இயற்கை கொடையினைக்காப்போம் -2



வளரும் வரை இவனும்
வானம் பார்த்து மகிழ்ந்தான்
மழையைக்கண்டு முகிழ்ந்தான்.
கிடைத்த உணவை பயிரிட்டு
காட்டுக்குள்ளே திரிந்தான்.
வயிற்றுக்குஎல்லாம் கிடைக்கும் 
இவனுக்கு
மூளைக்குக் கிடைக்காமல்
மோதி மோதித் திமிர்ந்தான்.

ஆரம்பமானது வேட்டை!
தேவைகள் போக இவன்
சேர்க்க நினைத்த பண்டங்கள்
இயற்கையின் உறுப்புக்கள்!

வேட்டையாடும் விலங்கினத்தின்
தோலுக்கும், கொம்புக்கும்,
தோற்றத்தில் பொலிவு கொண்ட
மேல் கடைவாய்ப்பல்லுக்கும்
ஆசைகள் அதிகமாகி,
அளவுக்கும் மீறி வந்து
அறுத்தெரிந்தான்
இவன் வளர்ந்த பரிணாமத்தின்
சங்கிலியை!
இயற்கைக்கு அப்போதே
இதயவலி கண்டது.

நிலத்தின் ஆழம் தோண்டி,
கனிமங்கள் கண்டெடுத்து,
ஆயுதம் செய்து, வீடுகட்டி, 
ஆபரணம் அழகுறப்பூட்டி,
எரிபொருளும் கண்டெடுத்து
எடுப்பாக ஊர்வலம் போய்
பூமியின் உடலெங்கும் 
பொறுப்பின்றிப் பொத்தலாக்கி 
உவகையுடன் மெத்தையிட்டான்.

நீரினில் கழிவு சேர்த்து,
நெடுந்தூரம் ஓடவிட்டு
பாரெங்கும் அதனை ஆறென்று
சொல்லவைத்து
மீன்கள் செத்து மிதந்ததை மட்டும்
மிச்சமின்றி துடைத்துவிட்டான்.
மரங்களைக் கொன்றுவிட்டு
மழையில்லை என்று வேண்டி
பெரும்பொருள் செலவு செய்து
வேள்விகள் மூலம் மட்டும் 
புகைக்கூட்டம் கூடச்செய்து
மேகமென்று கூச்சலிட்டான்.

காற்று மட்டும் என்ன
கடவுளா - இவனிடம் மீள?
வேகத்தின் வியாதிவந்து 
வாகனங்கள் பெருகப்பெருக,
தட்பம் மட்டும் தேடித்தேடி
தனிமனிதன் உருக உருக
காற்று மண்டலம் தன்
கற்பிழந்து போனதிங்கே !
மூச்சுக்காற்று தந்த பூமி
நச்சுக்காற்றும் தருகிறது
நாலுக்கொன்று இலவசமாய் !



அவசரத்தின் நிறைவிளைவாய்
அறிவியலின் துணைவிளைவாய்
ஆகாயப்பந்தலில்
ஆயிரமாய் செயற்கைக்கோள்கள்
இவற்றிலிருந்து பிரிந்து சென்ற
எச்சங்கள் மட்டுமே கொண்டு
இன்னொரு உலகம் செய்யலாமாம்  !
வேடிக்கை மனிதனின், 
அண்டை நில நிகழ்ச்சிகளை
வேடிக்கை பார்க்கும் ஆசைக்கு
வானமும் தன் மானத்தை
வழங்கிவிட்டுதான் நிற்கிறது.

நெருப்பு மட்டும் இவனிடம்
நிரந்தரமாய்த்தப்பித்தாலும்
அதனையும் இவனது
அழிக்கும் ஆசை 
நாயகியாக்க்கினான்.
அழிக்கும் ஆசைநாயகியாக்கினான்.
எல்லா இடங்களிலும்
இவன்போட்ட குண்டுகளில்
பூமிக்கு ஏற்பட்ட கொப்புளங்கள்
ஏராளம்.
எரிமலையாய்க்குமுறித்தான்
ஏறிவந்து பார்க்கிறது!
யாரடா இவன் நம்மைவிட
மேலாய் என்று!

இப்படித்தான் இயற்கையும்
சீரழிந்து போகிறது.
அதுவும் தன் பங்குக்கு
அடிக்கடி நோகிறது
கொந்தளிப்பாய்,
புவி வெடிப்பாய்,
கடும் வெயிலாய்
கொடும் குளிராய்
பெருமழையாய்
சுழற்காற்றாய்
தான் படைத்த மனிதனுக்கு
தண்டனைகள் கொடுக்கிறது!
கொடுக்கிற தண்டனையை
கொசுவைப்போல் துச்சம் செய்து
விசுவாசம் இல்லாமல் 
வெறி பிடித்து அலைகின்றான்.!


இப்படியே போனால்
என்னதான் ஆகும்?

(மீண்டும் தொடரும்..! )

Comments

  1. பகுதி ஒன்றைப்போலவே இதுவும் நன்றாகவந்திருக்கிறது.. தொடருங்கள்.. அபாயத்தையும் அழகாக மிரட்டுவீர்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. நல்ல ப்ளோ! ம்ம்..//நிலத்தின் ஆழம் தோண்டி,கனிமங்கள் கண்டெடுத்து,ஆயுதம் செய்து, வீடுகட்டி, ஆபரணம் அழகுறப்பூட்டி,எரிபொருளும் கண்டெடுத்துஎடுப்பாக ஊர்வலம் போய்பூமியின் உடலெங்கும் பொறுப்பின்றிப் பொத்தலாக்கி உவகையுடன் மெத்தையிட்டான்
    //

    இதற்கெல்லாம் வளர்ச்சி என்று பெயரிட்டான்!! ஹ்ம்ம்ம்!
    பெருமூச்சுதான் மிஞ்சுகிறது!!

    ReplyDelete
  3. இரண்டாவதும் அழகாக வந்திருக்கிறது... keep it going, amigo!

    ReplyDelete
  4. /*கொடுக்கிற தண்டனையை
    கொசுவைப்போல் துச்சம் செய்து
    விசுவாசம் இல்லாமல்
    வெறி பிடித்து அலைகின்றான்.!
    */
    அழுத்தமான வரிகள்

    ReplyDelete
  5. இப்படித்தான் இயற்கையும்
    சீரழிந்து போகிறது.
    அதுவும் தன் பங்குக்கு
    அடிக்கடி நோகிறது
    கொந்தளிப்பாய்,
    புவி வெடிப்பாய்,
    கடும் வெயிலாய்
    கொடும் குளிராய்
    பெருமழையாய்
    சுழற்காற்றாய்
    தான் படைத்த மனிதனுக்கு
    தண்டனைகள் கொடுக்கிறது!//

    மிரட்டறீங்க தானைத் தலைவரே.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. இரண்டு பகுதிகளும் அருமை!!

    ReplyDelete
  7. purinthum puriyamalum vedikkai paarkum manitharkal

    ethil kondu vidumo

    kavithai - iyarkkaiyin pulambalkalaga -
    yecharikkum unmaikalaga........

    vi

    ReplyDelete
  8. மிரட்டறீங்க தானைத் தலைவரே.
    பாராட்டுக்கள்.
    //
    அக்காவே சொல்லியாச்சு...அப்புறம் நா என்ன சொல்ல :))

    ReplyDelete
  9. //முத்துலெட்சுமி கயல்விழி said...
    பகுதி ஒன்றைப்போலவே இதுவும் நன்றாகவந்திருக்கிறது.. தொடருங்கள்.. அபாயத்தையும் அழகாக மிரட்டுவீர்கள் என்று நினைக்கிறேன்.//

    வாங்க!
    முடிந்தவரை முயன்றிருக்கிறேன்.
    நீங்கள்தான் சொல்லவேண்டும்.
    மிரட்டலா?
    சொதப்பலா?
    என்று!

    ReplyDelete
  10. சந்தனமுல்லை said...
    //நல்ல ப்ளோ! ம்ம்..

    இதற்கெல்லாம் வளர்ச்சி என்று பெயரிட்டான்!! ஹ்ம்ம்ம்!
    பெருமூச்சுதான் மிஞ்சுகிறது!!//

    வாங்க !

    ஆமாங்க !

    ReplyDelete
  11. // Thekkikattan|தெகா said...
    இரண்டாவதும் அழகாக வந்திருக்கிறது... keep it going, amigo!//

    நன்றிங்ண்ணா!

    ReplyDelete
  12. நசரேயன் said...

    //அழுத்தமான வரிகள்//

    வாங்க நசரேயன்..!
    நன்றிங்க!
    நீங்கள்லாம் வர்றதால மிகுந்த கவனத்துடன் எழுதத்தூண்டுறீங்க !
    மீண்டும் மிக்க நன்றி!

    ReplyDelete
  13. // புதுகைத் தென்றல் said...


    மிரட்டறீங்க தானைத் தலைவரே.
    பாராட்டுக்கள்.//


    வாங்க வாங்க!
    ரொம்ப நாளாச்சு பாத்து! :)

    இப்படி ஏதாவது ஏத்திவுட்டுட்டு
    போயிர்றீங்க! அப்புறம் நாங்க
    மண்டையப் பிச்சிக்கிட்டு திரியவேண்டியிருக்கு!

    :)))))))

    ReplyDelete
  14. கபீஷ் said...
    இரண்டு பகுதிகளும் அருமை!!

    வாங்க கபீஷ்...!
    நன்றிங்க

    ReplyDelete
  15. // புதுகை.அப்துல்லா said...
    மிரட்டறீங்க தானைத் தலைவரே.
    பாராட்டுக்கள்.
    //
    அக்காவே சொல்லியாச்சு...அப்புறம் நா என்ன சொல்ல :))//

    வாங்க ராசா!
    சர்ரி..சர்ரி..!

    நன்றிங்க!

    ReplyDelete
  16. //மானுடர்களாகிய நாம் எத்தனைச் சிறியவர்கள், அற்பமானவர்கள் என்பதை வானளாவிய பனித்தொப்பி போட்ட மலையுச்சிகளை நோக்கும்போது, இயற்கையின் மௌனமான கோபத்துடன் உணர முடிகிறது.//

    http://balaji_ammu.blogspot.com/2008/12/479.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!