முகமூடி.. – பாத்துட்டோம்ல..!
மிஷ்கின் இயக்கத்தில் முகமூடி திரைப்படத்துக்கான டிக்கெட்டை’ அன்புடன் கொடுத்த ஒரு திரையுலகப் பிரபலத்துக்கு எனது நன்றி..!
12 மணி காட்சிக்குச்
சென்றேன். கமலா தியேட்டர் நிரம்பி வழிந்தது. ‘நான்’ திரைப்படத்துக்கான டிக்கெட்டுகள்
நிறைய இருப்பதாகப் பேசிக்கொண்டார்கள்.
நான் இணைய ஆதாரத்தைக்
காட்ட, எனக்கு ஒரு டிக்கெட் கொடுத்தார்கள். என்னவோ நாந்தான் முகமூடி போல ஒவ்வொருவரும்
நாலுமுறை டிக்கட்டைப் பார்த்து செக் செய்தார்கள்.
போய் இருக்கையில்
அமர்ந்தேன். படம் பார்த்தேன்.
வில்லனின் பெயரும்,
ஜீவாவின் அப்பாவின் பெயரும் நரேன் என்று இருப்பதை இரசித்தேன். சிலருக்கு அப்பாதான்
வில்லனே..!!
எனது நண்பரும், மிஷ்கினின் இணை இயக்குநருமான தெய்வா
கை நிறைய பாட்டிலை வைத்துக்கொண்டு ஒவ்வொருவராகக் கொடுத்துக்கொண்டே வந்து கடைசியில்
ஜீவாவுக்கும் ஒரு பாட்டில் கொடுத்ததை இரசித்தேன்.
போதிதர்மர் கற்றுக்கொடுத்ததை,
ஜீவா நினைவுபடுத்திக்கொண்டிருந்ததை இரசித்தேன்.
நரேன் வைத்திருந்த
ஹார்டுவேர் கடையையும் அதன் உபதளவாடங்களையும் இரசித்தேன்.
அம்பாசிடர் வைத்திருப்பவர்கள்தான்
ரோட்டில் வாழைப்பழத்தோலை போடுவார்கள் என்ற கூற்றை இரசித்தேன்.
அன்புநிறை மனிதரும்,
அதீத நூலறிவும் கொண்டவரான சச்சிதானந்தம் அய்யாவை இரசித்தேன்.
பன்னீர்சோடா குடிக்குமிடத்தில் இருந்த ட்யூட்களை இரசித்தேன்.
குங்ஃபூ பள்ளியில்
படிப்பவர்கள் அனைவரும் கொள்ளைக்காரர்கள் என்ற பொதுமையை இரசித்தேன்.
இடைவேளையில் வந்திருந்தவர்களை இரசித்தேன்.
இடைவேளை வரை சூப்பர் என்று டிவிட்டினேன். அதை முகப்புத்தகத்தில் லைக்கியவர்களை இரசித்தேன்.
என் அருகில் அமர்ந்திருந்தவர் ஆண்ட்ராய்டில் ஆங்க்ரி பேர்ட்ஸ் விளையாடியதை இரசித்தேன்.
ஒரு சண்டைக்காட்சியில்… செல்வாதான் சூர்யா… நரேந்தான் டாங் லீ என்று மக்கள் ஏழாம் அறிவை இன்னும் நினைவூட்டியதை இரசித்தேன்.
எனக்கு பின்பக்கம் இருந்த ஜோடி முகமூடியே இல்லாமல் இருந்ததை இரசித்தேன். ( அந்தப்பையன் எனக்குத் தெரிந்தவரின் மகன் என்பதையும் சேர்த்து..)
இடைவேளைக்குப்பிறகு ஏ.சியில் வந்த தூக்கத்தையும் இரசித்தேன்.
படம் முடிந்து வெளியில் வந்தேன். ‘நான்’ திரைப்படம் ஃபுல் என்றார்கள். மிகவும் இரசித்தேன்.
பதிவுலகில் இதுபோன்று
முகமூடி அணிந்துகொண்டிருந்துவிட்டு, இப்போதுதான் முகத்தைக் காட்டியிருப்பவர் ‘ சேட்டைக்காரன்
அண்ணன் அவர்கள்.
அவர் பதிவர் சந்திப்பில் பேசும்போது. நான் தமிழ் இலக்கியத்துக்கு சேவை செய்கிறேன். ஏனெனில் நான் கவிதை எழுதுவதில்லை என்று சொன்னதை இரசித்தேன்.
அவருக்குக் கிடைத்த வரவேற்ப்பைப் பார்த்து, முகமூடி என்பது முக்கியமில்லை. நாம் அதைப்போட்டுக்கொண்டு என்ன செய்கிறோம் என்பது முக்கியம் என்பதை உணர்ந்தேன்
இப்போதும் பதிவுலகில்
முகமூடியோடு திரியும் வவ்வால் வெளிவரும் நாளை எதிர்பார்க்கிறேன்..
.
முகமூடி படத்தைப்
பற்றி நான் விமர்சிக்கவில்லை..நான் இரசித்தவைகளை மட்டுமே கூறியிருக்கிறேன். மிஷ்கினுக்கும் திரை சறுக்கும் அவ்வளவுதான்...ஆனால் மிஷ்கின் திறமைசாலிதான்!
உங்கள் பதிவை இரசித்தேன் .
ReplyDeleteஇரசித்தேன் என்று ஆங்கிலத்தில் அடிக்கும் பொது "இரசிதியன்" என்று கூகிள் தந்ததை இரசித்தேன்.
வாங்க விஷ்ணு பிரசாத்...!! நன்றி!
Deleteதங்களின் ரசனையை ரசித்தேன்...
ReplyDeleteபடம் பார்த்து விட்ட நண்பர்கள், "தைரியம் இருந்தா இந்தப் படத்துக்கு போ..." என்றார்கள்...
மிக்க நன்றி தனபாலன் சார்!....அன்று பதிவர் சந்திப்பு விழாவில்... நீங்கள் பளிச் என்று உடையணிந்து வந்திருந்தீர்கள். பார்த்தேன். பேச இயலவில்லை. !!
Deleteசுரேகாஜி,
ReplyDeleteபடிச்சிட்டோம்ல :-))
ஒரே தேனு ...தேன் மழையா இருக்கு பதிவில் , ஈ ,எறும்பு, தேனிப்போல மக்கள் கூட்டம் ..கூட்டமா வரப்போகுது,பின்னுட்டம் மழையா கொட்டப்போகுது :-))
ஆஹா கடசியில என் முகமூடிக்கு தான் ஆப்பா ...அவ்வ் :-))
நன்றி!
நல்லவேளை என்னை கொள்ளைக்காரன்ன் லிஸ்ட்ல சேர்க்கலை ...இனிமே நான் குங்குமப்பூ எல்லாம் கத்துக்கணுமா அப்போ :-))
---------
ஹி...ஹி ..நீங்க தானே சுத்தியால் அடிச்சு கொலை செய்யும் விதம் பற்றி "modus operandi" லீட் எடுத்துக்கொடுத்தது ?
ஹெ..ஹெ...நான் படத்தைப்பத்தி ஒண்ணுமே சொல்லலையே! :))
Deleteஇரசிக்க வேற ஒண்ணுமில்லைன்னு வேற எப்படி சொல்றது வவ்வால்..
நாமெல்லாம் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று பார்ட்டிகள்..!
நான் மாடஸ் ஆபரண்டி பற்றி தமிழக காவல்துறைக்காக வேலை பார்த்திருக்கேன்..!! :) ஆனா இந்த மெத்தட் சமீபத்தில் ஒரு ஆங்கிலப்படத்தில்கூடப் பார்த்தேன்.
சுரேகாஜி,
Deleteஒஹோ அதான் பின்னாடி சீட் வரையில் நல்லா ரசிச்ங்களா :-))
நிறையை கனியை கவர்ந்திருப்பிங்க போல!
ஆஹா நீங்க உளவியல் வேற படிச்சதா பின்னட்டை சொல்லி இருக்குல்ல.
சுத்தியல் கொலை யாவரும் நலம் படத்தில் கூட வரும்,இந்தப்படம் பல படங்களின் தழுவலா இருக்கும் நினைக்கிறேன்.நம்ம ஊரிலவே பாவாரியா கொள்ளையர்கள்னு ஒரு ராஜஸ்தான் கேங்க் இரும்பு ராடால் அடித்து கொல்லும்,கும்மிடிப்பூண்டி எமெலே வைக்கூட அப்படி அடிச்சு கொன்னாங்க, யாரோ இதெல்லாம் சொல்லி இருப்பாங்க நினைச்சேன்.
சந்தடி சாக்கில் எல்லாரும் மொத்து மொத்து என்று மொத்துகிற ஒரு படத்தின் தலைப்போடு என்னையும் போட்டுக் கலந்து மிக்ஸியில் அரைத்த சாகசத்தை ரசித்தேன்! :-))
ReplyDeleteஇந்தப் படத்துல வர்ற பூஜா ஹெக்டே மாதிரி நமக்கும் ஏதாவது பேரிடர் வந்திருமோன்னுதான், நான் முகமூடியைக் கழட்டிட்டேன்னு வைச்சுக்கோங்களேன்! :-)))
அதைச் சொல்லுங்க...!! நான் வச்ச தலைப்புக்கு நியாயம் செய்யத்தான் உங்களை இழுத்தேன்..
Deleteஇத்தனை நாள் முகமூடியாய் இருந்தவரை - பாத்துட்டோம்ல..!
உங்கள் ரசனைக்கு ரசிகன் அண்ணே நான்!
படம் பார்த்த எனது இந்திய நண்பர்கள் படத்தில் சண்டைக்காட்சிகள் நன்றாக ரசிக்கும் படி இருந்ததாக தெரிவித்தார்கள், உண்மையா ஜீ!
ReplyDeleteநான் அந்நியன் படச் சண்டையை விட்டு இன்னும் நகரலை.!! முகமூடில ஏது சண்டை? அதுக்கு யுத்தம் செய் இடைவேளைச்சண்டையை ஏழுதடவை பாருங்க! தோஷம் நீங்கும்.!
Deleteகனியிருப்ப காய்கவர விருப்பமில்லைதான்.. ஆயினும் இதில் இலந்தைபழ அளவுள்ள கனியை சுற்றி ஆணி அளவில் முற்கள்.. நீங்கள் இரசித்த வெகு சிலவை கூட என்னால் ரசிக்க இயலவில்லை... :)
ReplyDeleteஆணியப்பிடுங்கிட்டு...எலந்தப்பயத்தைச் சாப்பிடுங்க மயிலன் டாக்டர்! :)
Deleteபடம் தொடங்கியது முதல் எனக்கு பல்வேறு படங்களின் நினைவுகளை கொண்டுவந்தது
ReplyDeleteதெண்டசோறு என்று அப்பாவிடம் ஜீவா திட்டு வாங்கும் காட்சிகள் தனுஸ் படங்கள் சிலவற்றை நினைவுபடுத்தியது குங்கு பு மாஸ்டர் மற்றும் டீம் புருஸ் லீ படத்தை நினைவு படுத்தியது ஆனால் நடிகர் செல்வா மாஸ்டர் ஆக இருப்பது நம்பவே முடியவில்லை, காதலியை பார்க்க இரவில் முகமூடி அணித்து செல்வது காலங்காலமாக தமிழ் சினிமாவில் நடந்து வரும் வழக்கமான காட்சிகள் என்ன வித்தியாசம் ஜீவா பயன்படுத்திய உடை அது மட்டுமே. வில்லன் நரேனின் உடை அவர் அமர்ந்திருக்கும் நாற்காலி ஆகியவை நடிகர் s . v . சேகர், அருண் பாண்டியன் நடித்த
பழைய படம் 'சிதம்பர ரகசியத்தை' நினைவுபடுத்தியது. அதில் 'black cat ' கதாபாத்திரம் டெல்லி கணேஷ் செய்திருப்பார்.
வழக்கமாக ஒட்டு மொத்த போலிசும் ஜீவாவை நம்பி இருக்க தனி ஆளாக பணம், நகைகளை கொண்டு போகிறார். வில்லன் நரேன் பேசிய வசனம் " ஒவ்வொரு நிமிசத்துக்கும் ஒரு குழந்தை" சத்தியமாக சேதுபதி I . P . S ஐ நினைவுபடுத்தியது
குங் பு கலையில் சிறந்து விளங்க சுய ஒழுக்கம் என்பது மிக அவசியம், மிஸ்கின் தனது வழக்கமான 'பார்' செண்டிமெண்டை
குங் பு மாணவர்களோடு இணைத்தது வருத்தத்தை அளிக்கிறது. எந்த நேரமும் பாரில் குடித்துக்கொண்டே இருக்கும் ஜீவா மற்றும்
நண்பர்களால் எப்படி ஒரு சிறந்த குங் பு மாணவர்களாக மாற முடியும்?
கருத்துக்கு நன்றி ஃபீனிக்ஸ் தாஸன்...
Deleteநீங்கள் ரசித்ததை ரசிக்கும் விதத்தில் எழுதியதை ரசித்தேன்
ReplyDeleteஹி..ஹி..நன்றி!
Deleteஇந்த மொத்தப்பதிவிலும் இருக்கும் நக்கலை இரசித்தவர்களை இரசிக்கிறேன். நிஜம் என்று நம்பியவர்களை மிகவும் இரசிக்கிறேன்.
ReplyDeleteநான் - படத்துக்கு டிக்கெட் இருந்ததும்...
திரும்பிவரும்போது அந்த படம் ஃபுல் ஆனதும்... - ‘முகமூடி’ யால்தான்..!! :)
நீங்கள் ரசித்ததை நக்கலுடன் விவரித்திருந்த விதத்தை தான் ரசித்தேன்
ReplyDeleteஇதை மிக மிக ரசிக்கிறேன்.
Deleteஎட்டு புள்ளி கோல புக்கு கிடைக்குமா?
ReplyDeleteஎன்னங்க திடீர்ன்னு வந்து கால்பந்து மைதானத்துல கல்லாங்கா ஆடுறீங்க?
Deleteசுரேகா, உங்கள் ரசனைக்கு நன்றி. ஜாக்கி சேகர் இந்தப் படத்தை ஏன் புகழ்கிறார் என்பதுதான் எனக்கு விளங்கவே இல்லை.
ReplyDeleteஉங்கள் அன்புக்கு நன்றி !
Deleteஅது ஜாக்கி அண்ணனின் சொந்த விருப்பு வெறுப்பு சார்ந்தது சார்..!! யாருடைய இரசனையையும் நாம் குறை சொல்லல் கூடாது.
கழுவுற மீன்ல நழுவுற மீன்னா அது நீங்க .தான் .. அன்னிக்கு தான் பதிவர் சந்திப்புல அழகா எல்லாரையும் கமுக்கமா கலாய்சீங்கன்னா இந்த விமர்சனமும் அப்படியே ... கவிதை போல உங்கள் விமர்சனத்தையும் அடியேன் ரசித்தேன் ... அன்புடன் அனந்து ...
ReplyDeleteவாங்க அனந்து..!! மிக்க நன்றி!
Deleteமிஷ்கினுக்கும் திரை சறுக்கும் - சூப்பர் சுரேகா. பேச்சில் உங்களிடம் நான் கண்டு வியந்த அதே சரளமான உரையாடலும் நகைச்சுவையும் எழுத்திலும். நான் உங்களின் ரசிகன் என்பதில் எனக்குப் பெருமை.
ReplyDelete