நித்யானந்தாவும், நானும்..!

இதை ரஞ்சிதா எழுதியிருந்தால் மிகுந்த ஆர்வம் ஏற்படும். என்ன செய்வது?

இன்று, நேற்று என்று அந்த மனிதனைப்பற்றி ஒரு பிரளயமே கிளம்பி எகிறிக்கொண்டிருக்கிறது. நல்லா இருக்கீங்களா? என்று கேட்பதற்குமுன் நித்யானந்தா மேட்டர் தெரியுமா? என்று கேட்டுவிட்டுத்தான், நேரில் சந்திப்பவர்களும், தொலைபேசுபவர்களும் பேசவே ஆரம்பிக்கிறார்கள்.

என் கல்லூரிக்கால நண்பன் ஒருவன் அமெரிக்காவில் நித்யானந்தரின் சீடனாகவே ஆகிவிட்டான். தன் குழந்தைகளுக்கு நித்யா, ஆனந்தி என்று பெயர் வைத்திருந்தான். அந்த அளவுக்கு அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தான். இன்று அனேகமாக அவன் ரொம்ப துக்கப்படக்கூடும். காரணம் அவன் அவரை கருத்துக்களை மீறிக் கொண்டாடியதுதான்!

இந்த விஷயத்தில், நாம் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால், நம் அடுத்த தலைமுறையையாவது தெளிவாக்கலாம் என்ற நம்பிக்கையில்தான் இதைச்சொல்கிறேன்.

ஒரு மனிதன், வாழ்வின் சில விஷயங்களை ஒரு கார்ப்பரேட் ட்ரெய்னர் போல, (HR Trainer) போல, கொஞ்சம் ஆன்மீகம் கலந்து பேசுகிறான். அதன் பார்வையாளர்களும்,- வெவ்வேறு வயதினர், வெவ்வேறு தளத்தினர் - அதை ரசிக்கிறார்கள். ' அட! ஆமா! நாம இப்படித்தான் இருக்கோம்! - நம்பளை மாத்திக்கணும் என்று நினைக்கிறார்கள்'. சிலவற்றை மாற்றிக்கொள்ளவும் செய்கிறார்கள். அன்று கேட்ட சொற்பொழிவிற்கான கட்டணத்தையும் செலுத்தியிருக்கிறார்கள். அந்த விஷயத்தை கடைபிடித்து வாழ்வை நிதானமாக வாழாமல், சொன்ன ஆளை பூஜிக்க ஆரம்பிக்கும்போதுதான் , சும்மாக்கிடந்த ராஜசேகரனை, பரமஹம்ஸ நித்யானந்தாவாக்குகிறது உலகம்!

மேலும், சொற்பொழிவைக்கேட்டுவிட்டு, அன்று இரவே , மனைவியிடமோ, வேறு பெண்ணிடமோ காமம் பெற்றுக்கொண்டோ, குறைந்தபட்சம் மது ,சிகரெட் ஆகியவற்றில் சுகம் தேடும் பக்தனாகத்தான் பெரும்பாலோர் இருக்கிறார்கள். ஆனால் மேடையில் காவி உடை அணிந்துகொண்டு அரியாசனத்தில் அமர்ந்துகொண்டு , அந்த பக்தனுக்கு வாழ்க்கை நெறிகளைச்சொன்ன குற்றத்துக்காக புனிதன் பட்டம் கட்டிக்கொண்டு தன் சுய ஆசைகளை எல்லாம் திருட்டுத்தனமாக செய்யவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானதில் அவரது தவறைவிட நம் ஆட்டுமந்தை சமூகத்தின் தவறுதான் அதிகமாக இருக்கிறது.

இந்த வயதில், வாழ்வியல் அனுபவங்கள் ஏதுமின்றி ஒருவன் கூறும் எல்லா அறிவுரைகளையும் ஏற்றுக்கொள்ளும் இந்தச்சமூகம், அவனை தூக்கிவைத்துக் கொண்டாடுவதும்..ஸ்வாமியை நேரிலேயே பாத்துவிட்டேன், ஸ்வாமி கை என்மேல் பட்டுவிட்டது! ஸ்வாமி என்னைப்பார்த்து சிரித்தார் என்று உருவ....உடல் வழிபாட்டை ஆரம்பித்து , அவனை , சராசரி மனிதர்கள் செய்யும் எந்தச்செயலையும் செய்யவிடாமல் பார்த்துக்கொள்கிறது. பின்னர் என்ன? பூஜைகள்தான்..ஆராதனைகள்தான்! அதில் அவனுக்கு ஏற்படும் போதை , தன்னையே கடவுளாக எண்ணவைத்துவிடுகிறது. அந்த எண்ணம் வலுப்பெற்று, தலை அரித்தால் கூட பொறுத்துக்கொண்டிருந்துவிட்டு, உள்ளறைக்குள் போய் சொறிந்துகொள்ளும் அவலம் அவனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. பின்னர் ஆசிரமம் , கிளைகள், நன்கொடை , படாடோபம் என்று வரும்போது சுகம் தேடும் மனம் விழித்துக்கொள்வதில் , தவறிருப்பதாய் எனக்குத் தெரியவில்லை.

ஒரு வாழ்வியல் பயிற்சியாளனை தெய்வமாகப்பார்த்துவிட்டு , அவன் அதைச்செய்தான் இதைச்செய்தான் என்று கூறுவதில் துளியும் நியாயம் இல்லை!

அவர் செய்த ஒரே தவறு! அந்த ரூமில் கேமரா இருப்பதை முழுமையாக ஆராயாமல் செயலில் ஈடுபட்டதுதான் ! :)

மற்றதெல்லாம் நம்ம தப்பு பாஸு! இனிமயாவது சொன்ன கருத்தை மட்டும் எடுத்துக்குவோம். சொன்ன ஆளை வேண்டவும் வேண்டாம்! நோண்டவும் வேண்டாம்!

Comments

  1. அந்த எண்ணம் வலுப்பெற்று, தலை அரித்தால் கூட பொறுத்துக்கொண்டிருந்துவிட்டு, உள்ளறைக்குள் போய் சொறிந்துகொள்ளும் அவலம் அவனுக்கு ஏற்பட்டுவிடுகிறது.---- இவனுங்களையெல்லாம் பாத்த ரெம்ப பாவமா இருக்கு... ஹஹஹ

    ReplyDelete
  2. நல்ல பதிவு.

    நானும் அந்த வீடியோவை ஆறு அல்லது எழு முறை பாத்து விட்டேன், நூறு பதிவுகள் படித்து விட்டேன், அறுபது பின்னூட்டங்கள் எழுதி விட்டேன்.

    இன்னமும் ரஞ்சிதா மீது எனக்கு கோபமோ எரிச்சலோ வர வில்லை.
    இந்த மன நிலையை என்ன சொல்வது

    ReplyDelete
  3. வாங்க இசை!

    ஆமாங்க! பாவமாத்தான் இருக்கு! கோவமா இல்லை!

    ReplyDelete
  4. வாங்க யாஹூ ராம்ஜி!

    மிக்க நன்றிங்க!

    ஆமாம். ரஞ்சிதாவுக்கு இன்னும் நிறைய பிரச்னை இருக்கு! என்ன பத்திரிகையாளர், நடிகர்கள் கொஞ்சம் பெரிசாவோ, சின்னதாவோ பண்ணுவாங்க!

    ReplyDelete
  5. ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டால், இத்தனை விபரீதங்களுக்கும் காரணம் நம்மிடமே இருக்கிறது என்பது தெரிய வரும்.

    ஆன்மிகம் என்பது கார்பரேட் ட்ரைனிங் மாதிரி அல்ல. கம்பனிகளில் சொல்லித் தரும் மனிதவளம் என்பது வார்த்தையிலும் நடைமுறையில் வேட்டை நாயாகவும் இருக்கும் HR மாதிரியும் அல்ல! வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் அது சொல்லும் செய்திகளைக் கூர்ந்து கவனித்துப் பெறுகிற அனுபவங்களின் சாரம் ஆன்மீக வெளிச்சமாக, உள்ளிருந்தே வழி நடத்தக் கூடியது. வெளியில் இருந்து கிடைப்பதல்ல!

    இங்கே மனிதர்களின் இயல்பான சோம்பேறித்தனம், கற்றுக் கொள்கிற முனைப்பு சுயமாக இருக்காது; ஆனால், இன்ஸ்டன்ட் காப்பி மாதிரி இன்ஸ்டன்ட் ஞானம் வந்து விடவேண்டும் என்று அலைகிறபோது, நித்தியானந்தா மாதிரி freak உருவாவதைத் தவிர்க்க முடியாது. நம்முடைய சோம்பேறித்தனம், இந்த மாதிரி freak கிடைத்தாலே போதும் என்று செட்டில் ஆகிவிடுகிறது. அங்கே தான் முழுக் கோளாறுக்கான ஆரம்பம் இருக்கிறது.

    குறிப்பிட்ட விஷயங்களுக்குஅதிகமான டிமாண்ட் இருக்கும்போது, போலிகள் தான் முதலில் வந்து நிரம்பும். போலிகள் ஜாக்கிரதை என்ற போர்டெல்லாம் வாழ்க்கையில் உபயோகப் படாது!

    ReplyDelete
  6. வாங்க கிருஷ்ணமூர்த்தி சார்!

    ஆமாம்.. நீங்கள் சொல்வது முற்றிலும் சரி!

    ReplyDelete
  7. என்ன சார் தப்பிலைன்னு சொல்றீங்க
    சரி மக்களை மந்தைகள் என்றே வைத்துக் கொள்வோம் அவர் நம்பிக்கையை குலைத்தது குற்றமில்லையா அவன் எண்ணக் கூத்தாடினாலும் பிரச்சினையில்லை. அது மந்தைகள் என்று நீங்கள் விளித்த அப்பாவிகளின் உழைப்பில் இல்லையா? நிச்சயமாக இம்மாதிரியான மடங்கள் சட்டத்தின் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக வேண்டும்.

    ReplyDelete
  8. வாங்க தர்ஷன்...

    நான் மடங்களே உருவாக்க விடக்கூடாதுங்கிறேன். நீங்க அதை உருவாக்கவிட்டு, கண்காணிக்கணும்கிறீங்க! :)

    மறுபடியும் சொல்றேன். நம்ம தப்புதான்! நாம் அப்பாவியாகவே இருந்தாலும்.. :)

    ReplyDelete
  9. நான் மடங்கள் உருவாக வேண்டுமென சொல்ல வில்லை. இன்றைய நிலையில் ஏலவே நிலைப்பெற்று விட்ட மடங்களை திடீரென இழுத்து மூடுவது சாத்தியமற்றது. ஆகவே தக்க சமயத்தில் அடுத்தடுத்து பல சாமியார்கள் மாட்டுப்படும் இச்சந்தர்ப்பத்தில் இதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கொஞ்சம் தவற விட்டாலும் நம் மக்கள் மறந்து விட்டு அடுத்த சாமியை பார்க்கப் போய்விடுவர்.

    ReplyDelete
  10. ரொம்ப சரியா சொன்னீங்க சுரேகா!

    ReplyDelete
  11. மடங்களே உருவாகக் கூடாது! ?!?!

    இப்போதெல்லாம் மடங்கள் வெவ்வேறு வடிவங்களில் நாளொருமேனி பொழுதொருவண்ணமுமாக, இப்போதெல்லாம், அவைகளுக்குக் கழகங்கள் என்று பெயர், உருவாகிக் கொண்டு தான் இருக்கின்றன.

    மடத் தடிகளாகி விடாமல் இருப்பது நம் கைகளில் தான் இருக்கிறது!

    @ தர்ஷன்

    மந்தைத்தனம் என்பது மாற்றத்திற்குப் பயந்து, சோம்பேறியாக, பழக்கங்களின் அடிமையாகவே இருந்துவிடுகிற தன்மையை மட்டும் சொல்வதாக எடுத்துக் கொண்டு யோசித்துப் பாருங்களேன்

    ReplyDelete
  12. இன்னும் மக்கள் திருந்தலேன்னா இந்த மாதிரி காம சாமியார் வெட்ட வெட்ட முளைச்சிட்டு தான் இருப்பாங்க... புத்தி கெட்ட மக்கள் இனியாவது திருந்தனும். ஆசையை எவனும் அடக்க முடியாது. மனித வாழ்க்கையில் முற்றும் துறந்தவன் என்பதெல்லாம் போலித்தனம். நம்பாதவர்களுக்கு இது போன்ற ஆயிரமாயிரம் சாமியார்களின் கதை சான்று சொல்லும்... விசுவாமுத்திரர் தொடங்கி நித்யானந்தா வரை.

    ReplyDelete
  13. ஒரு வாழ்வியல் பயிற்சியாளனை தெய்வமாகப்பார்த்துவிட்டு , அவன் அதைச்செய்தான் இதைச்செய்தான் என்று கூறுவதில் துளியும் நியாயம் இல்லை! நியமான கருத்து..
    இனிமயாவது சொன்ன கருத்தை மட்டும் எடுத்துக்குவோம். சொன்ன ஆளை வேண்டவும் வேண்டாம்! நோண்டவும் வேண்டாம்!......ஆழமான சிந்தனை

    ReplyDelete
  14. You are 100% correct brother.Good Luck.

    ReplyDelete
  15. 100 சதம் உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன். இருக்கும் பிரச்சினையெல்லாம் ஒரே நொடியில் சரியாக்குவதற்காக 3000 ரூபாயை இழக்க தயாராக இருக்கும் பேராசை மனிதர்களுக்கு இப்படிப்பட்ட அனுபவம் வந்தே தீரும்.

    எவ்வளவு மல்டி லெவெல் மார்கெட்டிங் வந்து ஆறு மாதத்தில் ஆறு மடங்கு பணம் தருகிறேன் என்று சொன்னாலும் பணம் கட்டுவார்கள் நம் மக்கள். அவர்களுக்குத் தெரியும் அது முடியாது, அவர்கள் ஓடி விடுவார்கள் என்று. ஆனாலும் முதல் மூன்று மாதத்தில் நம் பணத்தைக் கட்டி இரண்டு, மூன்று மடங்குகள் பெறலாம் என்ற பேராசை, மேலும் அப்படியே மூன்று மடங்கு பெற்றாலும் அது அடுத்தவன் பணமாயிற்றே என்ற எண்ணம் இருப்பதில்லை.

    இந்த பிரச்சினையில் சட்டப் படியாக நித்யா செய்த குற்றம் என்ன? அதை மட்டுமே பார்க்க வேண்டும். நம்பிக்கை துரோகம் அது இது என்பதெல்லாம் பசப்பல். வேண்டுமானால் இப்படிப்பட்ட ஒரு மனிதரிடம் பணம் கொடுத்து முக்தியடையப் பார்த்தோமே என்ற சுய பச்சாதாபம் இருக்கலாம். ஆனால் அதை இவரிடம் காட்டும் முன்பு அரசியல் வாதிகளிடம் காட்ட வேண்டும்.

    ReplyDelete
  16. we all thinking about nithya, what about ranjitha, women is always a weaker sex, this ideot utilise it. tv channels & news papers should take care before publishing such a thing. i feel sorry for ranjitha after all she is also a lady, how she can live among other after this.

    ReplyDelete
  17. ரொம்ப கரெக்ட் பாஸ் :))

    ReplyDelete
  18. உங்களுடைய கருத்து தவறு செய்பவர்களை ஊக்கப்படுத்துவது போல அமைவதாக நான் எண்ணுகிறேன்.
    சாமியாரோ யாரோ தவறு செய்தால் அது அம்பலப்படுத்தப்பட வேண்டும். தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
    அவர் சாதாரண மனிதனாக இருந்து இந்த காரியத்தை செய்திருந்தால் அது வேறு விடயம். துறவறம் என்ற போர்வையில் இலட்சக்கணக்கான மக்களை ஏமாற்றி, சொத்துகளை குவித்து, ஊரை அடித்து உலையில் போட்டவர் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டும்.
    ஜெயேந்திரர் கொலைகள் முதல் பாலியல் வல்லுறவு வரை எத்தனையோ அநியாயங்களை செய்தும் அதை மறந்துவிட்டு அவருக்கு காவடி தூக்கும் தமிழர்கள் நாளை இவரையும் மறந்து விடக்கூடும்.எல்லாவற்றுக்கும் மேலாக இல்லாத கடவுளை வைத்துக்கொண்டு மக்களை ஆட்டிப்படைக்கும் மதங்களை
    தோலுரிக்க விடயம் அறிந்தவர்கள் முன்வரவேண்டும். மத நம்பிக்கைகாரர்களின் மனம் புண்படும் என்று
    தயங்குவது இனியும் சரிவராது. தந்தை பெரியார் அப்படி நினைத்திருந்தால் இன்று எமது தமிழர்களின் நிலை எப்படி இருந்திருக்கும் எண்ணிப்பாருங்கள்.

    ReplyDelete
  19. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  20. தர்ஷன் ஜி!

    //நம் மக்கள் மறந்து விட்டு அடுத்த சாமியை பார்க்கப் போய்விடுவர்.//

    இந்த இடத்தில்தான் நாமெல்லாம் சேர்ந்து போகவிடாமல் பண்ணனும். அட்லீஸ்ட் நம்ம புள்ளைங்களையாவது! :)

    ReplyDelete
  21. //நித்யானந்தாவும், நானும்..!//

    விடியோ இருக்கா பாஸ்? :)))))))))))))

    ReplyDelete
  22. வாங்க முகிலன்..மிக்க நன்றி!

    ReplyDelete
  23. கேபிள்ஜியே ரைட்டுன்னுட்டீங்கன்னா, அப்பீலே இல்லையே!

    ReplyDelete
  24. மிகச்சரியாக சொன்னீங்க சாதிக் அலி!
    மிக்க நன்றி!

    ReplyDelete
  25. வாங்க Raja's forever ...மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  26. வாங்க அமரபாரதி!
    //இருக்கும் பிரச்சினையெல்லாம் ஒரே நொடியில் சரியாக்குவதற்காக 3000 ரூபாயை இழக்க தயாராக இருக்கும் பேராசை மனிதர்களுக்கு இப்படிப்பட்ட அனுபவம் வந்தே தீரும்.//

    மிகச்சரியான கருத்து!

    நீங்கள் சொல்வது முற்றிலும் சரி!

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  27. வாங்க தேனம்மை லட்சுமணன்...

    மிக்க நன்றி!

    ReplyDelete
  28. வாங்க ஆராய்வு!

    நான் நித்யானந்தாவை என்ன செய்யவேண்டுமென்று சொல்லவே இல்லை! :)

    இந்த மாதிரி ஆட்களை தானாகவே தெய்வமாக்கி, பின்னர் 'தப்பு செய்துவிட்டானே!' என்று தூக்கமிழக்காதீர்கள் என்று கூறுகிறேன்.
    எதிலும், நிதானமாக இருந்தால், எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் அதிகமாகாது இல்லையா? :)

    ReplyDelete
  29. வாங்க சஞ்சய்!

    அட..நான் - கிறது இந்த இடத்தில் சமூகத்தை குறிக்கிறதுப்பா!

    ஒரு வீடியோ பாத்து, பத்திக்கிட்டது பத்தாதா? :))

    ReplyDelete
  30. அனானிகளின் பின்னூட்டங்களுக்கு நான் பதில் சொல்வது இல்லை. ஏனெனில் அது ஏதோ காற்று வெளியைப்பார்த்து பேசுவதைப்போல் உணர்வதால்...!

    பாராட்டினாலும் சரி..! திட்டினாலும் சரி.! அனானியாக வந்தாலும், பின்னூட்டத்துக்குக்கீழ் பெயர் எழுதலாம். மின்னஞ்சல் முகவரி எழுதலாம். அவர்களுக்கு பதில் சொல்வதில் ஒரு நியாயம் உள்ளது.

    ReplyDelete
  31. அனானியைப்பற்றி சொல்லிமுடிக்கிறேன்.

    ஒரு அனானி சகட்டு மேனிக்கு எல்லா மதங்களையும் தகாத வார்த்தைகளால், வசைபாடியிருக்கிறார். அது நீக்கப்பட்டுவிட்டது.

    ReplyDelete
  32. சரி மாதிரி தெரியுது.. ஆனா என் பார்வை என்னன்னா..

    மக்கள் ஏமாளிஅக்ள்தான்.. அதற்காக இவனையெல்லாம் விட்டுட் முடியுமா? இப்படி நடக்கிற ஆசிரமத்தில் இன்னும் எத்தனையோ கோல்மால் நடக்கும்.. புடிச்சு ஆப்படிக்குனும்.. ரஞ்சிதாவை யாரும் குற்றம் சாட்டவில்லை.. அந்த நாயத்தான்

    ReplyDelete
  33. வாங்க கார்க்கி!

    கரெக்ட்!
    சாமியாரை என்ன செய்யணும்கிறதுக்கே நான் போகலை! இதுமாதிரி ஆளுங்க கொழுத்து வளரவே விடக்கூடாதுங்கிறேன். தெய்வ நம்பிக்கை இல்லாதவங்களே இவனை மட்டும் வழிபட்டு நான் பாத்திருக்கேன். தெய்வ நம்பிக்கையுடன், இவர்களையே தெய்வமா பாக்கும் நம்ம ஆளுங்க ஏமாறுவதைத்தான் சொன்னேன்.

    இன்னும் அவனை பிடிக்காம வச்சிருக்கோமே அதை என்ன சொல்லுறது?

    நம்ப வீட்டுப்பிள்ளைங்க சகதில விழுந்தா - அடுத்த முறை கவனமா போகச்சொல்றதில்லையா? - அதுமாதிரிதான் சொன்னேன்.

    மேலும்...சகதியே இல்லாம பண்ணனும்கிறதுதான் அடுத்த கட்ட நடவடிக்கை!

    :)

    ReplyDelete
  34. அண்ணே சூப்பர் பதிவு. நானும் இதை தான் எனது நண்பனிடம் சொனேன். அந்த பரதேசி ஏதோ சொன்னான் நீ கேட்ட அதோட விட்டுட்டு போயிருக்க வேண்டியதுதானே!!! உன்னைய யாரு அவன் காலை தொட்டு கும்பிட்டு சொன்னது?? அவன் போட்டோவ மணி பர்ஸ்ல வச்சி திரிய சொன்னது ??

    ReplyDelete
  35. மக்கள் மேல தப்பு சொல்லாதீங்க தல அவங்க என்ன செய்வாங்க... அவங்களுக்கு நல்லது பண்ண வேண்டிய அரசாங்கத்துக்கு தன்ன பாராட்டுறத கேக்குறதுக்கே நேரம் பத்த மாட்டேங்கிது , அப்புறம் அவங்க கஷ்டத்த இந்த மாதிரி சாமியாருகள வட்ச்சிதான் தீக்கனும்னு நெனப்பாங்க.... ஆனா பாவம் அவனுகளும் மக்களை ஏமாத்துனா அதுக்கு மக்கள் என்ன பண்ணுவாங்க.... பாவம் பாஸ் நம்ம மக்கள்.....

    ReplyDelete
  36. உண்மைதான் நண்பரே

    ReplyDelete
  37. ஆமாம் ரஞ்சிதாவினை பார்த்தால் பாவமாக் இருக்கிறது...

    ReplyDelete
  38. சிந்திக்க வைக்கும் பதிவு தலைவரே.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  39. வாங்க ரோமியோ! நன்றிப்பா!

    கரெக்டு..! :)

    ReplyDelete
  40. வாங்க ராஜா from புலியூரான் ஜி...!

    இங்க உண்மையிலேயே அப்பாவி மக்கள் யாரும் அந்தாளை நம்பி ஏமாறவில்லை. இவங்களுக்கெல்லாம் வயித்துப்பாட்டுக்கே சிரமம்.! ஏமாந்ததெல்லாம். ..மினிமம் 3000 ரூபாய் கட்டி வகுப்பு செல்ல முடிந்த நடுத்தர,படித்த மக்கள்தான்... அவுங்க செஞ்சது தப்புதானே!! அதைத்தான் சொன்னேன்...!

    நீங்க சொல்லும்,அரசாங்கம் மேட்டர் உண்மை! :)

    ReplyDelete
  41. வாங்க நான்ரசித்த...!

    மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  42. வாங்க அமுதா கிருஷ்ணா..!

    ஆம்.

    எனக்குத்தெரிந்து எந்தப்பெண்மணியும் ரஞ்சிதாவை குறை சொல்லவில்லை..

    ஆனால் என்னைக்கேட்டால்...

    சரி விடுங்க! :)

    ReplyDelete
  43. வாங்க தராசு ஜி! மிக்க நன்றி!

    நான் தலைவரா?

    ஓவரா இல்லை? :)

    ReplyDelete
  44. punithan enbavan kamam illathavana?
    oru punithanuku kamam vanthal ellaridamum sollivitu penai punara venduma? kamathai azhipavan mattumthan vazhikattuthaluku uriyavana?

    ReplyDelete
  45. வாங்க பிள்ளைவாள்!

    அதைத்தான் நானும் சொல்றேன். :) அவன் பாட்டுக்கும் அவன் வேலையைப்பார்த்துக்கொண்டு சந்தோஷமாக இருந்துவிட்டுப்போயிருப்பான். அவனைப்போய் சாமி என்று கொண்டாடிவிட்டு இப்போது குய்யோ முறையோ என்றால்....!

    ReplyDelete
  46. if poeple are lifting, he should come out say .Hey I am ordinary man. Why he is enjoying and start act as a god. Even though people is doing wrong he should correct it. ok not enjoying it. Don't say people are stupid.
    i m feel sorry about the actress. They came for the movie and acted few films after that noby body cares about them. They have to lead their life. whever they goes they are going get this kind life only. So we can't blame her.
    Sangamithra

    ReplyDelete
  47. //இனிமயாவது சொன்ன கருத்தை மட்டும் எடுத்துக்குவோம். சொன்ன ஆளை வேண்டவும் வேண்டாம்! நோண்டவும் வேண்டாம்//

    நூத்துல ஒரு வார்த்தை..

    ReplyDelete
  48. புரிஞ்சவன்March 5, 2010 at 1:27 PM

    அண்ணாச்சி, இவ்வளவு ஈஸியா சொல்லிபுட்டியலே, அதெல்லான்னா தப்பு இருக்கு-ன்னு, நா என்னா சொல்றேன்னா, அந்த புண்ணியவான், ராஜசேகரனா இருந்த ரஞ்சிதாவோட அப்படி இப்படி இருந்த அதப்பத்தி கேக்க நமக்கு உரிமை இல்லே , ஆனா அவர் வாழ்வியல் தத்துவங்களை சொல்றாரே, அத தான் தப்பு-ன்னு சொல்றோம், இங்கே ரஞ்சிதா ரோல் தப்பு இல்லே...ஏன்னானா அவங்க அப்படி தான்,இதுப்போன்ற டிஸ்கஷன்களெல்லாம் அங்கே சர்வசாதாரணன். ஸோ அதனால் இதுப்போன்ற போலி சாமியார்களுக்கு எல்லாம் சப்பை கட்டு கட்டுற வேலைய விட்டுங்க பாஸ்.

    ReplyDelete
  49. மற்றதெல்லாம் நம்ம தப்பு பாஸு! இனிமயாவது சொன்ன கருத்தை மட்டும் எடுத்துக்குவோம். சொன்ன ஆளை வேண்டவும் வேண்டாம்! நோண்டவும் வேண்டாம்!

    ந்ந்ந்நச்..!

    ReplyDelete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
  51. "இனிமயாவது சொன்ன கருத்தை மட்டும் எடுத்துக்குவோம். சொன்ன ஆளை வேண்டவும் வேண்டாம்! நோண்டவும் வேண்டாம்!"



    if one says a word he should keep and follow it first

    never preach for the world

    be true to your words


    rajamani

    ReplyDelete
  52. We need sex Education.. that alone I can say..

    ReplyDelete
  53. நல்ல பதிவு.
    இந்த சாமி(?)யார்(?)கள் விஷயத்தில் ஒன்று மட்டும் எனக்கு புரியவில்லை. நம்புகிறவர்கள் பெரும்பாலும் உழைத்து உயர்ந்தவர்கள். உழைப்பை நம்பியவர்கள் எப்படி உயர்ந்தவுடன் இந்த சாமியார்களை நம்புகிறார்கள்?

    ReplyDelete
  54. \\SanjaiGandhi™ said...
    March 4, 2010 7:51 AM

    //நித்யானந்தாவும், நானும்..!//

    விடியோ இருக்கா பாஸ்? :)))))))))))))
    \\

    சுரேகா! கோவக்காரனா இருக்கலாம் தப்பில்லை. ஆனா 'கோவா'காரனா இருக்க கூடாது:-)))

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !