வலைப்பதிவர் திருவிழா – வாசற்படி நன்மைகள் 1
சென்னை வலைப்பதிவர் திருவிழா இனிதே நிறைவுற்றிருக்கிறது.
அதனை திறம்பட நடத்தி , வெற்றிகண்டிருக்கிற அத்துனை உள்ளங்களுக்கும் நம் உளமார்ந்த வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்ள வேண்டும்.
இந்த
நிகழ்வு பதிவூடகம் கொஞ்சம் மேலதான் (க்ளிக்கிப் பாருங்கள்...காரணம் தெரியும்..) என்று மீண்டும் நிரூபித்திருக்கிறது.
பதிவர் திருவிழா, ஒரு குடும்ப விழாவின் நேர்த்தியோடு
நடந்தது.
ஒரு
பாடலாசிரியர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார்.
ஒரு
மூத்த புலவர் வழிநடத்துகிறார்
ஒரு
மனிதவள மேம்பாட்டு அதிகாரி ஒத்துழைத்து, ஒருங்கிணைக்கிறார்.
சில
கணிப்பொறி மென்பொருள் வல்லுனர்கள் நிகழ்ச்சி அமைப்பின் முக்கியப்பங்கு வகிக்கின்றனர்.
ஒரு
மென்பொருள் நிறுவன அதிபர் வந்தோரை வரவேற்கிறார்.
ஒரு
பெண் கவிஞர் நிகழ்ச்சி ஏற்பாடுகளில் உறுதுணையாக இருக்கிறார்.
ஒரு
கணக்காளர் தொடர்புகளை வலுப்படுத்துகிறார். சிறப்பு விருந்தினரை ஏற்பாடு செய்கிறார்.
ஒரு
தனியார் நிறுவன அதிகாரி மேடையைப் பார்த்துக்கொள்கிறார்.
ஒரு
திரைப்பட இயக்குநர் , சகஜமாக பதிவர்களை அறிமுகப்படுத்துகிறார்.
ஒரு
ஒளிப்பதிவாளர் , இயல்பாக எல்லோரிடமும் பழகி, மேடையை அலங்கரிக்கிறார்.
ஒரு
பதிப்பாளர், விளம்பரப்பட இயக்குநர், எழுத்தாளர் ஆகியோர் மிகச் சாதரணர்களாக அரங்கில்
வந்து அமர்ந்திருக்கிறார்கள்.
ஒரு
புத்தக விற்பனையாளர் நிகழ்ச்சி நடைபெற உறுதுணையாக இருக்கிறார்.
ஒரு
மருத்துவர் சிறப்பாகக் கவிதை பாடுகிறார்.
ஒரு
மனிதவளப் பயிற்சியாளர் நிகழ்ச்சியைத் தொகுக்கிறார்.
ஒரு
மூத்த கணக்காளர், கவிதை வாசிக்கிறார்.
ஒரு
புகைப்படக்கலைஞர் புன்னகையுடன் உபசரிக்கிறார்.
ஒரு
உணவக நிறுவனர் உணவு ஏற்பாடு செய்கிறார்.
ஒரு
மேலாண் அதிகாரி இருக்கை எடுத்துப்போடுகிறார்.
ஒரு
மென்பொருள் வித்தகர் உணவு பரிமாறுகிறார்.
ஒரு
கல்லூரிப்பேராசிரியை கவிதை வழங்குகிறார்.
ஒரு
கதைசொல்லும் பாட்டி பாராட்டுப்பெறுகிறார்.
ஒரு
முதுபெரும் எழுத்தாளர் கௌரவிக்கப்படுகிறார்.
ஒரு
போக்குவரத்து நிறுவன நிர்வாகி நன்றி கூறுகிறார்.
இது,
ஒரு ஒற்றுமையான குடும்பத்தில் மட்டும்தான் நடக்கும். அப்பா,அண்ணன், தம்பிகள், மாமன்,மச்சான்
என்று வெவ்வேறு பதவிகளில் இருந்தாலும் ஈகோ துறந்து, அனைவரும் இறங்கி வேலைபார்ப்பார்கள்.
அதுவும் இப்போது மறைந்துவிட்டது. அனைத்தையும் ஒரு கேட்டரிங் கம்பெனியிடம் கொடுத்துவிட்டு
ஜாலியாக வந்துசெல்கிறார்கள். ஆனால், இந்தப்பதிவர் சந்திப்புத் திருவிழா மிகவும் நேர்த்தியாக,
ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரும் தன் பங்களிப்பை கொஞ்சம்கூட ஈகோ இன்றி தந்ததுதான் இந்த
நிகழ்வின் மிகப்பெரிய வெற்றி என்பேன்.
சரி.. எல்லோரும் ஒன்று கூடிவிட்டோம். நன்றாக
விழா நடத்திவிட்டோம். எல்லோரையும் அறிமுகப்படுத்திவிட்டோம். மீண்டும் அடுத்த ஆண்டும்
விழா நடத்துவோம். அதிலும் கவிதைகளை அரங்கேற்றுவோம். அற்புதமாகக் கொண்டாடுவோம். எல்லாம்
சரிதான்.
எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள்
சொன்னதுபோல், பதிவூடகம் மட்டுமன்றி இன்னும் பல ஊடகங்கள் நம்மைப் பார்த்துக்கொண்டுள்ளார்கள்.
நம் போக்கு எப்படி இருக்கிறது என்று நாடிபிடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக
மட்டுமன்றி, இந்தச் சமூகத்துக்கோ, குறைந்தபட்சம் நமக்கோ என்ன செய்யப்போகிறோம்? செய்துகொள்ளப்போகிறோம்.?
நாம் அனைவரும் குறைந்தபட்ச அறிமுகம் ஆகியிருக்கிறோம்.
என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே என்று எல்லோரையும் ஏற்றுக்கொண்டு மகிழ்ந்திருக்கிறோம்.
எழுதும் கருத்தை வைத்து, ஆட்களை நாமே கற்பனை செய்துவிட்டு, எதிரில் பார்த்தவுடன், வியந்திருக்கிறோம்.
ஏமாந்திருக்கிறோம். சிரித்திருக்கிறோம். ( எடுத்துக்காட்டு – சேட்டைக்காரனைப் பார்த்துவிட்டு
மெர்சலாகியவர்கள் . சேட்டை நாஞ்சில் வேணு அண்ணனை நான் கற்பனையே செய்துவைக்காததால், அவரை அப்படியே
ரசித்தேன்)
இவையெல்லாம் மீறி, இந்த அறிமுகங்களும், இந்தக்
குழு நடவடிக்கைகளும் என்ன செய்யப்போகிறது? என்று கொஞ்சம் யோசிப்பது அவசியம் என்று எண்ணுகிறேன்.
ஏனெனில், பதிவர் சமூகம் மட்டும்தான், வெவ்வேறு தளத்தில், வேலையிலும், திறமையிலும் பல
நிலைகளில் உள்ளவர்கள் வலைப்பூ என்ற ஒற்றை ரசனையில் ஒன்றுபட்டு, நட்புகளாய், உறவுகளாய்
மாறி நின்று, ஒரு வலிமையான அமைப்பாக உருவாகிக்கொண்டிருக்கிறது.
நிகழ்வைப்பற்றி நிறைய பேர் மிகவும் பாராட்டி எழுதியிருக்கிறார்கள்.
அவைகளில் சில...
http://veeduthirumbal.blogspot.com/2012/08/blog-post_27.html
http://www.valaimanai.in/2012/08/blog-post.html
http://www.rahimgazzali.com/2012/08/blogger-meeting_27.html
http://kudanthaiyur.blogspot.in/2012/08/blog-post_27.html
http://www.tamilvaasi.com/2012/08/tamil-bloggers-meet-2012-at-chennai.html
இவற்றைப் பயன்படுத்தி நாம் என்னன்ன சாதிக்கலாம்..?
அலசுவோம் வாருங்கள்…. (தொடரும்)
நிகழ்வைப்பற்றி நிறைய பேர் மிகவும் பாராட்டி எழுதியிருக்கிறார்கள்.
அவைகளில் சில...
http://veeduthirumbal.blogspot.com/2012/08/blog-post_27.html
http://www.valaimanai.in/2012/08/blog-post.html
http://www.rahimgazzali.com/2012/08/blogger-meeting_27.html
http://kudanthaiyur.blogspot.in/2012/08/blog-post_27.html
http://www.tamilvaasi.com/2012/08/tamil-bloggers-meet-2012-at-chennai.html
உங்களை சந்தித்தலில் மிக்க நன்றி சார்...
ReplyDeleteஅருமையாக தொகுத்து வழங்குனீர்கள்... பாராட்டுக்கள்...
நகைச்சுவையாக சொல்ல வேண்டிய கருத்துடன் சொன்னீர்கள்... ரசித்துக் கொண்டிருந்தேன்...
பேச முடியவில்லை என்று மிகவும் வருத்தப்படுகிறேன்... சென்னை வரும் போது கண்டிப்பாக சந்திப்பேன்...
தொடருங்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி சார்!
Deleteஇந்த நட்பு பிணைப்பு என்றென்றும் தொடரவேண்டும் என்பதே என்னுடைய ஆசை...
ReplyDeleteஅது கண்டிப்பாக தொடரும் என்று நம்புவோம்...
கண்டிப்பாகத் தொடரும் நண்பரே..!!
Deleteதங்களை சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி
ReplyDeleteஎனக்கும் மிக்க மகிழ்ச்சி நண்பரே..
Deleteஏதோ ஒரு கருத்தை கூற வருகிறீர்கள் என்று யூகிக்கிறேன்! அதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்!
ReplyDeleteBTW, நிகழ்ச்சியை நேரலையில் பார்த்தேன், அருமையாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினீர்கள்!வாழ்த்துக்கள்!!!
நன்றி வரலாற்றுச் சுவடுகள்..!!
Deleteநல்லப்பகிர்வு, தொடருங்கள்.
ReplyDeleteநன்றி வவ்வால்..! தொடருவோம்.
Deleteசுரேகாஜி,
ReplyDeleteவாசற்படி நன்மைகள் என்றால் என்ன? entrylevel benefits என மொக்கையாக மொழிப்பெயர்த்து புரிந்துக்கொள்வார்கள், நம்ம மக்கள் இப்போ ரிவர்ஸில் மொழிப்பெயர்த்து புரிந்துக்கொள்கிறார்கள், தமிழை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து பின்னரே புரிந்துகொள்கிறார்கள்.(உனக்கு புரியலை ஏன் மக்களை இழுக்கிற என நினைத்தாலும் சரி)
சிறப்பாக வழிநடத்தியதற்கு வாழ்த்துக்கள்&பாராட்டுகள் !!!
நாம் நன்மைகளின் வாசற்படியில் நிற்கிறோம். ஆனால்.. அதற்கு உள்ளே போவோமா அல்லது வாசற்படியிலேயே நின்றுவிடுவோமா அல்லது வெளியில் சென்று விடுவோமா என்ற நினைப்புக்காக எழுதினேன்..!!
Deleteபுரிஞ்சிடுச்சா ( நான் மக்களைச் சொன்னேன் ) :))
சார் இந்த பதிவர் சந்திப்பின் மூலம் எனக்கு கிடைத்திருக்கும் நண்பர்களில் நீங்களும் ஒருவர் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம்
ReplyDeleteரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நாள் முழுக்க நான் சந்தோசத்தில் திளைத்திருந்தேன் என்றால் அது இதுவாக தான் இருக்கும் காரணம் அத்தனை நட்புக்களையும் ஓரிடத்தில் கண்டதால் வந்த உற்சாகம் அது
மிக்க நன்றிங்க!
Deleteசுரேகா சார்... நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி நன்கு பழகுவதற்காக ஒரு வாய்ப்பாக அமைந்தது. நீங்கள் சொன்ன ‘கேட்டால் கிடைக்கும்‘ அமைப்பைப் பற்றி மேலும் விபரங்களை என்னிடம் பி.கே.பி. கேட்டறிந்தார். இதுபோன்ற பல நல்ல செயல்கள் தொடர வேண்டும் என்பது எங்களின் கருத்து. அனைவரும் கரம் கோர்த்தால் எதுவும் சாத்தியமே. தொடரும் உங்கள் யோசனைகளுக்காய் காத்திருக்கிறேன்.
ReplyDeleteமிக்க நன்றி பாலகணேஷ் ஜி..!!
Deleteஅவர் முன்னரே என்னை ஃபேஸ்புக்கில் தொடர்புகொண்டு மிகவும் அன்புடன் விசாரித்தார்.
கட்டாயம் கரம் கோர்ப்போம்... காலத்தை வெல்லும் செயல்கள் செய்வோம்.
அருமையாக தொகுத்து வழங்குனீர்கள் ...
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteமிக்க நன்றி ரிஷ்வன்...
Deleteவணக்கம்..உங்களின் அருமையான ரசனையான தொகுப்பின் மூலமே களை கட்டியது இந்த சந்திப்பு என்றே சொல்லலாம்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி கோவை நேரம்... வெள்ளை சட்டை வேட்டி...சூப்பர் தலைவரே...மத்தியான சந்தன ஜிப்பா...கலக்கல்..
Deleteஇந்த முறை பங்கு பெற முடியவில்லை, அடுத்தம் முறை நிச்சயம் பங்கு பெறுகிறேன்.
ReplyDeleteகண்டிப்பா வாங்கப்பா...!!
Deleteஎன்னை நீங்கள் அறிமுகப்படுத்திய விதம் நெகிழ வைத்த்து.நன்றி
ReplyDeleteவில்லவன் கோதை
மிக்க நன்றி அய்யா...!! சாம்சங் பற்றி தெரிந்துகொண்டது மகிழ்ச்சி...
Deleteபதிவர் சந்திப்பை நேரலையில் கண்டேன்
ReplyDeleteகலந்துகொண்ட எல்லா தோழமைகளின் பங்கும் பாராட்டகூடியது
//இவற்றைப் பயன்படுத்தி நாம் என்னன்ன சாதிக்கலாம்..?//
நல்லதை சாதிக்கலாம் சார்
நன்றி செய்தாலி...
Deleteசுரேகா : பதிவின் முதற்பகுதி மிக நெகிழ வைத்தது.
ReplyDeleteஇதில் சந்தித்த பலர் (விழா குழுவினர்) ஒரு மாதமாய் தான் ஒருவருக்கொருவர் நேரில் அறிமுகமானவர்கள்.
இந்த ஒரு மாதத்தில் பல முடிவுகளை ஒன்றாய் சேர்ந்து எடுக்க வேண்டியிருந்தது. சில இக்கட்டான, தர்மசங்கட சந்தர்ப்பங்களை சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்கிறோம், ஒருவருக்கு ஒருவர் எப்படி கை கொடுத்து தூக்கி விடுகிறோம் என பார்க்க முடிந்தது. இதனால் ஒவ்வொருவர் பற்றியும் அவர் நிறை, குறைகளை நாங்கள் நன்கு அறிந்தோம். இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த அளவுக்கு மேல் எதிர்பார்க்க முடியாது
நிச்சயம் அடுத்து நல்ல விஷயங்களுக்கு இதை எடுத்து செல்வோம். உங்கள் கருத்துகளையும் இயலும்போதேல்லாம் கூறுங்கள்
நன்றி !
நன்றி மோகன் அண்ணே...உங்கள் உளமார்ந்த பாராட்டில் உருகித்தான் போனேன்....!!
Deleteநன்றி சுரேகா!
ReplyDeleteதாங்கள் நிகழ்சியை தொகுத்து வழங்கிய முறை பாராட்டத்தக்கது!
மிக்க நன்றி அய்யா...!!
Deleteநேரில் உணராத ஒரு சாரத்தை உங்கள் வரிகள் உணர்த்தின...
ReplyDeleteநன்றி... தொடர்ச்சிக்கு காத்திருக்கிறேன்...
சந்தோஷ நன்றிகள் மயிலன்....
Deleteஎதையும் வித்யாசமாய் செய்பவர் நீங்கள். இதிலும் வித்யாசம், சிறப்பு.
ReplyDeleteமிக்க நன்றி ஜோதிஜி அண்ணே!
Deleteதொகுத்து வழங்குவது என்பது ஒரு கலை. அதை அற்புதமாய் செய்து விழாவிற்கு பெருமை சேர்த்தீர்கள். வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி அய்யா!
Deleteஅடுத்தவாட்டி கண்டிப்பா கலந்துக்கணும்னு இப்பவே ஆசையா இருக்கு. சாத்தியமாகும்னு நம்பறேன்.
ReplyDelete//இவற்றைப் பயன்படுத்தி நாம் என்னன்ன சாதிக்கலாம்..?
அலசுவோம் வாருங்கள்…. //
நிச்சயமா நான் ரெடி.
வாங்க புதுகைத் தென்றல்... !! சாதிக்கலாம்..!!
Deleteenjoy :)
ReplyDeleteஅண்ணே...வாங்க..வாங்க...!! ரொம்ப நன்றிண்ணே!
Deleteஅண்ணே, உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. கடைசி வரிசையில் அமர்ந்து உங்கள் பேச்சை ரசித்துக் கொண்டிருந்தேன். ஒரு பதிவு நண்பர் நான் வேண்டாம் என்று கூறியதையும் மீறி வற்புறுத்தியதால் போண்டாவை வழங்கத் துவக்கி வைத்து தங்களிடம் வாழ்த்தைப் பெற்றுக் கொண்டேன்.
ReplyDeleteவாங்க ஆரூராரே...! உங்களைச் சந்தித்ததில் எனக்கும் மிக மிக மகிழ்ச்சி..!!
Deleteபோண்டா மேட்டர்....
அடடே.. நான் பொதுவாச் சொன்னேன் நண்பரே..!! உங்களை போண்டா சாப்பிடவிடாம செஞ்ச பாவத்தை எந்தச் சட்னியில் கழுவுறதுன்னு தெரியலையே...? :)
மிக்க நன்றி
ReplyDeleteகவியரங்கத்தில் கை தட்ட சொல்லி எங்களை தூங்க விடாம செய்துடிங்க...
ReplyDeleteஉங்கள் தொகுப்புரை அருமை.... உங்களை சந்தித்து பேச முடியவில்லை. சிறு வருத்தம்..
பிரபல பதிவர் கேபிள் சங்கரின் பேட்டி நமது தமிழ்வாசியில் விரைவில் வெளியாக உள்ளது. அவரிடம் கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். மேலும் விவரங்களுக்கு:
கேபிள் சங்கரின் எக்ஸ்குளுசிவ் பேட்டி விரைவில் - Cable Sankar Exclusive Interview
ஒரு பதிவு ஆரம்பிச்சேன். உங்க பதிவு வந்திருச்சு. அடுத்த பாகம் பார்த்துட்டு என்னோட பதிவை போடுறேன்.
ReplyDeleteசுரேகாஜி,
ReplyDeleteஇப்போத்தான் பதிவர் சந்திப்பு கணக்கு என ஒரு பதிவைப்பார்த்துட்டு வரேன், என்ன ஒரு கணக்கு, 74,000 ரூபாயில் 27,199 ரூ விழா நடந்த இடத்துக்கே செலவாகி இருக்கு, 1/3 நிதி அதுக்கே, இது ஒரு லாப நோக்கற்ர நிகழ்வு ,பல பிராபல்யப்பதிவர்கள் இருக்கிறார்கள் ஏன் குறைவான /இலவசமாக ஒரு இடம் பார்த்துக்கொடுக்க கூடாது? சும்மா எல்லாரிடமும் காசு வாங்கி ,இருக்கும் பணத்துக்கு இடம் பார்க்கலாம் எனில் ஏன் அதிமுக்கியப்பதிவர்கள், கையில நிதி இருந்தால் லீமெரிடியனிலும் வெற்றிகரமாக சந்திப்பு நடத்தலாம்.
குறைவாக செலவழித்து ,வெற்றிகரமாக நடத்தப்பட வேண்டும் என்பது என் விருப்பம்.
27,199 ரூ இடத்திற்கு செலவழிக்க முடிவு செய்திருப்பதாக எனக்கு தெரிந்திருந்தால் மிகக்குறைவாக அல்லது இலவசமாக இடம் பார்த்து சொல்லி இருப்பேன், அடுத்த முறை சொன்னால் இடம் ஏற்பாடு செய்து தருகிறேன்.
இப்படி எல்லாம் பணம் செலவு செய்து செய்ய என்ன பதிவர்களின் சிறப்பு பங்களிப்பு என தெரியவில்லை. நிறைய பணம் திரட்டிவிட்டால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் குறைவான நிதியில் சிறப்பாக செய்ய வேண்டும் அதுவே பதிவர் சந்திப்பு போன்ற லாபநோக்கற்ற நிகழ்வுக்கு நல்லது.
வவ்வால்...
Deleteவெகு சீக்கிரமே சரியாக திட்டமிட்டிருந்தால் இலவசமாக இடம் கிடைத்திருக்கக்கூடும்... உதாரணத்திற்கு, உங்களுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் அவரது அலுவலகம் மூலமாக இலவச இடத்திற்கு ஏற்பாடு செய்ய முன்வந்தார்... ஆனால் அந்த இடம் ஏற்கனவே வேறொரு நிகழ்விற்கு பதிவு செய்யப்பட்டிருந்ததால் கிடைக்கவில்லை...
வடசென்னையில் பத்தாயிரத்திற்கு குறைவாக இடம் ஏற்பாடு செய்து தர என்னால் முடியும்... ஆனால் வந்து செல்வதற்கு அனைவருக்கும் வசதியாக இருக்காது...
அடுத்தமுறை நிச்சயமாக உங்களைத் தொடர்பு கொள்கிறோம்...
ஊர் கூடித்தேர் இழுத்தது எப்படின்னு புரியுது சுரேகா.
ReplyDeleteஇந்த வெற்றிக்குப்பின்னே இருந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நியூஸி கிளையின் சார்பில் மனம் நிறைந்த பாராட்டுகள்.
வவ்வால், நான் என் பதிவில் சொல்ல நினைத்ததும் அதேதான்..
ReplyDeleteஇளா,
ReplyDeleteஉங்களுக்கும் அதே தோன்றியதா,:-))
நீங்களாவது முன்னரே சொல்லியிருக்க கூடாது, இப்போ என்னைத்தான் எல்லாம் கும்ம போறாங்க :-))
(ஹி...ஹி அது எல்லாம் உனக்கு புதுசான்னு நினைக்காதிங்க)
100 பேருக்கு உணவு ஆர்டர் கொடுத்துட்டா பார்ட்டி ஹால் ஃப்ரியா கொடுக்கிற ஹோட்டல் எல்லாம் இருக்கு.
அப்படி செய்திருந்தால் உணவுக்கு உணவும் ஆச்சு, இடமும் கிடைச்சிருக்கும்.
எல்லாம் பெரிய ஆட்களாக இருப்பதால் எல்லாம் பார்த்து பார்த்து செய்திருப்பார்கள்,அவங்களுக்கு தெரியாததையா நாம சொல்லப்போறோம்னு நினைச்சேன், கணக்கினைப்பார்க்கும் போது தான் ,அப்படி இல்லைனு தெரியுது.(கணக்கு தப்புன்னு சொல்லவில்லை ,சரியாக எல்லாம் சொல்லி இருக்கிங்க,காரணம் தான் மாறுது)
சந்திப்பு நன்றாகவே நடத்தப்பட்டுள்ளது,ஆனால் செயல்முறையில் மாற்றம் தேவை.
சுரேகாஜி எல்லாம் இருக்கும் போது அவருக்கு தெரியாததா என நினைத்தேன்.
---------
சுரேகாஜி,
கவியரங்கம் எல்லாம் கம்பன் கழகம், பாரதிதாசன் பேரவையினர் பார்த்துக்கொள்வார்கள், நிறைய பேரு தொ.காவில் நடக்கும் பட்டிமன்றத்தை கிண்டல் அடித்துவிட்டு அதற்கு முன்னே வழக்கொழிந்து போன கவியரங்கம் ஏன் பதிவர் சந்திப்பில் வைத்தார்கள் என தெரியவில்லை, இன்னும் சுருக்கமாக ,பார்வையாளர்களுக்கு(பதிவர்கள்) பயன்ப்படும் நிகழ்வினை வைத்திருக்கலாம், இதனை முன்னரே சொல்லலாம் எனப்பார்த்தால் முதல் முறை நிகழ்வினை நடத்தும் போதே ரொம்ப எதிர்ப்பார்க்க வேண்டாம் என்பதால் சொல்லவில்லை.
ஆனால் அடுத்த முறையும் கவியரங்கம் வைக்கணும்னு ஒருத்தர் சொன்னதை பார்த்தப்பிறகு தான் சொல்லாமல் விட்டால் மீண்டும் கவியரங்கம் ,பட்டிமன்றம் என போய்விடுவார்கள் என சொல்கிறேன்.
ஒரு சில ஆலோசனைகள் இப்போவே சொல்லிடுறேன் அப்புறம் மறந்துடுவேன் :-)).
#நிறைய கணினி வல்லுனர்கள் இருக்காங்க அவர்களை கொண்டு ஒரு நிகழ்வு.வலைப்பதிவு நுட்பம் உட்பட அனைத்து கணினி சார் நிகழ்வும் இருக்கலாம்.
#நிறைய மருத்துவர்கள் இருக்காங்க அவர்களை கொண்டு ஒரு விழிப்புணர்வு நிகழ்வு.
#சுற்று சூழல் ஆர்வலர்களை கொண்டு ஒன்று,
# ஊடகவியலாளர்கள் இருக்காங்க அவர்களை கொண்டு வீடியோ, போட்டொ எடுப்பது எடிட் செய்வது, ஏன் ஒரு குறும்படம் எப்படி ஹேண்டி கேம்மில் எடுப்பது எனக்கூட நிகழ்வு வைக்கலாம்.
# இயற்கை விவசாயம், உணவுக்கட்டுப்பாடு(டயட்) , தனி நபர் வாழ்க்கை முன்னேற்றம் குறித்து ஆலோசனை வழங்கலாம்.
#யோகா இன்னபிற வல்லுனர்கள் இருப்பார்கள் அவர்களைக்கொண்டு ஆலோசனை வழங்கலாம்.
#ஒருப்பதிவர் ஏற்றுமதி ஆலோசனைப்பதிவு போடுகிறார்(சேதுராமன் சாத்தப்பன்), அவரை வைத்து ஆலோசனை நிகழ்வு வைக்கலாம்.
பதிவர்களிடையே இருக்கும் நிபுணர்களை கொண்டு பதிவர்களுக்கும், மற்றவர்களுக்கும் பயன்ப்படக்கூடிய நிகழ்வுகளை இனி முன்னெடுத்த வேண்டும்.
பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் இப்படித்திட்டம் போட்டு இருக்காங்களே என்பதே எனக்கு ஏமாற்றமாக போச்சு.
பாலபாரதி, உண்மைத்தமிழன், லக்கி லுக், ஏன் சுரேகாஜி எல்லாருக்குமே காஸ்ட் எஃபெக்டிவாக எப்படி செய்ய வேண்டும் என தெரியும் அவர்களின் ஆலோசனையைக்கேட்டாவது பெற்றிருக்கலாம்.ஏன் எனில் ரெண்டு லேப் டாப் கூட ரெண்ட் எனப்போட்டு இருக்கு :-((
இந்த சந்திப்பில் குறிப்பிட வேன்டிய அளவில் தனிப்பட்ட முறையிலும் பங்களித்தாக எனக்கு தெரிவது,
கணேஷ் சார், பி.கே.பி யை அழைத்து வந்து சிறப்பித்துவிட்டார்,வேற யாரும் அழைத்தால் வருவாரா என்ன?
டிஸ்கவரி புக் வேடியப்பன் , இடம்,பொருளுதவி என தனிப்பட்ட பங்களிப்பு செய்துள்ளார்,
ஆயிரத்தில் ஒருவர் "மணி" உணவு வழங்குதலை ஒருப்பதிவராகவும், அவரது அனுபவத்தினாலும் பங்களிப்பு செய்துள்ளார்,
சுரேகாஜி நீங்க நல்லா நிகழ்ச்சியை நங்கூரம் பாய்ச்சி இருக்கிங்க, ஆனால் அதனை சொல்லமாட்டேன் ஏன் எனில் நீங்க அதில் எக்ஸ்பெர்ட் நான் வேற தனியா சொல்லணுமா?
இது போல கூடுதலாக நிறைய பேர் செய்து இருக்கலாம் ஆனால் தனித்து தெரிவது இவர்களே, அவர்களுக்கு உங்க மூலம் நன்றி சொல்லிக்கிறேன்.
பி.கு;
#அடுத்த முறை ஒரு தனி வலைப்பதிவு துவங்கி ,அதில் கருத்துக்கேட்பு செய்தால் நன்றாக இருக்கும்.
#இப்போ எல்லாம் கருத்து சொல்லவே பயமாக இருக்கு (இவரு பெரிய கருத்து கந்தசாமி!!!),எல்லாம் பிரபலங்கள்னு சொல்லிக்கிட்டு சண்டைக்கு வராங்க, ஹி...ஹி நான் அதுக்கு எல்லாம் அசர மாட்டேனெல:-))
வவ்வால்..
Deleteசூப்பர்..
நான் எதெல்லாம் நினைச்சு எழுதிக்கிட்டிருக்கேனோ அதை அப்படியே போட்டு என் பதிவுக்கு வேலை இல்லாம செஞ்ச்சுட்டீங்க! ஆனாலும் அதை முறைப்படுத்தி என் பதிவையும் வலையேற்றிடுவேன்.
இதில் முக்கியமா நான் ஒத்துக்கொள்ளும் விஷயம்..
இந்த பதிவர் சந்திப்பில் என் பங்கு என்பது... அன்று மதியம் நிகழ்ச்சியைத் தொகுத்தது மட்டுமே..!!
நான் வேறு எந்த வேலையிலும் பங்கெடுத்துக்கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை..!!
ஆனாலும்.. அவர்களுக்குத் தெரிந்ததை மிகவும் சிறப்பாக நடத்தி, நிகழ்வை வெற்றிபெறச்செய்தது மிகவும் பாராட்டுக்குரியது.
இதில் நீங்கள் சுட்டிக்காட்டும் விஷயங்களைக் கருத்தில் கொண்டும், அடுத்தடுத்த நிகழ்வுகளில்...இதுபோன்று குறைந்தது 120 விழாக்களை நடத்தியவன் என்ற முறையில்.. என் உள்ளீடும் அதிகமாக இருக்குமாறு பார்த்துக்கொள்வேன்.
கண்டிப்பாக அடுத்தமுறை கவியரங்கம் இருக்காது...அது கவி விளையாட்டாக மாற்றப்படும்.
நீங்கள் சொன்ன அத்துனை விஷயங்களும் எனக்குள்ளும் ஓடி..ஒரு வடிவம் கொடுத்திருக்கிறேன்..இன்று அல்லது நாளை அதை பதிவாகப் பார்க்கலாம்..
எல்லாம் சரி..
நீங்க வருவீங்கன்னும்...என்னிடம் மட்டும் இரகசியமா வந்து...நாந்தான் வவ்வால்ன்னு சொல்லுவீங்கன்னும் கனவு கண்டேன்..உண்மையாகுமா?
என் மின்னஞ்சல் பெட்டி திறந்தே இருக்கிறது...ஒரு மெயில் அனுப்புங்க..!!
சுரேகாஜி,
Deleteகுறிப்பிடத்தக்க பங்களிப்புன்னு சொன்னதில் அப்துல்லா அண்ணனை மறந்துவிட்டேன், கலந்துக்கொள்ளவில்லை என்றாலும் பதிவர் சந்திப்பை வெயிட்டா கவனிச்சிருக்கார்,நன்று!
இன்னும் நிறையப்பேரு இருக்கலாம் , பளிச்சுன்னு தெரிவதை சொல்லிவிட்டேன்.
தாங்கள் நிகழ்சியை தொகுத்து வழங்கிய முறை மிகவும் பாராட்டத்தக்கது! மிக நன்றாக கொண்டு சென்றீரகள். நன்றி
ReplyDeleteசுரேகாஜி,
ReplyDeleteமிக்க நன்றி!
எங்கே நீங்களும் நான் குறை சொல்லிட்டேன்னு நினைச்சிடுவீங்களோனு நினைத்தேன், நான் நீங்க நிறைய வழி நடத்தி இருப்பிங்க என நினைத்து இருந்தேன்,வேலைச்சுமை என தெரிகிறது.
உங்க புத்தகத்தில் பின்னாடி உங்களைப்பத்தி போட்டு இருப்பதை படித்து அடேங்கப்பா செம ஆளு என்ன தன்னடக்கமா இருக்கார்னு நினைத்தேன்.
மேலும் நீங்க இது போல மனிதவள மேம்பாடு அமர்வுகள் நடத்துவது பற்றி அவ்வப்போது சொல்வதை படித்திருக்கிறேன்ன்,எனவே நீங்கள் சிறப்பாக வழி நடத்துவீர்கள் என தெரியும்.
பதிவர் சந்திப்பு பற்றி முன்னரே எதுவும் சொல்லாததுக்காரணமே ஆரம்பம் நிகழட்டும் அடுத்தக்கட்டத்தில் மேம்பாடுப்பற்றி பேசலாம் என்பதாலேயே.கவியரங்கம் என்பது பற்றி பத்திரிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டப்போது கூட அடுத்த நிகழ்வில் மாற்றிக்கொள்வார்கள் என நினைத்தேன்,ஒருப்பதிவில் இன்னொரு கவியரங்கம் நடத்த வேண்டும் என்பது போல பேசவே குறிப்பிட்டேன்.
ஆரம்பத்திலேயே அதிகம் எதிர்ப்பார்க்கவில்லை, ஆனால் இனிவரும் நிகழ்வில் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே நான் பேசுகிறேன் என்பதை புரிந்துக்கொண்டால் போதும், நீங்கள் புரிந்து கொண்டீர்கள்.நன்றி!
அடுத்த நிகழ்விற்கு குறைவான செலவில்/இலவசமாக இடம் பார்க்க என்னால் ஆனதை செய்கிறேன், உங்களைப்போன்றவர்களுக்கு அதுவும் ஒரு பெரிய காரியம் இல்லை ,ஆனால் விருப்பப்பட்டால் நானும் செய்யத்தயார்.
//ஆனாலும்.. அவர்களுக்குத் தெரிந்ததை மிகவும் சிறப்பாக நடத்தி, நிகழ்வை வெற்றிபெறச்செய்தது மிகவும் பாராட்டுக்குரியது.
//
ஆமாம், கண்டிப்பாக வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது,அனைத்து பதிவிலும் மறக்காமல் நான் இதனை சொல்லிவிட்டேன்,பாராட்டுக்குரிய முயற்சி.
//நீங்க வருவீங்கன்னும்...என்னிடம் மட்டும் இரகசியமா வந்து...நாந்தான் வவ்வால்ன்னு சொல்லுவீங்கன்னும் கனவு கண்டேன்..உண்மையாகுமா?//
நான் என்றேனும் சந்திக்க வேண்டும் என நினைப்பவர்களில் முதலிடத்தில் இருப்பவர் நீங்கள், ராச நடராசர்னு ஒருத்தர் இருக்கார் அவரும் என்ப்பட்டியலில் இருக்கார்,கேபிள்ஜியும் பார்க்கலாம்னு நினைப்பேன் எங்கே உதைச்சுடுவாரோன்னு ஒரு சந்தேகம் தான்:-))
அடுத்த நிகழ்வை அசத்த இப்பொழுதே வாழ்த்துக்கள்!
ஆரம்பத்திலேயே அதிகம் எதிர்ப்பார்க்கவில்லை, ஆனால் இனிவரும் நிகழ்வில் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே நான் பேசுகிறேன் என்பதை புரிந்துக்கொண்டால் போதும், நீங்கள் புரிந்து கொண்டீர்கள்.நன்றி!
ReplyDeleteஅடுத்த நிகழ்விற்கு குறைவான செலவில்/இலவசமாக இடம் பார்க்க என்னால் ஆனதை செய்கிறேன், உங்களைப்போன்றவர்களுக்கு அதுவும் ஒரு பெரிய காரியம் இல்லை ,ஆனால் விருப்பப்பட்டால் நானும் செய்யத்தயார்.
//ஆனாலும்.. அவர்களுக்குத் தெரிந்ததை மிகவும் சிறப்பாக நடத்தி, நிகழ்வை வெற்றிபெறச்செய்தது மிகவும் பாராட்டுக்குரியது.
//
ஆமாம், கண்டிப்பாக வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது,அனைத்து பதிவிலும் மறக்காமல் நான் இதனை சொல்லிவிட்டேன்,பாராட்டுக்குரிய முயற்சி.//
நிகழ்ச்சி நடத்தப்போவதாகச் சொல்லப்பட்டபோதே நம்மிடமிருந்து அவர்களுக்கு இவ்வாறான தகவல்களும், உதவிகளும் நம்முடைய பங்களிப்பாகச் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஏதேனும் குறைபாடு வந்துவிடக்கூடாதே என்ற எண்ணத்தில் சில விஷயங்கள் வேறுபட்டிருக்கலாம்.
அடுத்த நிகழ்வில் அவர்களுக்குத் தோள்கொடுத்து இதுபோன்றே யாரையும் முன்னிருத்தாமல் அனைவருக்குமான விழாவாக நம்மாலானதைச் செய்வோம்.
அந்த விழாவிற்கான உழைத்த நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் பூங்கொத்து.
சுரேகாஜி உங்களுக்கும் பாராட்டுக்கள்.:))
வவ்வால்ஜி மாஸ்க் போட்டுக்கொண்டாவது வந்து அவர் செலவில் மண்டபமும், அவருடைய பங்களிப்பாக பொற்கிழியும் வழங்குவார் என்று நம்புவோம் :))
ஷங்கர்,
ReplyDeleteநன்றி!
//நிகழ்ச்சி நடத்தப்போவதாகச் சொல்லப்பட்டபோதே நம்மிடமிருந்து அவர்களுக்கு இவ்வாறான தகவல்களும், உதவிகளும் நம்முடைய பங்களிப்பாகச் செய்யப்பட்டிருக்க வேண்டும்.//
எல்லாம் பிரபலங்களாக இருக்கவும் நாம என்னத்த செய்திடப்போறோம் என்பதும்,நான் முகமூடியாக தொடர விரும்பியதும் ஒருக்காரணம்,அதான் எதுவும் செய்ய முடியவில்லை,மேலும் செலவுக்குறைவாக செய்வார்கள் எனவும் நினைத்தேன்.
இடத்திற்கே 27,199ன்னு படிச்சதும் கொஞ்சம் ஏமாற்றமாபோச்சு, அப்புறம் இடத்துக்கு காசுலாம் கொடுத்து பிடிக்க மாட்டேன் சார் அதிகப்பட்சம் கரண்ட் பில், இதர செலவுக்கு மட்டும் கொடுத்து இலவச இடம் தான் பிடிப்பேன் :-))
3 நாள் நடக்கும் செஸ் டோர்ணமெண்டே ஸ்கூல் எப்போ லீவ்னு பார்த்து அப்போ ஒசில புடிச்சு நடத்தி இருக்கோம் :-))
அதே போல ஒரு இடம் பிடிச்சிட மாட்டேன் , என்ன அவங்களுக்கு வசதிப்பட்ட நாளுக்கு நடத்திக்கணும் ,இல்லைனா ஹொட்டல்ல உணவுக்கு புக் செய்து பார்ட்டி ஹால் ஃப்ரீயா வாங்கிக்கணும்.
//அவருடைய பங்களிப்பாக பொற்கிழியும் வழங்குவார் என்று நம்புவோம் :))//
பாண்டிய மன்னரு ரேஞ்சில சொல்லுங்க , ஒரு அணில் போல உதவ தயார்த்தான், முகமூடி முக்கியம் :-))
வரவங்க எல்லாருக்கும் சுரேகாஜி எழுதின புத்தகம் "தலைவா வா"வாங்கிக்கொடுக்கிறேன் ,ஆனால் தலைவரு 50% தள்ளுப்படித்தரணும் :-))
லேட்டான பதிலுக்கு ஸாரி வவ்வால்..! ‘முகமூடி’ பாதிப்பில் இருந்தேன்...!! :)
Deleteஅட..நானும் செஸ் டோர்னமெண்ட் ஃப்ரீயா பள்ளிக்கூட இடம் வாங்கித்தான் நடத்தியிருக்கேன்.
இங்க யாரும் பிரபலம் இல்லை...!! அதுதான் உண்மை! அது ஒரு பிம்பம்..ஒரு சிறு குழுவில் கொஞ்சம் அதிகமானவர்களுக்கு அறிமுகமானவர்களை பிரபலம் என்று பிரபலப்படுத்துவதுதான் ஓவர்..!!
உங்க ‘முகமூடி’ - உங்க உரிமை...!!
தலைவா வா! நீங்க படிச்சுட்டு .. நேர்மையா விமர்சனம் செய்யுங்க! வரவங்க எல்லாருக்கும் புக்கு விக்கணும்னா...மதி நிலையத்தை அணுகவும்..!! :))
சுரேகாஜி,
Deleteஇதில என்ன இருக்கு எப்போ பதில் சொன்னாலும் ஓ.கே தான் , எங்கே போயிடப்போறேன் , இன்னும் முகமூடியின் தாக்குதலில் இருந்து மீளவில்லையா :-))
நீங்களும் செஸ் அபிமானியா? ஹி...ஹி நிறைய ஒத்து போகுதே.
பிம்பம் தான் ஆனாலும் நல்ல அனுபவஸ்தர்கள் ஆச்சே எனவே கத்துக்குட்டி தனமா நாம என்ன சொல்றதுனு நினைச்சேன்.
தலைவா முழுக்க எப்போவோ படிச்சிட்டேன் , நான் வழக்கப்படி எழுதினா உங்களுக்கு புடிக்குமா பிடிக்காதுனு ஒரு dilemma கூடிய சீக்கிரம் எழுதிடுறேன்.
கதவை திறப்பது கடினம் .....திறந்தபின் காற்றும் வரலாம் அதனோடு கூட சில குப்பைகளும் தூசிகளும் சேர்ந்து வரலாம் ,நறுமணமும் நிறைய சுவாசிக்க முடியும்
ReplyDeleteதூசிகள் வருகிறது என்று கதவை சாத்தி வைப்பது முட்டாள் தனம் .........உங்களின் கருத்துகள் விவாதங்கள் அடுத்த கட்ட சந்திப்பிற்கான அடித்தளங்களாக அமையட்டும் வாழ்த்துக்கள்
உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க!
Deleteஅன்பின் சுரேகா - அருமையான பணி - ஒருங்கிணைத்தல் - அறிமுகப் படுத்துதல் அனைத்தும் அருமை - தேர்ந்தெடுக்கப் பட்ட சொற்கள் - உச்சரிப்பின் சிறப்பு - நகைச்சுவை - கூட்டத்தினைக் க்ட்டுப்படுத்துதல் - முக்கிய விருந்தாளியின் முன் நடந்து கொள்ள வேண்டிய முறை - கேட்கக் கேட்க இனித்தது சுரேகா - போகிற போக்கில், நட்புடன் சீனா என மறு மொழி பெறாத பதிவுகள் கொடுத்து வைக்காத பதிவுகள் எனக் கூறியது - தங்களின் முழு ஈடுபாட்டினைக் காட்டியது - ஏற்ற பொறுப்பினை சிறப்பாகச் செய்தமை நன்று - நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅன்புள்ள சுரேகா அவர்களே,
ReplyDeleteசென்ற வார (அதற்கு ஒரு வாரம் ஓடிவிட்டதா?) பதிவர் திருவிழாவில் உங்களை மேடையில் பார்த்ததுடன் சரி, பேச முடியவில்லை.
அடுத்த சந்திப்பில் நிச்சயம் பேசுகிறேன். நிகழ்ச்சித் தொகுப்பு நன்றாகச் செய்தீர்கள். தாமதாமகப் பாராட்டுவதற்கு மன்னிக்கவும்.
என் வலைத்தளம்: ranjaninarayanan.wordpress.com
அன்புடன்,ரஞ்ஜனி