நிட்டாலே புத்தி சொன்னார்..


     


எழுதி வைத்திருக்கும் கதையையோ, சில நிகழ்வுகளையோ, படித்த புத்தகத்தையோ பதிவாக்கலாம் என்றுதான் நானும் நினைப்பேன். ஆனால், அவற்றை முந்திக்கொண்டு இந்த விஷயங்கள் முன்னிலை பெறுகின்றன. ஏன் இதையே எழுத நினைக்கிறாய்? என்றபோது மனசாட்சி ஒரு நியாய தர்க்கத்தை எடுத்துவைத்தது. மற்றவை எல்லாம் ஒரு பகிர்தல்தான். ஆனால் இதை எழுதினால் ஒரு விழிப்புணர்வு கிடைக்கும். ஆகவே இதையே எழுது…! உன்னையும்(!) நம்பி படிக்க வருபவர்களுக்கு ஒரு நியாயம் செய் என்றது. அது எனக்கும் சரியாகப் பட்டது. 

ஆகவே…

கேட்டால் கிடைக்கும் – முகப்புத்தகத்தில் நானும் , நண்பர் கேபிள் சங்கரும் உருவாக்கிய ஒரு குழுமம். அதில் நிறைய பேர் உறுப்பினர்களாக ஆனார்கள். அவற்றில் ஒருவர் பாலாஜி ஸ்ரீராமன்.
கடந்த ஜூன் 29 அன்று.. கேட்டால் கிடைக்கும் குழுமத்தில் அவர் தன் பிரச்னையை கீழ்க்கண்டவாறு பகிர்ந்திருந்தார்.


Dear All,


I was unemployed for 5 months and despite the advice from my friends, I decided to join NIIT and now I'm suffering. I paid the money for the MCITP Course on 3rd of April and they did not schedule a single class until May 15. I decided to quit after asking for a class for multiple times and everytime I get the same response saying it'll be scheduled from next week (And it never was). So, I quit (saying that my brother is getting maried and I'll not be in Chennai - but the actual reason was I got a new job) and now I'm struggling to collect the refund money. I paid 26000+ and from 15th May, they say like the refund will be processed by the month end and initially they said I'll get the money by June 1st week. When I asked on June 1st week, they said June 15. Again, they said June 20 and When I called on June 20, they said the old employees were transferred and a new guy has taken care. He said that the refund has been processed and I'll get the money today (29th June). When I called today, they said the same story - month end process and you'll get that by July 4th or 6th (This time they're not even sure of the date!). I hardly belive that the money will be ready by July 4 or 6 - they'll have another excuse for that anyway. Can someone help me getting this process a little faster? I tried sending a feedback via the NIIT site, but after submitting the feedback, "The page cannot be displayed" Error comes up! My Student ID was: S130030500006. NIIT Adyar Center Number: 044-42116419.



NIIT யில் படிக்கச் சேர்ந்தபோதே முழுத்தொகையையும் கட்டிவிட்டார். ஆனால், அவர்கள் ஒரு வகுப்புகூட எடுக்கவில்லை.இப்படியே ஒன்றரை மாதம் ஓட்டிவிட்டார்கள். பின்னர் இவருக்கும் வேறு வேலை கிடைக்க, நான் படிக்கவிரும்பவில்லை. நீங்களும் ஒரு வகுப்பும் எடுக்கவில்லை ஆகவே என் தொகை ரூபாய் 26000த்தை திருப்பிக்கொடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அவர்களும் நீண்ட ஆலோசனைக்குப்பின், புத்தகத்துக்கான தொகையாக ரூபாய் 6000த்தைக் கழித்துக்கொண்டு மிச்சத்தைத் தருவதாகச் சொல்லி இழுத்தடித்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் அவர் நம்மிடம் சொன்னார்.

நான் அவரை அங்கு செல்லச்சொல்லி, அவர்களிடம் முறையாகக் கேட்டுவிட்டு பின்னர் எனக்கு தொலைபேசச் சொன்னேன். பேசினார். பின்னர் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, NIIT ஆட்களிடம் பேசினேன். முதலில் ஒருவர்,

‘எங்க பணம் ரிட்டர்ன் பாலிஸி படி… ப்ராஸஸ் நடந்துக்கிட்டிருக்கு சார்.. சீக்கிரம் வந்துரும். இன்னும் ஒரு வாரத்தில் கொடுத்துருவோம் என்றார்.

நான் உடனே..

ஓக்கே.. ஒரு வாரத்தில் கொடுத்துருங்க.. ஆனா. அவர் கட்டின முழுத்தொகையையும் கொடுங்க! என்றேன்.

இல்லை சார் அப்படி செய்யமுடியாது.. எங்க கம்பெனி ரூல்ஸ்படி.. ஒருத்தர் சேந்ததுக்கு அப்புறம் விலகினா, புக் அமௌண்ட்டை திருப்பித்தரமாட்டோம். அவருக்கு நாங்க புக் கொடுத்துட்டோமே… என்றார்.

நீங்க க்ளாஸே எடுக்காம அவருக்கு புக் கொடுத்திருக்கீங்க..! அதை அவர் பயன்படுத்தவே இல்லை. அதனால்..புக்கைத்திருப்பித்தரச்சொல்லிடுறேன். முழுத்தொகையையும் கொடுத்திடுங்க! என்றேன்.

அது எங்க ரூல்ஸ்படி செய்யமுடியாது சார் என்று மீண்டும் சொன்னார்.

நான் ஆரம்பித்தேன்.
பாலாஜிக்குன்னு ஒரு ரூல்ஸ் இருக்கு... அதன்படி.. ஒரு இன்ஸ்ட்டிட்யூட்டில் காசு வாங்கிக்கிட்டு பாடமே நடத்தாம இருந்தா, அந்தக் காசை திருப்பி வாங்கிடுவார் தெரியுமா? என்றேன்.

என்ன சார் இப்படி பேசுறீங்க..? பாலாஜிக்கு என்ன தனி ரூல்ஸ் என்றார். 

அப்போ, என் ஐ ஐ டிக்கு மட்டும் என்ன தனி ரூல்ஸ்.... ஒரு சேவையை செய்யறதுக்குத்தான் காசு வாங்கணும். செய்யாத சேவைக்கு எதுக்கு உங்களுக்கு காசு? இப்படி எந்த விதத்திலும் நீங்க பணம் வாங்க நுகர்வோர் சட்டத்தில் இடமில்லை என்று கொஞ்சம் காட்டமாகப் பேசினேன்.

நான் எங்க சீனியர்கிட்ட கன்சல்ட் பண்ணிட்டு சொல்றேன் சார் என்றார்.

பிறகு அடுத்த வாரத்தில் மீண்டும் பாலாஜி அங்கு சென்றார். இதோ அதோ என்றார்கள். மீண்டும் நான் அழைத்து இந்த வாரம் பணம் வராவிட்டால், எங்கள் குழுமத்திலிருக்கும் 1400 பேரில் குறைந்தது 50 பேராவது மொத்தமாக NIIT க்கு வருவோம் என்றேன்.

நான்கு நாட்களில், பாலாஜி போன் செய்தார். 
‘சார்! நினைச்சே பாக்கலை..புக்கு காசையும் சேத்தே ஒரே செக்கா கொடுத்திட்டாங்க.. நானும் புக்கை திரும்பக்கொடுத்திட்டேன். நான் கொடுத்த மொத்தப்பணமும் திரும்ப வந்துடுச்சு! மிக்க நன்றி சார்! கேட்டால் கிடைக்கும் குழுமத்துக்கு நன்றி என்றார்.

நாங்கள்தான் சொல்லிக்கொண்டே இருக்கிறோம்.

கேட்டால் கிடைக்கும்.!



இந்த விளம்பரத்துக்கு இன்னொரு முகம் இருக்கு போல! :) ஆமா.. ஒரு அட்மிஷன். இரட்டை வருமானம்..!! 




இன்னொரு NIIT நகைச்சுவை! ( இணையம் தெளித்த படங்களில் ஒன்று! )


காமெடி கார்னர்

சிதம்பரத்துக்கு வந்த சோதனை...!! :)


Comments

  1. என்ன ஆச்சு சுரேகா?

    ReplyDelete
  2. மன்னிக்க வேண்டும் சுரேகா
    முதல் முறை வாசித்தபோது பாதியோடு முடிந்து தெரிந்தது. அதனால்தான் அந்தத் தவறு.

    கை கொடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர்.. !!

      Delete
  3. Congrats Sureka. If you organize this properly this could be a BBB (Better Business Beruau) of India. BBB does a great job in USA. If you file a complaint you will get a reply in three days if you were suffered by the business.

    ReplyDelete
  4. சுரேகஜி ,

    சூப்பர், இப்போ தான் ஒரு நல்ல விஷயம் கேள்விப்படுறேன்.

    ஹி...ஹி எனக்கு ஒரு பிரச்சினை ...டாஸ்மாக்ல ஒரு 1/4க்கு 5 ரூ எக்ஸ்ட்ரா கேக்குறான் , ஏன்னு கேட்டா சரக்கு தரமாட்டேன்னு சொல்லுறான், நான் டாஸ்மாக் அலுவகத்துக்கு போன் கூட செய்துட்டேன்,அப்படிலாம் வாங்க மாட்டாங்க, சரியான விலைக்கு தான் விப்பாங்கன்னு சொல்றாங்க.

    டாஸ்மாக் கடையில வாங்குறதுக்கு பில்லும் தரமாட்டேன்கிறாங்க, அதையும் கேட்டாச்சு, எனக்கு பில்லோட ,சரியான விலைக்கு சரக்கு கிடைக்க வழி இருக்கா?

    பல குடிமகன்களின் முக்கியமான பிரச்சினை , கவனித்து ஆவண செய்யவும்.நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க வவ்வாலு!

      அங்கன போய் அசிங்கப்படுறதே முதல் தப்பு!... அப்புறம் அவன் அதிகம் வாங்கத்தான் செய்வான்..!!

      கேட்டால் கிடக்கும்னு நான் நம்புறேன்.. அதுனால கேக்குறேன்.
      முதலில் நீங்க டாஸ்மாக்குக்கு போகாதீங்க!! :))

      இது எப்புடீ?

      Delete
    2. சுரேகாஜி,

      பஞ்சாயத்துக்கு வந்தா பஞ்சர் பண்ணி அனுப்புறிங்களே.

      டோர் டெலிவெரி சிஸ்டம் கொண்டு வந்தா நான் ஏன் அங்கேபோகப்போறேன்.

      Delete
    3. அந்தக் கருமத்தை ஏன் குடிக்கணும்னு கேக்குறேன் வவ்ஸ்..!!

      Delete
  5. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி புதுகைத்தென்றல்..!! எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான்..! :)

      Delete
  6. Well done and keep going :).

    ReplyDelete
  7. thalaivaa... Everyday i sused to check your blog to see any such 'kaetaal kidaikum' posts... It gives immense happiness to read such things as we people, get our rights for right concerns....Keep rocking...!!! India varum podu, nichayam meet panren - hari

    ReplyDelete
  8. வவ்வால் போன்ற அதி மேதாவிகளால் வெறும் கேள்வி மட்டுமே கேட்க முடியும் சுரேகா... இதே டாஸ்மாக்கில் என்னால் அதிக காசு கொடுக்காமல் அதே விலைக்கு “கேட்டு” வாங்க முடியும் போது.. விடுங்க இந்த காமெடி பீஸுகளை புறம் தள்ளிவிட்டு போய் கொண்டேயிருப்போம். பின்பு ஒரு நாள் எல்லாவற்றிக்கும் பில் கொடுப்பார்கள். அப்போது அனுபவிக்கட்டும்.யாரோ வாங்கித்தந்த சுதந்திரத்தை நாம் இப்போது அனுபவிக்கலையா?

    ReplyDelete
  9. I appreciate your courage. Normally people don't involve in others business unless for monetary benefits / friendship / heart moving incident. But your volunteer service is appreciated and hats off

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. இந்த குழுமத்தில் என்னை இணைக்க முடியவில்லை ஏன் அய்யா

    ReplyDelete
  12. கேட்டால் கிடைக்கும் குழுமத்தில் என்னை block செய்து விட்டிர்கள் தயவு செய்து unblock செய்யவும் தவறு இருந்தால் மன்னிக்கவும் என்றும் நன்றியுடன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!