போஜன்வாலாவின் டென்ஷன்வாலா...!

இந்த பதிவுக்கு அடிப்படைக்காரணம் புதுகைத்தென்றல் போட்ட இந்த
பதிவுதான்..

ஏன்னா அவுங்கதான் எனக்கு இந்த கொசுவத்தியை கிளப்பிவுட்டுட்டாங்க..!

நான்..பல ஆண்டுகளுக்கு முன்னால ஒரு தில்லி நிறுவனத்தின் திருச்சி கிளைல பொட்டி தட்ட (சரி பண்ண) வேலைக்கு சேந்தேன். அங்க என் கூட சீனிவாசன்னு ஒரு நண்பன்.! அவன் சரியான லந்து பேர்வழி..!(நமக்கு வாய்க்கறதெல்லாம் பின்ன எப்புடி இருக்கும்?)

தினமும் ஏரியாவுக்கு வேலையா காலைல 9 மணிக்கெல்லாம் கிளம்பிடுவோம்.. மொதல்ல 2 பேரும் டிபன் சாப்பிட்டுட்டு...மதியம் ஹோட்டல் மதுரா..(தெப்பக்குளம் பக்கத்துல ..சாரதாஸ் பின்னாடி  இருக்கு.._) வில் சாப்பாடு சாப்பிடுவோம். அங்க எப்புடின்னா பந்திமாதிரி உக்கார வச்சு அளவில்லா (Unlimited) சாப்பாடு போடுவாங்க!அதுவும் முடிச்சா மாலைல தூள் பக்கோடா டயமண்ட் பஜாரில் ஒரு கடையில்..
சில நாள் மதிய சாப்பாடு லேட்டாகிட்டா மாரீஸ் தியேட்டருக்கிட்ட வெண்ணிலா ரெஸ்ட்டாரண்டில் பொரிச்ச புரோட்டா.. இப்புடி நல்லா போயிட்டுருந்த சாப்பாட்டு வாழ்க்கையில- யார் கண் பட்டுச்சோ..கம்பெனில சாப்பாட்டு அலவன்சை நிறுத்துறதா
சொல்லிட்டாங்க.! இது என்னடா இளைய சமுதாயத்துக்கு வந்த சோதனைன்னு..தினமும் 40 ரூபாய்க்கு கம்பெனி காசுல சாப்புட்டுப்புட்டுநச் ன்னு திரிஞ்ச எங்க கோஷ்டிக்கு -என்ன கொடுமை சார் - ன்னு ஆகிப்போச்சு..!

சொந்தக்காசுல சாப்பிட வேண்டியதால காலைல ஒரு டீயும், பிஸ்கட்டோடயும் முடிச்சுக்கிட்டு...11.30க்கெல்லாம் மதுராவில் சாப்பிடுவதுன்னு முடிவுக்கு வந்தோம்.. அதுவும் காசு மிச்சம் பண்ணத்தானே தவிர ரொம்ப டேஸ்ட்டுன்னு சொல்ல முடியாது..!
இது இப்புடியே போயிட்டிருக்கும்போது... மறுபடியும் கம்பெனில பாலை
வாத்தாங்க..ஆனா, மதிய சாப்பாடு மட்டும்தான் அதுக்கும் பில் கொடுக்கணும்.. ஆனா பில் 20 ரூபா வரை இருக்கலாம் னாங்க..!அதுவும் கஷ்டம்..ஏன்னா மதுராவில் 11 ரூபாதான் சாப்பாடு..! பில்லை அதிகப்படுத்தி வாங்கவும் எங்களுக்கு வெக்கம்..!

சீனிவாசனுக்கு கம்பெனி மேல கடும் கோபம்..என்னடா இது..தினமும் 9 ரூபா கம்பெனிக்கு வுடுற மாதிரி இருக்கேன்னு..20 ரூபாய்க்கு எங்க சாப்பாடு போடுவாங்கன்னு தேட ஆரம்பிச்சான்.
அன்னிக்கு சாயந்திரம் வேலை முடிச்சு வந்தவுடனே..சீனிவாசன் பயங்கர சந்தோஷமா இருந்தான்.. என்னடான்னு கேட்டா..டேய் ! 20 ரூபா சாப்பாடு போடுற ஹோட்டலை
கண்டுபிடுச்சிட்டேன். நாளைக்கு என்னோட வான்னான்.

அன்று.. என்னமோ பாக்காமலே பழகின காதலிய சந்திக்கப்போற மாதிரி..ஒரே படபடப்போட நாங்க போன எடம்தான்..

ராம்தேவ் போஜன்வாலா..!

திருச்சி பெரிய கடைவீதியில்..கள்ளர் தெருவுக்கு பக்கத்தில்..ஒரு சைக்கிள் கம்பெனியின் மாடியில் இருந்தது..!எவ்வளவு வேணும்னாலும் ரோட்டி சாப்பிட்டுக்கலாம்..அப்புறம் கொஞ்சம் சாதம் வாங்கிக்கலாம்ங்கிற டைப் சாப்பாடு..! அதுதான் வட இந்திய சாப்பாடுன்னு எனக்குஅன்னிக்குதான் தெரியும்.ரொம்ப நல்லா இருந்தது..நமக்கு இனிமே பட்ஜெட்டையும் முடிச்சமாதிரி இருக்கும்!நல்ல சாப்பாடு சாப்பிட்டு உடம்பும் ஏறும்னு.. பயங்கர மகிழ்ச்சி.. !

இந்த நல்ல சேதியை சந்திக்கிற நண்பர்களுக்கும் சொல்லி ஒரு பெரிய வாடிக்கையாளர் பட்டாளத்தையே கொண்டு போக ஆரம்பிச்சோம்.

பொதுவாவே சீனிவாசன் கொஞ்சம் நல்லாவே சாப்பிடுவான்.

அங்கதான் ஆரம்பிச்சுது பிரச்னையே..!

Comments

  1. திரைக்கதை அமைப்பில இருக்குதப்பா உன் பதிவெல்லாம்... சுவாரசியம் குறையாமல் பட்டைய கிளப்பு சொல்றேன்...

    தொடருமா.... பாகம் 2ல... வெயிடிங்.

    ReplyDelete
  2. கொசுவத்தி நல்லா இருக்கு.

    அதென்ன ஒவ்வொரு முறையும் சஸ்பென்ஸ் வெக்கரீங்க.

    அதிகமா கிரைம் நாவல் (தொடர்கதையா) படிப்பீங்களோ?!!

    ReplyDelete
  3. //திரைக்கதை அமைப்பில இருக்குதப்பா உன் பதிவெல்லாம் //

    நன்றிங்கண்ணா..!

    அப்புறம்..? சினிமாக்காரன்னா சும்மாவா?

    ReplyDelete
  4. //அதென்ன ஒவ்வொரு முறையும் சஸ்பென்ஸ் வெக்கரீங்க.

    அதிகமா கிரைம் நாவல் (தொடர்கதையா) படிப்பீங்களோ?!!//

    பாராட்டுக்கு நன்றிங்க..!!

    பதிவு ரொம்ப பெரிசா போனா கடுப்பாயிருவீங்கன்னுட்டுதான்..மத்தபடி சஸ்பென்ஸெல்லாம் தானா அமையறது..!

    ReplyDelete
  5. ///அன்று.. என்னமோ பாக்காமலே பழகின காதலிய சந்திக்கப்போற மாதிரி..ஒரே படபடப்போட நாங்க போன எடம்தான்///

    அட அட..என்னா ஒரு உதாரணம்..

    அடுத்து பாகம் எப்போ..

    ReplyDelete
  6. //அட அட..என்னா ஒரு உதாரணம்..

    அடுத்து பாகம் எப்போ..//

    தங்கள் வருகைக்கும்.. பாராட்டுக்கும் நன்றிங்க.!

    அடுத்த பாகம் போட்டேங்க..வாங்க..!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !