அவனைக் கடந்த சவீதாக்கள்
சவீதா - 1
அவன்...
மிகச்சரியான
வயதில்
அந்த இணைய நிலையத்தை
நடத்தும்
நண்பருக்கு உதவ
தினசரி செல்ல ,
அங்கு வந்த அவளுக்கு
மின்னஞ்சல் பார்ப்பதற்கு
இவனும் அன்பாய்
உதவப்போக
மின்னஞ்சலுடன் சேர்த்து
அவனையும் பார்க்க
ஆரம்பித்தாள் அவள்!
ஒருநாள் பேச ஆரம்பித்தார்கள்!
தன் தந்தையின் மறுமணமும்
தாயாரின் சிரமங்களும்
தனக்குள் ஒரு வெறியை
தாமாக ஊட்டியதை
கவலையுடன் சொன்னாள் அவள்!
அவளது லட்சியமே
மாவட்ட ஆட்சித்தலைவியாய்
மதிப்பாக வலம்வருவதுதான்!
அதற்கான முயற்சிகள்தான்
இணையம் தேடும் காரணமும்.!
அவனுக்கு அவளைவிட
அவளது லட்சியத்தைப்பிடித்துவிட்டது.
வாழ்வில் அனைத்து சுகமிருந்தும்
சோம்பித்திரிபவர் மத்தியிலே
காப்பாற்ற மனிதரின்றி
கவலைகொண்ட குடும்பத்திலே
கலெக்டராகவேண்டுமென்ற
கனவுகாணும் இவளை
காதலித்தால் என்னவென்று
மனதுக்குள் நினைத்துவைத்தான்.
அவளுக்கும் இவன்மேல்
ஒருவித அபிமானம்
இயல்பாக வந்ததால்
அவனைவிட்டு தனக்கு
பாடங்கள் சொல்லித்தர
பணிவாகக்கேட்டுக்கொண்டாள்
இவளது லட்சியத்தை
இமயமாய் ரசித்தவனுக்கு
அதற்கான உதவி செய்ய
வாய்ப்பொன்று கிடைத்ததானால்
பூரித்துப் பொங்கிப்போனான்.
இவனது பாடத்தையும்
இவனையும் சேர்த்து
கவனித்த அவளுக்கு
இவன்கொண்ட காதலும் புரிந்தே போனது.
அவளுக்குள்ளும் அவ்வெண்ணம்
அகண்டு போய் நின்றதனால்
அவளாகக் கேட்டுவிட்டாள்.
'என்னைத்திருமணம் செய்துகொள்வாயா?'
'இதற்குத்தானடீ இத்தனை நாளாய்க்
காத்திருந்தேன் என்றுதான் பதில் சொன்னான்.
அன்பும் அக்கறையும்
அழகாகக் கலந்துவைத்து
ஆழமாகக்காதலித்தார்கள்.
அவள் பேசினாள்.
அவன் பேசினான்.
அவர்கள் பேசினார்கள்
காதல் பேசியது.
கொஞ்சம் அதிக நேரம் பேசினாலும்
அவனுக்குள் அலாரம் அடித்து
அவளைப்போய் படிக்கச்சொல்வான்.
அந்த ஆண்டின் முதன்மைத்தேர்வில்
அவளுக்குக்கிடைத்தது தோல்வி!
அதற்கான அடிப்படைக்காரணம்
அவனுக்குத்தெரிந்தது அப்பட்டமாய்!
இவர்களது காதலால் அவள்
செலவழித்த நேரம்..!
அவளிடம் தெளிவாகச்சொன்னான்.
உனக்கு முக்கியம் உன் லட்சியம்
என்னிடம் பேச வாழ்க்கையே உள்ளது.
தொலைபேசலை குறைத்துக்கொள்வோம்.
என்னைக்கூட விட்டுவிடு
குறிக்கோளை எட்டிவிடு!
சொன்னால் அவள் கேட்கவில்லை!
தொல்லை தர ஆரம்பித்தாள்.
எந்தப்படிப்பை நேசித்தாளோ
அதனை வெறுக்கத்தொடங்கிவிட்டாள்
அவனுக்கோ காதல்மீது
பயமே வந்து சென்றது!
அவளுடைய அழைப்புகளை
நிராகரிக்க ஆரம்பித்தான்.!
அவளுக்குக்கோபம் அதிகமாக வந்தது.
நான் என்ன அலைகிறேனா?
என் லட்சியம் பற்றி எனக்குத்தெரியும்!
உன் லட்சியம் புரிந்துவிட்டது.
என்னை விட உனக்கு
என் பதவிதான் கண்!
அதனால்தான் நீ
அதை அடையத் தூண்டுகிறாய்!
என்றெல்லாம் ஏளனமாய்
எடுத்தெரிந்து பேசிவிட்டு
இனிமே உன் சகவாசம்
எனக்குத்தேவையில்லை!
என்னால் உலகம் மெச்ச
உயர்வாக வரமுடியும்.
அந்த நாளில் உனக்கு
அவமானங்கள் தருகிறேன்.
என்று சொல்லி ஆத்திரமாய்
அவனைவிட்டுச்சென்றுவிட்டாள்.
அந்தக்காதலுக்கு
அன்று அஸ்தமன தினம்!
ஆனால் ஆச்சர்யம்
அன்றுதான் காதலர் தினம்!
அவனுக்குள் அடுக்கடுக்காய்
சங்கடங்கள் தோன்றினாலும்
ஒரு பெண்ணின்
வீழ்ச்சிக்கு நாம் காரணம் இல்லையென்று
சந்தோஷமாய் நினைத்துக்கொண்டு
வாழ்க்கை ஓட்டத்தில்
கரைந்துவிட்டான்.
என்றாவது ஒருநாள்
அவளுக்குத்தெரியவரும்!
வெற்றிபெற்ற அவளுக்கு
பின்னணியாய் இருந்துவைத்து
இடையிலே வந்தவன்
இடையிலேயே சென்றவன்
எரியும் லட்சிய வெறிக்கு
கொஞ்சம் எண்ணெய்
ஊற்றிச்சென்றானென்று !
இன்றுவரை இருவரும்
இயல்பாக வாழ்கிறார்கள்.
அவனும் ஒரு பதவியிலே
அழகு வாழ்க்கை வாழ்கிறான்.
அவன் தன்னை ஒதுக்கினானென்று
இன்றுவரை நினைத்துக்கொண்டு
அவளும் இங்கு வாழ்கிறாள்
ஆனால் அவள் சாதித்துவிட்டாள்
நீண்ட நாள் போராட்டத்தில்
அவள் இன்று
ஆட்சித்தலைவி!
அதற்காக அவள் படும்
மகிழ்ச்சி குறைவாகும் !
அவன் மகிழ்ச்சி ஒப்பிட்டால்!
அப்பாடி!
ஒருவருக்கு
உதவி தர இயலாவிடினும்
இடையூராய் இல்லாமல்
போனோமே என்று
இன்றுவரை மகிழ்ந்திருக்கிறான்.!
அடுத்த சவீதா அவனுக்காக
அங்கும் வந்து காத்திருக்கிறாள்!
கவிதை வடிவில் ஒரு சிறுகதை??? கடைசி இரண்டு வரிகள் சூப்பர்.
ReplyDeleteவாங்க வாங்க!
ReplyDeleteஆள் யாரும் காணுமேன்னு
பாத்துக்கிட்டிருந்தேன்.
நன்றிங்க!
ஒரு ரகசியம் சொல்லவா?
ReplyDeleteஇது ஒரு உண்மைச்சம்பவத்தை
அடிப்படையா
வச்சு எழுதினது!
:)
ஆங்காங்கே நடக்கிறதுதானே. ஆனால், சொல்லுற விதத்திலதான் நீ நிக்கிற. :). நல்லாருக்கு.
ReplyDeleteஆமா, என் காதில மட்டும் சொல்லேன். யாரு அவுக!! :-))
வாங்கண்ணா...வாங்க!
ReplyDeleteஆஹா..
அதுக்காக இவ்ளோ பெரிய காதை வச்சுக்கிட்டு கேட்டா!!!
எப்புடி சொல்றது?
மேலும் சம்பந்தப்பட்டவுங்க ரெண்டுபேரும்
சங்கடப்படுவாங்கள்ல?
அவர்க்கிட்ட அனுமதி கேட்டுத்தான்
இதை எழுதினேன்.
மேலும்
அவுங்க (சவீதா)
இப்ப வலைப்பூவெல்லாம்
படிக்க ஆரம்பிச்சிருக்காங்களாம்.
அதுனால இது
ஒரு நாள்கடந்த தூதாகவோ
உண்மை உரைப்பானாகவோ
இருக்கலாம் இல்லையா?
எல்லாம் ஒரு பொது சேவைதான்..!
நல்லா இருக்கு. உண்மைனு தெரியறப்ப சந்தோசமாவும் இருக்கு.
ReplyDeleteநல்லா இருக்கு.
ReplyDeleteநல்ல கதை!! கவிதை!!
ReplyDelete//அந்தக்காதலுக்கு
அன்று அஸ்தமன தினம்!
ஆனால் ஆச்சர்யம்
அன்றுதான் காதலர் தினம்!//
அருமை!!
இது நான் நிறைய பார்த்த உண்மை.
ReplyDeleteகோச்சிங் சென்டர்களில் தொடங்கும் காதல்கள் பெரும்பாலும் இலட்சிய இடையூறாகப் போயிருக்கின்றன.
நீங்கள் சொன்னதும் நடந்துள்ளது.
ஆனால் இரண்டையும் குழப்பிக்கொண்டால்
தோல்வி இரண்டுக்குமே!
இருவருக்குமே!
வயதும்,வாய்ப்பும் திரும்ப வருவதில்லை.
சில பேர்தான் காதலையும்,குறிக்கோளையும் ஒரு சேரக் கையாண்டு வெற்றி கண்டுள்ளனர்.
இடையூராய்" எழுத்துப் பிழையா?
ReplyDelete--
அன்பும் அக்கறையும்
ReplyDeleteஅழகாகக் கலந்துவைத்து
ஆழமாகக்காதலித்தார்கள்.
அவள் பேசினாள்.
அவன் பேசினான்.
அவர்கள் பேசினார்கள்
காதல் பேசியது.
Romba alagana varigal...
//அந்தக்காதலுக்கு
அன்று அஸ்தமன தினம்!
ஆனால் ஆச்சர்யம்
அன்றுதான் காதலர் தினம்...
yengiyo idikkuthe?......
//மங்களூர் சிவா said...
ReplyDeleteநல்லா இருக்கு. உண்மைனு தெரியறப்ப சந்தோசமாவும் இருக்கு.//
வாங்க சிவா..
மிக்க நன்றி!
//Madurai citizen said...
ReplyDeleteநல்லா இருக்கு.//
வாங்க மதுரை சிட்டிசன்...
உங்க முதல் வருகைக்கும்
வாழ்த்துக்கும் நன்றிங்க!
// ஜி said...
ReplyDeleteநல்ல கதை!! கவிதை!!
அருமை!!//
வாங்க ஜி!
நன்றிங்க!
//uma kumar said...
ReplyDeleteஇது நான் நிறைய பார்த்த உண்மை.
கோச்சிங் சென்டர்களில் தொடங்கும் காதல்கள் பெரும்பாலும் இலட்சிய இடையூறாகப் போயிருக்கின்றன.
நீங்கள் சொன்னதும் நடந்துள்ளது.
ஆனால் இரண்டையும் குழப்பிக்கொண்டால்
தோல்வி இரண்டுக்குமே!
இருவருக்குமே!
வயதும்,வாய்ப்பும் திரும்ப வருவதில்லை.
சில பேர்தான் காதலையும்,குறிக்கோளையும் ஒரு சேரக் கையாண்டு வெற்றி கண்டுள்ளனர்.//
வாங்க உமா.
நலமா?
அழகான பின்னூட்டத்துக்கு நன்றிங்க!
கண்டிப்பாக நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை!
மேலும் இருவருமே ஒரே லட்சியத்துடன் செயல்பட்டால் பிரச்னை இல்லை!
//chinna mayil said...
ReplyDeleteRomba alagana varigal...//
வாங்க ! நன்றிங்க!
//yengiyo idikkuthe?//
அப்ப கொஞ்சம் தள்ளி உக்காருங்க ! :)
VIBIN Said... (mail)
ReplyDeleteSavitha ...unmai sambavamagathan irukka vendum entu padikkumpothu thontiyathu..
manathil yetho nerudiyathu..
avarin unmaiyana akkaraiyai purinthukolla vendum
nalla manithar - suyanalam illaathu..
சில பேர்தான் காதலையும்,குறிக்கோளையும் ஒரு சேரக் கையாண்டு வெற்றி கண்டுள்ளனர்.
appadi ivarkalum irunthirukka koodatha
intha kavithai varamalea poyirukkumo..
tholviyil vertti..
வாங்க விபின் !
ReplyDeleteமிக்க நன்றிங்க!
அவருக்கான உங்கள் அக்கறையை அப்படியே அவருக்கும் சொல்லிவிடுகிறேன்.
//அப்பாடி!ஒருவருக்கு உதவி தர இயலாவிடினும்இடையூராய் இல்லாமல்போனோமே //
ReplyDeleteம்ம் ....இது புரியாமல் எவ்வ்ளோ கஷ்டம்?ரொம்ப அருமையான பதிவு...நமக்குப் பிடித்தவர்களின் உயர்வில்தான் எத்தனை சந்தோஷம்?
அன்புடன் அருணா
கதையும் கவிதையும் கலந்து ...
ReplyDeleteபேஷ் பேஷ் நொம்ப நன்னாயிருக்கு..
நல்லா இருக்கு. உண்மைனு தெரியறப்ப சந்தோசமாவும் இருக்கு.
ReplyDeleterepeatttu
நல்ல க(வி)தை!!
ReplyDeleteNalla Nadai.. Enakkum anubavam undu ithu maathiri..
ReplyDeleteRaam
உண்மைச் சம்பவமா? சோகத்தை அசை போடுவதும் சுகமே
ReplyDelete