கயவாளிக் கனவான்கள்!
ரோடு போட்ட மவராசன்
பாதி ரோட்டை போட்டுப்புட்டு
மீதி ரோட்டை தனக்கும்,
லஞ்சம்வாங்கி நாய்களுக்கும்
போட்டுக்குடுத்துப்புட்டு
மழை பேஞ்ச மறுநாளே
பல்லிளிக்க வச்சுப்புட்டான்.

பல்லிளிச்ச ரோட்டில்
போராடிப்போராடி
நாத்தெல்லாம் நட்டு
நாத்தமடிக்க வச்சபின்னே
அவனுக்கு அப்பனான
ஒரு ஒப்பந்தக்காரன்
பள்ளமடைக்கும் பணி வாங்கி
ஜல்லியடிச்சுக்கிட்டிருக்கான்.
அடைக்கும் பள்ளத்திலேயே
அரைகுறையா விட்டுப்புட்டு
அலட்டிக்காம வேலைபாக்கும்
கேடுகெட்டவங்களை வச்சா
வல்லரசா ஆகப்போறோம்!?
அய்யா அப்துல் கலாம்!
ஒருதடவை இந்தப்பக்கம்
வந்துத்தான் பாருங்களேன்.
ஒப்பந்தம் எப்படி
வேலை பாக்குதுன்னு தெரியும்.

இது ரொம்ப நாள் கதையில்ல!
நேத்து நான் வந்தப்ப நின்னு
எடுத்த போட்டோ!
இதை மட்டும் செய்ய நான்
ஈனப்பிறவி இல்ல!
எல்லா பத்திரிகைக்கும்
எழுதியாச்சு நகலோட!
எவனுமே போடலைன்னா
என்ன பண்ண சின்னவன் நான்!

அதுனால இங்கயும் என்வீட்டில்
பதிஞ்சு வச்சேன்.
உச்சகட்ட லச்சணம்
என்னன்னு தெரியுங்களா?
இதுதான் இந்தியாவின்
தேசிய நெடுஞ்சாலை!
கண்ணுமண்ணு தெரியாம
கொள்ளை அடிக்கறது
கயவாளிக்கனவான்களுக்கு
கைவந்த கலை போல!
அட...நாசமத்துப்போவாய்ங்களா!
நாண்டுக்கிட்டு சாவுங்கடா!

அடுத்த தலைமுறையை
அழுகாம காப்பாத்த !

Comments

 1. இது இராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை!

  ReplyDelete
 2. கேப்டன் விஜயகாந்த்தான் தலைமைல இந்தியா வல்லரசு ஆகிடுச்சு தெரியாதா சுரேகா!?!?  வேற என்னத்த சொல்ல
  :((((

  இந்த பதிவுக்கெல்லாம் திருந்திருவானுங்களா என்ன?

  ReplyDelete
 3. ///சுரேகா.. said...
  இது இராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை!///  அடக்கொடுமையே:((

  ReplyDelete
 4. போடாதே ரோட்டுக்கே கணக்கெழுதி காசு வாங்கிடுறாங்க.

  ReplyDelete
 5. சுரேகா,

  தேசிய நெடுஞ்சாலைக்கே இந்தக் கதின்னா, இன்னமும் ஊர் பேர் தெரியாத எத்தனை சிற்றூர்களில் சாலை போடுறேன்னு நிதியை மட்டும் வாங்கிட்டு அப்படியே கெடக்கிற மண் சாலைகள் எத்தனையோ...

  அதெப்படியா, புழுதி மண்ணுல கொண்டு போயி அரை இஞ்ச் அடர்த்திக்கு தாரே இல்லாமல் நம்மூர்ல மட்டும் கப்பியை பீட்சா மேல போடுற வெஜி மாதிரி ஒட்டி வைக்க முடியுது... இண்டலிஜெண்டே!

  ReplyDelete
 6. "mukoortham@gmail.com" to me ...

  nallaa eluthireekeenga... very good... ungal aathangam nantagavae velipadukirathu...

  samuthayathirkku naam seyum thontu... kuttangalai velikonduvaruvathum ontuthane

  ReplyDelete
 7. //மங்களூர் சிவா said...

  கேப்டன் விஜயகாந்த்தான் தலைமைல இந்தியா வல்லரசு ஆகிடுச்சு தெரியாதா சுரேகா!?!?

  வேற என்னத்த சொல்ல
  :((((

  இந்த பதிவுக்கெல்லாம் திருந்திருவானுங்களா என்ன?//

  வாங்கப்பு!

  அப்புடியா? சொல்லவே இல்ல!!

  நேராப்பாத்து திட்டமுடியாம மானிட்டரைப்பாத்து திட்டியிருக்கேன் அவ்வளவுதான். அவனுங்க திருந்த வாய்ப்பே இல்லை!
  என் வீட்டுக்கு ஆட்டோவோ சுமோவோ வராம இருந்தா பத்தாதா?

  ReplyDelete
 8. நிஜமா நல்லவன் said...

  //அடக்கொடுமையே:((

  போடாதே ரோட்டுக்கே கணக்கெழுதி காசு வாங்கிடுறாங்க.
  //

  வாங்க நல்லவன்!

  உங்க கமெண்டே கவிதை மாதிரி இருக்கு!

  ReplyDelete
 9. Thekkikattan|தெகா said...

  //தேசிய நெடுஞ்சாலைக்கே இந்தக் கதின்னா, இன்னமும் ஊர் பேர் தெரியாத எத்தனை சிற்றூர்களில் சாலை போடுறேன்னு நிதியை மட்டும் வாங்கிட்டு அப்படியே கெடக்கிற மண் சாலைகள் எத்தனையோ...//

  எந்த சாலையா இருந்தாலும்...போற மக்கள் இளிச்சவாயா இருந்தா, இன்னும் பள்ளம் தோண்டி அதிலேருந்து மண்ண எடுத்து வித்துப்புட்டு..நம்மள விழுந்து எந்திருச்சு போகச்சொல்லுவானுங்க!

  /அதெப்படியா, புழுதி மண்ணுல கொண்டு போயி அரை இஞ்ச் அடர்த்திக்கு தாரே இல்லாமல் நம்மூர்ல மட்டும் கப்பியை பீட்சா மேல போடுற வெஜி மாதிரி ஒட்டி வைக்க முடியுது... இண்டலிஜெண்டே!//

  உங்க கற்பனையே அழகுதான்!
  :)

  போட்டோ எடுக்கும்போது...ஒருத்தன் சொல்லிக்கிட்டுப்ப்போறான்...

  ' இப்படி ரோட்ட போட்டுப்புட்டு கவர்மெண்ட் இஞ்சினியர்க்கிட்ட காட்டி காண்ட்ராக்டர் காசு வாங்க இதையும் போட்டா புடுச்சு , கொண்டுபோறாய்ங்க பாருன்னு!

  அப்புறம் அந்த ஆளப்பிடிச்சு விளக்கம் சொன்னேன். நான் காண்ட்ராக்டரை திட்ட வந்த ஆளுன்னு!

  ReplyDelete
 10. சுரேகா.. said...
  "mukoortham@gmail.com" to me ...

  //nallaa eluthireekeenga... very good... ungal aathangam nantagavae velipadukirathu...

  samuthayathirkku naam seyum thontu... kuttangalai velikonduvaruvathum ontuthane//


  நன்றி விபா.

  அதான். குற்றங்களை வெளிக்கொண்டுவந்தாக்கூட போதும்னுதான் இதைப்பண்ணினேன்.

  ReplyDelete
 11. என்ன சொல்றதுன்னே தெரியலை.

  அப்படி இருந்தாத்தான் அது தேசிய நெடுஞ்சாலை.

  :)

  சிரிச்சுத்தான் ஆத்திக்கனும். வேற ஓண்ணும் செய்யறதுக்கு இல்லை.

  ReplyDelete
 12. //மங்களூர் சிவா said...
  கேப்டன் விஜயகாந்த்தான் தலைமைல இந்தியா வல்லரசு ஆகிடுச்சு தெரியாதா சுரேகா!?!?
  //
  suuuuuppapapapapapapprrrr

  ReplyDelete
 13. ///சுரேகா.. said...
  வாங்க நல்லவன்!

  உங்க கமெண்டே கவிதை மாதிரி இருக்கு!//


  ஆஹா சுரேகா ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல.

  ReplyDelete
 14. //அடுத்த தலைமுறையை
  அழுகாம காப்பாத்த //

  அடுத்த தலைமுறையை அழுகாம காப்பாத்துறது ரொம்ப கஷ்டம்...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

இறைவி - எண்ணங்கள் எனது !

சென்னைப் பிழை!