தசாவதாரம் - விமர்சனம் !
இன்று படத்தை முழுமையாகப்பார்த்தாகி விட்டது.அருமையாக வந்திருக்கிறது.
இந்தப்படத்தில் வேலை பார்த்தவன் என்ற முறையில் நான் எழுதினால் பாராட்டித்தான் எழுதுவேன்.
படத்தை பார்த்துவிட்டு உடனே விமர்சனம் எழுதுங்கள்.
ஒரு முழுமையான திரை அனுபவத்தை திரை அரங்கில் உணருங்கள்.தயவு செய்து டிவிடி வேண்டாம்.படத்தின் பிரம்மாண்டத்தை உணராமலேயே போய்விடுவீர்கள்.எல்லா முன்செய்திகளையும் ஓரம் கட்டிவிட்டு, முழுமையாக திரைப்படத்தை பாருங்கள்.
கொஞ்சம் குழந்தை, கொஞ்சம் பெரிய மனித தோரணையுடன் , எந்த
ஒரு முன்முடிவும் இல்லாமல் தியேட்டருக்குள் நுழையுங்கள்...!
ஒரு அற்புத அனுபவம் காத்திருக்கிறது.
இந்தப்படத்தில் வேலை பார்த்தவன் என்ற முறையில் நான் எழுதினால் பாராட்டித்தான் எழுதுவேன்.
படத்தை பார்த்துவிட்டு உடனே விமர்சனம் எழுதுங்கள்.
ஒரு முழுமையான திரை அனுபவத்தை திரை அரங்கில் உணருங்கள்.தயவு செய்து டிவிடி வேண்டாம்.படத்தின் பிரம்மாண்டத்தை உணராமலேயே போய்விடுவீர்கள்.எல்லா முன்செய்திகளையும் ஓரம் கட்டிவிட்டு, முழுமையாக திரைப்படத்தை பாருங்கள்.
கொஞ்சம் குழந்தை, கொஞ்சம் பெரிய மனித தோரணையுடன் , எந்த
ஒரு முன்முடிவும் இல்லாமல் தியேட்டருக்குள் நுழையுங்கள்...!
ஒரு அற்புத அனுபவம் காத்திருக்கிறது.
பி பி யை ஏத்துறீங்களே நியாயமா?
ReplyDelete//
ReplyDeleteபி பி யை ஏத்துறீங்களே நியாயமா?
//
ரீப்பீட்டேய்:-)
படம் ரிலீசாகவேயில்லை அதற்குள் விமர்சனமா என நினைத்தேன். நீங்க "insider" ஆ.
ReplyDeleteஎதிர்பார்ப்புகள் எக்கச்சக்கம்
அய்யோ..ஏன் ராசா ஏன் இப்படி எல்லாம்...இன்னும் ரெண்டே நாள் தான் ;;
ReplyDeleteமெய்யாலுமேவா சொல்றீங்க?
ReplyDeleteஉங்கள நம்பி $15 ( x2 = $30)விடலாமா?
நல்லா யோசிச்சு சொல்லுங்க. அப்பாலிக்கா, நல்லாலண்ணா, எதிர் பதிவு போட்டு தாக்கிடுவோம்ல உங்கள :)
//முரளிகண்ணன் said...
ReplyDeleteபி பி யை ஏத்துறீங்களே நியாயமா?//
ஹி..ஹி..
வாங்க முரளிகண்ணன்
ReplyDeleteஅமல்...!
தங்கள் வருகைக்கும்..பின்னூட்டத்துக்கும் நன்றி!
:)
//ஜேகே - JK said...
ReplyDeleteபடம் ரிலீசாகவேயில்லை அதற்குள் விமர்சனமா என நினைத்தேன். நீங்க "insider" ஆ.
எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கம்//
வாங்க வாங்க நட்சத்திரம் அவர்களே!
ஆமா..உள்ளிருக்கும் ஆள்தான்..!
எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கம் வேண்டாம்னுதான் இந்த எச்சரிக்கை விமர்சனம்!
:)
//கோபிநாத் said...
ReplyDeleteஅய்யோ..ஏன் ராசா ஏன் இப்படி எல்லாம்...இன்னும் ரெண்டே நாள் தான் ;;//
வாங்க கோபிநாத் !
அதான்...கொஞ்சம் பி.ப்பி யை இறக்கலாமேன்னுதான் !
:)
//SurveySan said...
ReplyDeleteமெய்யாலுமேவா சொல்றீங்க?
உங்கள நம்பி $15 ( x2 = $30)விடலாமா?//
வாங்க சர்வேசன் சார்! வருகைக்கு நன்றி!
மெய்யாத்தான் சொல்றேன்.
நம்பி செலவழியுங்க!
// நல்லா யோசிச்சு சொல்லுங்க. அப்பாலிக்கா, நல்லாலண்ணா, எதிர் பதிவு போட்டு தாக்கிடுவோம்ல உங்கள :)//
நல்லா யோசிச்சு...நம்ம மக்களையும் ரொம்ப யோசிக்காம படத்தை பாக்கச்சொல்லத்தான் இந்த பதிவே!
எதிர்ப்பதிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன!
:)
படம் பார்க்கிறவர்கள் முக்தி அடைந்துவிடுவார்களா ?
ReplyDeleteரொம்பவே எதிர்பார்பை ஏற்படுத்துறிங்களே....
//எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கம் வேண்டாம்னுதான் இந்த எச்சரிக்கை விமர்சனம்! //
ReplyDelete//நல்லா யோசிச்சு...நம்ம மக்களையும் ரொம்ப யோசிக்காம படத்தை பாக்கச்சொல்லத்தான் இந்த பதிவே!//
அடுத்தவரை எச்சரிக்கை செய்யறதுக்கு இவ்வளவு எச்சரிக்கையா? :-)
behind the scenes மாதிரி ஏதாவது சுவாரசியமாக எழுதுங்களேன் :-)
எப்பிடியும் மங்களூர்ல இப்போதைக்கு ரிலீஸ் ஆகப்போறதில்லை.
ReplyDelete:((
அதனால பதிவுகள்ல 4 விமர்சனம் படிச்சிட்டே பாக்கிறேன்!!
ஹீம்..குடுத்து வச்ச மனுசன்.
ReplyDeleteஎங்கள்ல தசாவதாரம் ரீலீஸாகிறததுக்கு முன்னாடியே பார்த்த முதல் அவதாரமா நீங்க ஆயிட்டீங்க!
உங்கள நம்பி £80 (68 x £30= :-(( விடலாமா?
ReplyDeletesay the real truth and it is equql to holly wood Range film?? becoz my one of friend is Foreginer so I will plane seen with him.
siva
ஒரு பெண்ணிடம் சொல்லப்படும் எந்த ரகசியமும் காக்கப்படுவதில்லை என்ற அவப்பெயரிலிருந்து தப்பித்தேன்.
ReplyDeleteபோன ஜூலையில் புதுகையில் நீங்கள் சந்தித போதே தசாவதாரத்தில் வேலை செய்வதைப் பற்றி தெறிந்தும் யாரிடமும் சொல்லவில்லை.
:)
இப்போது நீங்களே சொல்லிவிட்டீர்கள். இருந்தாலும் படம் பார்க்க போக வேண்டுமா என்று கொஞ்சம் யோசனைதான் பார்ப்போம்.
:)))))))))))
Is the overseas version released with English sub-titles ?
ReplyDeleteAny idea ?
Thanks
Muthu
என்னமோ சொல்றீங்க .... நாளைக்கு தெரிஞ்சுறும்....
ReplyDelete//கோவி.கண்ணன் said...
ReplyDeleteபடம் பார்க்கிறவர்கள் முக்தி அடைந்துவிடுவார்களா ?
ரொம்பவே எதிர்பார்பை ஏற்படுத்துறிங்களே....//
வாங்க சார் !
முக்தி அடையவா சினிமாவுக்கு போறது!?
நல்லா அந்த 3 மணி நேரத்தில் மகிழத்தானே!
அது நடந்துடும்.
ஹி..ஹி..
:)
//Sridhar Narayanan said...
ReplyDeletebehind the scenes மாதிரி ஏதாவது சுவாரசியமாக எழுதுங்களேன் :-)//
வாங்க! வாங்க!
படம் தயாரிப்பில் இருக்கும்போது எழுதியிருக்கணும். ஆனா தொழில் தர்மத்தில் எழுதலை!
இனி....எழுதலாமே!!
//Muthukumar said...
ReplyDeleteIs the overseas version released with English sub-titles ?
Any idea ?//
வாங்க முத்துக்குமார்!
ஆம் -என்றுதான் ஆஸ்கார் அலுவலகத்தில் சொன்னார்கள் !
//மங்களூர் சிவா said...
ReplyDeleteஎப்பிடியும் மங்களூர்ல இப்போதைக்கு ரிலீஸ் ஆகப்போறதில்லை.
:((
அதனால பதிவுகள்ல 4 விமர்சனம் படிச்சிட்டே பாக்கிறேன்!!//
உங்ககிட்ட என்ன சொன்னா சென்னைக்கு ப்ளைட் பிடிச்சு வந்து படம் பாப்பீங்கன்னு எனக்கு தெரியும்..!
சொல்லவா?
ஹேமா சின்ஹா பாப்பா சூப்பரா நடிச்சிருக்கு :)
//அதிஷா said...
ReplyDeleteஎன்னமோ சொல்றீங்க .... நாளைக்கு தெரிஞ்சுறும்....//
வாங்க அதிஷா !
ஆமா..தெரிஞ்சுரும்.
தலைவர் படத்தை டிவிடில பாக்கறதாவது... கோவையில் எந்தெந்த தியேட்டர்ல போடறாங்க? ரிசர்வ் பண்ணனும்.. செண்ட்ரல்ல போடறாங்க. அதை விட நல்ல தியேட்டர் எதுலையாவது போடறாங்களா? கோவைகாரங்க யாராவது வரீங்களா? சேர்ந்த்து போய் பார்ப்போம்.
ReplyDelete/
ReplyDeleteசுரேகா.. said...
//மங்களூர் சிவா said...
எப்பிடியும் மங்களூர்ல இப்போதைக்கு ரிலீஸ் ஆகப்போறதில்லை.
:((
அதனால பதிவுகள்ல 4 விமர்சனம் படிச்சிட்டே பாக்கிறேன்!!//
உங்ககிட்ட என்ன சொன்னா சென்னைக்கு ப்ளைட் பிடிச்சு வந்து படம் பாப்பீங்கன்னு எனக்கு தெரியும்..!
சொல்லவா?
ஹேமா சின்ஹா பாப்பா சூப்பரா நடிச்சிருக்கு :)
/
என்னது தசாவதாரத்தில ஹேமா சின்ஹாவா !?!?
இங்கயே Adlabs ல ரிலீஸ் பண்ணீட்டாங்க இன்னைக்கு ஈவ்னிங் 6.45 ஷோ
நாங்களும் டிக்கட் வாங்கீட்டமில்ல :))
வேலை 'பலு', காரணமாக முதல் நாள் முதல் ஷோ போக முடியவில்லை
:))
படம் முதல் 15 நிமிடங்கள் சூப்பர்.
ReplyDeleteபெருமாள் பெருமாள்னு அக்ரஹாரத்து அசின் மாமி கூடவே வந்திருவான்னா சயிண்டிஸ்ட் கோவிந்தராஜன்கூடவும் அந்த அமெரிக்க வில்லன் பேரு என்ன ப்ளட்சரோ என்னமோ அவன்கூட சண்டை போட்டு நானே கடத்திகிட்டு வந்திருக்கலாம்.
ReplyDelete:)))
படம் முதல் 15 நிமிடங்கள் சூப்பர்.
ReplyDeleteபெருமாள் பெருமாள்-னு ராமாயணம் பாடறப்பல்லாம் மகராசி மல்லிகா செராவத் இவளை (அசினை) போட்டுத்தள்ளாம போய் சேந்துட்டாளேன்னு எரிச்சலோ எரிச்சல்
ReplyDelete:((
சந்தான பாரதியோட நல்ல வாய்ப்பை !?!? (எல்லாம் படம் பாத்து தெரிஞ்சிக்கங்கப்பா) ஒரு ட்ராமா கும்பல் வந்து கெடுத்து சின்னாபின்னமாக்கீடுது.
ReplyDeleteநம்ம எல்லாருக்கும் ஒரே சோகமா போயிடுது
:)))))))))
நல்லா க்ராபிக்ஸ் பண்ணி இருக்காங்க, கஷ்டப்பட்டிருக்காங்க.
ReplyDeleteடெக்னாலஜி இருப்பதாலேயே குறைகளை எல்லாம் விட்டு படம் ஆஹா ஓஹோ சூப்பர் என சொல்லிவிடமுடியாது
:((
//மங்களூர் சிவா said...
ReplyDeleteபெருமாள் பெருமாள்னு அக்ரஹாரத்து அசின் மாமி கூடவே வந்திருவான்னா சயிண்டிஸ்ட் கோவிந்தராஜன்கூடவும் அந்த அமெரிக்க வில்லன் பேரு என்ன ப்ளட்சரோ என்னமோ அவன்கூட சண்டை போட்டு நானே கடத்திகிட்டு வந்திருக்கலாம்.///
அப்படி ஒன்னு நடந்தா எவ்ளோ நல்லா இருக்கும். நாங்களும் உன்னோட கவுஜை ல இருந்து தப்பிச்சி இருக்கலாம்.
//மங்களூர் சிவா said...
ReplyDeleteசந்தான பாரதியோட நல்ல வாய்ப்பை !?!? (எல்லாம் படம் பாத்து தெரிஞ்சிக்கங்கப்பா) ஒரு ட்ராமா கும்பல் வந்து கெடுத்து சின்னாபின்னமாக்கீடுது.நம்ம எல்லாருக்கும் ஒரே சோகமா போயிடுது
))))))))///
சிவா அண்ணே ஏன்?ஏன்?ஏன்? உங்களுக்கு சோகம்னு சொல்லுங்க.
/
ReplyDeleteநிஜமா நல்லவன் said...
அப்படி ஒன்னு நடந்தா எவ்ளோ நல்லா இருக்கும். நாங்களும் உன்னோட கவுஜை ல இருந்து தப்பிச்சி இருக்கலாம்.
/
எஜ்ஜாக்ட்லி
//மங்களூர் சிவா said...
ReplyDeleteபெருமாள் பெருமாள்-னு ராமாயணம் பாடறப்பல்லாம் மகராசி மல்லிகா செராவத் இவளை (அசினை) போட்டுத்தள்ளாம போய் சேந்துட்டாளேன்னு எரிச்சலோ எரிச்சல்
(///
அண்ணே உனக்கு வந்த எரிச்சல் விடிய விடிய சாட் பண்ணிட்டு தூங்காம படம் பார்க்க போனதால வந்த கண் எரிச்சலா இருக்கும்.
//மங்களூர் சிவா said...
ReplyDeleteநல்லா க்ராபிக்ஸ் பண்ணி இருக்காங்க, கஷ்டப்பட்டிருக்காங்க.
டெக்னாலஜி இருப்பதாலேயே குறைகளை எல்லாம் விட்டு படம் ஆஹா ஓஹோ சூப்பர் என சொல்லிவிடமுடியாது
(////
பாவானா படம் திரிஷா படம் எல்லாம் மொக்கையா இருந்தாலும் ஆஹா ஓஹோ புகழ்ந்து தள்ளி கவுஜை வேற எழுதுவீங்க. கஷ்டப்பட்டு படம் எடுத்தா உங்களுக்கு நக்கலா இருக்கா?
/
ReplyDeleteபாவானா படம் திரிஷா படம் எல்லாம் மொக்கையா இருந்தாலும் ஆஹா ஓஹோ புகழ்ந்து தள்ளி கவுஜை வேற எழுதுவீங்க. கஷ்டப்பட்டு படம் எடுத்தா உங்களுக்கு நக்கலா இருக்கா?
/
ஜாக்கெட் இல்லாம வந்த அசினையே பாராட்ட முடியலையே நி.நல்லவரே
:((
"அடியேன் ராமானுஜதாசன்" என்கிற அதிரடியில் ஆரம்பிக்கும் படம் படமுடிவில் கே.எஸ்.ரவிக்குமார் "உலகநாயகனே" என பாட தொடங்கும் வரை நீடிக்கிறது. நடு நடுவே அஸினோடு பிசின் போல ஒரு டூயட் பாடியிருந்தால் கூடவோ, அல்லது கமலின் கூட்டாளிகள் வையாபுரி,சந்தானபாரதி,ரமேஷ்கண்ணா,சிட்டிபாபு,பாஸ்கர் ஆகியோர் கொஞ்சம் நீட்டி வாசிச்சு இருந்தாலோ படம் பப்படமாகியிருக்கலாம். பண்ணிரண்டாம் நூற்றாண்டில் நடந்த அல்லது நடந்ததாக நம்பப்படும் ஒரு நிகழ்வோடு அதற்கான கமலின் விளக்க பின்னனி குரலோடு ஆரம்பிக்கிறது படம்.
ReplyDeleteஅடுத்த காட்சி நேராக வாஷிங்டன் தாவிவிடுகிறது நிகழ்காலத்திக்கு. அதாவது சமீபத்து நான்காம் தேதி, டிசம்பர் மாதம் 2004 அன்று ஆரம்பமாகும் கதை டிசம்பர் 26ம் தேதி வேளாங்கண்னி சுனாமியில் முடிவடைகிறது. இந்த இருபத்தி இரண்டு நாட்கள் ஓட்டம் தான் படத்தின் கதை.
ReplyDeleteஅமரிக்க விஞ்ஞானியான கமல் கண்டிபிடிக்கும் ஒரு வஸ்து ஒரு நாட்டையே அழிக்க கூடிய அளவிலான சக்தி கொண்டதாக இருக்கிறது என்பதை அந்த லாபரட்ரியின் 'அனு' குரங்கின் மூலமாக சின்னதாய் ஆனால் பிரம்மாண்டமாய் நமக்கு புரிய வைத்த கோவிந் என்கிற விஞ்ஞானி கமல் சென்னையில் கொல்டி பாலாஜிக்கு ஸாரி பல்ராம்நாயுடுவுக்கு புரிய வைக்க "சார் உங்களை விட கொஞ்சம் சீனியர் யார்கிட்டயாவது நான் பேசனும்"ன்னு மாட்டிகிட்டு விழிப்பது அருமையோ அருமை.
ReplyDeleteலைட்டர் மாதிரியான டப்பாவில் இருக்கும் அந்த வஸ்து அமரிக்காவிலிருந்து ஒரு "பேக்கு" நண்பனின் சொதப்பலால் சிதம்பரம் கீழசன்னதிக்கு கூரியர் அனுப்பப்படுகிறது. ஆங்கிலேய வில்லன்(அதுவும் கமல் தான்) தன் குபீர் மனைவி மல்லிகாஷெராவத்துடன் அதை துரத்தி சென்னை செங்கல்பட்டு, பாண்டி வழியாக சிதம்பரம் வர, விஞ்ஞானி கோவிந்தும் வர கீழ சன்னதியில் தான் அய்யங்கார் ஆத்து பொண் அசின், அவரின் 94 வயது பாட்டி கிருஷ்னவேணி (அதுவும் கமல்) இருவரும் கதையில் பிசின் போல ஒட்டுகிறார்கள். அந்த டப்பா கோவிந்தராஜரின் உற்ச்சவமூர்த்தியின் உள்ளே போய் விடுகிறழ்து பாட்டியின் லீலையால். அதற்கு மேல் மல்லிகாவின் கால்ஷீட் கிடைக்காதமையால் கீழசன்னதியிலேயே அவர் கதை முடிகிறது.
ReplyDeleteபின்னெ என்ன கோவிந், அசின்கூட கோவிந்தராஜரும் பயணிக்கிறார். அப்படியே வேளாங்கண்ணிக்கு போயிடறாங்க. நடுவே ஏழு அடி உயர கலிபுல்லாகான் கமல் அவங்க அப்பா நாகேஷ், அம்மா விஜயா எல்லாம் எதுக்கு வந்தாங்கன்னு சொல்ல முடியலை.
ReplyDeleteஅதே போல பஞ்சாபி அவ்தார்சிங்(கமல் தான்) மனைவி ஜெயப்ரதா அண்ட் கோ வர்ராங்க. அதை எல்லாம் விடுங்க. இப்படியே போய் அந்த வில்லனையும் அந்த வஸ்துவையும் சுனாமி வந்து அழிச்சிடுது. 12ம் நூற்றாண்டில் கடலின் உள்ளே போன கோவிந்தராஜ பெருமாள் வந்து கரை ஒதுங்கி இருக்கார். இந்த காட்சிகளின் போது சுனாமி பிணங்கள் மீது நம் கவனம் போய் விடுவதால் கமல் அசினிடம் பேசும் வசன விளக்கம் எதுவும் நம் காதில் விழாமல் போய் விடுகிறது.
ReplyDeleteஇதன் நடுவே வின்செண்ட் பூவராகவன் என்கிற நாகர்கோவில் தமிழ் பேசும் பாத்திர கமல். என்ன திடீர்ன்னு கருப்பு எம்ஜிஆர்ன்னு பார்த்தா அவரும் கமல். அருமையான நடிப்பு.
ReplyDeleteஇதன் நடுவே ஜப்பான் கமல். பத்து வேஷம் போடனும் என முடிவு செஞ்சாச்சு. அதனால அவரும் படத்தில் உண்டு.
ReplyDeleteஇதுதாங்க படம்.
இப்படிப்பட்ட ஒரு படத்துக்காக எவ்வளவு நாளானாலும் காத்திருக்கலாம்ன்னு கங்கணம் கட்டி திரிந்திருந்தேன். சிவாஜியை கூட டியேட்டரில் பார்க்கவில்லை நான். இரண்டு மாதத்துக்கு முன்பு கூட படம் பார்க்கலாம்ன்னு நானும் என் தோழியும் டிக்கேட் கவுண்டர் வரைக்கும் போயிட்டு திரும்பி வந்துட்டோம். எப்படி 1-2 மாதத்தில் தசாவதாரம் வந்துவிடும். அதுவரை வேறு படம் வேண்டாமென்று திரும்பிவிட்டோம். இன்று படம் வெளியாகியே முதல் நாளே இறங்கிட்டோம்.
ReplyDeleteகதை, திரைக்கதை, வசனம் எல்லாமே கமல்ஹாசன் என்று படம் ஆரம்பிக்கிறது. அப்படியே 12-ஆம் நூற்றாண்டு கொண்டு போகிறார்கள். கே.ஆர்.எஸ் அண்ணா சைவர்-வைணவர்ன்னு ஒரு பதிவு போட்டிருந்ததால அவர் சொன்ன விவரங்களையும் கொஞ்சம் குறிப்பெடுத்துக்கிட்டேன். நெப்போலியன் நம்பியை பார்த்து "ஓம் நமச்சிவாய என நீ உச்சரித்தால் உனக்கு உயிர் பிச்சை தருகிறேன்" என் ஆணையிடும்போது நம்பி "ஓம் நமோ நாராயணாய" என்றுதான் சொல்லுவார் என நாமெல்லாம் அறிந்ததே! ஆனாலும், அந்த காட்சியில் அனைவரும் சீட் நுனிக்கு வந்து என்ன நடக்க போகிறது என நகத்தை கடிக்க ஆரம்பிப்பீர்கள்.
ReplyDelete"கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது"
ரங்கராஜன் நம்பியை சைவர்கள் துன்புறுத்தி கடலுக்கு கொண்டு போவதைப் பார்த்தால் இன்னொரு The Passion of The Christ பார்ப்பது போல் இருக்கின்றது. ஆனால், அதில் இன்னும் மோசமாக துன்புறுத்தப்படுவார் யேசுநாதர். இந்த பிரமாண்ட காட்சிக்கு போடலாம் ஒரு வாவ்!
ReplyDeleteபடம் என்னவோ சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் நடுவே நடக்கும் போராட்டங்கள்தான் என நீங்கள் நினைத்தால் அது தவறு. கதை அப்படியே 2004-ஆம் ஆண்டு டிசம்பரில் அமேரிக்காவில் கொண்டுவரப் படுகிறது. விஞ்ஞானி டாக்டர் கோவிந்த் நடத்தும் ஆராய்ச்சியும், அவரின் ஆராய்ச்சியின் வெற்றியில் உருவாக்கப்பட்ட உலகத்தையே அழிக்கும் வைரஸும். இனி கதை கடைசி வரை இந்த வைரஸும், இதை தொடர்பான துரத்தலும்தான்.
ReplyDelete12-ஆம் நூற்றாண்டில் வரும் அசின் இன்னும் கொஞ்சம் மெனக்க்கெட்டிருக்கலாம். அவர் அழுகையிலும் போலித்தனம் தெரிகிறது. ஆனால் மாடர்ன் அசின் அழகோ அழகு. ரெட்டை ஜடையை ரெண்டு கையால் தூக்கிக் கொண்டு ஆடுவதும், படம் முழுக்க விஷ்ணுவை தன் இரு கரங்களாலும் கட்டிக்கொள்வதும், வில்லனிடமிருந்து அந்த விஷ்ணு சிலையை காப்பாற்ற போராடுவதும், தன்னையறிமாலேயே கமலை விரும்ப ஆரம்பிப்பதும் அழகு. போலிஸ் இவரை தீவிர்வாதியின் காதலி என்றபோதிலும், கலிபுல்லா கான் இவரை கமலின் மனைவி என்று நினைக்கும்போதிலும் அவர் புலம்பல் ரசிக்க வைக்கின்றது.
ReplyDeleteஅசினை விட ஹெவி ரோல் மல்லிகா ஷெராவாத்துக்குதான். கா கறுப்பனுக்கும் வெ வெள்ளையனுக்கும் என்ற பாடலில் செக்ஸியாய் வந்து வில்லன் கமலை மணந்து இவர் செய்யும் அட்டூழியங்கள்; அனைத்துக்கும் சபாஷ் போடலாம். அவர் தன்னுடைய பங்கை 100% அருமையாக செய்திருக்கிறார். அவரை அவ்வளவு சீக்கிரமாக பலியாக்கியிருக்காமல் இருந்திருந்தால் காட்சிகளின் விருவிருப்பு கூடியிருக்கும்.
ReplyDeleteஜெயபிரதாவின் பகுதியை அவர் கச்சிதமாய் செய்திருக்கிறார். கவிஜர் கபிலனின் கவிதைகளும் அதை வாசிக்க அவரையே நடிக்க வைத்த கமலுக்கு நன்றி சொல்லலாம். நெப்போலியன், MS பாஸ்கர், ஆகாஷ், நாகேஷ், சந்தான பாரதி என்று பெரிய பட்டாளமே இருந்தாலும் அனைவரிடமும் மிகையில்லாத நடிப்பு. யூகா எனும் ஜப்பானிய பெண்ணின் நடிப்பை விட அவரின் சண்டை காட்சிகள் அற்புதம். ஒரு ஜெட் லி படம் பாத்தது போல இருந்தது. ரவிகுமார் படத்தில் அந்த கற்பழிப்பு காட்சி அவசியம்தானா?
ReplyDeleteபடத்தின் இசை ஏற்கனவே பிரபலாமாகிவிட்டது. ஆனாலும், பிரமாண்டமான காட்சியமைப்பில் பார்க்கும்போது பாடல் இன்னும் அழகாக தெரிகிறது. ஒரு உண்மை தெரியுமா? படத்தில் கமலுக்கும் அசினுக்கும் ஒரு டூயட் பாடல் கூட இல்லைங்க. அதுவே ஒரு வித்தியாசம்தானே. BGM-க்கு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத்துக்கு கண்டிப்பாக வாழ்த்து சொல்ல வேண்டும். காட்சிகளின் விருவிருப்புக்கும் திகிலூட்டத்துக்கும் முக்கிய பங்கு வகிப்பது இவரின் BGM இசைதான். முக்கியமாக சண்டை காட்சிகளின் போது வரும் இசை ஒவ்வொரு தாக்குதல் போதும் நமக்கு 'டிக் டிக்' என இதய துடிப்பை கூட்டுகிறது.
ReplyDeleteபடத்தின் சண்டைக்காட்சிகள் அட போட வைக்கின்றது. 12-ஆம் நூற்றாண்டில் நடக்கும் சண்டை காட்சி டிப்பிக்கல் கனல் கண்ணன் ஸ்டைல். யூகா மற்றும் அவர் தந்தையின் வூஷூ சண்டை திறனை பார்க்கும்போது சில வருடங்களுக்கு முன் நான் கற்றுக்கொண்ட தேக்குவாண்டோ ஞாபகம் வருகிறது. ஒரு ஜேக்கிசான் ரக சண்டை காட்சி க்ளைமேக்ஸில் பார்க்கலாம். படம் முழுக்க ஒரு 12-13 கொலையாவது இருக்கும். 15 நிமிடத்துக்கு ஒருவராவது இறப்பார்கள் என கணக்கு வைச்சிக்கலாம்.
ReplyDeleteஒளிப்பதிவு.. இன்னும் என்ன சொல்ல வேண்டும் இதைப்பற்றி? அதான் கலக்கிட்டாரே ஒளிப்பதிவர். ஒவ்வொரு ஃப்ரேமிலேயும் காமேரா angle சுற்றி வரும் விதம் பிரமாதம். எடிட்டிங், ஸ்பெஷர் எஃப்பேக்ட் பெரிய வாவ்! படத்தில் முக்கால்வாசி காட்சிகளில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட கமல் ஒரே ஃப்ரேம்ல இருந்தாலும் அதை அசலாக இருக்கும்படி எடிட் செய்திருக்கார் எடிட்டர். வேகமான நகரும் காட்சிகளிலும் சேசிங் காட்சிகளிலும் அனல் பறக்கின்றன. ஸ்பெஷ எப்பேக்ட் பேஷ் பேஷ். க்ளைமேக்ஸில் வரும் க்ராஃபிக்ஸில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். சில காட்சிகள் போலி என்பது மிக எளிதில் தெரிகிறது.
ReplyDeleteடைரக்டருக்கு வேலை இருந்திருக்காது என நினைக்கிறேன். கதை, திரைக்கதை, வசனம், நடிப்புன்னு ஆல்-இன்-ஆல் அழகுராஜாவாக கமலே இருந்துவிட்டார். 10 கதாப்பாத்திரங்கள். சில கதாப்பாத்திரங்களில் இவரா அவர்ன்னு சந்தேகம் படும்படி மேக்கப் உதவி செய்துள்ளது. என் பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்தவர் கடைசி வரை அந்த ஜப்பானியர் கமல்தான் என்று நம்பவே இல்லை. பாட்டி கதாப்பாத்திரத்துக்கு கமல் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா ஏதாவது செய்திருக்கலாம். 94 வயது பாட்டி நிஜவாழ்க்கையில எப்படி இருப்பாங்களோ அதேப்போல முயற்சி செய்திருக்கலாம். இந்த பாட்டி என்னன்னா சின்ன பொண்ணாட்டாம் அங்கே தாவுறது இங்கே குதிக்கிறதுன்னு இருக்காங்க. அவங்க வயதுக்கும் அவங்க எனெர்ஜி லெவெலுக்கும் சம்பந்தம் இல்லை. பூவராகன் கறுப்பு எம்.ஜி.ஆர் என்று சொல்லலாம். ஆனால் சில இடங்களில் அவர் பேசுவது கேப்டன் விஜயகாந்தை போல இருக்கின்றது. சுனாமியில் மற்றவர்கள் உயிரை காப்பாற்றி அவர் இறக்கும் காட்சி நன்றாக படமாக்கப்பட்டுள்ளது. சிபிஐ பல்ராம் நாயுடு காமெடியில் கலக்குகிறார். கோவிந்த் ஆங்கிலத்தில் பேசும்போது "நான் தெலுங்கு. தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் பேசுகிறேன். நீ தஞ்சாவூரான். தமிழில் பேசலைன்னா, இனி யார் தமிழை வளர்ப்பா?"ன்னு கேட்பதுக்கு "உங்களைப் போல இன்னொரு தெலுங்கத்தான்"ன்னு கமல் சொல்வது நகைச்சுவையாக இருந்தாலும் சிந்த்திக்க வைக்கும் வரிகள்.
ReplyDeleteஒரு கதைக்கருவை வைத்துக்கொண்டு மற்ற சில சிறு சிறு கதைகளை இதனூடையே அழகாய் பின்னியிருக்கும் கமலுக்கு பாராட்டுகள். அவ்தார் சிங், கலிபுல்லா கான், பூவராகன், புஷ் என்று சிலரின் சின்ன சின்ன கதைகளையும் கதையில் பொருத்தி தேவையான இடத்தில் போட்டதால் படம் திகட்டவில்லை.
ReplyDeleteமுக்கியமாக படத்தின் கருத்து (Moral of th story) என்ன என்பது கேட்க வேண்டிய ஒன்று. நடக்கும் ஒவ்வொன்றும் நல்லதுக்கே! 4 வருடங்களுக்கு முன்னே நடந்த சுனாமியால் லட்சம் உயிர்கள் இழப்பு என வருத்தப்பட்டும் கடவுளிடம் நம் ஆதங்களை கொட்டிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், இந்த படத்தை க்ளைமேக்ஸை பார்த்தீங்களென்றால் கோடி உயிர்கள் பேரிழப்பு நடக்க வேண்டிய இடத்தில் லட்சம் பேரென குறைக்க நடந்த சுனாமியே கடவுளின் திருவிளையாடல் என புரிந்துக்கொள்வோம். அதலால், இனி என்ன கெட்டது நடந்தாலோ அது பெருசா வர வேண்டிய ஒன்னு சிறுசா வந்திருக்கேன்னு சந்தோஷப்பட்டு அந்த கஷ்டங்களை தாண்டி வர வேண்டும் என நினைவுக்கொள்வோம்.
ReplyDeleteமுக்கியமாக படத்தின் கருத்து (Moral of th story) என்ன என்பது கேட்க வேண்டிய ஒன்று. நடக்கும் ஒவ்வொன்றும் நல்லதுக்கே! 4 வருடங்களுக்கு முன்னே நடந்த சுனாமியால் லட்சம் உயிர்கள் இழப்பு என வருத்தப்பட்டும் கடவுளிடம் நம் ஆதங்களை கொட்டிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், இந்த படத்தை க்ளைமேக்ஸை பார்த்தீங்களென்றால் கோடி உயிர்கள் பேரிழப்பு நடக்க வேண்டிய இடத்தில் லட்சம் பேரென குறைக்க நடந்த சுனாமியே கடவுளின் திருவிளையாடல் என புரிந்துக்கொள்வோம். அதலால், இனி என்ன கெட்டது நடந்தாலோ அது பெருசா வர வேண்டிய ஒன்னு சிறுசா வந்திருக்கேன்னு சந்தோஷப்பட்டு அந்த கஷ்டங்களை தாண்டி வர வேண்டும் என நினைவுக்கொள்வோம்.
ReplyDeleteமொத்தத்தில், பிரமாண்டம்... பிரமாண்டம்... பிரமாண்டம். திரும்ப பார்க்கலாம் இந்த பிரமாண்டத்தை. ஆனாலும் இந்த மாதிரி படங்களை தியேட்டரில் பார்ப்பதுதான் அழகு. நான் இந்த வாரம் அடுத்த ரவுண்டுக்கு தயார் ஆகலாம் என நினைக்கிறேன். நீங்கள் எப்படி?
ReplyDeletePosted by .:: மை ஃபிரண்ட் ::. at 12:09 PM 21 comments
ReplyDelete//மங்களூர்: Posted by .:: மை ஃபிரண்ட் ::. at 12:09 PM 21 comments //
ReplyDeleteரிப்பீட்டேய்...........
50 ஆகியிருக்குமா????
ReplyDelete50 ஆச்சா???
ReplyDelete63 ஆச்சுப்பா ராசா!
ReplyDeleteகொஞ்ச நாளைக்கு முன்னாடி விஜயகாந்தின் "அரசாங்கம்" பாக்கப் போன போது 'உலகத் தரத்தில் எடுத்திருக்கானுங்களாம்டா'ன்னு நண்பன் சொன்னான். 'உலகத்தரம்னா என்னடா?'ன்னு கேட்டேன். 'சண்ட போடும் போது கயறக் கெட்டி தூக்குவாய்ங்க' ன்னான்.
ReplyDeleteநிஜமா நல்லவனுக்கு...நிஜமான நன்றிகள்...
ReplyDeleteமங்களூர் சிவாவுக்கு ...மனப்பூர்வமான நன்றிகள்..!
ரெண்டுபேரும் சேந்து எழுதின (ஸாரி..சுட்ட) விமர்சனத்துக்கு கோடி நன்றிகள்!
//ரெண்டுபேரும் சேந்து எழுதின (ஸாரி..சுட்ட) விமர்சனத்துக்கு கோடி நன்றிகள்!//
ReplyDeleteவிமர்சனமா? திரைக்கதையையே எழுதிட்டாங்க (சுட்டுட்டாங்க) போல :-)).
உங்களுக்கு ஜிரா பதிவுல பதில் போட்டிருக்கேன். அவர் வெளியிட்டதும் உங்கள் கருத்தையும் சொல்லுங்க.
சுரேகா.
ReplyDelete(முகு:பதிவுக்கு தொடர்பற்ற பின்னூட்டம். வெளியிட வேண்டியதில்லை)
நீங்க கொடுத்த ஐடியா மிக்க பயன் உள்ளதாக இருந்தது. ஹேண்டி ரெகவரிய வச்சி கொஞ்ச படங்கள தேத்திட்டேன். பல படங்கள் வரலன்னாலும், சில வந்துருக்கு. மிக்க மகிழ்ச்சி. ரொம்ப நன்றி.
ஜேகே