இப்படியாக ஒரு திரைப்பார்வை - ஏழாம் அறிவு
ஒரு திரைப்படத்தைப்
பார்த்துவிட்டு, விமர்சனங்கள் என்ற ஒரு சிந்தனையை
எழுத்தாகவோ, பேச்சாகவோ நாம் ஒவ்வொரு படம் வெளியானபோதும் செய்துவருகிறோம்.
இதில்
இரசிகனின் கண்ணோட்டத்தில் நன்றாக இருக்கிறது அல்லது.. இல்லை என்று ஒரே வார்த்தையில்
முடிக்கப்படுவது உண்டு. தனது திரைப்பட ரசனையின் எல்லையை விரிவுபடுத்தியதால், அதன் நீள
அகலங்களை சிலர் ஆய்வதும் உண்டு. திரைப்பட விமர்சனம் என்பதை இரசித்துச் செய்பவர்கள்
ஒருபுறமும் ,தான் பார்த்ததை அப்படியே எழுதுபவர்கள் மறுபுறமும் உண்டு.
அத்தகைய
விமர்சனங்கள் , படம் வெளிவந்து முதல் வாரத்தில் வந்துவிடுகின்றன. அதைப்பார்ப்பதா வேண்டாமா
என்று வாசகனை முடிவெடுக்கவும் வைக்கின்றன.
விமர்சனங்களுக்கு
இன்னொரு கோணம் ஏற்படவேண்டும் என்பது எனது அடிப்படை நோக்கம். அதைப் படம் வெளிவந்த உடன்
செய்யாமல், சிறிது நாட்கள் கழித்து செய்து பார்த்தால் என்ன என்று நினைத்திருக்கிறேன்.
நாம் வாசித்த புத்தகங்களைப் பற்றி விமர்சிக்கும்போது,
அது வெளியான கால தேச வர்த்தமானங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. ஆனால்,
அது திரைப்படத்துக்கு அப்படியே பொருந்தாது எனினும், ஒரு ஆக்கப்பூர்வமான சிந்தனையை உருவாக்க
காரணியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
முதலில்...
ஏழாம் அறிவு
சீனாவுக்குச்
செல்லும் பல்லவ மன்னன் அங்கு அவர்களது தற்காப்புக் கலைகளின் மஹா குரு போதிதர்மனாக ஆகிறான்.
அவன் கற்றுக்கொடுத்த வித்தைகளை வைத்தே இந்தியாவை அந்த நாடு நோண்டப்பார்த்தால் என்ன
ஆகும்? … தமிழகத்தில் அதே குருவின் வம்சத்தில் ஒருவன் அதை முறியடித்தால் எப்படி இருக்கும்?
என்ற What If… அணுகுமுறைதான் இந்தக் கதை…!!
அதன்
நிறை குறைகள் பலவிதங்களில் பேசப்பட்டிருக்கிறது. ஆனால்.. என்ன செய்திருந்தால் இன்னும்
சுவைபட இருந்திருக்கும் என்பதுதான் இந்த அலசல்..! கதையின் மூலமும், அது சார்ந்த விஷயங்களும்
சிதைக்கப்படாமல் எப்படி மாற்றமுடியும் என்று சிந்தித்ததின் விளைவுதான் இது..!!
பல்லவ மன்னன் விஷயங்கள் காட்டப்படுகிறது. (சீனர்கள் நமக்கு
எதிராகப் பயன்படுத்தினால்…என்று சொல்லும் அந்தப்பகுதி மட்டும் இல்லாமல்) அவரது வம்சாவளி
DNA மூலம் மீண்டும் போதி தர்மனைக் கொண்டுவரலாம் என்று அது முடியும்போது ,அதை டாக்குமெண்ட்ரியாக
எடுத்த ஸ்ருதி ஹாசன் தனது ப்ரொஃபஸரிடம் போட்டுக்காட்டுகிறாள். அந்த ஆள் ஒரு மெயில்
அடிக்கிறான்.
சீனாவில்..அந்த மெயில் திறக்கப்படுகிறது. மீட்டிங் நடக்கிறது. அவர்கள்
ஒரு ஸ்ருதியைக் கொன்று அவள் ஆராய்ச்சியைக் குலைக்கவும், இந்தியாவில் கிருமிகளைப் பரப்பவும்
நோக்கு வர்ம, குங்ஃபூ விற்பன்னனை அனுப்புகிறார்கள். அவனும் இந்தியா வந்து இறங்குகிறான்.
ஸ்ருதி காஞ்சிபுரம் போய் பல்லவ வம்சாவளி குடும்பங்களைச் சந்திக்கிறாள்.
அவர்களில் ஒருவரது வீட்டில் கிடைத்த முடி மூலம், போதிவர்மனின் DNA ஒத்துப்போன சூர்யாவின்
போட்டோவைப் பார்க்கிறாள். அவன் எங்கே என்று கேட்டால், சர்க்கஸில் இருக்கிறான் என்கிறார்கள்.
சர்க்கஸ் விளம்பரத்துக்காக சூர்யா சாலையில் ஆடி அறிமுகமாகிறார்.
சென்னை வந்து இறங்கிய டாங் லீ… நாய்க்கு ஊசி போடுகிறான்.
ஸ்ருதி, சர்க்கஸுக்கு வந்து சூர்யாவை சந்திக்கிறார். சூர்யா, ஸ்ருதியைக்
கண்டவுடன் காதல் வயப்படுகிறார். அதை நண்பர்களும் ஆதரிக்கிறார்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில்,
ஸ்ருதி சொல்ல வருவதையே சூர்யா கண்டுகொள்வதில்லை.
டாங் லீயால் கொல்லப்பட்டவர்கள் பற்றிய விசாரணை தொடங்குகிறது. அவனைப்
போலீசார் தேட ஆரம்பிக்கிறார்கள்.
சூர்யா தன் காதலை ஸ்ருதியிடம் சொல்கிறார். அதை அவர் மறுத்து, அவரது
முன்னோர் பற்றி சொல்லி தான் பல நாள் சொல்ல வந்த நோக்கம் பற்றிச் சொல்கிறார். சூர்யா
அதற்கு ஒத்துழைக்க ஆரம்பிக்கிறார். ஸ்ருதிக்கும் சூர்யாவின் மேல் காதல் வருகிறது.
டாங் லீ ஸ்ருதியைத் தேடி வரும் இடங்களிலெல்லாம் அவள் மிஸ் ஆகிறாள்.
அவள் ஆராய்ச்சியின் அடுத்த கட்டத்தில் போதிதர்மனின் வாரிசையும் கண்டுபிடித்துவிட்டாள்
என்று ப்ரொஃபசரிடம் சொல்கிறாள். அவரும் விசுவாசமாக சீனாவுக்கு தகவல் கொடுக்கிறார்.
டாங் லீ ஸ்ருதியைத்தேடி வந்தபோது தானாகவே சுட்டுக்கொண்டு இறந்தவர்கள்
பற்றி, சிசிடிவி வீடியோ மூலம் பார்த்து போலீஸிடம் ஸ்ருதி அந்த வித்தை நோக்கு வர்மம்
என்று விளக்குகிறாள். மீடியா அலறுகிறது.
தனது தகவல்கள் எப்படி வெளிச்சென்றது
என்று ஸ்ருதி கவலைப்பட, சூர்யா ப்ரொஃபஸர் மேல் சந்தேகம் கொள்கிறார். அதே போல், ப்ரொஃபஸரின்
தகிடுதித்தம் கண்டுபிடிக்கப்படுகிறது. இடையில் டாங் லீயிடம் மாட்டும் சூழலில் அவன்
கண்ணில் படாமல், ஆனால் அவனால் பார்க்கப்பட்டவர்களால் இருவரும் தாக்கப்படுகிறார்கள்.
டாங் லீ கண்ணில் படாமல்
ஒரு இடத்தில் வைத்து, ஸ்ருதி, சூர்யாவுக்கு மரபணு ஊட்டம் செய்ய முயற்சிக்கிறாள். அவளைத்
தேடும் முயற்சியில் வில்லன் அவளது நண்பர்களைக் கொல்கிறான். போலீஸ் அவனைத் துரத்த, அவன்
பல்வேறு சாகசங்கள் செய்து போலீஸிடமிருந்து தப்பிக்கிறான்.
கடைசியில், ஆய்வுக்கூடத்திலிருந்து
சூர்யாவை , ஸ்ருதி மீட்டுச்செல்லும்போது அவருக்கு நினைவு திரும்புகிறது. என்ன நடக்கிறது
என்று உணர்வதற்குள், டாங் லீ குறுக்கிடுகிறான். அவன் கண்ணில் முதலில் சூர்யா படுகிறான்.
அவனிடம் நோக்கு வர்மம் பலிக்கவில்லை. ஸ்ருதி கண்ணில் படுகிறாள். அவளைப் பார்க்கிறான்.
இப்போது ஸ்ருதி , சூர்யாவைக் கொல்லத் துரத்துகிறாள். சூர்யா தன்னையும் காத்துக்கொண்டு
டாங் லீயையும் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஸ்ருதியுடன் சண்டை போடுகிறான். அப்போது
அவனுக்கு நோக்கு வர்மம் வேலை செய்ய ஆரம்பித்து, அவளை சாந்தமாக்குகிறான். பின்னர் டாங்
லீயுடன் சண்டை போட்டு முடிக்கிறான்.
இப்படி இருந்திருந்தால், இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ
என்று எண்ணியதன் விளைவு..இந்தப்பதிவாக வந்திருக்கிறது. இன்னும் சில படங்களை இப்படி
விமர்சிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். பார்ப்போம்.!
ஒரு படைப்பாளியின்
படைப்பை, அவரது படைப்பாகவே வைத்திருந்து சிறு மாற்றங்களைச் செய்து பார்ப்பதுதான் இதன்
நோக்கம்..! அவர் படத்தை என் படமாக்கும் முயற்சி அல்ல..!! விமர்சனத்தையும் விமர்சனம்
பண்ணுவேன்னு யாராவது கோதாவில் இறங்கினால்…வுடு ஜூட்..!!
வித்தியாசமான ஒர் அருமைப் பதிவு வாழ்த்துகள்
ReplyDeleteமிக்க நன்றிங்க!
Deleteநல்ல முயற்சி! இதை முருகதாஸ் படித்தால் நன்றாக இருக்கும்.
ReplyDelete:) மிக்க நன்றி !! அனுப்பிட்டேன்.
Deleteபுதிய வித்தியாசமான முயற்சி. தொடரட்டும். வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி ஹாலிவுட்.....!
Deleteஇந்தியாவில் மிக கொடிய நோய் தாக்கப்பட்டு பலர் இறக்கிறார்கள். ஆராய்ச்சி செய்து பார்த்ததில் பல நூற்றாண்டுகளுக்கு முன் சீனாவில் இதே நோய் இருந்து குணம் அடைந்ததை கண்டுப்பிடிக்கிறார்கள். அதை கண்டி பித்தவர் தமிழர் போதி தர்மன் என்று மருத்துவ கல்லூரி மாணவி ஸ்ருதி சொல்கிறாள். அதே சமயம் அந்த வியாதியை பரப்பியது சீனாவை டாங் லீ என்று தெரியவருகிறது.
ReplyDeleteபோதி தர்மன் வம்ச வலி வந்த சூர்யாவை கண்டு பிடித்து நோய்க்கான மருந்து கிடைக்குமா என்று கேட்கிறாள். அப்போது, சூர்யா பரம்பரை பரம்பரையாக போதி தர்மனின் மருத்துவ குறிப்பை பாதுகாத்து வருவதாக கூறுகிறான். போதி தர்மன் பற்றி ப்ளாஷ்பேக் வருகிறது. இடையில் அந்த புத்தகம் தொலைந்து போக, அதை கண்டு பிடித்து எப்படி நோய்க்கு மருந்து கண்டு பிடித்தார்கள், டாங் லீ எப்படி சமாளித்தார்கள் என்பதை முடிவாக வைத்திருக்கலாம்.
டி.என்.ஏ, நோக்கு வர்மம் என்று புரியாத பல விஷயங்களை வைத்ததால் பலருக்கு படம் புரியவில்லை. முதலில் தமிழர்களுக்கு புரியும் படி தமிழில் படம் எடுங்கள். அப்புறம் உலகத்தர சினிமாவை பற்றி யோசிக்கலாம்.
கலக்குறீங்க...! இதுதான் ஆக்கப்பூர்வமா சிந்திக்கிறதுங்கிறது..! :)))
Delete@Gugan : Really good...
Deleteசுரேகா வித்தியாசமாக விளக்கியிருக்கிறீர்கள். உங்கள் பதிவைத் திறந்ததும் பக்கம் ஸ்க்ரோல் ஆகி கடைசியில் வந்து நிற்கிறது. மறுபடியும் பேஜ்-அப் அல்லது கன்ட்ரோல்-ஹோம் அடித்து மேலே செல்ல வேண்டியுள்ளது. இதை சுலபமாக சரி செய்து விடலாம். கூகுள் செட்டிங்கிலோ அல்லது விட்ஜெட் செட்டிங்கிலோ இருக்கும் இந்த கோட் ஸ்னிப்பெட்டை நீக்கினால் போதுமானது.
ReplyDelete//document.tamilcube.term.focus();
மிக்க நன்றி அமரபாரதி..!! இந்த வரிகளைக் காணுமே...எப்படிச் சரி செய்வது?
DeleteDelete this :
ReplyDeletefunction k(){j||(j=!0,a.jstiming.load.tick("firstScrollTime"))}a.addEventListener?a.addEventListener("scroll",k,!1):a.attachEvent("onscroll",k);
supera irukku sir!
ReplyDelete