சென்னை புத்தகக் கண்காட்சி நாள் # 2
முதல் நாள் கட்டுரையைத் தேடாதீர்கள். நான்
போகவில்லை. புத்தகக் கண்காட்சியின் நாள்தான் தலைப்பு ! எனக்கு, இன்றுதான் முதல் நாள்!
உள்ளே நுழையும்போதே…..பார்க்கிங்கில் நாம்
டென்ஷனில் reflect ஆகக்கூடாதென்று, தானே reflect ஆகும் உடை அணிந்து ஏழெட்டு ஆட்கள் வண்டிகளை
நிறுத்தி வலுக்கட்டாயமாக சீட்டு கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஏற்கனவே கேபிள் எழுதியதைப்
படித்திருந்ததால், பத்தை எடுத்து நீட்டி ‘இங்கயும் ஆரம்பிச்சுட்டீங்களா உங்க அராஜகத்தை’
என்று சொல்லி, அவன் முறைப்பை சோடியம் விளக்கொளிக்கு தின்னக் கொடுத்துவிட்டு வண்டியை
நிறுத்தினேன்.
வாசலை நோக்கி நடக்கத்தொடங்கிய வினாடி, என்னைக்
கடந்து சென்ற பைக்கை ஓட்டியவர் ’மஜக்’கென்று சென்றுகொண்டிருந்தார். அட..! இது நம்ப மாமல்லன்
சாராச்சே என்று நினைத்து.. உள்ளேஏஏஏ செல்லும்வரை நடைத்துணைக்கு வேண்டுமே என்று அவருக்காக
நின்று, பேசிக்கொண்டே உள்நுழைந்தோம். பேராசிரியர் ஞானசம்பந்தன் மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்தார். ‘நிலவு சொல்கிறது..ஏ..! மனிதா!’ என்று ஆரம்பித்தார். அடுத்த நொடி மாமல்லன் சார் ஒரு
கமெண்ட் அடித்தார் பாருங்கள்..!! குபீர்ச் சிரிப்பிவிட்டேன். கமெண்ட் மட்டுறுத்தல் செய்யப்படுகிறது.
நுழைவுச்சீட்டினை எனக்கும் சேர்த்து அவரே எடுத்தார். உள்ளே அவருடன் கிழக்கு பதிப்பகம் வரை வந்தேன். அங்கு ஹரன் பிரசன்னாவுடன் சந்திப்பு..! பேசிக்கொண்டே.. நான் நம்ப மக்களைத் தேடிப் போறேன்
சார் ! என்று அவரிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். அவரும்..நான் சுத்திக்கிட்டிருப்பேன். நீங்க போங்க! என்றார். அவருடன் வயிறுவலிக்க அளவளாவிய சென்ற ஆண்டு நிகழ்வை நினைத்துக்கொண்டே
நகர்ந்தேன்.
எதிரில் எஸ்.ரா வந்துகொண்டிருந்தார். அவரிடம் நலம் விசாரித்துவிட்டு பின்னர் 334ம் எண் கடையான வேடியப்பனின் டிஸ்கவரி
புக் பேலஸில் ஜாகை..! கேபிள் இருந்தார். பேசிக்கொண்டிருந்தோம். திரு.பாஸ்கர் சக்தி வந்தார். அவருடன் ஒரு சில நிமிடங்கள் பேச்சு..! பின்னர் முகப்புத்தக நண்பர் ராகுல் செந்தில் வந்தார். புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. பின்னர்
என் ஆவலான மலிவுவிலை சுஜாதா கதைகளும், காமிக்ஸும் பார்க்கச் செல்கிறேன் என்று சொல்லி,
நான் அங்கிருந்து கூடாரத்தைத் தூக்கினேன். அப்போது விருபா.குமரேசன்அவர்கள் அழைத்தார். அவரது ஸ்டால் எண்: 149ல் நிறைய புதிய புத்தகங்கள் உள்ளதாகச் சொன்னார். நாளை போகவேண்டும்.
அடுத்து, மீனாட்சி பதிப்பகம் வந்தால், அழிக்கப்பிறந்தவனை ஆக்கியவரும்..அவர் இணைபிரியாதவரும் நின்றுகொண்டிருந்தார்கள். மொத்தமாக சுஜாதாவை அள்ளிக்கொண்டிருந்தார்
அதிர்ஷ்டக்கார லக்கி! J
நானும் கொஞ்சம் தேற்றி ரூபாய் 115க்கு 5 புத்தகங்கள்! பின்னர் லக்கியிடமே காமிக்ஸ்
விற்குமிடம் கேட்டேன். எதிர்சாரிக் கடையைக் காட்டினார்.
காமிக்ஸ் கடையில் நுழைந்தேன். ஆஹா..!! 7ம் வகுப்புப்
படிக்கும்போது இனிக்க இனிக்கப் படித்த காமிக்ஸ் ஹீரோக்கள் வரிசைகட்டி நின்றார்கள். அப்போதெல்லாம்
வீட்டுக்குப் பயந்து ஒளித்துவைத்துப் படித்த மாடஸ்டி ப்ளைஸியும், இரும்புக்கை மாயாவியும், மந்திரவாதி மாண்ட்ரேக்கும்..வாடா! என்ன ரொம்ப நாளா ஆளையே காணும்? என்று வரவேற்றார்கள். ஒவ்வொரு புத்தகமாய் ஆசையாய்ப்
பார்த்தேன். (காமிக்ஸ் உலகம் பற்றி ஒரு பதிவு போடணும் என்று நினைத்துக்கொண்டேன்) ராணி
காமிக்ஸில் வந்த ஜேம்ஸ்பாண்டை மட்டும் காணவே இல்லை.! டிடெக்டிவ் காமிக்ஸ், இரும்புக்கை
மாயாவி போன்ற காமிக்ஸ்களின் 28 புத்தகங்கள் ரூபாய் 150ரூபாய்க்கு வாங்கினேன்.
அப்போதுதான்
அன்புடன் அறிமுகமானாரகள் திரு.ரகுவும், திரு.விஷ்வாவும்…!! இருவருக்கும் காமிக்ஸை வாழ
வைப்பதுதான் வேலை போலிருக்கிறது. காமிக்ஸின் மறுவாழ்வுக்காக ஒரு இயக்கம்போல் செயல்படுகிறார்கள். அடடா..! நான் சிறுவயதில் படிக்க ஆரம்பித்து பாதியில்
விட்ட ஒரு ஸ்பைடர்மேன் காமிக்ஸ் பற்றி சொல்ல ஆரம்பித்ததும் அதன் தலைப்பைச் சொல்லி அசத்தினார்கள். ஒவ்வொரு காமிக்ஸைப் பற்றியும் குட்டிப்பசங்களைப் போல் ஆர்வமாக, ஆச்சர்யமாக, உற்சாகமாக, குதூகலமாகப் பேசிக்கொண்டிருந்தோம். அந்தக்கடையில்
அமர்ந்திருந்த பெரியவர் ஒரு சுவாரஸ்யர்..! அவர் லயன்ஸ் காமிக்ஸ் ஆரம்பித்த நாளிலிருந்து
அங்கு வேலை பார்க்கிறாராம். பிரமிப்பாக இருந்தது. பின்னர் விசில் ஊதி கடையை அடைக்கும்வரை
அங்கு நின்று அளவளாவிக்கொண்டிருந்தோம். கேபிளும் அங்கு வர பேசிக்கொண்டே ஜூட் விட்டால், வாசலில்
காவல்கோட்டம் வெங்கடேசனும், நாஞ்சில் நாடன் அய்யாவும் நின்றுகொண்டிருந்தார்கள். பாராட்டு,சந்தோஷக்
கைகுலுக்கல்கள், நலவிசாரிப்புகளுடன் வெளியேறினோம்.
எப்படித்தான் நிகழ்வுக்கு நிகழ்வு யோசித்து எழுதினாலும்.. உண்மைத்தமிழன் அண்ணாச்சி லெவலுக்கு வரமுடியவில்லை. இப்பதான் நினைவுக்கு வருது! நான் ,சுகுமார் சுவாமிநாதன்,
கேபிள் ஆகியோர் உ.த அண்ணாச்சியுடன் வாஆஆசலில் அளவளாவினோம். அப்போது ஒரு குண்டைப் போட்டார். அந்த பிரபல ஈரோட்டு நிகழ்வுப் பதிவு அவர் அடித்தபடி, முழுமையாக வலையேற்றவில்லையாம். நாம் சிரமப்படுவோமே என்று அவரால் பாதியாகச் சுருக்கப்பட்டதாம். படிக்கிற
உங்களுக்கே ’பக்’ குங்குதே! கேட்ட எங்களுக்கு எப்படி இருந்திருக்கும்? J
வுடு ஜூட்!!
வுடு ஜூட்!!
சுரேகா,
ReplyDeleteபு.கா போனால் ஒரு 4,5 கடை சுத்தி பார்க்காமல் , போனதும் 2 கடைல டாப் அடிச்சா எப்படி உ.த அளவுக்கு டெவெலப் செய்ய முடியும் :-))
குறைந்த பட்சம் பஜ்ஜி, போண்டா கடைக்கு கூட போகவில்லையா?
உண்மைத்தமிழன் க்ரூப் துவக்க விழாவும், பேட்டியும்:
ReplyDeletehttp://goundamanifans.blogspot.com/
அன்பின் சுரேகா - புத்தகக் கண்காட்சி - விபரங்கள் அருமை. சுற்றுலா சென்று வந்து மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவது போன்று. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
ReplyDeleteஅடுத்த முறை பூவுலகின் நண்பர்கள் ஸ்டாலுக்குப் போங்க, 15 ரூவாய்ல தினை வகைகள் ரெசிபி புக், நாம் உண்ணும் உணவுகள் பற்றிய புத்தகங்கள் கிடைக்கும். வாங்கிடுங்க :))
ReplyDeleteகடைசி மேட்டர் படிச்சு கதி கலங்கி போயிட்டேன்
ReplyDeleteவாங்க வவ்வால்..!!
ReplyDeleteநீங்க சொல்றதும் சரிதான்...ஆனா ஒரு கடையை மோந்து பாத்துட்டே அண்ணாச்சி முப்பது பக்கம் எழுதுவாரே!!?
எப்போதும் அண்ணன் அண்ணந்தான்!!
பஜ்ஜி போண்டா சாப்பிடுறது இல்லை.. டயட்! :(
வாங்க சிவக்குமார்!
ReplyDeleteவாங்க சீனா சார்!
ReplyDeleteஉங்கள் அன்பில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது..!!
என்னைச் சந்தித்தேன் என்று பதியாத உம்மை மிக மென்மையாக கண்டித்துக் கொள்கிறேன் :-)
ReplyDelete- Mr.R.Din
வாங்க ஷங்கர்!
ReplyDeleteஉங்க பதிவு படிச்சுட்டுத்தான் காமிக்ஸ் வெறியை ஏத்திக்கிட்டேன்..
இன்னிக்கு தினை வகைகள்...சூப்பர்..!
தங்கமணி டரியல் ஆகுறாங்க அதான் பிரச்னையா இருக்கு! :))
வாங்க மோகன் குமார் அண்ணே!!
ReplyDeleteபாத்தீங்களா....இதைத்தான் சொன்னேன்..!!
நான் அதில் பாதி கலங்கிப்போயிட்டேன்..! :)
வாங்க இது தமிழ்!
ReplyDeleteஆம்.ஒத்துக்கொள்கிறேன். உங்களைச் சந்தித்தேன்..!!:))
வந்ததும் தெரியல...போனதும் தெரியல!
மின்னலாப் போயிட்டீங்க!!
தலைவா இன்று சந்திபோம்..
ReplyDeleteவாங்க கே.ஆர்.பி..
ReplyDeleteசந்திப்பில் மகிழ்ந்தேன்..!!
உ . தமிழன் பதிவை படிச்சேன். முடிக்க முடியலை. கண்ணை கட்டுது...
ReplyDelete