அந்தக் கோரம் நடந்த நாள்..!
டிசம்பர் 26...
கிருஸ்துமஸ் முடித்த மகிழ்வோடு சந்தோஷமாக இருந்த பல குடும்பங்களில், இயற்கை தன் இன்னொரு முகத்தை அதிகக் கோரமாக காட்டிய நாள்.!
அன்று கேட்ட அவலக்குரல்கள்..! வேளாங்கண்ணி கடற்கரையில் நாங்கள் அள்ளிப்போட்ட மனித உடல்கள் !
இன்றும் கனவில் வந்து காப்பாற்றச் சொல்லும் உயிர்கள் !
உடைகள், உறவுகள், உடைமைகள் அனைத்தையும் இழந்து சொந்த நாட்டில் அகதியாய் நின்ற குடும்பங்கள் !
அய்யா ! பழைய துணி தருவதை நிறுத்திவிட்டு வாழ்வதற்கு வழி காட்டுங்கள் ! நாங்கள் இதே பூமியில் கோடிகளோடு வாழ்ந்தவர்கள் என்று எழும்பிய தன்மானக்குரல்கள்.!
நானும் குழிக்குள் விழுந்துவிடுகிறேன்.. என்னையும் புதையுங்கள் என்று குதித்த பெண்ணின் மரண வேட்கை!
நடந்த கொடுமை அறியாமல் உணவு வாங்க வரிசையாய் நின்றபோது அடுத்த பெண்ணின் சடை இழுத்து விளையாடியஅந்த மூன்று வயது சிறுவன்!
தன் குழந்தை இழந்துவிட்டு பிழைத்த சிறு குழந்தைகளில் 3 பேருக்கு பால் கொடுத்த அந்த தாய் தேவதை !
பல கிராமங்களை ஒன்றுமில்லாமல் சுருட்டிவிட்டு ஒன்றுமே தெரியாததுபோல் அமைதியாய் காட்சிதந்த சமுத்திரத்தின் வில்லத்தனம் !
மறக்கமுடியா நினைவுகள்...! வேடிக்கை பார்க்கவும், உதவிகள் செய்யவும் சென்றவர்களுக்கே இப்படியென்றால் , பாதிக்கப்பட்டவர்களுக்கு..?
அவர்களுக்காய் பிரார்த்திப்போம்.! கடவுளை நம்பவில்லையென்றால் இயலாதவர்க்கு ஒரு கை கொடுத்தாவது துயர் துடைப்போம்.!
ஆனால்.. இது மீண்டும் நிகழாமல் தடுக்க, என்னன்ன செய்யலாம்..?
பதிவளிப்போம்.!

அஞ்சலியைத் தவிர வேறென்ன செய்ய முடியும் இப்போது.
ReplyDelete:(
ReplyDelete//
ReplyDeleteதம்பி said...
அஞ்சலியைத் தவிர வேறென்ன செய்ய முடியும் இப்போது.
//
:((
சோதனை பின்னூட்டம்... டெஸ்ட் 1, 2, 3... go
ReplyDeleteஇரண்டு மறக்க முடியாத வாழ்வு நிசர்சனங்களில் கலந்து கொண்ட பெருமை உனைச்சாரும்.
ReplyDeleteஅழுத்தமான வரிகள் அப்படியே நேரில் சென்று நானும் அந்த நிகழ்வை சந்தித்தத்தைப் போன்ற விவரிப்பு...
//ஆனால்.. இது மீண்டும் நிகழாமல் தடுக்க, என்னன்ன செய்யலாம்..?//
கண்டிப்பாக மதில் சுவர் கட்டி இந்த இயற்கை சீற்றத்தை நம்மால் கட்டுக்குள் கொண்டு வர முடியாது. ஆனால், முன்னமே அறிந்து கொண்டு தற்காப்பிற்கென அது வந்து போகும் இடத்தை விட்டு சற்றே விலகி இருக்கலாம்.
Thekkikattan|தெகா said...
ReplyDelete//சோதனை பின்னூட்டம்... டெஸ்ட் 1, 2, 3... go//
இது என்ன சோதனை இறைவா..!
Thekkikattan|தெகா said...
ReplyDelete//கண்டிப்பாக மதில் சுவர் கட்டி இந்த இயற்கை சீற்றத்தை நம்மால் கட்டுக்குள் கொண்டு வர முடியாது. ஆனால், முன்னமே அறிந்து கொண்டு தற்காப்பிற்கென அது வந்து போகும் இடத்தை விட்டு சற்றே விலகி இருக்கலாம்.//
அதைத்தான் ஒழுங்காகச் செய்யவேண்டும் என்று கவலையாய் உள்ளது..!