படிச்சாச்சு லக்கிலுக்!

கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களின் வடிவமைப்புக்காகவும், உள்ளடக்க நேர்த்திக்காகவும் வாங்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக தொற்றிக்கொண்டுவிட்டது. நான் வாங்கிய முதல் 'கிழக்கு' - அடுத்த விநாடி(நாகூர் ரூமி) என்று நினைக்கிறேன்.

இப்போது தமிழ்மணத்திலும், லக்கிலுக்கின் பதிவிலும் கூறியிருந்ததால், அவருடைய-சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்-புத்தகத்தை வாங்கி, இதோ...படித்துமுடித்தாகிவிட்டது.

விளம்பரத்துறையைப்பற்றி இதுவரை தமிழில் தகவல்களுடன் புத்தகம் வெளிவந்திருப்பதாக நான் அறியவில்லை. அதுவும் நம் சக பதிவர் (கொஞ்சம் ஓவர்தான்...அவர் சக பதிவர் என்பதைவிட சூப்பர் பதிவர் எனலாம்) எழுதிய புத்தகம் என்ற பாசத்துடன் படித்தேன்.

முதலில், அவரது இந்த சுலபமான, அழகான, சகஜமான எழுத்து நடைக்கு இது ஒரு சிறந்த விளம்பரம்!

அப்புறம் அதன் சாராம்சம்.... வாசகனை மிகவும் குழப்பாமல், மிகவும் ஆழமான தொழில்நுட்பத்தகவல்களும் தெளிக்காமல், கவானமாகக்கையாண்டு கலக்கியுள்ளார்.
படித்துமுடிக்கும்போது விளம்பரத்துறையைப்பற்றி ஒரு அடிப்படை அறிவு ஏற்பட்டுவிடும் என்பது திண்ணம்.

புத்தகத்தின் பல்வேறு பகுதிகள் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது. அதுவும் அந்த அழகி படம், செப்டம்பர் 2, 4ல் ஒவ்வொன்றாக களையப்படும் என்ற தகவல் , இதயம் நல்லெண்ணெய் விளம்பர நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை , இல்லாத பீர் கம்பெனி விளம்பரம் என்று சுவாரஸ்யமாக வழங்கியிருக்கிறார்.

ஒரு நாட்டுக்கே விளம்பரம், உள்ளூர் விளம்பரம் என்று எல்லாவற்றைப்பற்றியும் விலாவாரியாக சிறு சிறு எடுத்துக்காட்டுகள் மூலம் போகிறபோக்கில் கூறியிருக்கும் பாங்கு சிறப்பாக உள்ளது.

விளம்பரம் என்றதும் நினைவுக்கு வரும் எல்லா ஊடகங்களையும் ஒரு சிறு அலசல் அலசியிருக்கிறார். எந்தந்த விளம்பரங்கள் எங்கெங்கு செல்லும் என்றும் விபரம் தருகிறார்.

நீங்கள் ஒரு வியாபார நிறுவனத்தை நடத்திவந்தால், நீங்கள் எந்த வகையில் விளம்பரம் செய்தால் உங்கள் விற்பனையில் ஏற்றம் வரும் என்பதைத்தெரிந்துகொள்ள இந்தப்புத்தகம் ஒரு ஆலோசனை முதலீடாகப் பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் மிகவும் பயனுள்ளதாகவும், ரசிக்கும்படியும் எழுதி -விற்பனையில் சக்கைப்போடு போடப்போகும்படி - வெளியிட்டிருக்கும் நமது லக்கிலுக் என்ற யுவகிருஷ்ணாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகுக !

ஆமா..' கிழக்கு' மக்களே...! எப்புடிப்பா இப்படிப்பட்ட ஆட்களை வளைச்சு வளைச்சுப் பிடிச்சு தூள் கிளப்புறீங்க!

Comments

  1. சக பதிவரின் புத்தகத்தை சிரத்தையோடு வாங்கி , விமர்சனம் எழுதிய பகிர்தலுக்கு நன்றிகள், வாழ்த்துக்கள்.

    குப்பன்_யாஹூ

    ReplyDelete
  2. //Blogger குப்பன்_யாஹூ said...

    சக பதிவரின் புத்தகத்தை சிரத்தையோடு வாங்கி , விமர்சனம் எழுதிய பகிர்தலுக்கு நன்றிகள், வாழ்த்துக்கள்.//
    வாங்க குப்பன் யாஹூ!

    அதை படிச்சுட்டு முதல் பின்னூட்டம் போட்ட உங்களுக்கு டபுள் மடங்கு நன்றிகள்ண்ணா !

    ReplyDelete
  3. படிச்சாச்சா அதுக்குள்ளும்...

    ReplyDelete
  4. puthakathai partiya our outline koduthamaikku nanti

    baskar

    ReplyDelete
  5. தங்கள் பதிவுகள் அருமையாக உள்ளன.

    தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி

    ReplyDelete
  6. //Blogger குப்பன்_யாஹூ said...

    சக பதிவரின் புத்தகத்தை சிரத்தையோடு வாங்கி , விமர்சனம் எழுதிய பகிர்தலுக்கு நன்றிகள், வாழ்த்துக்கள்.//

    என் எண்ணமும் அதே!

    ReplyDelete
  7. புத்தக விமர்சனத்திற்கு நன்றி. புத்தக காட்சியில் வாங்கவேண்டிய லிஸ்டில் தவறி விட்டது. கண்டிப்பாக வாங்கி படிக்க வேண்டும். நன்றி சுரேகா.

    லக்கிக்கு வாழ்த்துக்கள்.

    I strongly beleive இந்திய பதிவுலகில் "கிழக்கு" வருங்கால சூப்பர் ஸ்டார்.

    Badri & team xlent team work.. Great.. Keep it up.. Hearty wishes..

    ReplyDelete
  8. வாங்க சந்தனமுல்லை!
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க..!

    ReplyDelete
  9. வாங்க வண்ணத்துப்பூச்சியார்..!

    கண்டிப்பா படிச்சுப்பாருங்க!
    ஆம். -கிழக்கு- மக்களிடையே படிக்கும் ஆர்வத்தை கொஞ்சம் தூண்டியிருக்கிறார்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !