ஒரு நல்ல காரியம்...
நேத்து (23.12.07) ஞாயிற்றுக்கிழமை ஒரு நல்ல காரியம் பண்ணினேங்க.!

ஈஷா பசுமைக்கரங்கள் சார்பா 2.5 கோடி மரங்கள் நடும் விழா கொண்டாடினாங்க.!
           
           நமக்கும் அதுல ஈடுபாடு இருக்குறதால.. அந்த விழாவில் பங்கெடுத்துக்குற வாய்ப்பு கிடைச்சதுங்க..! (நன்றியுரையெல்லாம் சொன்னோமுல்ல..)நேரா காலைல கிளம்பி அருகிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்குப் போய் சுமார் 2000 மரக்கன்றுகள் நட்டோம். அதில் நான் குறைந்த பட்சம் 10% நட்டிருப்பேன். 200 மரக்கன்றுகளை ஒரு நாளில் நட்டபோது கிடைத்த திருப்தி இருக்கிறதே..!

அடடா...! அதுக்கு ஈடு இணை இல்லங்க!

     மாலையில் ஒரு விழாவுடன் இனிதே நாளை முடித்தோம். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் மாண்புமிகு. S. ரகுபதி அவர்கள் வந்து நிறைய புள்ளிவிவரங்களுடன் பேசினார்கள். தமிழகத்தின் நீராதாரம் இனி பிற மாநிலங்களல்ல.. மரங்கள்தான் என்றார்.
மிகவும் மகிழ்வுடன்...இந்த மண்ணுக்கு ஏதோ செய்த திருப்தியுடன் தூங்கினேன்.
(ஆனா இதுவும் நம்மை வறட்சியிலிருந்து காப்பாற்றும் ஒரு சுயநல முயற்சிதான்..!)

நமக்கு வாழ இடம் தந்து
இயற்கை வளமனைத்தும் தந்து
உணவுப்பொருள் ஒன்றுவிடாமல் தந்த
புவியன்னைக்கு
வயிற்றில் பால் வார்க்கவேண்டாம்.
கொஞ்சம் நீர்வார்க்கவாவது
முயற்சிக்கலாம்
அதற்கு மரம் நட்டால் போதும்.!
மிச்சத்தை அவள் பார்த்துக்கொள்வாள்!

முடிஞ்சா இன்னிக்கே ஒரு மரக்கன்று நடுங்க.!
ஒவ்வொரு பிறந்தநாளைக்கும் கண்டிப்பா நடுங்க.!
இதுலயும் நடுவரா இருக்கலாம்.. :-)

Comments

 1. kalakunga. enna ethum muthalvar aagira thittam irukka. pothu sevei ellam seyya aarambichirukunga. enakum mattum sollunga. pdkt thantha pudumanach chemmalnu oru padivu pottudaren hi hi hi

  ReplyDelete
 2. மங்களூர் சிவா said...

  //great work. all the best.//


  நன்றிப்பா..நீங்களும் ஒரு மரத்தையாவது நட்டுடுங்க.!

  ReplyDelete
 3. புதுகைத் தென்றல் said...

  //kalakunga. enna ethum muthalvar aagira thittam irukka. pothu sevei ellam seyya aarambichirukunga. enakum mattum sollunga. pdkt thantha pudumanach chemmalnu oru padivu pottudaren hi hi hi//

  இப்புடியே ஏத்திவுட்டு ஏத்திவுட்டுதான் ரணகளமா கிடக்கு..!

  ReplyDelete
 4. அட நம்ம ரகுபதி சார்தான் இப்ப வனத்துறை அமைச்சரா?

  கலக்குடா கண்ணா... நீ..!

  ReplyDelete
 5. சுரேகா,

  //இதுலயும் நடுவரா இருக்கலாம்.. :-)//

  அப்போ நான் சொன்ன நல்ல நடுவர்களில் நீங்களும் இருக்கிங்க!

  நடுவர்னா இப்படித்தான்யா இருக்கனும்.

  அஷோகர் சாலை ஓரங்களில் மரம் நட்டார்னு நாம படிச்சதை பார்த்தாலே தெரியும் மரத்தின் அருமை!

  ஒரே நாளில் 200 மரம் நட்ட நீங்க தான் சாம்ராட் அஷோகர் விட பெரிய ஆள்!

  நான் வரலை வந்து இருந்தா ஏன் எல்லாம் மரம் நடுரோம்னு சொல்லிட்டு மரக்கன்று நடுறிங்கனு மொக்கைப்போட்டு இருப்பேன்!

  மரம் நட்டவர்கள் பின்னர் அதை கவனித்துக்கொள்ள வேண்டும் இல்லை எனில் பெரும்பாலும் செத்து விடுகின்றன.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 7. Thekkikattan|தெகா said...

  //அட நம்ம ரகுபதி சார்தான் இப்ப வனத்துறை அமைச்சரா?//

  ஆமா அண்ணாத்த..!

  முதலில் உள்துறைல இருந்தார்..இப்போ
  சுற்றுச்சூழல்....

  ReplyDelete
 8. வவ்வால் said...

  //அப்போ நான் சொன்ன நல்ல நடுவர்களில் நீங்களும் இருக்கிங்க!//

  ஆமாங்ண்ணா.! உங்க பதிவ பாத்துட்டுதான் நடுவர்க்கு இன்னொரு அர்த்தம் இருக்கறதே தெரியும்.

  //நான் வரலை வந்து இருந்தா ஏன் எல்லாம் மரம் நடுரோம்னு சொல்லிட்டு மரக்கன்று நடுறிங்கனு மொக்கைப்போட்டு இருப்பேன்//

  இது உயர்வு நவிற்சி சாமி..! (எல்லாம் சமாளிப்புதான்)

  ReplyDelete
 9. maratha mattum valarkkala neenga

  pala gudumbangal vayirum ungalala valarudhu sureka.

  vaazhga vazhamudan.

  ReplyDelete
 10. நல்ல காரியம்..வாழ்த்துகள்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

இறைவி - எண்ணங்கள் எனது !

சென்னைப் பிழை!