2008ன் தீபாவளியை.....
2008ன் தீபாவளியை
இனிதாகக்கொண்டாடினோம்.
திரையரங்குகளில்
எங்க ஊர் ரசிகர் கூட்டம்
அம்மாவுக்கு மோர் விடினும்
கட் அவுட்டுக்கு பீர் விட்டாலும்,
சென்ற ஆண்டு
20000 புள்ளிகளில் இனித்துப்போட்ட
பங்குச்சந்தை கோலம்
8000 புள்ளிக்கோலமாய், இளித்துக்கொண்டே
சுருங்கினாலும்,
சட்டைப்பையில் பணம் கொண்டு சென்று
கைப்பையில் வாங்கியவர்,
கைப்பையில் பணம் கொண்டு சென்று
சட்டைப்பையில் தக்காளி வாங்கினாலும்,
கடன்பட்டார் நெஞ்சம் போல்
கலங்கினார் இலங்கை வேந்தன் என்று
எழுதிய சமூகம்,
கடன்பட்டால் போதும் !
தள்ளுபடி காப்பாற்றும்
என்ற தரத்துக்கு வந்தாலும்,
தமிழனுக்கு குரல் கொடுத்தால்
இறையாண்மை என்ற பெயரில்
ஆண்மைக்குறைப்பு அறுவைசிகிச்சை
நடந்தாலும்,
இருண்ட காலம் என்ற ஒன்றை
இன்றே காட்டுகிறோம் என்று
இயன்றவரை முயற்சி செய்யும்
அரசின்கீழ் இன்வர்ட்டர் போட்டு வாழ்ந்தாலும்,
2008ன் தீபாவளியை
இனிதாகக்கொண்டாடினோம்.!
இப்போதுதான் நாங்கள்
சகிப்புத்தன்மை என்ற பெயரில்
சத்தற்றுப்போய்விட்டோம்
அன்றொரு நாள்
அக்கிரமம் செய்த
நரகாசுரனை நசுக்கித்தான்
இந்தத்திருநாளுக்கு வித்திட்டோம்!
என்றாவது ஒருநாள்
மீண்டும் வெற்றி பெறுவோம் !
ஏனெனில்
எங்களுடன் ஹிதேந்திரனும்
ராதாகிருஷணனும் இறந்தும்,
இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்!
எங்கள் மனிதநேயம்
அந்த நாளில்
மகத்தான உலகம் காட்டும்!
//எங்களுடன் ஹிதேந்திரனும்ராதாகிருஷணனும் இறந்தும்,இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்!
ReplyDeleteஎங்கள் மனிதநேயம்அந்த நாளில் மகத்தான உலகம் காட்டும்!//
ராதாகிருஷ்ணனின் உடல் உறுப்புகள்
1. இதயம்
2. 2 சீறுநீரகங்கள்
3. கல்லீரல்
மற்றும்
தோல் ஆகியவை கொடையாக பெறப்பட்டு அதில் ஒரு சிறுநீரகமும் தோலும் அரசு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.
--
கொடையாக பெறப்படும் உறுப்புகளினால் பலன் பெறப்போவது தனியார் மருத்துவமனை பிணியாளர்கள் மட்டுமல்ல, அரசு மருத்த்வமனை பிணியாளர்களும் தான்
அன்பின் சுரேகா
ReplyDeleteஇயல்பான ஆதங்கம் கவிதை வடிவினில், கொதிக்கும் எழுத்துகளில் வெடிக்கும் கவிதையாக வந்திருக்கிறது.
என்ன செய்வது - இத்தனை துன்பங்களுக்கும் இயலாமைகளுக்கும் நடுவேயும் நல்ல நாட்கள் கொண்டாடத்தானே வேண்டும்.
வங்கியைச் சார்ந்த எனக்குப் பிடித்த வரிகள் :
//கடன்பட்டார் நெஞ்சம் போல்கலங்கினார் இலங்கை வேந்தன் என்றுஎழுதிய சமூகம்,கடன்பட்டால் போதும் !தள்ளுபடி காப்பாற்றும்என்ற தரத்துக்கு வந்தாலும்,//
தங்க்ஸூக்குப் பிடித்த வரிகள் :
//சட்டைப்பையில் பணம் கொண்டு சென்று கைப்பையில் வாங்கியவர்,கைப்பையில் பணம் கொண்டு சென்றுசட்டைப்பையில் தக்காளி வாங்கினாலும்,//
தீபாவளி நல்வாழ்த்துகள்
//தமிழனுக்கு குரல் கொடுத்தால்
ReplyDeleteஇறையாண்மை என்ற பெயரில்
ஆண்மைக்குறைப்பு அறுவைசிகிச்சை
நடந்தாலும்,//
மனசு நொம்ப வலிக்குது.... :-o(
சகிப்புத்தன்மைகென்று நோபிள் பரிசு இருந்தால் நம் இந்திய மக்கள் அனைவருக்கும் குடுக்கனும் :)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதம்பீ,
ReplyDeleteபொளந்து கட்டிட்டியேடா. வரிக்கு வரி பஞ்ச், எல்லா வரிகளும் ஆழமாக உட்செல்கிறது என்றாலும், கீழே உள்ள வரிகள் இன்றைய நிலையை அப்படியே படம்பிடித்து காட்டியிருக்கிறது :(...
//தமிழனுக்கு குரல் கொடுத்தால்
இறையாண்மை என்ற பெயரில்
ஆண்மைக்குறைப்பு அறுவைசிகிச்சை
நடந்தாலும்,//
வாங்க புருனோ சார்!
ReplyDeleteவருகைக்கும் தகவலுக்கும்
நன்றி !
//இயல்பான ஆதங்கம் கவிதை வடிவினில், கொதிக்கும் எழுத்துகளில் வெடிக்கும் கவிதையாக வந்திருக்கிறது. //
ReplyDeleteவாங்க சார்!
எப்படியாவது போகட்டும்னு
இருக்க முடியலை!
ஒரு கவிதையாவது எழுதி
ஆதங்கத்தை தீத்துக்க வேண்டியிருக்கு!
அதான்..
கொஞ்சம் பொங்கிட்டேன்...! :)
// பழமைபேசி said...
ReplyDeleteமனசு நொம்ப வலிக்குது.... :-o(//
வாங்கண்ணா!
ஆமாங்ண்ணா!
// புதுகை.அப்துல்லா said...
ReplyDeleteசகிப்புத்தன்மைகென்று நோபிள் பரிசு இருந்தால் நம் இந்திய மக்கள் அனைவருக்கும் குடுக்கனும் :)//
வாங்க!
கண்டிப்பா! விருது கொடுத்தே ஆகணும்..!
அதுவே சவுக்கடியா இருந்தாக்கூட உத்தமம்!
அதையும் சகிப்புத்தன்மையோட ஏத்துக்குவோம்ல?
:)
thekkikattan|தெகா said...
ReplyDeleteதம்பீ,
//பொளந்து கட்டிட்டியேடா. வரிக்கு வரி பஞ்ச், எல்லா வரிகளும் ஆழமாக உட்செல்கிறது என்றாலும், கீழே உள்ள வரிகள் இன்றைய நிலையை அப்படியே படம்பிடித்து காட்டியிருக்கிறது :(...//
வாங்க அண்ணா!
மிக்க நன்றி அண்ணா!
ஏதோ தோணினதை எழுதினேன்...!
இப்புடீ ஏத்திவுட்டு ஏத்திவுட்டுதான் ரணகளமாகிக்கிடக்கு! :))))
ellar manathil irukum feelingsai alaga solliirukeenga
ReplyDeletevalthukal thaanaithalaivare
//என்றாவது ஒருநாள்
ReplyDeleteமீண்டும் வெற்றி பெறுவோம் !
ஏனெனில்
எங்களுடன் ஹிதேந்திரனும்
ராதாகிருஷணனும் இறந்தும்,
இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்!//
சூப்பரப்பு.. தீபாவளி வாழ்த்துக்கள்!
//என்றாவது ஒருநாள்
ReplyDeleteமீண்டும் வெற்றி பெறுவோம் !
ஏனெனில்
எங்களுடன் ஹிதேந்திரனும்
ராதாகிருஷணனும் இறந்தும்,
இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்!
எங்கள் மனிதநேயம்
அந்த நாளில்
மகத்தான உலகம் காட்டும்!//
Hats off! வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை.
வாழ்த்துக்கள் சுரேகா!
ஆமாம்...மனித நேயம் மனிதர்களிடம் இன்னும் கொஞ்சம் இருக்கிற்து.
ReplyDeleteசந்திராயன் அனுப்பியது உண்மையில் தீபாவளி பரிசுதான்
ஆழமான கருத்து,அழகான கவிதை.. அர்த்தமுள்ள வார்த்தைகள்..
ReplyDeleteகலக்கல் சார்..(உங்களை தொடர் பதிவுக்கு கூப்பிட்டுருந்தேன்..(மலர்ந்த நினைவுகள்)..)
நர்சிம்
சூப்பரப்பு..
ReplyDeleteதாமதமான தீபாவளி வாழ்த்துக்கள்!
nalla irukku
ReplyDeleteஅன்புடன் வந்து வாழ்த்திய
ReplyDeleteபுதுகைத்தென்றல்
பொடியன் சஞ்சய்
ராமலஷ்மி
உமா குமார்
நர்ஸிம்
மங்களூர் சிவா
சாமான்யன்
அனைவருக்கும் நன்றிகள் பல!