மகளென்னும் தேவதை!

காணாமல் போன
செல்போனை
வீடெங்கும் தேடினால்
தண்ணீர் அண்டாவில்
கிடக்கிறது!

பால் காய்ச்ச வைத்திருந்த
பாத்திரத்தைக்காணவில்லை
என்று அம்மா அலற, அது
குப்பைக்கூடைக்குள்ளிலிருந்து
எட்டிப்பார்க்கிறது !

தொலைக்காட்சியின்
ரிமோட்டின்
உடலெங்கும் கட்டுக்கள்!
அடுத்த ரிமோட்
வீட்டுக்குள் அடியெடுத்து
வைக்கிறது!

வெளியில் கிளம்பும்
எல்லோருக்கும் விளையாட்டு
காத்திருக்கிறது!
உங்கள்செருப்பைத்
தேடுங்கள் பார்ப்போம்.!

படுக்கையறையில்
இடம்மாறிய பலபொருட்களை
கண்டுபிடிப்பதே பாதிநாள் பணியாய்
வேலைக்காரி கூறுகிறாள் !

அசந்த நேரங்களில்
தண்ணீர்ப் பாத்திரங்கள்
தலையில் ஊற்றியதுபோக
மீதத்துடன் நிற்கின்றன!

கதவுகளின் சாவித்துவாரங்களெங்கும்
குச்சிகள் அடைக்கப்பட்டு
அவசரத்துக்கு பூட்டமுடியலை
என்று அத்தனைபேரும்
அலறுகிறோம்.!

அம்மா என் புத்தகத்தின்
ஆறாம் பக்கத்தை காணலை!
அலறுகிறான் அஸ்வின்!


அடுக்கிவைத்திருந்த
துணிகளெல்லாம்
அறையெங்கும் சிதறிக்கிடக்க
மனைவியின் புலம்பலால்
நிறைகிறது இரவு உணவு!

நடமாடும் பகுதியெல்லாம்
சோற்றுப்பருக்கை,
கஞ்சி என
காலெங்கும் பிசுபிசுப்பு!

என் மகளென்னும் தேவதை
நடமாட ஆரம்பித்துவிட்டாள்!

அவள் எச்சில் படாத இடமிருந்தால்
எங்கள் வீட்டில் காட்டுங்கள்!
அவளிடம் தரச்சொல்கிறேன்
அன்பான ஒரு எச்சில் முத்தம் !









Comments

  1. காணாமல் போன
    செல்போனை
    வீடெங்கும் தேடினால்
    தண்ணீர் அண்டாவில்
    கிடக்கிறது!

    தொலைக்காட்சியின்
    ரிமோட்டின்
    உடலெங்கும் கட்டுக்கள்!

    அடுக்கிவைத்திருந்த
    துணிகளெல்லாம்
    அறையெங்கும் சிதறிக்கிடக்க
    மனைவியின் புலம்பலால்
    நிறைகிறது இரவு உணவு!
    //

    ரொம்ப நன்றாயிருக்கு சுரேகா!!!

    கிடைத்ததையெல்லாம் வாயில் வைக்கும் பருவம் ஒன்று உங்கள் பெண்ணுக்கு வரும் பாருங்கள்.. (நடப்பதற்கு அடுத்தது என்று நினைக்கிறேன். ஏனெனில், அப்படித்தான் என் பெண் செய்கிறாள்)

    அப்பொழுது இதைவிட பெரிய கவிதைகள் எழுதுவீர்கள் என்று தோன்றுகிறது..

    நன்றி !!!

    :)

    ReplyDelete
  2. வாங்க காரணம் ஆயிரம்..!

    நன்றிங்க!

    கிடைத்ததைஎல்லாம் வாயில் வைக்கும் பருவமும் வந்திருச்சு!
    அதான் கடைசி வரிகள்!
    அவள் எச்சில் படாத இடமே இல்லை!
    :)

    ReplyDelete
  3. ஆஹா, நடக்க ஆரம்பிச்சாச்சா!!!

    சோ ஸ்வீட் குட்டிம்மா.

    தொடரட்டும் உன் ஆட்டங்கள்

    ReplyDelete
  4. Action arambamaa... :-) anubavi raja anubavi... :-)))

    ReplyDelete
  5. ரொம்ப அழகான கவிதை.

    குட்டி தேவதைக்கு ஆசீர்வாதங்கள் & வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. Appadi!
    a longtime wish became fulfilled!
    Kavithaiyin kavithai!
    kutti angel romba alagu!
    kutti ponnukku ayiram muthangal!
    best wishes from
    sayu.

    ReplyDelete
  7. வாங்க புதுகைத்தென்றல்..!

    ஆமாங்க..!
    பையன் பரவாயில்லை!
    இது படா அளும்பா இருக்கு!

    ReplyDelete
  8. வாங்க தமிழ்பிரியன்!
    நலமா? ரொம்ப நாளா பாக்க முடியலை!

    ஆட்டம் ஆரம்பம்!
    நல்லாத்தான் இருக்கு!

    :)

    ReplyDelete
  9. வாங்க சிவா!

    மிக்க நன்றிப்பா!

    ReplyDelete
  10. அன்பின் சுரேகா

    கவிதை அருமை - செல்லம் செய்யும் குறும்புகள் அனைத்தும் ரசிக்கக் கொடுத்து வைக்க வேண்டும். ஆகா அந்த இன்பம் அனுபவிக்க வேண்டும்

    நல்வாழ்த்துக்ள் செல்லத்திற்கு

    ReplyDelete
  11. - மலைநாடான்October 23, 2009 at 5:13 PM

    மழலை இன்பம் மனதுக்கு இன்பம்

    ReplyDelete
  12. காணாமல் போன
    செல்போனை
    வீடெங்கும் தேடினால்
    தண்ணீர் அண்டாவில்
    கிடக்கிறது!
    ///////////////////////

    அப்படி தான் குட்டிம்மா பண்ணனும்:)குட்

    ReplyDelete
  13. to kutti thevathai

    இன்னும் இது மாதிரி நிறைய அட்டகாசங்கள் பண்ணனும் குட்டி .....okay:)

    ReplyDelete
  14. ஆமாங்க..!
    பையன் பரவாயில்லை!
    இது படா அளும்பா இருக்கு!///////////////////////////

    ponnunga eppavumey activea thaan irupaanga:)

    ReplyDelete
  15. ஸோ க்யூட்.. ச்சோ ச்வீட்... சுத்தி போட சொல்லுங்க சுரேகா.. :))

    ReplyDelete
  16. விகடனில் படித்தேன். நல்ல கவிதை. படித்தவுடன் பிடித்துப் போனது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!