கலியாப்பட்டி

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூருக்கு அருகில் கிள்ளுக்கோட்டை எனும் ஊருக்குச் செல்லும் சாலையின் உள்ளே 2 கிலோமீட்டரில் உள்ள மிக மிகச் சிறிய கிராமம்.

கலியாப்பட்டி ஒரு ஒற்றைச்சாலை கிராமம். மெயின் ரோட்டிலிருந்து வரும் கிளைச்சாலை நேரே சென்று ஊர்க்கோடியில் உள்ள நல்லாண்டவர் கோயிலில் போய் முடியும். அந்தச்சாலையின் இருபக்கமும் வீடுகள் கொண்டதுதான் ஊர்! இடையில் சிறு சிறு தெருக்கள். ஊர்ப்பெரியவர், வண்டியோட்டிகள் ,பூசாரி, பயமுறுத்திக் கிழவி என பரந்த மனம் கொண்ட மனிதர்களால் நிறைந்த கிராமம்..!

என் அப்பா ஒரு கிராம நல அலுவலர்! அவருக்கு வாடகைக்குத் தருவதற்கு அங்கு வீடு இல்லை. ஆகவே ஊர்ப்பெரியவர் தன் களத்துமேட்டில் சிறிது இடம் கொடுக்க.. அப்பாவே செங்கலும் செம்மண்ணும் வாங்கிக்கொடுக்க..மாரியய்யா என்ற அந்த அன்பு அண்ணன் விறுவிறுவென்று கட்டிய அந்தக் கூரைக் கோட்டைதான் எங்கள் வீடு! வீட்டில் ஒரே ஒரு பெரிய அறை! ( 10க்கு 15 இருக்கலாம்) வாசலில் கல்லுக்கால் ஊன்றி அதே அளவு வராண்டா...! வாசல் தரைக்கு செம்மண்ணும் , சாணிக்கரைசலும்தான் flooring..! உள்ளே கொஞ்சம் தரமாக சிமெண்ட் தரை! வாசலில் களத்துமேட்டுக்கு வரும் மாடுகள் குடிக்க ஒரு கழுநீர்த்தொட்டி..! கருவை மரங்களும், கம்மாக்கரையும் நிறைந்த ஊரில்..ரசிக்கிறோம் என்றே தெரியாமல் இயற்கையை ரசித்த வயது அது! ..

ஊருக்குள் பாம்புகள் சர்வசாதாரணம்.! எங்கள் வீட்டு வெங்காயக்கூடையில் அழகாகச்சுருட்டிக்கொண்டு படுத்திருந்த நல்ல பாம்பு ! என் தங்கையின் தூளியின் கயிற்றில் இறங்க எத்தனித்து , தூளி ஆட்டிக்கொண்டிருந்த லச்சுமி அக்கா மேல் விழுந்த ஓலைப்பாம்பு என.. இன்றும் பாம்புகள் மேல் பெரிய வெறுப்பு ஏற்படா வண்ணம் சகஜமாகப்பழகின. :)

நாங்கள் சரியாகச்சாப்பிடவில்லையென்றால், அம்மாவால் பயமுறுத்தப்பயன்படும் பயமுறுத்திக்கிழவியை இன்று நினைத்தாலும் டர்ராகும். ஆனால் அவள் மகள் ஏதோவொரு காரணத்தால் அரளி குடித்து இறந்தபோது..அவள் கதறியதைப்பார்த்த பின்தான் அவளும் மனுஷிதானோ என்று எண்ணத்தோன்றியது.

அங்கு பல வீட்டில் நல்லைய்யா என்ற பெயர் சகஜம். ஏனெனில் நல்லாண்டவர்தான் காவல்தெய்வம். அந்தக்கோவில் திருவிழாவில் கொடுக்கப்படும் பாதாம் இலையில் வைத்துத்தரும் சர்க்கரைப்பொங்கல் வாசனை இன்னும் போகவில்லை.

எனக்கு அங்கு ஒரு நண்பன் இருந்தான். ஊர்ப்பெரியவர் மகன்! ஆனால் படுபாவி.! அவனுக்கு என் அப்பா பெயர்! அதனால் சத்தம்போட்டுக்கூப்பிடவோ, திட்டவோ முடியாது. அது எனக்குமட்டும் தர்மசங்கடம் இல்லை. அந்த ஊர்க்காரர்களுக்கும்தான்..! ஆக..அவனுக்கு ஊரே சேர்ந்து 'தம்பி ' என்று பெயர் வைத்தது. அவனோடுதான் சுற்றுவேன். அப்போதே புரிந்தும் புரியாமலும் பல தகிடுதித்தங்களை பழகிக்கொடுத்த குரு அவன்!

அருகிலிருக்கும் மலையடிப்பட்டியில் ஒரு தொடக்கப்பள்ளி. அதில் அட்டெண்டென்ஸில் பெயரே சேர்க்காமல் நான்கு வயதில் கொண்டுபோய் விட்டுவிட்டார்கள். (அந்த அளவுக்கு வீட்டில் ரவுசு !)

பள்ளிக்கு எப்போதும் நடந்து செல்லவேண்டும். இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும். மெயின்ரோட்டுக்கு வந்துவிட்டால், தொற்றிக்கொள்ள மாட்டுவண்டி கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி.! அப்பா வாங்கிக்கொடுத்த இண்டாலியம் பெட்டியில் 'டப டப' என தட்டிக்கொண்டே மாட்டுவண்டிக்காரரிடம் ஏதாவது பேசிச்செல்வதும், அதன் பின்பக்கம் நீட்டிக்கொண்டிருக்கும் குறுக்குக்கட்டையில் தொங்கிக்கொண்டே அதனுடன் நகர்வதும் ஆஹா...அனுபவிக்கணும் பாஸ்!

அது ஒற்றை ஆசிரியர் கொண்ட பள்ளி..முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை அவர்தான் கிளாஸ் எடுப்பார். அவர் எடுக்கும் வகுப்பையே எல்லோரும் பார்த்துக்கொண்டிருப்போம். வெகு நாட்களில் அவர் வந்து, வேட்டியின் நுனியை முறுக்கி..மூக்கில் விட்டு ' ஹச் ' எனத்தும்மிவிட்டு... ஒரு குச்சியை விட்டு காது குடைந்து கொண்டே தூங்குவார். அல்லது கையில் வைத்திருக்கும் பாக்கெட் ரேடியோவில் ஏதோ ஒன்று கேட்டுக்கொண்டிருப்பார். இப்படியாகப் போய்க்கொண்டிருந்த அவரது இன்பமயமான வாழ்க்கையில் நான் இழுத்துவிட்ட சிக்கல் ஒன்று....

(தொடரும் போடாம சுரேகா பதிவான்னு கேக்குறாங்கப்பா!

..அதனால்..தொடரும்.!)

Comments

  1. வந்துட்டேன்யா மொதல்ல

    :)

    ReplyDelete
  2. அடுத்த பதிவு அந்த மூச்சு விடாம சொன்ன செய்யுள் தானே ..:))

    எப்படியாச்சும் போட்ருங்க பாஸ்..:)

    ReplyDelete
  3. //தொடருங்கள்.//

    athe

    ReplyDelete
  4. நட்சத்திர வாழ்த்துக்கள்!

    பதிவு அருமை.

    ReplyDelete
  5. நட்சத்திர வாழ்த்துக்கள். ஆரம்பமே அசத்தல் தலைவரே.

    ReplyDelete
  6. தொடருங்கள்!தொடர்கிறேன்!

    ReplyDelete
  7. தொடரும் போடாம சுரேகா பதிவான்னு கேக்குறாங்கப்பா!//

    ஆமாம் தலைவரே,

    உங்களைப்பாத்துத்தான் தொடரும் பதிவு போடக்கத்துகிட்டேன்.

    கலியாப்பட்டி தகவல் அருமை. நல்லாண்டார் கோவில்னா இந்த விஷக்கடி ஜந்துகளுக்காக வேண்டிகிட்டு பணம் எடுத்து வைப்பாங்களே அந்த கோவிலா??

    ReplyDelete
  8. //பாபு said...
    February 15, 2010 5:20 PM
    //தொடருங்கள்.//

    //


    பாபு அண்ணா, நலமா? பாப்பா நலமா?? என்னாச்சு உங்க பிளாக்குக்கு???

    ReplyDelete
  9. //அப்பா வாங்கிக்கொடுத்த இண்டாலியம் பெட்டியில் 'டப டப' என தட்டிக்கொண்டே மாட்டுவண்டிக்காரரிடம் ஏதாவது பேசிச்செல்வதும்,//

    அப்பவே ஆரம்பிச்சிட்டேன்னு சொல்லு :)). இந்த நடை வித்தியாசமா இருக்கு. கரம்பக்குடி பத்தி என்னான்னு ஆவலோடு...

    ReplyDelete
  10. நான் முரளி, நான் ஆப்பிளும் ஆரஞ்சும் விற்கிறேன். குறித்த நேரத்தில் சப்ளை செய்யப்படும். ஆர்டர்களுக்கு அணுகவும்.

    முரளி- எனது இமெயில் முகவரி - murli03@gmail.com. எனது மொபைல் எண் 9843341223

    ReplyDelete
  11. விண்மீன் வாழ்த்துகள்!

    ReplyDelete
  12. அன்பின் சுரேகா

    நட்சத்திர - விண்மீன் வாழ்த்துகள்

    கலியாப்பட்டி - மழலைக் காலம் முதல் சுற்றித் திரிந்த ஊரா - கொசு வத்தி நல்லாவே சுத்தீட்டீங்க - அருமை அருமை - நினைவாற்றல் அதிகமோ ?

    நல்வாழ்த்துகள் சுரேகா

    ReplyDelete
  13. நட்சத்திரம் பிராகாசிக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. நட்சத்திர வாழ்த்துக்கள்

    பதிவு அருமை

    ReplyDelete
  15. அண்ணே சுத்துங்க கொசுவத்தியை!

    ReplyDelete
  16. தொடரும் போடறதுக்கு இப்படியும் கூட காரணம் சொல்லலாமா..? :)

    ReplyDelete
  17. கலியாப்பட்டி கிராமம் நினைவில் நிற்கிறது.

    ReplyDelete
  18. அது என் கிராமம்

    ReplyDelete
  19. அது என் கிராமம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!