ஓமப்பொடி # 5




     விடுமுறைக்காலம் துவங்கிவிட்டது.. தன் வீட்டுப்பிள்ளைகளை எந்த கோடைக்காலப் பயிற்சியில் சேர்க்கலாம் என்று பெற்றோர்கள் பிய்த்துக்கொண்டுள்ளார்கள். அதை வைத்து எத்தனை எத்தனை பயிற்சிகள்..? ஒரு பிட்நோட்டீஸ் பார்த்தேன்..

கையெழுத்துப் பயிற்சி,
கலர் அடிக்கும் பயிற்சி,
காசு எண்ணும் பயிற்சி,
பூஜை செய்யப் பயிற்சி,
புத்தகம் படிக்கும் பயிற்சி,
பாட்டுப்பாடும் பயிற்சி,
படம் வரையப் பயிற்சி,
பறவை பார்க்கப் பயிற்சி
போட்டோ எடுக்கப் பயிற்சி,
முதலுதவிப் பயிற்சி,
பொருள் அடுக்கப் பயிற்சி
இசை கேட்கப் பயிற்சி
இசை வாசிக்கப் பயிற்சி
சதுரங்கப் பயிற்சி
சக்கரக்கால் பயிற்சி
சோறு உண்ணப் பயிற்சி
யோகா பயிற்சி
அபாக்கஸ் பயிற்சி

என்று ஒரு மாதத்தில் பசங்களை மிகப்பெரிய வல்லுநராக்கும் முயற்சியில் ஆங்காங்கே முளைத்துள்ள summer camp ல் சேர்க்கத் துடிக்கிறார்கள்.

இதில் ரொம்ப காமெடி..குழந்தைகளோடு பழகும் பயிற்சி...ஹலோ அதை குழந்தைகள்தான் கத்துத்தரணும்..பெரியவர்கள் என்னத்தை கற்றுத்தரப்போகிறார்கள்? அப்பனிடம் இருது, 2500 ரூவா வாங்க என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று புலனாகியது. 

 விடுமுறையில் வில்லனாகும் பெற்றோரை எப்படி கதற விடலாம்  என்று சிந்தித்துக்கொண்டே சிறார்கள் சாலையைக் கடப்பது கண்கூடாகத் தெரிகிறது. இவர்களுக்கு பள்ளிக்கூடமே தேவலை.. இந்த லீவு விட்டிருக்கவே வேண்டாம் என்று நினைக்கும் வண்ணம் டார்ச்சரை அனுபவிக்கிறார்கள்.

 பெற்றோரின் ஒரே பிரச்னை.. ஒரு மாசம் வீட்டில் இருந்தால், வீடே ரெண்டு செய்வார்களே என்றுதான்.!! அதற்குத்தான் பிள்ளைகள். ! அதை சகிக்கும் வகையில் ஆக்கிக்கொள்ளும்போதுதான் நம் வாழ்வு இனிக்கும்.! அதைவிடுத்து பயிற்சியில் சேர்த்தே கொல்லும் கலாச்சாரம் பயமுறுத்துகிறது.

நான் என் பையனை போடா! போய் கிராமத்துல ஒரு மாசம் நல்லா புழுதில விளையாடிட்டு வா என்று அனுப்புகிறேன்..! பார்த்துக்கொள்ள இருதரப்பிலும் அன்புநிறை பாட்டி, தாத்தாக்கள் இருக்கிறார்கள். உறவுகளைக் கற்றுக்கொள்ளட்டும்.. சம்மர் கேம்பில் சக்கரக்கால் ஓட்டக்கற்றுக்கொண்டு அவன் ஒன்றும் செய்யப்போவதில்லை. மனிதம் பழகட்டும்.

அவர்களை பயிற்சிக்கு அனுப்புவது இருக்கட்டும்..! குழந்தைகளிடம் நாம் கற்க வேண்டிய அன்புப் பயிற்சியை எந்தக்கோடையில் கற்றுக்கொள்ளப்போகிறோம்?

********************************************************************
சென்ற மாதத்தில் கன்னாபின்னாவென்று வேலை ! மூன்று திரைப்படங்களுக்கு திரைக்கதை பின்னுவதிலும், ஒரு புத்தகம் எழுதுவதிலும் ஆழமாகக் கழிந்தது. இதற்கிடையே பயிற்சி வகுப்புகள் வேறு!

மே ஒன்றாம் தேதி. .தொழிலாளர் தினத்தில் சத்தியம் தொலைக்காட்சியில் தொழிலாளர்களுக்குரிய உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் அதைச் சரியாகப்பயன்படுத்தவில்லை என்ற விவாதத்தில் பங்கெடுத்தேன். சுவாரஸ்யமாகச் சென்றது.
     என் வாதம் இப்படி இருந்தது. : அரசு தொழிலாளர்களுக்கான நடைமுறைகளையும், உரிமைகளையும் வகுத்த்துக்கொடுத்துள்ளது. அதை நியாயமான முறையில் கேட்டுப்பெற தொழிலாளர்களிடையே ஒற்றுமை இல்லை. ஆகவே நிர்வாகங்கள் மகிழ்ச்சியாக விளையாடுகின்றன. அதற்காக ஒட்டுமொத்த நிர்வாகங்களையும் குறை சொல்வதற்கில்லை. சில நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களை மிகவும் சிறப்பாக நடத்துகின்றன என்று பதிவு செய்தேன். தொழிலாளர்களை போலீஸ் அடிக்கிறது என்ற வாதத்துக்கு, அவர்களும் ஒரு வித தொழிலாளர்கள் என்பது தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களால் சங்கம் தொடங்கமுடியாது என்றேன். முக்கியமாக எதையுமே கேட்டால் கிடைக்கும் என்று வலியுறுத்தினேன். கம்பேனி விளம்பரத்தை அப்புறம் எப்படித்தாம்பா செய்யுறது என்று நினைத்தாலும்.. ஒரு உண்மை பரவட்டுமே என்றுதான்..

அடுத்து வரும் வாரங்களில் ஒரு திங்கள்கிழமை காலை 8 மணிக்கு நான் பங்குபெற்ற சந்தித்த வேளை நிகழ்ச்சி கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிறது.

*******************************************************************



   நானோ , யாரோ அந்தக்காரை வாங்கியிருந்தாலும், உடனே ’ஓ..அதுவா?’ என்று கேட்கும் வழக்கம் அதிகமாகிவிட்டது. ஆம்.. அதில் ஏறாமலோ, அதை ஓட்டிப்பார்க்காமலோ இருப்பவர்கள்தான் அதைக் குறை சொல்கிறார்கள். உள்ளே மிகவும் ரிலாக்ஸாக உட்கார முடிகிறது. ஆட்டோ போல் குறுகிய பாதைகளில் ஓட்ட முடிகிறது. ஓட்டுவதற்கு நன்றாக இருக்கிறது. மைலெஜும் 20 வருகிறது. பப்பாளி ஆரஞ்சு வாங்கியிருக்கிறேன். பெயர்தான் நானோ என்று இருக்கிறதே ஒழிய.. கார் மெகா தான்..!! விலையும் கொஞ்சமில்லை. ரோட்டில் ஏற்றும்பொழுது 2.6 லட்சம்!

காரில் பிரச்னை இல்லை! அது என்னை வந்தடைவதற்குள்… ஒரு கேட்டால் கிடைக்கும் நடந்துவிட்டது. அடுத்த பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது.
             *******************************************************************
வாயுதூதனின் வாஞ்சையால், சென்னையில் மின்வெட்டு இல்லாமல் இரண்டு நாட்கள் கழிந்துவிட்டது.. என்று அவர் பீஸைப்பிடுங்குவார் என்று தெரியவில்லை. அரசு செய்யததை இயற்கை செய்கிறது….. இப்போதுகூட அதைப் புரிந்துகொள்ளாவிட்டால்….சுனாமிதான்..!


               *******************************************************************

மே மாதத்தில் 7 ம் தேதியிலிருந்து 20 நாட்கள் வட இந்தியப் பயணம், ஒரிஸ்ஸா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீஹார், ராஜஸ்தான் என்று பல்வேறு மாநிலங்கள்… பல்வேறு மின் உற்பத்தி நிலையங்கள்! ஒரே வேலை! பயிற்சி வகுப்புகள்..!!
வாணலியிலிருந்து தப்பித்து…அடுப்பில் விழாமல் இருக்கவேண்டும்! J  

நான் அவர்களைச் சொன்னேன்.. !




Comments

  1. \\வாணலியிலிருந்து தப்பித்து…அடுப்பில் விழாமல் இருக்கவேண்டும்! J

    நான் அவர்களைச் சொன்னேன்.. !//

    :)))

    ReplyDelete
  2. \\குழந்தைகளிடம் நாம் கற்க வேண்டிய அன்புப் பயிற்சியை எந்தக்கோடையில் கற்றுக் கொள்ளப்போகிறோம்?//

    ரொம்பவே யோசிக்க வைக்கிற கேள்வி தான் :)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ... ! நல்ல யோசிங்க தம்பீ!

      Delete
  3. //நான் என் பையனை போடா! போய் கிராமத்துல ஒரு மாசம் நல்லா புழுதில விளையாடிட்டு வா என்று அனுப்புகிறேன்..! பார்த்துக்கொள்ள இருதரப்பிலும் அன்புநிறை பாட்டி, தாத்தாக்கள் இருக்கிறார்கள். உறவுகளைக் கற்றுக்கொள்ளட்டும்.. சம்மர் கேம்பில் சக்கரக்கால் ஓட்டக்கற்றுக்கொண்டு அவன் ஒன்றும் செய்யப்போவதில்லை. மனிதம் பழகட்டும்.//
    உங்கள் எண்ணத்தை வரவேற்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாலராஜன் கீதா!

      Delete
  4. அப்போ காற்று பகவான் கருணைதானா..? நான்கூட மெய்யாலுமே கூடங்குளம் வேலையை காட்டிடுச்சா எப்ன்று நினைத்தேன்,

    ReplyDelete
    Replies
    1. வாங்க வேடி.... ! ஆமாங்க காத்துதான் காரணம்..!

      Delete
  5. // குழந்தைகளிடம் நாம் கற்க வேண்டிய அன்புப் பயிற்சியை எந்தக்கோடையில் கற்றுக்கொள்ளப்போகிறோம்? //

    நல்லா சொன்னீங்க. எல்லோரும் யோசிக்க வேண்டிய விஷயம்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி முகில்..!

      Delete
  6. குழந்தைகளை சம்மர் கிளாஸ் போவது பற்றி சொல்லி இருந்தீர்கள்..சரியான முடிவு......பாவம் நம் நகர குழந்தைகளுக்கு விளையாட இடம் இல்லை.....எல்லா பக்கமும் கட்டிடங்கள், தெரிந்த ஒரே விளையாட்டு கிரிக்கெட் மட்டும் தான்.சிறு வயதில் நான் போட்ட ஆட்டம் என் பையன் போடுவானா? என்பது சந்தேகம் தான்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க சித்தார்த்தன்...ஆம் நீங்கள் சொல்வது சரிதான்.. வீட்டிலாவது விளையாடிக்கொண்டிருக்கலாமே...சம்மர் கேம்ப் ஏன் என்றுதான் கேட்கிறேன்..!!

      Delete
  7. :))

    ஓமப்பொடி பதமா ருசியா இருக்கு.

    சம்மர் கேம்ப் பத்தி எனக்கும் பெருசா அபிப்ராயம் இல்ல.

    நானோ உங்களுக்கு பிடிச்சிருக்கா?? வாழ்த்துக்கள்.

    ஊர்ப்பயணம் பதிவுகள் வரும்ல...

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க.!!

      மிக்க நன்றி!
      கண்டிப்பா வடமாநில பயண அனுபவம் போட்டுருவோம்.

      Delete
  8. //கார் மெகா தான்..!! விலையும் கொஞ்சமில்லை. ரோட்டில் ஏற்றும்பொழுது 2.6 லட்சம்! //

    அப்போ.... ஒரு லட்சரூபாயில் நானோ என்று சொல்லி விளம்பரிச்சதெல்லாம் வீணா?


    சம்மர் கேம்ப் எல்லாம் பணம் பண்ணும் வழிகளில் ஒன்னு:(

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசி டீச்சர்..!

      ஆமா.. ஒரு லட்சரூவாய்க்கு ஒண்ணும் இல்லை... கடைசி மாடலே 1.60க்குதான் வருது.. ஏ.ஸி கிடையாது.. சீட் நார்மல்..என்று...

      ஆமா..சம்மர் கேம்ப் எல்லாம் டகால்ட்டிதான்...!!

      Delete
  9. //நான் என் பையனை போடா! போய் கிராமத்துல ஒரு மாசம் நல்லா புழுதில விளையாடிட்டு வா என்று அனுப்புகிறேன்..! பார்த்துக்கொள்ள இருதரப்பிலும் அன்புநிறை பாட்டி, தாத்தாக்கள் இருக்கிறார்கள். உறவுகளைக் கற்றுக்கொள்ளட்டும்.. சம்மர் கேம்பில் சக்கரக்கால் ஓட்டக்கற்றுக்கொண்டு அவன் ஒன்றும் செய்யப்போவதில்லை. மனிதம் பழகட்டும்.//

    நானும் என் குழந்தைகளை ஒரு மாதம் தஞ்சாவூர் அனுப்பி வைத்திருக்கிறேன்.

    நானோவிற்கு வாழ்த்துகள் !!!

    ReplyDelete
    Replies
    1. சூப்பர்...அதுதான் சந்தோஷம்..

      மிக்க நன்றி தலைவரே..!!

      Delete
  10. //நான் என் பையனை போடா! போய் கிராமத்துல ஒரு மாசம் நல்லா புழுதில விளையாடிட்டு வா என்று அனுப்புகிறேன்..!//

    என்னைப் போன்று கிராமத்தில் வாழ்பவர்கள் பிள்ளைகளை எங்கே அனுப்புவது?? :))

    ReplyDelete
    Replies
    1. அடுத்தவாட்டி. எங்க பிள்ளைங்களை உங்க ஊருக்கு அனுப்பிடுறேன்.. அதுவும் இல்லைன்னா...நானே என் அப்பாவுக்கு , குழந்தைதானே...அதுனால உங்க கிராமத்துக்கு வந்து வாழுறேன்.

      Delete
  11. சுரேகாஜி,

    நல்லா இருக்கு ஓமப்பொடி என்ன காரம் தான் போதலை நமக்கு நாக்கு ருசி அப்படி :-))

    ஒவ்வொரு சம்மரிலும் புள்ளையப்பெத்தவங்க இந்த சம்மர் கேம்ப் வசூல் ராஜாக்களை பத்தி பதிவுப்ப்போடுறாங்கப்பா ஆனாலும் சம்மர் கேம்ப் குறையாம கூடிக்கிட்டு தான் இருக்கு சாரே,

    அதுக்கு காரணம் நீங்க சொன்னது தான் வீட்டில இருந்தா வீடு ரெண்டாகிடும்னு தான்.

    சம்மர் கேம்ப்களின் துவக்க காலத்தில் என்னையும் சம்மர் கேம்ப்புக்கு தொறத்திவிட்டுடுவாங்க வீட்டில் ..அப்போ எல்லாம் சம்மர் கேம்பில் என்ன சொல்லித்தருவாங்க என்றால்,

    ஹிந்தி (ஒன்றரை மாதத்தில் என்ன கத்துக்க முடியும் ஏக் காவ் மேன் ஏக் கிசான் தான்)

    ஆங்கில கிராம்மர், ஸ்போக்கன் இங்கிலிஷ்,
    கடிதம் ,மணியார்டர், தந்தி அனுப்ப கற்றுக்கொடுத்தல் ,
    படம் வரைதல்,
    சதுரங்கம்,

    இதெல்லாம் சம்மர் கேம்ப்பில் படித்து நான் சதுரங்கத்தில் விஸ்வநாதன் ஆனந்தாகவும், ஓவியத்தில் ஹீசைனாகவும் ஆகிட்டேன் :-))

    கடிதம் எழுத கலைஞர் எல்லாம் எந்த சம்மர் கேம்ப்பில் படிச்சாரோ தெரியலை ஓயாம கடிதம் எழுதுறார் :-))

    இப்போ ஏகப்பட்ட ஐடெம் வச்சு இருக்காங்க சம்மர் கேம்ப்பில் ,விட்டால் மூக்கு சிந்த,உச்சா போக எல்லாம் பயிற்ச்சி வழங்குவார்கள் போல.

    அடுத்த சம்மரில் நாமளும் ஒரு கடைய தொறக்கலாமா ஜீ :-))
    ----
    மின்வெட்டுக்குறைய காற்றாலை மட்டும் காரணமில்லை அதுவும் ஒன்று, கூடுதலாக மின்சாரம் வெளிமார்க்கெட்டில் வாங்கப்படுகிறது. மின்வெட்டுக்கடுமையானதுக்கு காரணமே கட்டணத்தினை உயர்த்த தான், மேலும் இப்போ மின் கட்டணம் கட்ட வேண்டிய நாளும் வருது ,இனியும் மின் வெட்டு இருந்தால் மக்கள் பொங்கிடுவாங்க்களே அதான் இப்படி. எப்படியோ மின்வெட்டு ஒழிந்தால் சரி தானே.

    ஒரு பத்து நாளைக்கு முன்னரே மின் வெட்டு குறைய போகுதுனு ஜோசியம் சொன்னதே அடியேன் தான் நான் பதிவு போட்டதால் தான் மின் வெட்டு குறைந்தது என சொல்லிக்கொள்ள என் தன்னடக்கம் தடுக்கிறது :-))

    மேலும் மின்வெட்டு குறைவதையும் அதற்கான காரணங்களையும் இப்பதிவில் காணலாம்
    குறையும் மின்வெட்டு

    நீங்க மின்சாரம் சம்பந்தப்பட்ட துறையா அப்படினா நிறைய மின்சாரத்தகவல்கள் தெரிந்திருக்குமே ,ஆனால் எங்களுக்கு ஒன்றும் சொல்ல மாட்டேன்கிறிங்க :-))

    ReplyDelete
    Replies
    1. வாங்க வவ்வால்..!

      //அடுத்த சம்மரில் நாமளும் ஒரு கடைய தொறக்கலாமா ஜீ :-))//
      சூப்பரு. இதைத்தான் நானும் நெனச்சேன்...

      கேம்பின் நோக்கம்:

      சம்மர் கேம்புகளிலிருந்து தப்பிக்கும் பயிற்சி...கட்டணம் ரூபாய் 2499/-
      :)) எப்புடீ??

      உங்க பதிவு மிக நன்றாக இருக்கிறது.

      Delete
  12. சுரேகாஜி,

    //அதில் ஏறாமலோ, அதை ஓட்டிப்பார்க்காமலோ இருப்பவர்கள்தான் அதைக் குறை சொல்கிறார்கள். உள்ளே மிகவும் ரிலாக்ஸாக உட்கார முடிகிறது.//

    //காரில் பிரச்னை இல்லை! அது என்னை வந்தடைவதற்குள்… ஒரு கேட்டால் கிடைக்கும் நடந்துவிட்டது. அடுத்த பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது.//

    அந்த கேட்டால் கிடைக்கும் பிரச்சினை நானோ கார் பற்றிக்கொண்டது என கேபிள் பதிவில் சொன்னது தானே.

    நானோவின் நம்பகத்தன்மை கேள்வியாக இருக்கும் போது எதற்கு வாங்கினீர்கள் எனக்கேட்கலாம் நினைத்தேன், நீங்கள்,அதைப்பயன்ப்படுத்தாதவர்கள் சொல்லும் குறைனு முதலிலேயே வாயடைத்துவிட்டதால் சொல்லவில்லை.

    மேலும் வாங்கிவிட்டீர்கள் இனிமேல் சொன்னால் என்ன பயன் என சொல்லவில்லை.

    டாடா நானோவில் சில தொழில்நுட்ப கோளாறுகள் இருக்கு, எப்பொழுதும் கவனத்துடன் கையாள வேண்டும். அதில் பிரச்சினை வரக்காரணங்கள் என்ன என பதிவிடுகிறேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!