ஓ - போடப்போறேன்

அன்பு நண்பர்களே..!

உண்மையிலேயே உங்கள் வேட்பாளர் சரியில்லாதவர் என்று தெரிந்தால்
49 (O) போடுங்கள்.செய்யவேண்டியதெல்லாம்..

வாக்குச்சாவடிக்கு செல்லவேண்டும்.

வாக்குச்சாவடி அலுவலரிடம் சென்று நம் முகவரியையும் , பெயரையும் சரி பார்த்து 17A புத்தகத்தில் கையெழுத்திட்டுவிட்டு. மையிட்டுக்கொண்டு....49 (O) என்று சொல்லுங்கள்!

அவரே அதை பூர்த்தி செய்வார்...காரணமாக...நீங்கள் நினைப்பதை சொல்லுங்கள்..எழுதப்படும்..
மீண்டும் கையெழுத்திட்டுவிட்டு....கையைத்தட்டிக்கொண்டு வந்துவிடுங்கள்..!


நான் 49 (O) தான் போடப்போகிறேன்..காரணமாக , புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியை நீக்கியது பொறுக்காமல் -என்று சொல்லப்போகிறேன்.

விபரம் அறிய தயவு செய்து இதையும் படியுங்கள்.

Comments

 1. வாக்குப்பதிவு இயந்திரத்திலேயே இதற்கும் வசதி செய்திருக்கலாம். :)

  ReplyDelete
 2. ம்ம்ம்ம்ம் - இது உதவுமா .......

  ReplyDelete
 3. கலக்குங்ணா??

  கள்ள ஓட்டு மாதிரி கள்ள 49(O) உங்களோடத போட்டுடபோறாங்க சீக்கிரமா காலைலயே போங்க!!!

  :)))

  ReplyDelete
 4. ஆமாம் அப்பா சொன்னாங்க சுரேகா,

  புதுகையை 4ஆ பிரிச்சு பக்கத்து ஊர்களோட சேத்துட்டாங்களாம்.

  என்ன கொடுமைங்க இது.

  யாரை கேட்டு பிரிச்சாங்களாம்???!!!!

  ReplyDelete
 5. வாங்க எட்வின்..அடுத்த தேர்தலில் செய்வதாக தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கு!

  ReplyDelete
 6. வாங்க சீனா சார்..

  ஆமா..கண்டிப்பா இது உதவும்..

  ReplyDelete
 7. வாங்க சிவா...!

  ஆமாப்பா...செஞ்சாலும் செய்வாய்ங்க..கெரகம் பிடிச்சவய்ங்க!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

இறைவி - எண்ணங்கள் எனது !

உன்னைக் காணாது நானிங்கு..