போஜன்வாலாவின் டென்ஷன்வாலா...! - பாகம் 2
அந்த கடையில அதிகமா, திருச்சில தொழில் பண்ணி, தனியா தங்குற
வட நாட்டுக்காரங்கதான் சாப்பிட வருவாங்க...!
நாங்க மட்டும்தான் அதுக்கு வேற்று கிரக வாசிங்க மாதிரி..!
மத்த திருச்சிவாசி தமிழர்கள் அதிகம் சாப்பிட வரமாட்டாங்க!
ஆமா..11 ரூபாய்க்கு சாப்பாடு கிடைக்கும்போது (அப்ப சிறப்பு சாப்பாடு 15 தான்) எவன் 20 ரூபாய்க்கு சாப்பிடுவான் ? எங்களை மாதிரி உள்குத்தோட வந்த ஆட்கள் தவிர..!
நான் தினமும் 3 அல்லது 4 ரோட்டியும், சாதமும் வாங்குவேன்..! சீனிவாசன் சாதரணமாவே 9 முதல் 11 ரோட்டி வரைக்கும் முட்டிட்டு ..கப் தயிருல சக்கரை போட்டு கொண்டுவா தம்பி! ன்னுவான்.என்னிக்காவது 6 ரோட்டி சாப்புட்டுட்டு ...வயிறே சரியில்ல நண்பா..!ன்னு லந்தைக்குடுப்பான். ஆனா அந்த கடை முதலாளி என்னைப்பாத்தாவது லேசா சிரிப்பான்..ஆனா சீனிவாசனைப்பாத்தா..முறைப்பான்.எங்களுக்கு காரணம் சரியா புரியலை..!
ஏதோ குலதெய்வம் செஞ்ச புண்ணியம் எங்க வண்டி நல்லா ஓடிட்டிருந்தது. ஆனா எப்பவுமே அங்க பரிமாறுகிற பையனுக்கு எங்களை அப்புடி ஒண்ணும் பிடிக்காது..! ஏதோ அவன் சப்பாத்தில மண்ணள்ளி போட்டவங்க மாதிரியே நடத்துவான். அதெல்லாம் பாத்தா நடக்குமான்னு நாங்களும் அவனையே தாளிச்சுட்டுதான் வெளில வருவோம்..!
இப்படித்தான் ஒரு நாள் எதேச்சையா ஒரு வட இந்திய நண்பன் அறிமுகமாகி..பழகி.. அவனுக்கும் சீனிவாசனுக்கும் வாக்குவாதம் வந்துடுச்சு..சாப்புடறதைப்பத்தி..அவன் சொன்னான்.."நாங்கதான் நல்லா சமைப்போம் . நல்லா சாப்பிடுவோம்.. வலுவா இருப்போம்" னு. நம்ம சீனிவாசனும் அதையே தமிழனோட குணம்தான்னு சொல்ல.. வாக்குவாதம் முத்தி..
பஞ்சாயத்த ராம்தேவ் போஜன்வாலாவில் - ஒரு போட்டியா வச்சு தீத்துக்கறதுன்னு முடிவாச்சு..!
போட்டி என்னன்னா..சீனிவாசனும்..அந்த மார்வாடிப்பையனும் சாப்புடறது. யார் அதிக ரோட்டி சாப்பிடறதுன்னுதான்.!
போட்டி ஆரம்பமாச்சு ! அது கடைக்காரருக்கு தெரியாது பாவம்.!
அந்த சேட்டுப்பையன் பாவம்..ஒரு 7 ரோட்டிக்குமேல முக்குமுக்குன்னு முக்குறான்.. நம்ம ஹீரோ 15 ,16ன்னு கும்மு கும்முன்னு கும்முறான். டேய் ! நீதாண்டா ஜெயிச்சன்னா கேக்கமாட்டேங்கிறான்.
"இந்த போட்டிக்காக காலைல சாப்பிடலடா..அதான்..Unlimited தானே கண்டுக்காத " அப்புடின்னான்..
அப்பதான்...(அதைக்கேட்டுக்கிட்டிருந்த) முதலாளி வேகமா அவன் முன்னாடி வந்து நின்னு ஆவேசமா சொன்னாரு...!
" UNLIMITED க்கும் ஒரு LIMIT இருக்கு ! "
நானும் ரொம்ப நாளாவே பாத்துட்டிருகேன்.!மொதல்ல வெளில போங்க.! இனிமே இங்க வராதீங்க..!ஒங்க குரூப்புக்கே இனிமே சாப்பாடு கிடையாது..குறிப்பா உனக்கு கிடையாது.! அதுக்கப்புறம் கோபத்துல ஹிந்தில என்னன்னமோ திட்டினாரு!
அப்பவும் சீனிவாசன் கூசாம சொல்றான்.. "தம்பீ! தயிருல சக்கரை போட்டு கொண்டுவா..!"
-அதுக்கப்புறம் நான் அந்தப்பக்கமே போகலை..!

அடப் பாவிங்களா... அன்லிமிட்டுக்கே ஒரு லிமிட்' கண்டுபிடிக்க வைச்ச பெருமை உங்களுக்குதானாப்பா போய்ச் சேரணும்... :-))
ReplyDeleteபாவம் அந்த ஆளு, இரத்தக் கொதிப்ப எகிற வைச்சிருக்கீங்க ஒவ்வொரு நாளும் உள்ளே போயி... ஆமா, இந்தக் கதை நிஜந்தானாவே :-P
நல்ல கூத்துதான் போங்க.
ReplyDeleteநல்லா எழுதிருக்கீங்க.
//ஆமா, இந்தக் கதை நிஜந்தானாவே //
ReplyDeleteஆமா..ஆமா... சத்தியமான நிஜம்தான்..அந்த பயல் அனேகமா இதைப் படிச்சுட்டு..என்ன மாப்ள இப்புடி பண்ணிப்புட்டன்னு கேட்டாலும் கேப்பான்..
ஏண்டா என் போட்டோ போடலைன்னு..
//நல்ல கூத்துதான் போங்க.
ReplyDeleteநல்லா எழுதிருக்கீங்க.//
நன்றிங்க..!
எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான்.!
சந்தோஷ் மின்னி..யது!
ReplyDeletethallai enniki than 2 part um padichen super nalla ezutharinga :))..
enaku oru policy thodar kathai ah appo appo padika maten.. tension thangathu..
sethu vechi full ah one day okanthu padipen.. hehe..
நல்லா எழுதறீங்க.பாராட்டுகள்.இப்பத்தான் ஒவ்வொன்னா படுச்சிட்டு வாரேன்.
ReplyDeletewow today only I read both parts, nice.
ReplyDelete//
Thekkikattan|தெகா said...
அடப் பாவிங்களா... அன்லிமிட்டுக்கே ஒரு லிமிட்' கண்டுபிடிக்க வைச்ச பெருமை உங்களுக்குதானாப்பா போய்ச் சேரணும்... :-))
//
repeateyyyyyy