நியாய நாய்விபத்து நடந்து,
வினாடிகளில்
காணாமல் போகும்
நகைகளில்,
தொகைகளில்
இருக்கிறது
மனிதாபிமானப்
பிசாசுக்கும்
சுயநல
தெய்வத்துக்குமான
அமைதிப் போரின்
அநியாய வெற்றி!

வெற்றியின் ருசியில்


நாளைய 
விபத்துக்காய்

நாக்கைத்

தொங்கப் போடுகிறது

நியாய நாய்!

Comments

 1. நல்ல கவித்துவமான கற்பனை ..நிஜத்தை இணைத்து பாக்கும் பொழுது
  மனசு வலிக்கும் ஏன் இப்படி செய்றாங்கன்னு .

  நான் சிரிச்சா தீபாவளி - அனுஷ்காவின் அடுத்த அட்டாக்

  ReplyDelete
 2. வாங்க இளைய தாசன்..

  மிக்க நன்றி!

  ReplyDelete
 3. அன்பின் சுரேகா - கவிதை நன்று - சிந்தனை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

இறைவி - எண்ணங்கள் எனது !

உன்னைக் காணாது நானிங்கு..