இன்றே சொல்லவேண்டிய நன்றி!
திருமணம் மீது எனக்கிருந்த பயத்தைவிட, அதற்குப்பின் தேவைப்படும் பொறுப்புணர்ச்சியின் மீதுதான் அதிக ஐயம் இருந்தது.சரியான நேரத்துக்கு வீட்டுக்குத்திரும்பமுடியுமா? சொல்லும் பொருட்களை வாங்கிவர முடியுமா? ஓவராகப் பேசினால் சமாளிக்கமுடியுமா? இவற்றை மீறி, நம்மால் ஒரு பெண்ணுக்கு எந்த ஒரு கெடுதலும் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.
அவர்கள் வீட்டிலிருந்து தாயும், தந்தையும் ஒரு பரபரப்பான மாலை நேரத்தில் வீட்டுக்கு வந்து என் பெற்றோரைச்சந்தித்தார்கள். நாங்கள் ஒரு நாள் அவர்கள் வீட்டுக்குச்சென்றோம். போனால் ' சரி ' என்றுதான் சொல்லுவேன் என்ற நிபந்தனையுடன் போனேன். ஒரு பெண்ணைப் பார்த்து உன்னை எனக்கு ஏதோ ஒரு காரணத்தால் பிடிக்கவில்லை என்று கூறுவதில் எனக்கு எப்போதும்
விருப்பமிருந்ததில்லை. நிராகரிப்பின் வலியை நானும் உணர்ந்திருந்ததால்...!
திருமணமும் நடந்தது.
அவள் வீட்டுக்குள் வந்ததிலிருந்து எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் என் வாழ்வில் ஏற்படுத்திவிடாமல் சகஜமான வாழ்க்கையை அப்படியே வாழவைத்தாள். என் பெற்றோரிடம் தகுந்த மரியாதையுடனும், அன்புடனும் வித்தியாசமின்றியும் பழகினாள். அவர்களும் அப்படியே! நான் சொல்வதை ஆரம்பத்திலிருந்தே தெளிவாக கவனித்தாள். தன் விருப்பு வெறுப்புகளை தெளிவாக என்னிடம் கூறினாள். ஆனால் அதை வலியுறுத்தாமல், அவளுக்கு சில வலிகள் இருந்தபோதும் அதனுடனேயே சிரித்துக்கொண்டே பழகினாள்.
என்னை, என்னைவிட அதிகம் கவனித்துக்கொண்டாள்.
எனக்கான வேலைகளை சிரமேற்கொண்டாள்
எங்கள் வாரிசுகளை கண்ணும் கருத்துமாக வளர்க்க ஆரம்பித்தாள்.
தாய்வீட்டில் காலை எட்டுமணிக்குக்குறையாமல் தூங்குபவள், அதிகாலை எழுந்து பம்பரமாகச் சுழன்றாள்.
வெளியில் நான் எப்படி ஒழுங்கைக் கடைப்பிடித்தாலும், வீட்டில் என் ஒழுங்கின்மையைச் சகித்துக்கொண்டு சரிசெய்தாள்.
வீட்டுக்குள் நுழையும்போது உள்ளத்தில் பூப்பூக்குமாறு எப்போதும் பார்த்துக்கொண்டாள்.
தவறுகள் செய்துவிட்டு, அழகாக மன்னிப்புக்கேட்டு மறக்கச்செய்தாள்.
எல்லாவற்றையும் மீறி, நான் என்ன சம்பாதித்தாலும், அதைப்பற்றி கவலையே படாமல், என்னிடம் இன்றுவரை இதை வாங்கு அதை வாங்கு என்று என் உயிரை வாங்காமல் கொடுத்ததை வைத்து குறைவின்றி குடும்பம் நடத்துகிறாள். என் லட்சியத்திலும் கூட நிற்கிறாள்.
நான் தொழில் மீதான அக்கறையைக்குறைத்துக்கொண்டு, திரைத்துறைக்குப் போகிறேன் எனும்போது ' உங்களுக்கு எது சரின்னு படுதோ செய்யுங்க' என்று எனக்கான பாதையில் ரத்தினக்கம்பளமாய் விரிகிறாள்.
அவளுக்கென்று நான் என்ன செய்திருந்தாலும், அவளுக்காக ஒதுக்காத நேரத்துக்கு வருந்துகிறேன். என்றாவது எனக்கும் அவளுக்கும் மட்டுமே ஒதுக்க கொஞ்சம் நேரம் தா! என்று காலத்திடம் கடன் கேட்டு நிற்கிறேன்.
இதோ.. திருமணமாகி, நாளையுடன்...ஏழு ஆண்டுகள் ஓடிவிட்டன.
ஹேமா.... எனக்கு மனைவியாக வந்த தோழியே! உன்னோடு வாழும் இந்த வாழ்வுக்கு நன்றி!!
வாழ்த்துக்கள் பாஸ் :))
ReplyDeleteகுடும்பத்துடன் சேர்ந்திருக்க நேரம் ஒதுக்க முடியாததற்காக, அந்தரங்கத்தில் சொல்ல வேண்டிய சால்ஜாப்பை, அம்பலத்தில் நன்றி சொல்கிற சாக்கில் சேர்த்தே சாமர்த்தியமாகச் சொல்கிறீர்கள் போல!
ReplyDeleteதிருமண நாள் வாழ்த்துக்கள்!
Seven year itch என்று சாதாரணமாக திருமணமானபின் ஏற்படுகிற சலிப்பைச் சொல்லுவார்கள்!சலிப்பு, சங்கடங்கள் இல்லாத சந்தோஷமான புரிதலுடன் கூடிய மண வாழ்க்கையை பெண்ணால் தான் உருவாக்க முடியும்! அந்த வகையில் திருமதி.ஹேமாவுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்களை இந்தத் தருணத்தில் சொல்ல வேண்டுமே!
:)
ReplyDeleteஅருமை.!
ReplyDeleteஆரம்ப வரிகள் திருமண பருவ இளைஞர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியவை.
கொடுத்து வச்சவர் சார் நீங்க..
வரம் கொடுத்த இறைவனுக்கும் சேர்த்து நன்றி சொல்லுங்க !
திருமண நாள் வாழ்த்துகள் ...
ReplyDeleteநல்லா எழுதி இருக்கீங்க, ஆனா வெட்டியா இதே எழுதுற நேரத்த சேர்த்து அவுங்களுக்காக செலவு பண்ணி இருக்கலாம் ..
அடடா அடடா அண்ணி வாழ்க!
ReplyDeleteதிருமணநாள் வாழ்த்துக்கள்.
Many more happy retunrs of the day.
ReplyDeleteவாழ்த்துக்கள் சுரேகா & குடும்பத்தினருக்கு...:-)
ReplyDelete\\\மங்களூர் சிவா said...
ReplyDeleteஅடடா அடடா அண்ணி வாழ்க!
திருமணநாள் வாழ்த்துக்கள்.\\\
அண்ணிக்கு ஏன் ஸ்பெஷலா வாழ்க போடுறீங்க.. சுரேகாவையே சமாளிக்கிறாங்கன்னா? நம்மளையே சகிச்சிக்க ஆள் இருக்கும் போது சுரேகாவுக்கு என்ன... ;-)))
மனமார்ந்த வாழ்த்துக்கள் தலைவரே.
ReplyDeleteவாவ்! தம்பீ ஏழு ஆண்டுகள் ஓடிப் போச்சா... தோழியை வாழ்க்கைத் துணையாக பெற்றது பெரும் பாக்கியமில்லையா - அப்படியே வைச்சுப் பார்த்துக்கப்போய்.
ReplyDeleteஹேமா - சுந்தர் வாழ்த்துக்கள்!
மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள் சுரேகா...
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள்... காலத்தில் சொல்ல வேண்டிய நன்றி சரியா சொல்லி இருக்கீங்க... நன்றி சொல்லவும் ஒரு மனசு வேணும்... அதுக்கு நன்றி... உங்க துணைவிக்கும் என்னோட வாழ்த்துக்களை சொல்லுங்க... கவிதையான பதிவு...
ReplyDeleteஆஹா ராசா கலக்கிட்டியே! கலங்க அடிச்சுட்டியே! என் அன்பான வாழ்த்துக்கள் தங்ககைக்கும் உனக்கும். நல்லா இருங்கப்பா!!!!
ReplyDeleteநன்றி ஆயில்ஸ்!
ReplyDeleteவாங்க கிருஷ்ணமூர்த்தி சார்!
ReplyDeleteமிக்க நன்றி! உங்கள் அன்புக்கும், ஆசிக்கும்!
வாங்க ஷங்கர் ^%*^*%&%(*&
ReplyDeleteஎன்ன சிரிப்பு...ஓ ஆனந்தமா?
ஆமாம்...தமிழ் மீரான்...இறைவனுக்கும் நன்றி!
ReplyDeleteவாங்க vaaalpaiyan...மிக்க நன்றி! :)
ReplyDeleteஒரு சிறு ஆலோசனை!
முன்னரே ஒரு வால்பையன் இருப்பதால்.. தங்கள் பெயரை மாற்றி வச்சுக்கலாமே!
வாய்யா..சிவா! மிக மிக நன்றி! உன் போன் வாழ்த்துக்கு மிக்க நன்றி!
ReplyDeleteவாங்க தமிழ்பிரியன்...மிக்க நன்றிங்க!
ReplyDeleteவாங்க புதுகைத்தென்றல்...
ReplyDeleteமிக்க நன்றிங்க!
மிக்க நன்றி தெகா அண்ணா!
ReplyDeleteஆமா...ஏழு ஆகிப்போச்சு!
கண்டிப்பா!
மிக்க நன்றி கேபிள்...மொக்கைமடலில் நீங்கள் ஆரம்பித்த வாழ்த்துக்கும் சேர்த்து நன்றி!
ReplyDeleteவாங்க மோனி!
ReplyDeleteமிக்க நன்றிங்க!
வாங்க மோகன்குமார்...மிக்க நன்றி~!
ReplyDeleteவாங்க அப்பாவி தங்கமணி!
ReplyDeleteஇப்படி ஏத்திவிட்டு ஏத்திவிட்டுத்தான் ரணகளமாகிக்கிடக்கு!... :))
வாழ்த்துக்கு நன்றிங்க!
வாங்க அபி அப்பா...
ReplyDeleteமிக்க நன்றி! உங்க ஆசீர்வாதம் இருந்தா போதும்...!
அண்ணே என்னது கல்யாணம் ஆகி 7 வருசம் ஆவுதா? அப்ப என்ன பால்யவிவாகமா?:))))
ReplyDeleteஅண்ணிக்கு வாழ்த்துக்கள்:))
அன்பின் சுரேகா
ReplyDeleteஇனிய மண நாள் நல்வாழ்த்துகள்
சுந்தர் - ஹேமா தமபதியினருக்கு
இன்று போல் என்றும் மகிழ்வுடன் இருக்க நல்வாழ்த்துகள்
ஹேமாவும் எங்கள் அன்பினைத் தெரிவிக்கவும்
நட்புடன் சீனா
This comment has been removed by the author.
ReplyDeleteநண்பரே,
ReplyDeleteதிருமண நாள் வாழ்த்துக்கள் !
வீட்டுக்குள் நுழையும்போது உள்ளத்தில் பூப்பூக்குமாறு எப்போதும் பார்த்துக்கொண்டாள்.
ReplyDeleteதவறுகள் செய்துவிட்டு, அழகாக மன்னிப்புக்கேட்டு மறக்கச்செய்தாள்.
எல்லாவற்றையும் மீறி, நான் என்ன சம்பாதித்தாலும், அதைப்பற்றி கவலையே படாமல், என்னிடம் இன்றுவரை இதை வாங்கு அதை வாங்கு என்று என் உயிரை வாங்காமல் கொடுத்ததை வைத்து குறைவின்றி குடும்பம் நடத்துகிறாள். என் லட்சியத்திலும் கூட நிற்கிறாள்//
அட அசந்துட்டேங்க சுரேகா..ரெண்டு பேருமே கொடுத்து வைத்தவர்கள்..உண்மையாய் இல்லாமல் இப்படி சொல்ல முடியாது .. வாழ்க வளர்க..