குழப்பம் மட்டுமே நிரந்தரம்.



இப்படி ஒரு பதிவு போட்டுட்டு அதுக்கு தொடரும் வேற போட்ட எனக்கு எந்த ஜென்மத்திலும் மோட்சம் :-) கிடைக்காது ன்னு தெரிஞ்சிருந்தும்....


கடவுள் யார் யாருக்கு தேவையில்லைன்னு பாக்கவேண்டிய கட்டாயத்தில்...இறங்கிட்டேன்..!
தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன?


நிறைய தப்பு பண்ணிட்டு.. தனக்கெதிரா ஒண்ணுமே நடக்காம இருக்கவும்..இன்னும் தவறுகளின் செறிவை அதிகப்படுத்திக்கிட்டு..ஒரு ஈன மானமே இல்லாத எல்லா ஆளுங்களுக்கும்....கடவுள் தேவை இல்லை!


இன்னிக்கு செத்தா...நாளைக்கு பீருன்னு..! (எங்க பால் கிடைக்கும்?) தன் சந்தோஷம் மட்டுமே குறியா வாழ்ந்து..தன் சார்பான குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்துற எல்லா குடிகார ஓநாய்களுக்கும்...கடவுள் தேவை இல்லை!

எல்லா இயமும் பேசிக்கிட்டு...அவர்கள் சொன்னதில் கடவுள் மேட்டரை மட்டும் எடுத்துக்கிட்டு..ஆனா சொன்னவுங்களுக்கே சிலை வச்சு மாலை போடும் எல்லா கலர் சட்டைக்காரங்களுக்கும்...கடவுள் தேவை இல்லை!


தன் சார்ந்த மக்களுக்கு எல்லா நன்மையும் செய்து. அடிப்படையில் அன்பை மட்டுமே வேலையாகவும்..மனிதாபிமானமே தொழிலாகவும் கொண்ட எல்லா மனிதனுக்கும்....கடவுள் தேவை இல்லை!

தன் தாய் தந்தையை அன்புடனும்..மனைவி (அ) கணவனை பரிவுடனும்..குழந்தைகளை அறிவுடனும் பேணும் எல்லா இயல்பான மனிதருக்கும்...கடவுள் தேவை இல்லை.!


ஊரில் இருப்பவனையெல்லாம் இளிச்சவாயனாக எண்ணி அரசு வருமானத்தை மீறி..பேனாவை எடுத்து ஒரு பேப்பரில் இங்க் தெளிப்பதற்கே..காசு கேக்கும் லஞ்ச வேட்டை ராஜாக்களுக்கு....கடவுள் தேவை இல்லை!


'அவனை'க்காண நம்ம்ம்பி வரும் பக்தர்களை அடிமாடுளை விடக்கேவலமாய் நடத்தியும், பிச்சையெடுக்க வந்தவர்கள் போல் அணுகியும் அவர்கள் போடும் உண்டியல் காசில் வயிறு வளர்க்கும் ஏமாற்றுக்காரர்களுக்கு..........கடவுள் தேவை இல்லை!

என் மதம்தான் சிறந்தது! என் சாமிதான் புனிதமானது..இங்கு வந்தால்தான் மோட்சம் கிடைக்கும்னு புத்திசாலித்தனமா எமாற்றி ( அப்படி இருந்தா , ஏண்டா .அவன் என்னை இந்த மதத்தில் படைச்சான்?ன்னு ஒரு புள்ளையும் கேக்காது ங்கிறதெல்லாம் வேற விஷயம்) ஆள்சேர்க்கும் எல்லா கூட்டத்துக்கும் அடுத்த மதக் கடவுள் தேவை இல்லை!

இன்னும்...

செய்த தவறையே திரும்பச்செய்யும் திருடர்கள். கொள்ளையர்கள்.

எந்தப்பாவத்துக்கும் அஞ்சாத கயவர்கள்..

வாழ்வின் சூழல் மேல் நம்பிக்கை உள்ளவர்கள்..வாழ்விலும் தன்னம்பிக்கை உள்ளவர்கள்...

எல்லோருக்கும்...கண்டிப்ப்பாக கடவுள் தேவை இல்லை..!


ஆக...சிலருக்கு வயிறுவளர்க்க.. கடவுள் தேவை!
சிலருக்கு அமைதியாய் வாழ... கடவுள் தேவை!
சிலருக்கு வயிறு வளர்க்க.. கடவுள் தேவை இல்லை.!
சிலருக்கு அமைதியாய் வாழ.. கடவுள் தேவை இல்லை !

முன்னர் சொன்னவர்களுக்கு கடவுள் தேவையில்லாமல் போகலாம்..அவன் இருப்பது ஊர்ஜிதமானால்..
பின்னர் சொன்னவர்களுக்கு கடவுள் தேவைப்படலாம்..அவன் இல்லாதது ஊர்ஜிதமானால்..!

எல்லாம் கலந்துதான் இருக்கிறோம்...!

அப்ப என் கருத்து.? அது இப்படித்தான் குழப்பமா இருக்கும்னு நினைக்கிறேன்..!

கடவுள் இல்லை..!     ஆனால்          கடவுள் தேவை!
கடவுள் இருக்கிறார்...ஆனால்   கடவுள் தேவையில்லை!



டிஸ்கி:  இதை மொக்கையா வேணும்னாலும் எடுத்துக்குங்க ! எனக்குத்ததோன்றியதை எழுதிட்டேன்.!

Comments

  1. நிப்பாட்டிக்குவோம்.

    சுரேகா, ஒரே கேள்வி.. இந்த மாதிரி பதிவுகள் படிச்சு படிச்சு இப்பவெல்லாம் இந்த மாதிரி பதிவுகள் வந்தா சும்மா :) போட்டுட்டு போக வேண்டியாதா இருக்கு :).

    வேற ஏதாவது எழுதலாமே...

    ReplyDelete
  2. கண்டிப்பா...
    அது என்னோட பதிவுலக அறியாமையாக்கூட இருக்கலாம்..!
    இன்னும் வேறு விஷயங்களுடன் வருகிறேன்..
    தங்கள் மேலான, அன்பான பின்னூட்டத்துக்கு மனமார்ந்த நன்றி இளா!

    ReplyDelete
  3. Idhaiththan en aduththa padhivai padi enreergala?Uruppadiya edho sollapporingannu ninaichchen.Kadavul illainnu sonnavangalum makkalukku bayandhuONRE KULAM ORUVANE DEVAN NU sonnadhum undu

    ReplyDelete
  4. T.V.Radhakrishnan said...

    //Idhaiththan en aduththa padhivai padi enreergala?Uruppadiya edho sollapporingannu ninaichchen.Kadavul illainnu sonnavangalum makkalukku bayandhuONRE KULAM ORUVANE DEVAN NU sonnadhum undu//
    வருகைக்கு நன்றி டி வி ஆர்.!
    :)
    ஆமாங்க!
    உண்மையிலேயே கடவுள் இருந்திருந்தா இங்கு நடக்கும் கொடுமைகளைப்பாத்துக்கிட்டு..சும்மா இருக்கார்ன்னா..
    அவர் தேவையே இல்லைங்க!

    அவர் இல்லைன்னா...அவர் பேரைச்சொல்லி பிழைப்பு நடத்தும் கூட்டத்தை தண்டிக்கவாவது..அவர் தேவைங்க!

    அதைத்தான் ஒரு பொது வாதமா வச்சேன் !
    மற்றபடி வேறெந்த நோக்கமும் இல்லை!
    ஆழ்ந்து பாத்தீங்கன்னா தெரியும்!

    ReplyDelete
  5. 20 x 5 = 100

    என்ன கணக்குனு ஆச்சர்யப்படவேண்டாம். பதிவைப்படிச்சுட்டு மயங்கிவிழுந்த என்னை எழுப்ப 20 கோலி சேடாக்களை முகத்தில் தெளித்த என் நண்பர்களுக்கு ஒரு சோடாவுக்கு 5ரூ வீதம் நான் கொடுத்த கப்பம்.

    ReplyDelete
  6. கருப்பன்/Karuppan said...


    //20 x 5 = 100

    என்ன கணக்குனு ஆச்சர்யப்படவேண்டாம். பதிவைப்படிச்சுட்டு மயங்கிவிழுந்த என்னை எழுப்ப 20 கோலி சேடாக்களை முகத்தில் தெளித்த என் நண்பர்களுக்கு ஒரு சோடாவுக்கு 5ரூ வீதம் நான் கொடுத்த கப்பம்//

    வாங்க..! :)))

    எழுதி முடிச்சவுடனே எனக்கே இப்படித்தான் இருந்தது.
    :)

    அதுதான் நான் தலைப்பிலேயே போட்டுட்டேன்.!
    :)

    ReplyDelete
  7. Nenga yeppuvume oru kullapavathythanna?

    ReplyDelete
  8. sayu said...

    //Nenga yeppuvume oru kullapavathythanna?//

    :)

    தெளிவாகறதுக்கு முன்னாடி எவ்வளவு வேணும்னாலும் குழம்பிக்கலாமேன்னுதான்..ஹி.ஹி!

    ReplyDelete
  9. Dear thambi, migavum super, naam manathirkkul Erupaivaikalai Velikaatuvathu, ethanaiyo Perukku, thaankalai, thaangale, nanmaikal Seya thoondum, thaangalil pdaippu GOOD,
    annaa

    Pattukkottai-BALU
    Dubai

    ReplyDelete
  10. Num apathukalathil uthavum manitharkal koda kadavulthane?

    ReplyDelete
  11. Pattukkotai-BALU said...

    //Dear thambi, migavum super, naam manathirkkul Erupaivaikalai Velikaatuvathu, ethanaiyo Perukku, thaankalai, thaangale, nanmaikal Seya thoondum, thaangalil pdaippu GOOD//

    நன்றி அண்ணா !

    காக்கைக்கு தன்....நினைவுக்கு வருது!
    :)

    ReplyDelete
  12. சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

    //aduthavana adikkaama adikrathungRathu ithuthaano?//

    வாங்க!

    அய்யய்யோ அப்படி எல்லாம் இல்லங்க!

    ஒரு அலசல்..அவ்வளவுதான் :)

    ReplyDelete
  13. sayu said...

    //Num apathukalathil uthavum manitharkal koda kadavulthane?//

    ஆமாங்க ! அப்படியும்..வச்சுக்கலாம்.

    ReplyDelete
  14. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    கொட்டாவி வருதுங்க படிக்கிறப்ப
    :(

    ReplyDelete
  15. Dear Sureka,
    Nice piece....at a recently telecast interview of mine in Jaya TVs Hari Giri assembly I said ....(I havent seen Dasavatharam yet). Kadavul irukkiraar.....the compere asked me how and why I say that...I said naan sollala thiru kamalahasan solraar.....naan nandraaga irukkiraen adhanaal enakku kadavul irukkiraar....
    It is just a point of view...Theism, Diet , Politics and Sex are all purely personal...what is food for one is poison for another.
    Happy blogging

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!