துழைத்து, ஒருங்கிணைக்கிறார். சில கணிப்பொறி மென்பொருள் வல்லுனர்கள் நிகழ்ச்சி அமைப்பின் முக்கியப்பங்கு வகிக்கின்றனர். ஒரு மென்பொருள் நிறுவன அதிபர் வந்தோரை வரவேற்கிறார். ஒரு பெண் கவிஞர் நிகழ்ச்சி ஏற்பாடுகளில் உறுதுணையாக இருக்கிறார். ஒரு கணக்காளர் தொடர்புகளை வலுப்படுத்துகிறார். சிறப்பு விருந்தினரை ஏற்பாடு செய்கிறார். ஒரு தனியார் நிறுவன அதிகாரி மேடையைப் பார்த்துக்கொள்கிறார். ஒரு திரைப்பட இயக்குநர் , சகஜமாக பதிவர்களை அறிமுகப்படுத்துகிறார். ஒரு ஒளிப்பதிவாளர...

வலைப்பதிவர் திருவிழா

Image
சந்திப்போம் வாருங்கள்!

இரண்டு பஸ்களும் ஒரே தீர்வும் !

Image
சென்ற ஜூலை முதல் வாரத்தில், கேட்டால் கிடைக்கும் குழும உறுப்பினர் சண்முகம் அவர்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதன் சாராம்சம் இதுதான்:    கடந்த ஜூலை 1ம் தேதி இரவு அவர் சென்னையிலிருந்து அமெரிக்காவுக்கு விமானம் ஏறவேண்டும். ஆகவே அன்று காலையில் புறப்பட்டு சேலத்திலிருந்து சென்னை வருவதற்காக Redbus.com ல் பஸ்ஸில் வர டிக்கெட் முன்பதிவு செய்கிறார். அதன்படி பஸ் காலை 11 மணிக்கு கிளம்பும் என்று தெளிவாகப் போட்டிருக்கிறது. அவரும் பத்து மணிக்கெல்லாம் கிளம்பி ஏறவேண்டிய இடத்துக்கு வந்து நின்றுகொண்டு, பஸ் கம்பெனிக்கு போன் செய்கிறார். அவர்களும் 11 மணிக்கு வந்துவிடும் காத்திருங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் 11 மணி தாண்டியும் வண்டி வந்த பாடில்லை. மீண்டும் கம்பெனிக்கு போன் அடித்து , நான் காத்திருக்கிறேன் பஸ் வரவில்லையே என்கிறார். அப்போதுதான் அவர்கள் அந்த குண்டைப் போடுகிறார்கள். நீங்கள் செல்லவேண்டிய பஸ் இரவு 11 மணிக்குத்தான் கிளம்புகிறது. இப்போது ஏன் காத்திருக்கிறீர்கள்?. அதிர்ச்சியடைகிறார். மீண்டும் ரெட்பஸ்ஸின் டிக்கெட்டைப் பார்க்கிறார். தெளிவாக 11AM என்று போட்டிருக்கிறது. ரெ...