சரவணா ஸ்டோர்ஸ் ! BRANDமாண்டமாய் !!







சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் பார்த்து ஏகப்பட்ட விவாதங்கள்!
அதற்குள் இருக்கும் நேர்மறை சூட்சுமம் நமக்கு புரிவதில்லை.
சரவணா ஸ்டோர்ஸ் 20 ஆண்டுகளுக்கு முன் ஒரு சாதாரண பெரும் கடை! ஆனால் இப்போது ஒரு பிராண்ட்..!
அதற்கு தேவையில்லாமல் ஒரு நடிகருக்குக் கோடிக்கணக்கில் கொடுத்து, அவர் முகத்தை அந்த நிறுவனத்துக்கு அடையாளமாக்குவது ஒரு பிராண்டுக்கு தேவையில்லை.
மேற்கத்திய பிராண்டுகள் , பெரும்பாலும் ஒரு குறியீட்டைக் கொண்டிருக்கும் அல்லது அதன் முதலாளியின் படத்தைத்தான் கொண்டிருக்கும்.
உலகெங்கும் பொரித்த கோழி விற்கும் KFC யின் பிராண்ட் பாருங்கள்.. அதன் முதலாளியின் படம்தான் இருக்கும்.
நிதி நிர்வாகம் செய்யும் FRANKLIN TEMPLETON பாருங்கள்! அதன் முதலாளி படம்தான் இருக்கும்.
பாலு ஜுவல்லர்ஸ் முதலாளிதான் அதன் பிராண்ட்
ரத்னா ஸ்டோர்ஸுக்கு முதலாளிதான் பிராண்ட்
வசந்த் அண்ட் கோவுக்கு முதலாளிதான் பிராண்ட்
சரவணா ஸ்டோர்ஸின் மூலக் குடும்பத்துக்கு இன்னும் அண்ணாச்சியின் சிரித்த முகம்தான் பிராண்ட்!
அதனால், அவர் முகம் காட்டியதில் ஒன்றும் தவறில்லை.!!
நடிகர்களோ, விளையாட்டு வீரர்களோ, இன்னொரு பிராண்டுக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால், அந்த முதலாளிகள் மாற மாட்டார்கள்.
மேலும், அவரை நமக்கு முன்னரே தெரியாது என்பது மட்டும்தான் நமது பிரச்னை!
தெரிந்திருந்தால் இவ்வளவு கலாய்த்தல் நடந்திருக்காது.
மேலும்..
அவர் ஒன்றும் விபரம் தெரியாதவரோ, விளம்பரத்துக்கு முகம் காட்ட ஆசைப்படுபவரோ கிடையாது.
அந்த விளம்பரத்தில் வருபவரின் மகளுக்குத் திருமணமாகிவிட்டது.
அவர் ஆரம்பத்திலிருந்தே பிராண்ட் பற்றி அறிவு கொண்ட மனிதர்!
பெரிய நடிகரை அணுகி.. அவர் கேட்ட தொகை இவர்களுக்கு அதிர்ச்சி அளித்ததால்கூட களத்தில் இறங்கியிருக்கலாம்.
ஆனால்.. அவர் முகம் இப்போது சரவணா ஸ்டோர்ஸின் பிராண்ட் ஆகிவிட்டது.
இதனை ஒரு சரியான பிராண்ட் நடவடிக்கையாகத்தான் பார்க்கிறேன்.
மேலும்.. அவரது முகம் 1:1.6 எனப்படும் பிராண்ட் விதிப்படி சரியாக இருக்கிறது.
அழகை மீறி, விளம்பர உளவியலுக்குச் சரியான முகம்...!!
இன்னொரு செய்தி.. கடந்த ஒரு ஆண்டில், உலகளாவிய வகையில், பிராண்டுக்கு பிரபலங்களை புக் செய்வது 31% குறைந்திருக்கிறதாம்.
ஆக.. சரவணா ஸ்டோர்ஸ் உண்மையிலேயே Brandமாண்டமாய்த்தான் திட்டமிட்டிருக்கிறார்கள்.

Comments

  1. விளம்பரத்தை முதலில் பார்க்கையில் யாருடா இந்த ஆளு? என்று தோன்றியது! அதற்கு பின் இத்தனை சூட்சுமங்களா? நன்றி!

    ReplyDelete
  2. விளம்பர்த்தின் பின்னனியில் இத்தனை செய்திகளா

    ReplyDelete
  3. FRANKLIN TEMPLETON முகப்பில் இருக்கும் படம் சேர் ஜோன் ரெம்பிள்ரனின் படம் அல்ல மாறாக பெஞ்சமின் ஃபிராங்கிளின் (1705-1790) படம். இவர் அமெரிக்காவின் நிறுவனர்களில் ஒருவர். இவர் பல துறைகளில் தேர்ச்சி பெற்றவர் அமெரிக்கவை ஒரு தலை சிறந்த நாடாக தோற்றுவிப்பதில் அத்திபாரம் இட்டவர்களில் இவர் முக்கியமானவர்
    புதிய நாடாக அமெரிக்கா தவழும்போது என்னென்னெ தேவையோ அனைத்தையும் செய்தவர். இவர் ஒரு விஞ்ஞானியும் கூட. ஆம் இடிதாங்கியைக் கண்டுபிடித்தவர் இவரே. இவரின் கண்டுபிடிப்புகள் முக்கியமானவை. மட்டுமல்லாமல் அவெர் ஸ்தாபித்த தபால் அலுவலகம் இன்றும் உள்ளது. அங்கே சென்று இன்றும் பழைய சீல் இட்டு தபால் அனுப்பலாம். மேலும் தான் வாழ்ந்த அதேவீதியில் அச்சுக்கூடம் கூட நடத்தினார். தொழில் பட்டறை அச்சுக்கூடம் தபால் அலுவலகம் என பலதையும் தானே ஸ்தாபித்து அமெஇக்க மக்களுக்கு தன்னம்பிக்கை அளித்தவர். அவர் வாழ்ந்த இடத்தை அவரின் வழித்தோன்றல்கள் அரசிடம் கையளித்து விட்டு அனாமதேயமாய் வாழ்கிறார்கள்.
    இதுவே நமது நாடு என்றால் இன்னும் தலைமுறை தலை முறையாய் கதிரைக்கு அலைவார்கள்.

    ReplyDelete
  4. மிகச்சரியான பார்வை,நேர்மையான, வயித்தெரிச்சல் இல்லாத அலசல்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!