வார்த்தைகள்
ரெண்டுபேருக்கு இடையிலே வாக்குவாதம் வந்தா...வார்த்தைய அளந்து பேசு..என்ன பேசுறோம்கிறதை தெரிஞ்சுதான் பேசுறியான்னு ஒருத்தருக்கு ஒருத்தர் கேட்டுக்குவாங்க!
அந்த அளவுக்கு நம்மை மீறி வெளிவரும் வார்த்தைகள் என்னிக்குமே மனிதர்களுக்கிடையில் உறவுகளை உடைக்கும் சுத்தியலாத்தான் பயன்படும்.
அதுனால எந்த பயனும் இருக்காது. சக மனிதர்களோட பேசுறதுங்கிறது ஒரு கலை! அதை சரி வர கையாண்டுட்டாலே நாம வாழ்க்கைல ஈஸியா ஜெயிச்சுக்கிட்டே இருக்கலாம்.
மொக்கச்சாமி ஒரு பெரிய தொழிலதிபர்க்கிட்ட பி ஏ வா வேலைபாத்தார். அப்ப வெளியூருக்கு போய் ஹோட்டல்ல தங்குறமாதிரி ஆகிப்போச்சு. முதல்நாள் மதிய சாப்பாட்டில் வெண்டைக்காய் போட்டு சாம்பார் வச்சிருந்தாங்க! அதை ருசிச்சு சாப்பிட்ட தொழிலதிபர், ஹோட்டல் சர்வரைக்கூப்பிட்டு ஆஹா வெண்டைக்காய் பிரமாதம்ன்னார்.உடனே மொக்கச்சாமியும் ஆமாமா பிரமாதம்ன்னார். அதை கவனிச்ச ஹோட்டல் முதலாளியும், இனிமே அந்த தொழிலதிபருக்கு வெண்டைக்காயில் செஞ்ச உணவுகளை அதிகமா பரிமாறும்படி சொல்லிட்டார். அடுத்தடுத்த நாள் வெண்டைக்காய் கூட்டு, வெண்டைக்காய் பொறியல், பச்சடி ன்னு சர்வம் வெண்டக்காய் மயம் ஆகிப்போச்சு ! ஒரு வாரம் நல்லா பாராட்டிக்கிட்டே சாப்பிட்டார் அந்தத்தொழிலதிபர்.! மொக்கச்சாமியும் அதேபோல் ஜால்ரா தட்டிட்டார். அடுத்தவாரமும் ஹோட்டலில் வெண்டைக்காய் போடவும் , தொழிலதிபர் டென்ஷனாகிட்டார். என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க? எப்பப்பாத்தாலும் வெண்டைக்காயா? நல்லாவே இல்லை! வெண்டைக்காயெல்லாம் ஒரு காயா?ன்னு கத்த ஆரம்பிச்சுட்டார். உடனே மொக்கச்சாமியும் ஆமாமா நானும் பாத்துக்கிட்டிருக்கேன். அதெல்லாம் ஒரு காய்ன்னு எங்க முதலாளிக்கு போடுறீங்க? அது நல்லாவா இருக்கு? இருக்கறதுலயே மட்டமான காய் அதுதான்னு ...இன்னும் ரெண்டுமூணு பிட்டை சேத்துப்போட்டாரு.
உடனே அவர் முதலாளிக்கு கோபம் வந்துடுச்சு.! மொக்கச்சாமி! என்ன நீ? நான் வெண்டைக்காய பாராட்டும்போதெல்லாம் அப்படி பாராட்டின?இப்ப திட்டும்போது நீயும் கடுமையா திட்டுறியே! ஏன் இப்படி நடந்துக்கிற? ன்னு கோபப்பட்டார். அதுக்கு
மொக்கச்சாமி மெதுவா சொன்னார். நான் என்ன வெண்டக்காய்கிட்டயா வேலை பாக்குறேன்! உங்ககிட்டதானே வேலைபாக்குறேன்னாரு!
இதுதான் சொல்வன்மை! இத்தகைய சூழலில் முதலாளியை சாந்தப்படுத்த , மொக்கச்சாமியோட உபாயத்தை பயன்படுத்தினாலே போதும்.பொழச்சுக்கலாம்.
ரெண்டுபேருக்கிடையில் வாக்குவாதம் வரும்போல் தெரிந்தால், மனசில் தோணும் வார்த்தைகளுக்கு ஒரு தற்காலிக சென்சார் போர்டு வச்சு உடனே அதை அப்பப்ப தணிக்கை செஞ்சு வெளியில் விட்டாலே அந்த வாக்குவாதம், மோதலாகாம தடுத்துடலாம். அதேசமயத்தில் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைவிட்டால் அவ்வளவுதான் மூன்றாம் உலகப்போருக்கு நீங்கதான் மூலகாரணமா ஆகிடுவீங்க!
இதுதான் சொல்வன்மை! இத்தகைய சூழலில் முதலாளியை சாந்தப்படுத்த , மொக்கச்சாமியோட உபாயத்தை பயன்படுத்தினாலே போதும்.பொழச்சுக்கலாம்.
ரெண்டுபேருக்கிடையில் வாக்குவாதம் வரும்போல் தெரிந்தால், மனசில் தோணும் வார்த்தைகளுக்கு ஒரு தற்காலிக சென்சார் போர்டு வச்சு உடனே அதை அப்பப்ப தணிக்கை செஞ்சு வெளியில் விட்டாலே அந்த வாக்குவாதம், மோதலாகாம தடுத்துடலாம். அதேசமயத்தில் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைவிட்டால் அவ்வளவுதான் மூன்றாம் உலகப்போருக்கு நீங்கதான் மூலகாரணமா ஆகிடுவீங்க!
(தொடரும்)
மனுசன் கண்டுபிடிச்ச ஆயுதத்தில் மிகவும் மோசமானது 'சொற்கள்' என்று எங்கியோ (பாலகுமாரனோ?)படிச்சிருக்கேன்.
ReplyDeleteதாடியும் சொல்லி இருக்காரே....
தீயினால் சுட்டபுண்.... நாவினால் சுட்ட வடுன்னு!
அறிவிழந்து அவசரத்தில் அள்ளித்தெளிக்கும் வார்த்தைகளால் அலங்கோலப்பட்டு நிற்பதைவிட அளந்து பேசுவதே மேல். நல்லா சொல்லி இருக்கீங்க. ஆமா அது முல்லா கதை தானே?
ReplyDelete//துளசி கோபால் said...
ReplyDeleteமனுசன் கண்டுபிடிச்ச ஆயுதத்தில் மிகவும் மோசமானது 'சொற்கள்' என்று எங்கியோ (பாலகுமாரனோ?)படிச்சிருக்கேன்.//
வாங்கம்மா!
ஆமாம்.. ஒரு பழைய பாட்டே இருக்கே!
உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம் எது?
உருட்டு புரட்டு பேசிடும் நயவஞ்சகரின் நாக்கு தானது!
நிஜமா நல்லவன் said...
ReplyDelete//அறிவிழந்து அவசரத்தில் அள்ளித்தெளிக்கும் வார்த்தைகளால் அலங்கோலப்பட்டு நிற்பதைவிட அளந்து பேசுவதே மேல். நல்லா சொல்லி இருக்கீங்க. ஆமா அது முல்லா கதை தானே?//
வாங்க!
இல்லை பீர்பால்! :)
/
ReplyDeleteஇதுதான் சொல்வன்மை! இத்தகைய சூழலில் முதலாளியை சாந்தப்படுத்த , மொக்கச்சாமியோட உபாயத்தை பயன்படுத்தினாலே போதும்.பொழச்சுக்கலாம்.
/
ஜால்ரா அடிக்கனும்கறீங்க!!
'யாகாவாராயினும் நாகாக்க'
ReplyDelete'சொலல்வலன் சோர்விலான் அஞ்சான்'
ReplyDelete'இனிய உளவாக இன்னாத கூறல்'
ReplyDeleteஉங்க சொல்வண்மை சீரீஸ் நல்லா இருக்கு...இன்னும் தொடர்க!
ReplyDeleteநல்லா நயமா சொல்லியிருக்கீங்க சுரேகா.
ReplyDeleteவாழ்த்துக்க்ள்.
//umakumar said...
ReplyDeleteஉங்க சொல்வண்மை சீரீஸ் நல்லா இருக்கு...இன்னும் தொடர்க!//
வாங்க ! நன்றிங்க!
அடுத்தபாகமும் போட்டாச்சு!
உண்மைதான். கடைப்பிடிக்கறதுதான் கஷ்டம்.
ReplyDelete