'அட்டு' பாத்தது ஒரு குத்தமா?
ஐசிஐசிஐ பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணும்போது 2002வது வருஷம், என்னமா பம்மி பம்மி கவலையே படாதீங்க சார்..எல்லாம் சூப்பரா இருக்கும்னு போஜா காட்டினாய்ங்க! கொஞ்சம் கொஞ்சமா கொள்ளையடிச்சவய்ங்க இப்ப பல்க்காவே கொள்ளையடிக்க ஆரம்பிச்சுட்டய்ங்க!
செக் புக்கு ரெக்வெஸ்ட்டுன்னு ஆன்லைன்ல பண்ணின உடனே ரெண்டே நாள்ல வந்துடும்.அட இவ்வளவு சூப்பரா வேலை பாக்குறாங்களேன்னு புளகாங்கிதம் அடைஞ்சுக்கிட்டிருந்தேன். அப்பன்னு பாத்து அதுல 'அட்டு பாரு' (at par) ன்னு போட்டிருக்கும். எந்த ஊருக்கு வேணும்னாலும் குடுத்துக்கலாம்னு சொன்னாய்ங்க! அதை 'நம்பி' நானும் பல ஊருக்கு செக் குடுத்தேன். அவுங்களும் சந்தோசமா என் பணத்தை எடுத்துக்கிட்டிருந்தாங்க! (செக்கை கூரியர்லதான் அனுப்பணும்). அட அட்டு பாரு ...அட்டு பாருன்னு நானும் எல்லார்க்கிட்டயும் பீத்திக்கிட்டு திரிஞ்சேன்.
எப்ப பேமெண்ட் பத்தி பேச்சு வந்தாலும் ...யூ டோண்ட் ஒர்ரி சார்..! ஐ ஹாவ் அட் பார் செக்..ன்னு பண்ணின லந்து கொஞ்சமா நஞ்சமா?
அதுக்கு வச்சாய்ங்க ஆப்பு இந்த ஸ்டேட்மெண்டை அனுப்பி ...
அந்த மஞ்ச கலர்ல இருக்குறதுதான் என்கிட்டேருந்து அட் பாருக்காக கொள்ளையடிச்ச ஆதாரம். நான் குடுத்த செக்குக்கெல்லாம் டிடியா எடுத்திருந்தாலே அவ்வளவு செலவு ஆகியிருக்காது. ஒரு சலுகை குடுக்குறமாதிரி குடுத்து காசு புடுங்கும் கயமைத்தனம் எங்கடா கத்துக்கிட்டீங்க?
அட கொள்ளைக்காரய்ங்களா?
நானே செக்கை அனுப்பிடறேன்.
அதை அவங்க கொண்டுபோய் பேங்கில இருந்து பணமா எடுத்துக்கவோ, கணக்கில் போடவோ செஞ்சுக்கிட்டிருந்தாங்க. வேலையும் சுபமா , சுலபமா முடிஞ்சுது.
ஆனா இவய்ங்க அட்டு பாரு ன்னு தமிழ்லதான் எழுதியிருக்கானோன்னு தோணுது! அட்டுன்னாலே ஒண்ணுத்துக்கும் ஆகாத மொக்க மேட்டருக்குத்தான் சொல்லுவாங்க்! அப்ப இதுவும் அட்டு தானே? அதைப்போய் பாரு பாருன்னு கூவி விக்கிற லச்சணம் வேற!
உன் பேங்க் கணக்கு உள்ளவங்களுக்கு, உன் பேங்க் செக் குடுத்தது ஒரு குத்தமா?
என் சம்மதமில்லாம என் கணக்கிலே இருந்து நீ பாட்டுக்கும் கொள்ளையடிச்சுக்கிட்டே போற?
கம்ப்யூட்டரில் எந்த ஊரா இருந்தாலும் ஏத்தப்போற!
அந்த செக்கை எங்க ஊர்ல உள்ள உங்க ஊழியர் செய்யற அதே வேலைதான் இது.!
அதுக்காக இவ்வளவு கொள்ளையடிச்சுத்தான் வயித்த கழுவணும்னு இல்ல!
இந்தமாதிரி எத்தன ஆயிரம்பேர ஏமாத்திக்கிட்டிருக்காய்ங்க!
எல்லாரும் சும்மா இருக்கறது நல்லா இருக்காது! நான் ஒரு மெயிலத்தட்டிவுட்டுட்டு...கேஸும் போட்டுட்டேன்.
இதுக்காக அக்கவுண்ட்ட மூடிக்கிட்டு போகக்கூடாது. என்னதான் நடக்குதுன்னு பாப்போம்.
உங்களுக்கும் இந்த மாதிரி நடந்திருந்தா சொல்லுங்க! மேஞ்சுருவோம்.!
செக் புக்கு ரெக்வெஸ்ட்டுன்னு ஆன்லைன்ல பண்ணின உடனே ரெண்டே நாள்ல வந்துடும்.அட இவ்வளவு சூப்பரா வேலை பாக்குறாங்களேன்னு புளகாங்கிதம் அடைஞ்சுக்கிட்டிருந்தேன். அப்பன்னு பாத்து அதுல 'அட்டு பாரு' (at par) ன்னு போட்டிருக்கும். எந்த ஊருக்கு வேணும்னாலும் குடுத்துக்கலாம்னு சொன்னாய்ங்க! அதை 'நம்பி' நானும் பல ஊருக்கு செக் குடுத்தேன். அவுங்களும் சந்தோசமா என் பணத்தை எடுத்துக்கிட்டிருந்தாங்க! (செக்கை கூரியர்லதான் அனுப்பணும்). அட அட்டு பாரு ...அட்டு பாருன்னு நானும் எல்லார்க்கிட்டயும் பீத்திக்கிட்டு திரிஞ்சேன்.
எப்ப பேமெண்ட் பத்தி பேச்சு வந்தாலும் ...யூ டோண்ட் ஒர்ரி சார்..! ஐ ஹாவ் அட் பார் செக்..ன்னு பண்ணின லந்து கொஞ்சமா நஞ்சமா?
அதுக்கு வச்சாய்ங்க ஆப்பு இந்த ஸ்டேட்மெண்டை அனுப்பி ...
அந்த மஞ்ச கலர்ல இருக்குறதுதான் என்கிட்டேருந்து அட் பாருக்காக கொள்ளையடிச்ச ஆதாரம். நான் குடுத்த செக்குக்கெல்லாம் டிடியா எடுத்திருந்தாலே அவ்வளவு செலவு ஆகியிருக்காது. ஒரு சலுகை குடுக்குறமாதிரி குடுத்து காசு புடுங்கும் கயமைத்தனம் எங்கடா கத்துக்கிட்டீங்க?
அட கொள்ளைக்காரய்ங்களா?
நானே செக்கை அனுப்பிடறேன்.
அதை அவங்க கொண்டுபோய் பேங்கில இருந்து பணமா எடுத்துக்கவோ, கணக்கில் போடவோ செஞ்சுக்கிட்டிருந்தாங்க. வேலையும் சுபமா , சுலபமா முடிஞ்சுது.
ஆனா இவய்ங்க அட்டு பாரு ன்னு தமிழ்லதான் எழுதியிருக்கானோன்னு தோணுது! அட்டுன்னாலே ஒண்ணுத்துக்கும் ஆகாத மொக்க மேட்டருக்குத்தான் சொல்லுவாங்க்! அப்ப இதுவும் அட்டு தானே? அதைப்போய் பாரு பாருன்னு கூவி விக்கிற லச்சணம் வேற!
உன் பேங்க் கணக்கு உள்ளவங்களுக்கு, உன் பேங்க் செக் குடுத்தது ஒரு குத்தமா?
என் சம்மதமில்லாம என் கணக்கிலே இருந்து நீ பாட்டுக்கும் கொள்ளையடிச்சுக்கிட்டே போற?
கம்ப்யூட்டரில் எந்த ஊரா இருந்தாலும் ஏத்தப்போற!
அந்த செக்கை எங்க ஊர்ல உள்ள உங்க ஊழியர் செய்யற அதே வேலைதான் இது.!
அதுக்காக இவ்வளவு கொள்ளையடிச்சுத்தான் வயித்த கழுவணும்னு இல்ல!
இந்தமாதிரி எத்தன ஆயிரம்பேர ஏமாத்திக்கிட்டிருக்காய்ங்க!
எல்லாரும் சும்மா இருக்கறது நல்லா இருக்காது! நான் ஒரு மெயிலத்தட்டிவுட்டுட்டு...கேஸும் போட்டுட்டேன்.
இதுக்காக அக்கவுண்ட்ட மூடிக்கிட்டு போகக்கூடாது. என்னதான் நடக்குதுன்னு பாப்போம்.
உங்களுக்கும் இந்த மாதிரி நடந்திருந்தா சொல்லுங்க! மேஞ்சுருவோம்.!
இத ஒரு பொழப்பாவே பண்றாங்கப்பு. எனக்கும் இந்த பேங்குலதான் அக்கவுண்ட் இருக்குது ஆனா நான் யாருக்கும் 'அட்டு பாரு' செக்கு இதுவரைக்கும் குடுக்கலை.
ReplyDeleteதப்பிச்சேன்.
sariya soniga...i aslo had the same experience, when I try to automate the load payment for my HDFC account, they asked Rs.100.00 for a signature from Branch Manager....to say "I am havving a ccount with them"
ReplyDeletesurekaa sir!
ReplyDeleteNowadays this particular bank services are also becoming little poor. But they are charging more.
Ungalamathiri everyone should claim their right or take some actions like this. I appreciate u for this. We should try to do some thing, inspite of our busy time.
i am also having one thing. But not in the bank field. It is in the medical side. Is the doctor and the patient are coming to
consumer cader?.
i want your advice as a consumer care secretary.
best wishes and
keep going!...
நீங்க வேற , எப்படியாச்சும் லாபம் பாக்கணுமில்ல, கன்ஸ்யூமர் கோர்ட்ல போய்க்கேட்டுப்பாருங்க. இந்த மாதிரி வசூலிப்போம் அப்படீன்னு முதல்லியே உங்க கிட்ட சொல்லலேன்னா, இந்தப்பணத்தை திருப்பி வாங்க முடியாது.
ReplyDeleteஇப்படிப் பலவிடயங்கள் நடக்குது. இனி சும்மா விடமாட்டோம்ல. அதான் நீங்க இருக்கீங்களே. உங்களுக்கு சொல்லி ஒரு கம்ப்ளையிண்ட் லான்ச் பண்ணிடுவோம்.
ReplyDeleteஆனாலும் நல்ல தகவலுக்கு மக்களுக்கு கொடுத்ததுக்கு மிக்க நன்றி.
மங்களூர் சிவா said...
ReplyDelete//இத ஒரு பொழப்பாவே பண்றாங்கப்பு. எனக்கும் இந்த பேங்குலதான் அக்கவுண்ட் இருக்குது ஆனா நான் யாருக்கும் 'அட்டு பாரு' செக்கு இதுவரைக்கும் குடுக்கலை.
தப்பிச்சேன்.//
நல்லவேளை குடுத்துறாதீங்க!
அப்புறம் சொத்தை புடுங்கிட்டுத்தான் வுடுவாய்ங்க!
Kannan Seetharamn said...
ReplyDelete//sariya soniga...i aslo had the same experience, when I try to automate the load payment for my HDFC account, they asked Rs.100.00 for a signature from Branch Manager....to say "I am havving a ccount with them"//
அடப்பாவிகளா?
இதுவேறயா? என்ன கொடுமைசார் இது! இன்னும் எதுக்கெல்லாம் காசு கேப்பாய்ங்களோ!
chinna mayil said...
ReplyDelete//i am also having one thing. But not in the bank field. It is in the medical side. Is the doctor and the patient are coming to
consumer cader?.
i want your advice as a consumer care secretary. //
கண்டிப்பா...காசு வாங்கிக்கிட்டு எந்த வேலை பாத்தாலும் அது நுகர்வோருக்குள்ளதான் வரும். பிரச்னையை சொல்லுங்க..என்ன செய்யலாம்னு பாப்போம்.
//சின்ன அம்மிணி said...
ReplyDeleteநீங்க வேற , எப்படியாச்சும் லாபம் பாக்கணுமில்ல, கன்ஸ்யூமர் கோர்ட்ல போய்க்கேட்டுப்பாருங்க. இந்த மாதிரி வசூலிப்போம் அப்படீன்னு முதல்லியே உங்க கிட்ட சொல்லலேன்னா, இந்தப்பணத்தை திருப்பி வாங்க முடியாது.//
நுகர்வோர் விழிப்புணர்வு சங்கத்தில் அதுக்கான நடவடிக்கை எடுத்துக்கிட்டிருக்கோம். பாப்போம். என்ன லொள்ளு பண்றாங்கன்னு!
புதுகைத் தென்றல் said...
ReplyDelete//இப்படிப் பலவிடயங்கள் நடக்குது. இனி சும்மா விடமாட்டோம்ல. அதான் நீங்க இருக்கீங்களே. உங்களுக்கு சொல்லி ஒரு கம்ப்ளையிண்ட் லான்ச் பண்ணிடுவோம்.
ஆனாலும் நல்ல தகவலுக்கு மக்களுக்கு கொடுத்ததுக்கு மிக்க நன்றி.//
வாங்க.வருகைக்கு நன்றிங்க!
கண்டிப்பா..எந்த பிரச்னையா இருந்தாலும் ஒரு கை பாத்துறலாம் வாங்க!
அந்த பேங்க் இருக்கிற தெரு பக்கம் கூட நான் போறது இல்லைங்க. ஆளாளுக்கு சொல்லுற நொந்த கதை எல்லாம் கேக்குறப்போ தலை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......
ReplyDelete//ஆனா இவய்ங்க அட்டு பாரு ன்னு தமிழ்லதான் எழுதியிருக்கானோன்னு தோணுது! அட்டுன்னாலே ஒண்ணுத்துக்கும் ஆகாத மொக்க மேட்டருக்குத்தான் சொல்லுவாங்க்! அப்ப இதுவும் அட்டு தானே?//
ReplyDeleteஹா..ஹா.. சுரேகா ,.. நீங்க சொல்லறத பாத்தா இது அட்டு பார் இல்ல.. ஆப்பு பார் மாதிரில்ல தெரியுது:P
//உங்களுக்கும் இந்த மாதிரி நடந்திருந்தா சொல்லுங்க! மேஞ்சுருவோம்.!//
ReplyDeleteகும்பலா சேந்து புலம்பிக்குவோம்ங்கறத உங்க ஊர்ல சுருக்கமா மேஞ்சுருவோம்ன்னு சொல்லுவாங்க போல.. :P
பதிவு நல்லாயிருக்கு மாமே..:)
//எல்லாரும் சும்மா இருக்கறது நல்லா இருக்காது! நான் ஒரு மெயிலத்தட்டிவுட்டுட்டு...கேஸும் போட்டுட்டேன்.
ReplyDeleteஇதுக்காக அக்கவுண்ட்ட மூடிக்கிட்டு போகக்கூடாது. என்னதான் நடக்குதுன்னு பாப்போம்.
உங்களுக்கும் இந்த மாதிரி நடந்திருந்தா சொல்லுங்க! மேஞ்சுருவோம்.!//
எனக்கு இந்த அனுபவம் கிடையாது.ஆனால் நிறையப் பேருக்கு இது மாதிரி நடந்து திட்டிட்டே போறதப் பார்த்திருக்கிறேன் நண்பரே.
நீங்கள் வழக்குப் பதிவு பண்ணியுள்ளது பாராட்டத்தக்க விடயம்.
முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் நண்பரே :)
அய்யய்யோ! அந்த கொடுமைய ஏன் சார் கேக்குறீங்க..
ReplyDeleteநானும் இப்படித்தானே சார் ஏமாந்து போனேன். நான் இப்போதான் சவூதி அரேபியாவுக்கு புதிதாய் வந்திருக்கேன். சரி சம்பாதிக்கும் பணத்தை செலவு செய்ய (Distribution) ஒரு NRI கணக்கு இருந்தால் நல்ல இருக்குமே என்று நினைத்து இந்த பாழாப்போன, ஊர் பணத்தை எல்லாம் விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கும் ஐ.சி.ஐ.சி.ஐ. திருட்டு வங்கியில் பணத்தை போட்டு ஏமாந்திட்டேன் சார்.
கணக்கு தொடங்கும் முன் அந்த பொண்ணு தினமும் போன் பண்ணி எப்படி சார் இருக்கீங்க. சாபிட்டீங்களா? எப்ப சார் விண்ணப்பம் அனுப்பறீங்க? எப்ப சார் டி.டி. அனுப்பறீங்க அப்பிடின்னு கேட்டுக்கிட்டே இருக்கும் சார். நானும் டி.டி எடுத்து அனுப்பி விட்டது தான் தாமதம் அதுக்கு அப்புறம் போனையே காணும். ஒன்றரை மாதத்துக்கு பிறகு அந்த பொண்ணு போன் பண்ணி உங்க கணக்கு ஓப்பன் பண்ணியாச்சு. இனிமே நீங்க தொடர்ந்து பணம் போடலாம் அப்பிடின்னு சொன்னது. முதல்லே போட்ட 20000 க்கே பதில் தெரியலையே? இன்னுமா? அப்பிடின்னுட்டு நான் பணம் எதுவும் போடவில்லை. ஒரு வாரத்திலேயே செக் புக், டெபிட் கார்டு ரெண்டும் வந்தது.
இது ரெண்டும் மட்டும் தான் வந்தது. நானும் மின்னஞ்சல் அனுப்பி கேட்டேன். கணக்கு தொடங்கியாச்சு. நான் என் கணக்கை கையாள வேண்டும் என்றால் அதற்கு இணைய பயனாளி அடையாளமும், கடவுச் சொல்லும் வேண்டுமே?. டெபிட் கார்டு பயன் படுத்த கடவுச் சொல் தெரிய வேண்டுமே?
ரெண்டு மூன்று தடவை பின்னாடி அனுப்புவோம். பின்னாடி அனுப்புவோம் அப்பிடின்னு பதில் வந்தது. அதுக்கு பின்னாடி நாங்க உங்களுக்கு அனுப்பி விட்டோம் வரலை இன்னா, re-issue பண்ண சொல்லி விண்ணப்பம் கொடுங்க அப்பிடின்னு சொன்னாங்க.
குறிப்பு: re-issue அப்பிடின்னாலே துட்டு தான்.
நான் என்ன பண்ணேன் சரி. நீங்க அனுப்பிட்டேன் அப்பிடின்னு சொல்றீங்க. அது ஒரு மாசம் ஆனாலும், ரெண்டு மாசம் ஆனாலும் வந்து தானே ஆகும். வரட்டும் அப்பிடின்னு சொன்னேன். உடனே அவன் இல்லே இல்லே, உங்களுக்கு அனுப்பின கடவுச் சொல் பன்னிரண்டு நாளில் பயன் படுத்தவில்லை என்றால் செயலிழக்கச் செய்துவிடுவோம் அப்பிடின்னான். சரி அனுப்பின air way bill நம்பர் கொடு ன்னா நாங்கள் சாதரண தபாலில் அனுப்பி வச்சிருக்கோம் அப்பிடின்னான்.
எங்கே?
சவூதி அரேபியாவுக்கு..
எங்கே இருந்து?
இந்தியாவில் இருந்து..
என்ன தபால்?
சாதாரண தபால்.
என்ன ஆவணம்?
இணைய பயனர் அடையாளமும், கடவுச் சொல்லும்.
எப்பிடி இருக்குது பாருங்க. கடைசி வரை வரவே இல்லை. எனக்கு என்னுடை பணத்தை கையாள வாய்ப்பும் கொடுக்க வில்லை. வேற வழி இல்லாமல் re-issue பண்ண விண்ணப்பித்தேன். அதற்கு ஒரு பதிலும் இல்லை.
நிலைமை இப்படி இருக்க.. என்னுடைய மாதந்திர கணக்கு அறிக்கையில் 300 ரூ. டெபிட் கார்டு சார்ஜ் அப்பிடின்னு டெபிட் பண்ணி வச்சிருக்கான். டெபிட் கார்டு ஆபத்து காலத்தில் கூட என்னால் பயன் படுத்த முடியாத நிலையில்.
இதுவரை அனுப்பின மின்னஞ்சலுக்கு பதிலும் இல்லை. நான் போட்ட பணத்திற்கு வழியும் இல்லை.
இந்தியா வந்த பின் தான் ஏதாவது செய்ய முடியும் போல இருக்கு.. குறைந்த பட்சம் கணக்கை மூடிவிட்டவது தப்பிக்க வேண்டுமே? என்னோட கவலை எல்லாம் அதுவரை நான் போட்ட பணம் இருக்கவேண்டுமே? அந்த சார்ஜ், இந்த சார்ஜ் அப்பிடின்னு முழுவதையும் முழுங்கி ஏப்பம் விட்டுட்டு, கணக்கு முடிக்க போனா என்கிட்டே காசு கேப்பான் போல தெரியுது.
நிஜமா நல்லவன் said...
ReplyDelete//அந்த பேங்க் இருக்கிற தெரு பக்கம் கூட நான் போறது இல்லைங்க. ஆளாளுக்கு சொல்லுற நொந்த கதை எல்லாம் கேக்குறப்போ தலை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......//
நல்ல வேளையா தப்பிச்சீங்க! ஒரு கொள்ளைக்கூட்டம் பேங்க் நடத்திக்கிட்டிருக்கு!
//ரசிகன் said...
ReplyDeleteஹா..ஹா.. சுரேகா ,.. நீங்க சொல்லறத பாத்தா இது அட்டு பார் இல்ல.. ஆப்பு பார் மாதிரில்ல தெரியுது:P//
வாங்க ரசிகன்!
ஆமாங்க! உண்மையிலேயே ஆப்பு பார்தான்..அனேகமா அதுதான் அவுங்களுக்கும் ஆப்பு பாரா இருக்க முடியும்.!
//ரசிகன் said...
ReplyDeleteஹா..ஹா.. சுரேகா ,.. நீங்க சொல்லறத பாத்தா இது அட்டு பார் இல்ல.. ஆப்பு பார் மாதிரில்ல தெரியுது:P//
வாங்க ரசிகன்!
ஆமாங்க! உண்மையிலேயே ஆப்பு பார்தான்..அனேகமா அதுதான் அவுங்களுக்கும் ஆப்பு பாரா இருக்க முடியும்.!
ரசிகன் said...
ReplyDelete//கும்பலா சேந்து புலம்பிக்குவோம்ங்கறத உங்க ஊர்ல சுருக்கமா மேஞ்சுருவோம்ன்னு சொல்லுவாங்க போல.. :P
பதிவு நல்லாயிருக்கு மாமே..:)//
உண்மையிலேயே நாஸ்தி பண்ணிருவோம்கிறதுதான்...மேஞ்சுருவோம்னு சொன்னேன் தலை!
//எம்.ரிஷான் ஷெரீப் said...
ReplyDeleteஎனக்கு இந்த அனுபவம் கிடையாது.ஆனால் நிறையப் பேருக்கு இது மாதிரி நடந்து திட்டிட்டே போறதப் பார்த்திருக்கிறேன் நண்பரே.
நீங்கள் வழக்குப் பதிவு பண்ணியுள்ளது பாராட்டத்தக்க விடயம்.
முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் நண்பரே ://
வாங்க ரிஷான்! நலமா?
ஆமாம். அப்புறம் புலம்ப நாம் பிறக்கவில்லையே..மோதிப்பாத்துருவோம்னுதான்.!
பொதிகை செல்வன் said...
ReplyDelete//இந்தியா வந்த பின் தான் ஏதாவது செய்ய முடியும் போல இருக்கு.. குறைந்த பட்சம் கணக்கை மூடிவிட்டவது தப்பிக்க வேண்டுமே? என்னோட கவலை எல்லாம் அதுவரை நான் போட்ட பணம் இருக்கவேண்டுமே? அந்த சார்ஜ், இந்த சார்ஜ் அப்பிடின்னு முழுவதையும் முழுங்கி ஏப்பம் விட்டுட்டு, கணக்கு முடிக்க போனா என்கிட்டே காசு கேப்பான் போல தெரியுது.//
வாங்க பொதிகை செல்வன்!
இந்தியா வந்தபின் தான் ஏதாவது செய்யணும்னு இருந்தா அவ்வளவுதான். நீங்க 2000 ரூபாய் கட்டுற மாதிரி இருக்கும்.! உங்க கணக்கிலேருந்து. எல்லா சார்ஜுக்கும் காசு எடுத்து, மினிமம் பேலன்ஸ் பராமரிக்கலைன்னு அதுக்கும் தண்டம் கட்டச்சொல்வானுங்க!
நீங்க எந்த ஊருன்னு மெயில் பண்ணுங்க! நுகர்வோர் அமைப்பு முலமா ஏதாவது பண்ணமுடியுதான்னு பாக்குறேன்.
எனக்கு தெரிந்து UTI தான் உலகிலே பெரிய கொள்ளைகார வங்கி
ReplyDeleteவால்பையன்
inஆஹா!
ReplyDelete'அட்டு' மேட்டர்,
sleep பண்ணின சிங்கங்களை தட்டி எழுப்பி விட்டுடிச்சு போங்க!
ரொம்ப காலம் முன்னாடி நான் கூட இன்த்த வங்கியில் கனக்கு வச்சிருன்தேன்.
ReplyDeleteஅனுபவம் பெட்ரதும் ,கனக்கைத் தீர்த்தாச்சு.
நீஙகல் ஜெயிக்க வால்ழ்த்துககல்!
thanks for initiating me in to tamil blogging
now u see the errors in my spellings
trying to rectify them
check my blog too
Check out this link to know more abt ICICI.
ReplyDeletehttp://www.chakkarapani.com/graffiti/?p=48
//வால்பையன் said...
ReplyDeleteஎனக்கு தெரிந்து UTI தான் உலகிலே பெரிய கொள்ளைகார வங்கி//
அடடே! அது தெரியாம போன வாரம்தான் புது அக்கவுண்ட் தொடங்கினேன். புளியக்கரைக்குதே!
//Chakra said...
ReplyDeleteCheck out this link to know more abt ICICI.
http://www.chakkarapani.com/graffiti/?p=48//
yeah...i have seen it and shocked. is it happening for years ? ridiculous.! ok! lets get some solution.
இது ஒரு பொழப்பாகவே நடக்குதுனு நினைக்கிறேன்... இப்படி தான் பல முறை பேலன்ஸ் கம்மியானது.. போக்கில் போய் கேட்டால் ஏதாவது ஒரு காரணம் சொல்லுவவங்க.. இப்படியே போனதால் அந்த பேக்கில் கணக்கினை முடித்து விட்டேன்..
ReplyDeleteஉங்களின் பகிர்வுக்கு நன்றி
Appreciation for your social work. Keep it up man.
ReplyDelete