ஒரு பண்ணையின் மரணப்படுக்கை

   மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் ன்னு காச் காச்ன்னு கத்திக்கிட்டே இருந்தாலும் கான்கிரீட் பில்லரும் மரம் மாதிரிதானே   இருக்குன்னா   கன்னா   பின்னான்னு  வீங்கிக்கிட்டே போகும் பூமில.... முப்பது வருசத்துக்கு   முன்னாடி   தோட்டக்கலை மூலமா சிறு மரங்களை பயிரிட்டு, ஆராய்ச்சி செஞ்சு  பல்வேறு  பண்ணைகளை உருவாக்க முன்னோயா இருக்கணும்னு .. அண்ணா பண்ணைன்னு ஒரு பண்ணையை புதுக்கோட்டைக்கிட்ட  குடுமியான் மலைல தோட்டக்கலைத்துறை மூலமா அரசாங்கம் உருவாக்கியிருக்கு! (எம்.ஜி.ஆர் அரசு என்று கேள்வி) 

அது ஒரு காலத்துல சோலைவனமா இருந்துச்சு! 

இனிமே இது வரண்ட மாவட்டமில்லை! வளங்கள் அனைத்தும் திரண்ட மாவட்டம்ன்னு அடுக்குமொழி வசனமெல்லாம் பேசினாங்க! 

அண்ணா பண்ணைக்கு கல்விச்சுற்றுலாவா பசங்க எல்லாம் போய்ட்டு வந்த காலமெல்லாம் உண்டு.! 

விவரம் தெரியாத வயசுல ஒரு தடவை பஸ் அந்தவழியா போகும்போது பாத்திருக்கேன். பள பளன்னு நிறைய கட்டிடங்களும், மரங்களுமா வளமா பாத்த ஞாபகம் அலையடிக்குது ! 

இங்கதான் இருக்கே பாத்துக்கலாம்ன்னு...இவ்வளவு வருஷமா ஓட்டிட்டேன். ( பக்கத்துல இருக்குற அற்புதமான ஆள், பயனுள்ள பொருள், புகழ்பெற்ற இடத்தோட மகிமை எப்பத்தான் நமக்கு தெரியப்போகுதோ?) அன்னிக்கு அந்த வழியா வேலை இருந்ததால, வண்டிய விட்டேன்.


அண்ணா பண்ணைங்கிற அந்த வரவேற்பு வளைவை பாத்ததுமே பக்குன்னு இருந்துச்சு! போகப்போக பல அதிர்ச்சிகளை நான் சந்திக்க வேண்டி இருந்தது.



நீங்களே பாருங்க..! பல கோடி ரூபாய் பொருள் செலவுல, அரசு நல்லது பண்ணலாம்ன்னு யோசிச்சு செய்ய ஆரம்பிச்ச திட்டத்தோட இப்போதைய 
நிலமைய! ரொம்ப கொடுமை என்னன்னா..பல கட்டிடங்கள்ல ஆள் நடமாட்டமே கிடையாது. இதுலதான் பயிற்சிக்கூடமும் இருக்கு..! அதுல என்ன பண்றாங்கன்னே தெரியலை!
எப்பவும் அதுக்குன்னு நியமிக்கப்பட்ட சொற்ப ஊழியர்கள் வந்து போறதுனால, ஏதோ மனித நடமாட்டம் இருக்கு! ரோட்டுக்கு ரெண்டுபக்கமும் கட்டிடங்களும், மரங்களுமா இருக்கும் இந்த பண்ணையோட மொத்த பரப்பளவு 34000 ஏக்கராம். ரோட்டில் மொத்தம் 4 கிலோமீட்டர் நீளத்துக்கு இருக்கு!
அந்த பிரம்மாண்டமெல்லாம், வேலையே நடக்காம அங்கொன்னும் இங்கொன்னுமா இருக்கும் முந்திரி மரங்களோட முடிஞ்சு போயிடுது..! 
இங்க என்னன்ன அலுவலகங்கள் இருக்குன்னு தெரியவந்தப்ப...வந்த டென்ஷனை அடக்க திண்டாடிப்போயிட்டேன். அதிலயும் ஒரு பேங்க் இருக்கு பாருங்க! அடேயப்பா! அந்தப்படங்களெல்லாம்...... அடுத்த பதிவில்...தொடரும்..!


Comments

  1. :(

    ஏங்க இந்த அளந்தது என்பதை மாத்துங்களேன்.. உண்மைய சொல்லும்போது ஏன் " அளந்தது"

    ReplyDelete
  2. உடனே மாத்திட்டேன்!

    அன்புக்கு நன்றிங்க!

    ReplyDelete
  3. //இந்த பண்ணையோட மொத்த பரப்பளவு 34000 ஏக்கராம்.//

    சகோதர, சகோதிரிகள் கண்ணில் படமால் அட்லீஸ்ட் நிலமாவது அரசு பேரில் இன்னுமும் இருக்கே இம்புட்டு நாளா அதுக்கே நாம் பெருமை படனும்.

    ReplyDelete
  4. சகோதர, சகோதிரிகள் கண்ணில் படமால் அட்லீஸ்ட் நிலமாவது அரசு பேரில் இன்னுமும் இருக்கே இம்புட்டு நாளா அதுக்கே நாம் பெருமை படனும்.

    நானும் இதை வழிமொழிகிறேன்.

    எத்தனையோ நலத்திட்டங்கள் நம்ம் ஊருக்கு கிடைக்காமலே போயிருக்கு.

    எனக்கு ஒரு ஆதங்கம் உண்டு.

    நம்ம ஊரு ராஜவம்சத்தை சேர்ந்தவங்க திருச்சிக்கு போயி அங்க மேயரா இருந்து திருச்சியை முன்னேத்தறாங்க.

    சொந்த ஊரை விட்டுப்புட்டு. இதை அவங்க நம்ம ஊருல இருந்து நம்ம ஊருக்கு நல்லது செய்யலாமே.

    ReplyDelete
  5. என்னத்த சொல்ல,அட்லிஸ்ட் பிளாட் போட்டு விக்காம விட்டாங்களே:P

    ReplyDelete
  6. //
    சகோதர, சகோதிரிகள் கண்ணில் படமால் அட்லீஸ்ட் நிலமாவது அரசு பேரில் இன்னுமும் இருக்கே இம்புட்டு நாளா அதுக்கே நாம் பெருமை படனும்.//

    ஆமாங்க! இது எனக்கு தோணலியே!

    ReplyDelete
  7. //நம்ம ஊரு ராஜவம்சத்தை சேர்ந்தவங்க திருச்சிக்கு போயி அங்க மேயரா இருந்து திருச்சியை முன்னேத்தறாங்க.//

    வாங்க வாங்க!

    நீங்க வேற!

    திருச்சில கிடைக்கிற ஒப்பந்தத்தொகை நம்ம ஊருல கிடைக்குமா? கமிஷன் எங்கேயோ மேயரும் அங்கே ! ன்னு தெரியாம ...சின்னப்புள்ளயாவே இருக்கீங்க!

    ReplyDelete
  8. வாங்க ரசிகன்..
    எப்படி இருக்கீங்க?


    அதுவும் நடந்திருக்கும்...!

    என்னிக்கு வெளீல தெரியப்போவுதோ..!? :)

    ReplyDelete
  9. //நம்ம ஊரு ராஜவம்சத்தை சேர்ந்தவங்க திருச்சிக்கு போயி அங்க மேயரா இருந்து திருச்சியை முன்னேத்தறாங்க.//
    நானும் இதை வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  10. எம்.ஜி.ஆர் அரசுதான்

    ReplyDelete
  11. கேக்கவே கஷ்டமாத்தான் இருக்கு. நான் பலமுறை அண்ணா பண்ணைக்கும், குடுமியான் மலைக்கும் சென்றிருக்கிறேன் எனது மாமா ஒருவர் அங்கே வேலை பார்த்த சமயத்தில்.

    நிறைய இனக் கலப்பு மாங்காய் வகைகளும், மற்ற இதர ஆராய்ச்சி சார்ந்த பயிர்களும், குரோட்டன்ஸ் வகைத் தாவங்களுமென ஒரு பூஞ்சோலையாகவே காட்சியளித்தன, அதாவது புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் இப்படி ஒரு இடமா என.

    நீ சொல்வதனைப் பார்த்தால் மற்ற இடங்களில் பார்க்கும் அதே காட்சி அங்கேயும் அரங்கேறி விட்டதனைப் போல இருக்கே. கஷ்ட காலம்டா சாமீ.

    இந்தியா ஒளிர்கிற இந்த நேரத்தில் கூடவா விவாசாயத்திற்கென ஒரு 2% கூட ஒதுக்கி இது போன்ற ஆராய்ச்சிப் பண்ணைகளை முறைப்படி வைத்து மேலாண்மை செய்யக் கூடாது :-(.

    தம்பீ, எங்கே ஒரு படத்தை தவிர மற்றபடங்கள் உனது இந்தப் பதிவில் காட்ட மாட்டேன் என்று முரண்டு பிடிக்குதே, கொஞ்சம் பாரேன்.

    ReplyDelete
  12. /
    குசும்பன் said...

    //இந்த பண்ணையோட மொத்த பரப்பளவு 34000 ஏக்கராம்.//

    சகோதர, சகோதிரிகள் கண்ணில் படமால் அட்லீஸ்ட் நிலமாவது அரசு பேரில் இன்னுமும் இருக்கே இம்புட்டு நாளா அதுக்கே நாம் பெருமை படனும்.
    /

    வழிமொழிகிறேன்

    ReplyDelete
  13. வலைபதிவுலகத்தினால் இது மாதிரி தகவல்கள் தெரிய வருவது நல்லதே!
    இதை இன்னும் ஒரு படி மேலே ஏன் கொண்டு போகக் கூடாது?
    இச்செய்திகளைத் தகுந்த துறைக்கு அனுப்பிச் சில முன்னேற்றங்களுக்கு முயற்சி செய்தால் என்ன?

    இதை "blogger (pro) activism" என சொல்லலாமா?
    அப்படியே ஒரு பத்திரிக்கைக்கு அனுப்பிப் பாருங்களேன்?

    ReplyDelete
  14. அண்ணே!கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்.மன்னிக்கனும். அந்த பண்னை இருக்கும் ஊரில்(வயலோகம்) ஒரு தர்கா உள்ளது. சிறு வயதில் இருந்தே அங்கு செல்லும் போதெல்லாம் அந்த பண்ணையின் அழகை பல முறை இரசித்து உள்ளேன். +2 படித்த போது ஹெர்பேரியம் சேகரிக்க நாங்க அந்தப் பண்னைக்குத் தான் செல்வோம். கடந்த 6 வருடங்களில் தான் இப்படி ஆகிவிட்டது. ஆனால் இதோடு துவங்கப்பட்ட வம்பன் பயறு வகை ஆராய்ச்சி மையம் இன்று வரை நல்ல முறையில் உள்ளது. அது என்னைக்கு மரணப் படுக்கைக்கு போகப் போவுதோ??

    ReplyDelete
  15. என்ன? பதிலையே காணோம்?

    ReplyDelete
  16. நாங்க தாங்க அந்த நல்ல மனிதர்கள். என் சொந்த ஊர் வயலோகம் தான். இந்த இழிநிலைக்கு அலுவலர்கள், அரசின் கவனமின்மை, மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமை ஆகியவையே காரணம்.
    சும்மா எனது ஊரை பற்றி ஏதேனும் வலை தளத்தில் கிடைக்கிறதா என்று தேடும் பொழுது இதை கண்டன்,,

    ReplyDelete
  17. nalla muyarchi.m.l.a yosipparungo....karambakkudiyar

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!