தாத்தா சாபம்






உன்னை
நினைக்க 
நேரமில்லாமல்தான்
திரிந்துகொண்டிருந்தேன்.
எத்தனையோ
சொல்லியிருக்கிறாய்!
என்னன்னவோ
செய்திருக்கிறாய்!

நான் பெரிதாக
உனக்கொன்றும்
கெடுதல் செய்ததில்லை.

ஆனால்
உன் சாபம் பலித்துவிட்டது.
”எங்க காலத்துல மாதிரி
இருட்டுல இருந்தா தெரியும்..
உங்க லச்சணம்”

அன்று நீ சொன்னதை
நினைத்து எக்காளித்தேன்.

உன் சாபம்
பலிக்கிறது தாத்தா!

இப்பதான்
கரண்டுல
கை வச்சிருக்கானுங்க!
...
மாட்டுவண்டிப்பயணமும்
கண்ணுக்குத் தெரியுது.!

”இப்படியே போனா...
சோத்துக்கு.....”
என்று ஒரு சாபம் கொடுத்தாயே?

அதை நினைத்தால்..
இப்பவே ’பக்’கென்கிறது..!

Comments

  1. சோத்துக்கு.....? 'திக்' என்று இருக்கிறது...!

    ReplyDelete
  2. சோத்துக்கு.....”


    என்ன அண்ணே . . .



    இப்டி தடாலடியா கிளம்பிட்டிங்க . . .

    ReplyDelete
  3. ஆனால்
    உன் சாபம் பலித்துவிட்டது.
    ”எங்க காலத்துல மாதிரி
    இருட்டுல இருந்தா தெரியும்..
    உங்க லச்சணம்”
    தத்தா சொன்னா சரியா இருக்கும்

    ReplyDelete
  4. அன்பின் சுரேகா சுந்தர் - இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !