கண்ணனும், கண்ணனும் (சவால் சிறுகதைப்போட்டி 2011)
வாகனங்கள் எரிபொருளைத் தின்றுவிட்டு, எரிச்சல்
தாங்காமல் ஓடிக்கொண்டிருந்தன. அவ்வப்போது சிகப்பு, மஞ்சள், பச்சை என்று விளக்குகளைப்போட்டு
ஓட்டத்தைத் சீராக்கிக்கொண்டிருந்தன மஞ்சள் மரங்களாய் நின்றுகொண்டிருந்த சிக்னல் கம்பங்கள்.
சென்னையில், தனது அலுவலகத்தின் 3வது மாடியிலிருந்து
பார்த்துக்கொண்டிருந்த கண்ணன், ‘அட ! எப்படியெல்லாம் நமக்கு சிந்தனை வருது?’ என்று
நினைத்துக்கொண்டே திருப்பூரிலிருக்கும் தன் நண்பன் கண்ணனுக்கு போனை ஒற்றினான்.
‘டேய்!
ஆபீஸ் வந்துட்டியா?’
’வந்துட்டேன்!
சொல்லு?’
’இந்த
வருஷமும் ஒரு சிறுகதைப்போட்டி வச்சு,நம் மக்கள் சிந்தனையைத் தட்டிவிடுவோமா?’
’நானும்
நினைச்சுக்கிட்டே இருந்தேன் கண்ணா! ஓ. எஸ்.! செஞ்சுரலாம்.’
சென்னைக் கண்ணனும், திருப்பூர் கண்ணனும்
நண்பர்கள். தங்கள் வாழ்வியல் சூழல் தடுத்ததால், கற்பனைக் குதிரைகளை லாயத்தில் கட்டி
வைத்திருந்தவர்கள். இணைய தளத்தில் வலைப்பூ என்று ஒன்று உருவானபோது, அதைப்பயன்படுத்தி
குதிரையை ஓடவிட, அற்புதமான பதிவுலக எழுத்தாளர்கள் என்று அறியப்பட்டவர்கள். கதைகள், அனுபவங்கள்,
சினிமா விமர்சனங்கள் என கலந்து கட்டி அடிப்பார்கள். இருவருக்கும் மிகப்பெரிய ஒற்றுமை,
கிண்டலும், நகைச்சுவையும் எழுத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் பாங்குதான்! இதனாலேயே மிகப்பெரிய
வாசகர் கூட்டம் இவர்களுக்கு இருந்தது.
எப்போதாவது நேரில் சந்தித்தாலும், அடிக்கடி
போனில் நட்பை வளர்த்து உறுதி ஆக்கியிருந்தார்கள். ஏறத்தாழ இருவரின் இயல்பும், ரசனைகளும்
ஒன்றாயிருந்ததே காரணம்.! இருவர் பெயரும் கண்ணன் என்று இருந்தது ஒரு கூடுதல் சிறப்பே!
இருவருக்கும் கதை எழுதுவதில் இருந்த ஆர்வம்,
நாம் ஏன் வலையுலகத்தில் இயங்கும் எழுத்தாளர்களுக்கென கதைப்போட்டி வைக்கக்கூடாது என்று
தோன்ற, ஒரு ஆண்டுக்கு முன் ‘கண்ணனும், கண்ணனும் கலக்கும் கதைப்போட்டி ‘ என்று அர்த்தப்படும்
’4க’ என்று போட்டிக்குப் பெயரிட்டான் திருப்பூர் கண்ணன். அவன் எப்போதும் இது போன்ற
வார்த்தை ஜாலங்கள் செய்வதில் வித்தகன்.!
உரையாடலை, திருப்பூர் கண்ணன் தொடர்ந்தான்.
‘போன
வருஷம் சம்பந்தமில்லாத வார்த்தைகளைக் கொடுத்து எழுதச்சொன்னோம். அதுவும் ஒரு க்ரைம்
சப்ஜெக்ட்!’
’ஆமா!
நம்ப மக்கள் கலக்கிட்டாங்க இல்ல?’
‘இந்த
வருஷம் இன்னும் புதுமையா நம்ப ’4க’ போட்டியை நடத்தணும் கண்ணா!
எப்படிப்
பண்றது?
’எனக்கு
ஒரு யோசனை!’
’சொல்லு!’
’ஏதாவது
ஒரு காட்சியை வச்சு கதை பண்ணச் சொல்வோமா?’
’ம்..
செய்யலாம்..! ஆனா அதுதான் எல்லாப் பத்திரிக்கையிலயும், காட்சிக்கு கதை, கவிதைன்னு போட்டுத்
தாக்குறாங்களே!’
’பரவாயில்லை..!
ஆனா அந்தக் காட்சியை ஒரு வித்யாசமான, நாம் நினைக்கிற மெத்தட்ல வரமாதிரி செஞ்சுருவோம்.
நைட் வீட்டுக்குப் போயிட்டு கூப்புடுறேன்.’
’சரி!
நானும் யோசிக்கிறேன்!’
போனை
வைத்துவிட்டு மீண்டும் சீட்டுக்கு வந்தான் சென்னைக் கண்ணன்
.
அது ஒரு சரக்குப்பெட்டக அலுவலகம். வெவ்வேறு
நாடுகளிலிருந்து கப்பலில் வரும் சரக்குகளை, உரிய நிறுவனங்களுக்கு க்ளியர் செய்து தருவதுதான்
வேலை.! சென்னைக் கண்ணன் அங்கு மேலதிகாரி!
பல கடத்தல் சரக்குகள், முறையான ஆவணங்கள்
இல்லாமல் வரும். வாடிக்கையாளர்கள் வரும் கடத்தல் சரக்கு பற்றி இவர்களிடம் உண்மையைக்
கூறிவிடுவார்கள். அவற்றை தங்கள் வாடிக்கையாளருக்காகப் பேசி வாங்கித்தருவதில் ஏகப்பட்ட
தகிடுதித்தங்கள், அதிகாரிகளுக்கு கூழைக்கும்பிடுகள் போடவேண்டிய நிர்ப்பந்தம் அந்த நிறுவன
ஊழியர்களுக்கு உண்டு.
ஆனால், அன்று வேறு ஒரு பிரச்னை வந்தது. அவர்கள்
அலுவலகத்திலேயே யாரோ ஒருவர் கஸ்டம்ஸுக்கு இன்பார்மராக செயல்பட்டு, தொடர்ச்சியாக தகவல்
கொடுக்கிறார்கள். அலுவலகத்திலிருந்து கண்ட்டெய்னர் எண்ணை எப்படியோ சொல்லி, அதை முழுமையாக
சோதனையிட வைத்து, ஏதாவது பொருள் சிக்கும்போது, நிறுவனத்திடமிருந்து பெரிய தொகை கறக்கிறார்கள்.
அதை இந்த ஊழியரும் பங்கு போட்டுக்கொள்கிறார். ஆனால் யாரென்று தெரியவில்லை என்று அந்த
நிறுவனத்தின் ஒரு நேர்மையான் ஊழியனான செல்வா புகார் சொன்னான்.
கண்ணன் உடனே, அவன் முன்பாகவே, ஒரு நம்பிக்கையான
ஊழியனை வைத்து எல்லோருடைய மேஜையையும் தேடச்சொல்லியிருந்தான். இன்று அவன் சிக்கிவிடுவான்
என்று செல்வாவுக்கு நம்பிக்கை கொடுத்து, அந்த
டென்ஷனிலேயே நாள் கழிய, மாலை வீடு வந்தான்.
உடை மாற்றி, ரிலாக்ஸாக அமர்ந்தபோது, திருப்பூர்
கண்ணனிடமிருந்து அழைப்பு!
‘சொல்லு கண்ணா!’ என்ன செய்யலாம்?
‘நான் ஏதாவது க்ரைம் கதை க்ளு தரலாமான்னு
யோசிக்கிறேண்டா!’
’இன்னிக்கு எங்க ஆபீஸில் ஒரு சம்பவம் நடந்துச்சு
! கேக்குறியா, அது ஏதாவது உதவுதான்ன்னு பார்க்கலாம்.’
சொல்லு!
சென்னைக்கண்ணன் தன் அலுவலகத்தில் நடந்ததைச்
சொல்ல ஆரம்பித்தான்.
ம்! ம்.! எனக் கேட்டுக்கொண்டிருந்தான் திருப்பூர்
கண்ணன்.
திருப்பூர் கண்ணனுக்கு ஒரு மகள் ! அம்மு
என்று அழைப்பான். 7ம் வகுப்பு படிக்கிறாள். அப்பாவைப்போலவே அறிவாளி! இவன் அளவுக்கு
புத்தகங்கள் படிக்க ஆரம்பித்துவிட்டவள். தான் எழுதும் கட்டுரைகளையும், சிறுகதைகளையும்
அவளையும் படிக்கவைப்பான். அவளும் தனக்குத்தெரிந்த கருத்துக்களை சொல்லுவாள். பாராட்டுவதை
விட, அவனை விட்டுக்கிழிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவாள்.
அவளும் அப்பாவிற்கு அருகிலேயே ஒரு நாற்காலியைப்போட்டுக்கொண்டு
அப்பா ‘ம்’ எனச்சொல்லிக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டே , ஒரு ராஜேஷ் குமார் நாவல் படித்துக்கொண்டிருந்தாள்.
வீட்டுப்பாடங்களையெல்லாம் முன்னரே முடித்துவிட்டதால், இந்த சுதந்திரம்..!
கண்ணனும்,கண்ணனும் தொடர்ந்தார்கள்.
’மேட்டர் நல்லாருக்கு கண்ணா! இதையே கொஞ்சம்
ஆல்ட்டர் பண்ணி, நான் ஒரு கதை யோசிச்சு காலைல ஐடியா பார்ம் பண்ணிடுறேன்.’
’ஓக்கே! பை!’
தனது ஐ-போனை ஒற்றி, தொடர்பைத் துண்டித்தான்.
‘என்னப்பா மேட்டர்?’ அம்மு கேட்டாள்.
’நானும், கண்ணன் அங்கிளும் சேந்து இந்தவருஷமும்
4க கதைப்போட்டி நடத்தப்போறோம். அதைப்பத்திதான் பேசிக்கிட்டிருந்தேன்.’
‘சரி! சரி! இந்த வருஷம் என்ன Theme?’
‘அதாண்டா செல்லம் யோசிச்சிக்கிட்டிருக்கோம்.’
’சரி! ஃபைனல் பண்ணிட்டு சொல்லுங்க!’
’சரிம்மா!’
மகளின் ஆர்வமும், அன்பும் பெருமிதம் கொள்ளவைத்தது.
அடுத்தநாள் காலை, சென்னைக்கண்ணனுக்கு அழைத்தான்.
’கண்ணா!’
’சொல்லு!’
’உங்க ஆபீஸ் மேட்டரை வச்சே, ஒரு சூப்பர்
ஐடியா பிடிச்சுட்டேன்.’
’சொல்லேன்.’
’ஒரு கண்டெய்னர் கம்பெனியில் இன்பார்மரான
விஷ்ணு வேலை பாக்குறான். அவன் ஒவ்வொரு தடவையும் முறையான பேப்பர் இல்லாம மாட்டக்கூடிய
கண்டெய்னர் பத்தின தகவல்களை கஸ்டம்ஸ் ஆபீசர் எஸ்.பி. கோகுலுக்கு கொடுப்பான்.
அதன்படி
பிடிபட்டு, கப்பம் கட்டுறாங்க! ஆனா, தகவல் எப்படிப் போகுதுன்னு ஆபீஸில் பிச்சுக்கிறாங்க!
மேனேஜர் சிவா அதை ஆராயுறான். அதே சமயம், அவன் கொடுத்த தகவல்படி, எஸ்.பி கோகுல் சோதனை
போடுறார்.
‘Sea Wolf ஷிப்பில் 2H Row வில்
6F , அதாவது ஆரீஃப் ன்னு பேர் போட்ட கண்டெய்னரில் பெரிசா ஒண்ணும் இல்லை. குறைவான சரக்கும்,
அதுக்கு கப்பமா ஆயிரக்கணக்கான ரூபாயும்தான் பிராயுது. ஆனா, வேற கண்டெய்னரில் கோடிக்கணக்கான
ரூபாய்க்கான சரக்கு கை மாறியிருக்கு.!
இதை ஒரு கட்டத்தில் சிவாவும், கோகுலும் சேந்து
கண்டுபிடிக்கும்போதுதான் ஒரு உண்மை தெரியுது. அவுங்க கம்பெனி ஓனர்தான் இதுக்கு மாஸ்டர்
மைண்ட். விஷ்ணு அவரோட ஆள். ஒவ்வொரு தடவையும் போலீஸை திசை திருப்ப, சின்ன சரக்குள்ள
கண்டெய்னரை க்ளூவா குடுத்திருக்கான். பெரிய ஐட்டம் நைசா வெளில போயிருக்கு!
அதுல கோகுல் எல்லா க்ளூவையும் கண்டுபிடிக்கும்போது,
அவனுக்கு விஷ்ணுவே போன் பண்றமாதிரி ஒரு சீனை
வச்சு ஒரு போட்டோ எடுத்துர்றேன். இன்னிக்கே அறிவிச்சுறலாம்.’
சூப்பர் கண்ணா! செஞ்சுரு! என்று சொல்லிக்கொண்டே,
திருப்பூர் கண்ணனின் மூளையை நினைத்து வியந்தான்.
***
திருப்பூரில் , கண்ணன் அலுவலகம் வந்ததும்
ஒரே A4 தாளில்,
Mr.கோகுல் S W H2 6F இதுதான்
குறியீடு. கவனம்- விஷ்ணு
கொஞ்சம் இடம் விட்டு,
Sir, எஸ்.பி. கோகுலிடம் நான்
தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம். -விஷ்ணு
என்று டைப் செய்து அந்தப்பேப்பரை சின்னதாக
மடித்து, மடிப்பு தெரியும்படி, விரித்தான்.
பின்னர் அதனை இரு, தனித் துண்டுகளாக ஸ்கேலை
வைத்து கிழித்தான்.
அலுவலக உதவியாளர் பாஸ்கரை அழைத்து அவரது
எண்ணை தன் ஐ போனில் ஏற்றி, அவரை குனிந்து பார்க்கச்சொல்லி, அந்த போஸில் போட்டோவும்
எடுத்துக்கொண்டு, அதற்கு VISHNU INFORMER என்று பெயரிட்டு, அவரை தன் எண்ணுக்கு அழைக்கச்சொன்னான்.
அது, தெளிவாக கேமராவில் விழுமாறு பார்த்துக்கொண்டான்.
பாஸ்கரை விட்டு மூன்று நான்கு போட்டோக்கள்
எடுத்துக்கொண்டான்.
அதில் சிறப்பாக வந்திருந்த ஒரு போட்டோவை,
சென்னை கண்ணனுக்கு அனுப்பினான்.
அவனும், சூப்பரா இருக்கு! அறிவிச்சிடு! என்று மெயில் அனுப்பினான்.
கண்ணனும், கண்ணனும் : கலக்கும் கதைப்போட்டி ’4க -2011’ என்று பெயரிட்டு,
போட்டோவை பதிவேற்றி, போட்டி விதிகளை அடித்து, அன்றே அறிவிப்பும் வெளியிட்டான்.
பதிவுலகம் பற்றிக்கொண்டது. கதைகள் வர ஆரம்பித்தன.
***
சென்னைக்கண்ணனின்
முதலாளி தீபக். இவன் அறிமுகப்படுத்தியதால் வலைப்பூக்கள் பார்க்க ஆரம்பித்தவர். இப்போது
தீவிர வலைப்பூ வாசகர் ஆகிவிட்டவர். அவரும் போட்டிக்கான இந்தப் படத்தைப் பார்த்தார்.
கண்ணனை அழைத்தார்.
‘என்னய்யா
இது?’
சார்…அது
வந்து…..!!
ஒரு வாரம் ஆனது.
அன்று அம்முவுக்கு விடுமுறை..! திருப்பூர்
கண்ணனும் வீட்டில் ட்விட்டரை நோண்டிக்கொண்டிருந்தான்.
’அப்பா!’
’சொல்லும்மா!’
’அந்தக்கதைப்போட்டி அறிவிச்சிட்டீங்களா?’
’ஆஹா..அறிவிச்சிட்டோமே!! ஸாரிடா உன்கிட்ட
சொல்ல மறந்துட்டேன்.’
இட்ஸ் ஓக்கே! என்ன க்ளூ குடுத்திருக்கீங்க!
விபரமனைத்தும், பெருமையுடன் சொல்லி, புகைப்படத்தையும்
கம்ப்யூட்டர் திரையில் காட்டினான்
.
ஆர்வமாகக் கேட்க ஆரம்பித்தவள், புகைப்படத்தைப்
பார்த்தவுடன் கண்ணனை ஏற இறங்கப்பார்த்தாள்.
‘எந்தக்காலத்துல இருக்கீங்க? கையில் ஐ-போனை
வச்சிருக்கிற ஆபீஸருக்கு ஏன் இன்பார்மர் பேப்பரில் தகவல் குடுக்கணும்.? உக்காந்து யாருக்கும்
தெரியாம டைப் பண்ணி, ப்ரிண்ட் எடுத்து, மடிச்சு, அவுங்க இருக்குற எடத்துக்கு அனுப்பி……சாதாரண
வேலையா? ஒரு எஸ் எம் எஸ், இல்லன்னா இ-மெயில் பத்தாது.? அதுவும் தவிர அவுங்க பாஸுக்கும்
பேப்பரில் தகவல் குடுப்பாராமா? மேலும். விஷ்ணு இன்பார்மர்ன்னு சரியான பேரையே வச்சுக்கிட்டு, அவன் போட்டோவையும் போனில் வச்சிக்கிட்டு ஒரு ஆபீஸர் அலைவானா? சரியான லூசுப்பா நீ! பாவம் பதிவர்கள்! நீ குடுத்த க்ளூவை
அடிப்படையா வச்சு கதை எழுதுவாங்க!! இன்னும் நல்லா சிந்திப்பா! எங்க அம்மா அப்பவே சொன்னுச்சு!
உங்கூட சேர வேண்டாம்னு!’
ஏதோ சொல்லி, சமாளிக்கத் தோன்றி…திக்கித்து
நின்றான் கண்ணன். மனதுக்குள் மகளின் புத்திசாலித்தனத்தை எண்ணி பெருமிதம் வேறு…!
சென்னைக்கண்ணன் தன் முதலாளி தீபக்கிடம் சொன்னதை
விட்டுவிட்டேனே..!
‘ஸார்.!
நான் ஒரு லைன் தான் குடுத்தேன். ராத்திரி யோசிச்சு, காலைல கரெக்டா பாஸுதான் தப்பான
ஆளா இருக்கணும்னு முடிவெடுத்துட்டான். ஆனா விஷுவலா யோசிக்கிறேன்னு பேப்பர் க்ளூ போட்டு
,லாஜிக்குல கோட்டை விட்டுட்டான். நம்ப தொடர்பெல்லாம் எஸ் எம் எஸ்ஸுல, இ-மெயில்லதான்!
அதே மாதிரி நம்ப கம்பெனியைப் பொறுத்தவரைக்கும் அந்த இன்ஃபார்மரே நாந்தானே! என்மேல, கஸ்டம்ஸ் ஆபீசருக்கு சந்தேகம் வர வாய்ப்பே இல்லை. கவலையை விடுங்க!
கண்டெய்னர் கம்பெனின்னு கண்ணனுக்கு மட்டும்தான் தெரியும். வர்ற சிறுகதைகளைப் படிப்போம். நாமும், செல்வா மூலமா கஸ்டம்ஸ்ல மாட்டாம இருக்கிறதுக்கு, வேற லூப் ஹோல் இல்லாம வேலை பாக்கமுடியுதான்னு பாப்போம்.!’
nice..
ReplyDeleteஹாஹாஹா நல்லா இருக்கு .. பயங்கர லாஜிக்கோட.. சீன் கண்டின்யூட்டி பார்த்து பார்த்து ரொம்ப keen ஆ வாட்ச் பண்றீங்கன்னு நினைக்கிறேன்.
ReplyDeleteஅது பரிசல் சரி. நீங்க எப்ப கண்டெயினர்க்கு போனீங்க சுரேகா சினிமாவை விட்டு:)
அன்பின் சுரேகா - அருமை - கதை வெற்றி பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteNantraga iruthadu thambi. nantrigal.... by
ReplyDeleteAnandan
RC Commission in Yanbu-Saudi Arabia
பிரமாதம்! கலக்கிட்டீங்க!!
ReplyDeleteவாங்க இராஜராஜேஸ்வரி..
ReplyDeleteமிக்க நன்றிங்க!
வாங்க தேனம்மை ஜி!
ReplyDeleteமிக்க நன்றி!
அது சரி..? வாழ்த்துறீங்களா? ஓட்டுறீங்களா?
சினிமாங்கிற கண்டெய்னர்லதான் இருக்கேன்...!
வணக்கம் சீனா சார்!
ReplyDeleteஉங்கள் அன்புக்கு மிக்க நன்றி!
வாங்க ஆனந்த் அண்ணே!
ReplyDeleteமிக்க நன்றி!
வாங்க கே ஆர் பி !
ReplyDeleteஅன்புக்கு நன்றி தலைவரே!
ஹா ஹா... சூப்பர் கதை. பீஸ் பீஸா பிரிச்சு போட்டுடீங்க... ரெம்ப நல்லா வித்தியாசமா இருக்குங்க
ReplyDeleteநல்ல நடை. வாழ்த்துக்கள்
ReplyDeleteவாங்க அப்பாவி தங்கமணி!
ReplyDelete:)
நன்றிங்க!
வாங்க ஷரண்
ReplyDeleteநன்றிங்க!
ஆரம்பத்தில் படிக்கும் போது சற்று குறைத்து மதிப்பிட்டு விட்டேன் போல. படிக்க படிக்க மிகவும் பிடித்து விட்டது.
ReplyDeleteவாங்க BIGILU
ReplyDeleteமிக்க நன்றி!
கதை நன்றாக உள்ளது வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteவாங்க வியபதி.. மிக்க நன்றிங்க!
ReplyDeleteபாவம் பதிவர்கள்! நீ குடுத்த க்ளூவை அடிப்படையா வச்சு கதை எழுதுவாங்க!! இன்னும் நல்லா சிந்திப்பா! எங்க அம்மா அப்பவே சொன்னுச்சு! உங்கூட சேர வேண்டாம்னு!’
ReplyDeleteஏதோ சொல்லி, சமாளிக்கத் தோன்றி…திக்கித்து நின்றான் கண்ணன். மனதுக்குள் மகளின் புத்திசாலித்தனத்தை எண்ணி பெருமிதம் வேறு))))
ரசிக்கவைத்த இடம், வாழ்த்துக்கள்!
வாங்க நம்பிக்கைப் பாண்டியன்!
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி!
கதை வெற்றி பெற வாழ்த்துகள் ...
ReplyDeleteமிக்க நன்றி சினேகிதி!
ReplyDeleteits better to write in a paper to send the news than tyoe, mail, sms because all this can be traced back as a evidence but written paper can be fired easily. still they all using this technology only
ReplyDelete