அப்படியாவது தண்டனையை.....காப்பாற்றலாம்.!

இந்தப்பதிவு போடும் எண்ணமே இல்லை! இந்த செய்தியை படிக்கும்வரை !


தர்மபுரி' வழக்கு ! மூவரின் தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு-

இதைப்படிச்சவுடனேயே இன்னும் கொதிப்பு அதிகமாகுதுங்க!


1.முதலில் இந்த வழக்கு எடுத்துக்கொண்ட காலமே மிக அதிகம்.

2. குற்றவாளிகள் முழுமையாக இனம்கண்டபின்னர் உடனே தீர்ப்பு அளித்திருக்கலாம்.

3. பொது இடத்தில் நடந்த,(பலரும் பார்த்த) ஒரு நிகழ்வுக்கு இன்னும் என்ன மறு விசாரணைகள்?

4. தன்னுடைய சொந்த கட்சியில் தன் பலத்தையும் - பார்! பஸ்ஸெல்லாம் எரிச்சேன்னு சொல்லி தலைமையிடம் சீட்டு கேட்கவும் பயன்பட்ட ஒரு அடிப்படை சுயநல,
கயமை,,காட்டுமிராண்டி,பொறுக்கித்தனத்துக்கு இவ்வளவு நாளே அதிகம்.இந்த தண்டனையே கம்மி. ஆனா இதைவிட பெரிய தண்டனை இந்தியாவில் இல்லையே !

5. ஆயிரம் குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம். ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது எனும் வாதத்தை இந்த சமூகம் உடைத்து பல ஆண்டுகளாகிவிட்டது.

6. இப்போதெல்லாம். ஒரு குற்றவாளியை விடுவிக்க, ஆயிரம் நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.

7.அதுனால, இடையில் ஒரு நிரபராதி மாட்டினால் கூட பரவாயில்லை. ஆயிரம் குற்றவாளிகளும் தண்டிக்கப்படணும். அப்பதான் இந்த சமூகத்தில் வாழும் தகுதியே நமக்கு வரும்.

8.தூக்குதண்டனை வேண்டாமென்று கூறும் யாருக்காவது இப்படி ஒரு சம்பவம் நடந்து அப்புறம் எதிரியை விடுவிக்க இவர்களே முயலுவார்களா? -அந்த வலி , வலித்தால் மட்டுமே புரியும் வலி.!

9.காலம் கடந்த நீதி, இப்போ மறுக்கப்பட்ட நீதி ஆகிடுமோன்னு அச்சமா இருக்கு.!

10. ஆனா, இவர்கள் விடுவிக்கப்பட்டால் , இறந்த பெண்களின் குடும்பத்தினரே முயன்று அவர்களை நடுரோட்டில் கொல்லுவார்கள். அந்த வழக்கில், கொன்றவர்கள் தூக்குதண்டனையால் சாவார்கள். (ஒரே குடும்பத்தில் இரண்டு உயிர் நஷ்டம் ! இந்த சட்ட பிறழ்வால்)

நாம் ஒன்று செய்யலாம்..தண்டனையை உறுதி செய்யச்சொல்லி உயர்நீதிமன்றம், ஜனாதிபதி, பிரதமர், உச்சநீதிமன்றத்துக்கு தந்தி அனுப்பலாம்.! மின்னஞ்சலாம்.!

அப்படியாவது...தண்டனையை.....காப்பாற்றலாம்.!

Comments

  1. நம்மில் சிலர் கடுமையான குற்றங்களுக்கு தண்டனையாக மரண தண்டனை வழங்குவது கொடூரமானதாக சித்தரிகின்றார்கள். இவர்கள் தான் மனிதநேய காவலர்கள் என்ற மமதை கூட அவர்களின் வாதத்தில் பிரதிபலிப்பதை காணமுடியும். தண்டனை என்பது குற்றங்களிலிருந்து சமூகம் பாதுகாப்பு பெற வேணடும் என்பதற்காக வைக்கப்படதாகும். மனிதர்களை துன்புறத்த வேண்டும் என்னும் "பிறரை துன்புறுத்தி இன்பம் காணும்" மனநிலையால் உருவாக்கப்பட்டதல்ல. தவறு செய்த ஒருவனுக்கு தரப்படும் தண்டனையின் நோக்கம் அவன் மட்டும் திருந்த வேண்டும் என்பதற்காக அல்ல. மற்றவருக்கு பாடமாக அமைய வேண்டும். அவர்கள் இது போன்ற தவறுகளை செய்ய அச்சபட வேண்டும். அதனால் குற்றங்கள் நிகழ்வதிலிருந்த சமூகத்தை பாதுகாக்கலாம் என்ற உயரிய சிந்தனையே என்பதனை இந்த மனிதநே(ா)ய காவலர்கள் புரிய வேண்டும். பரிதாபம் கொள்வதற்கு தகுதியானவன் தவறிழைத்தவனா அல்லது பாதிக்கபட்டவனா? இன்னும் எல்லாவற்றிக்கும் மேலாக குற்றவாளியின் சந்தோஷம் முக்கியமா? அல்லது சமுதாயத்தின் சந்தோஷம் முக்கியமா?
    கொடிய குற்றம் செய்தவன் அப்சல் குருவானாலும், அருணாசலம் ஆனாலும், அப்ரஹாம் ஆனாலும், குற்றம் நீரூபிக்கபட்டால் மரண தண்டனை நிறைவேற்றபட வேண்டும். இது மனித நேய விரோதம் அல்ல. இத்தண்டனை மனித சமூகத்தின் மீத காட்டும் நேயம். பாதிக்கபட்டவனின் துயரத்தில் நாம் பங்கெடுத்தோம் என்பதை பறைசாட்டுவதாகும்.
    நீதிமான்

    ReplyDelete
  2. நீதிமான். said..

    //பரிதாபம் கொள்வதற்கு தகுதியானவன் தவறிழைத்தவனா அல்லது பாதிக்கபட்டவனா? இன்னும் எல்லாவற்றிக்கும் மேலாக குற்றவாளியின் சந்தோஷம் முக்கியமா? அல்லது சமுதாயத்தின் சந்தோஷம் முக்கியமா?//


    அற்புத கேள்விகள்..!
    மிகச்சரியான அலைவரிசையில் இருக்கிறீர்கள்!

    வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  3. Very excellent ...
    keep going....
    daily iam waiting for your pathivugal.. Migavum alamana varikkal yen idayathai thodukinrana. congrats...




    please send youur email id to my id

    ReplyDelete
  4. Maha said...

    //daily iam waiting for your pathivugal.. Migavum alamana varikkal yen idayathai thodukinrana. congrats...//

    மிக்க நன்றிங்க!

    //please send youur email id to my id//

    எனக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி தெரியவில்லையே!
    என்னுடையது இது..!
    rsundartronics@gmail.com

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!