அறிந்து கொள்க - அடடே! புத்தகம்!
காவல்துறையின் மீது வெவ்வேறு விதமான விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், நல்லவர்கள் இருந்துகொண்டும் , நல்லவைகளை நிகழ்த்திக்கொண்டும் இருக்கத்தான் செய்கிறாகள்!
புதுக்கோட்டை காவல் துறைத்தலைமை அலுவலகத்துக்கு வருபவர்களுக்கு சில ஆச்சர்யங்கள் காத்திருக்கும். தினம் ஒரு திருக்குறள் என்ற பலகை, தினம் ஒரு தமிழ் வார்த்தை என்ற பலகை, பொதுமக்கள் குறைதீர் கணிணி மையம் - மனுதாரர்கள் தங்கள் குறைகளின் அவசியத்திற்கேற்ப நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்ட ஒரு ரசீது! முறையே 15 நாட்கள், 7 நாட்கள், 24 மணிநேரம் என கெடு வைத்து பிரச்னைகள் தீர்க்கப்படுகின்றன! உண்மையிலேயே எல்லோருக்கும் திருப்தியான நடைமுறை ! காரணம் அப்படிப்பட்ட தலைமை !
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக திரு.பா.மூர்த்தி அவர்கள் பதவிவகிக்கிறார் ! மிகவும் எளிமையான மனிதர். சிறந்த சிந்தனாவாதி! பிரச்னைகளை அதன் ஆணிவேருக்கு சென்று அறுக்கவேண்டுமென்று நினைப்பவர்! சகமனிதர்களுக்கு மதிப்பளிப்பவர்! இவரைப்போன்ற நேர்மையாளர் இருப்பதால், உண்மையில் மாவட்டத்தில் உள்ள லஞ்சம் விரும்பும் காவலர்களுக்கு சிரமம்தான்! முக்கியமாக - நல்ல படிப்பாளி!
அவர் இப்போது 'அறிந்து கொள்க' என்ற தலைப்பில் -அரசாங்க அனுமதியோடு - ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார்.
தமிழகக்காவல்துறையின் அறிமுகம், காவல்துறையின் செயல்பாடுகள், அதன் அதிகார வரம்பு,தெரிந்துகொள்ளவேண்டிய குற்றவியல் சட்டங்கள், விதிமுறைகள், குற்றத்தடுப்புமுறைகள், ஆகியவற்றை மிகவும் எளிய முறையில், நல்ல தமிழில் எழுதியிருக்கிறார்.அது தவிர, மகளிருக்கெதிரான குற்றங்களும் தண்டனைகளும், சாலைவிபத்து, தீ விபத்தைத் தடுக்கும் முறைகள், சுற்றுச்சூழல் சீர்கேடுகளைத்தடுக்க என்ன செய்யலாம்? என்றும் விளக்கியிருக்கிறார்.
கிராமங்களில்- நகரங்களில் கூட - காவல்நிலையத்துக்குச்சென்று, அங்கு அமர்ந்திருக்கும் எல்லாக்காவலரையுமே 'ஏட்டய்யா' என்றழைக்கும் கலாச்சாரம் இன்று இருக்கிறது. ஆனால் ஒரு காவல் நிலையத்தில் இருக்கும் காவலர்களின் உடையை வைத்தே அவர்கள் எந்தப்பதவியில் இருக்கிறார்கள் என்பதை அறியமுடியும். அதை மிகத்தெளிவாக, உடையிலும், இலச்சினையிலும் உள்ள மாற்றங்களை வைத்து, ஆய்வாளர், தலைமைக்காவலர், காவலர் என தெரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக எழுதப்பட்டுள்ளது.
மேலும் ஒருவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டால், அவரது உரிமைகள் என்னென்ன என்று விளக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டை சோதனை செய்யும்போது என்னனென்ன விதிமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பல்வேறு அடிப்படைத் தகவல்கள் நறுக்குத்தெரித்தாற்போல் கொடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற தகவல்கள் தெரியாமல்தான் பொதுமக்கள் ஒரு சில காவல்துறை அதிகாரிகளை தட்டிக்கேட்க முடியாமல் திணறுகிறார்கள். அதற்கு அவர்கள் தரப்பிலிருந்தே ஒரு அஸ்திரம், இந்தப்புத்தகம் !
ஒரு காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு உள்ள பணிச்சுமைக்கிடையில், இத்தகைய புத்தகம் எழுதுவது என்பது மிகவும் ஆச்சர்யமான விஷயம்.! அதற்கு பணி மீறிய ஈடுபாடு வேண்டும். அது அவரிடம் நிறையவே இருந்திருக்கிறது. இன்னொரு சிறப்பு என்னவென்றால், இதற்கு முன் ' பெண்மை வாழ்க' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார். மனிதர் படிப்பிலும் கலக்கியிருப்பார் போல, புள்ளியியலில் முதுகலைப்பட்டம், பின்னர் அதில் எம்.பில். , மேலும், பி.எல் முடித்து, இப்போது சட்டத்தில் எம்.பில் படித்துவருகிறார்.
கிழக்கு பதிப்பகத்தின், தரமான கட்டமைப்பைப்போல் உருவாக்கப்பட்டுள்ள இந்த 64 பக்க புத்தகத்தின் விலை எவ்வளவு தெரியுமா? - இலவசம்!
எல்லா இடத்திலும் நல்லவங்க இருக்காங்கப்பா , நாமதான் தேடித்தெரிஞ்சுக்கணும் !
சாதாரண மக்கள் மனதில் பயம் விளைவிக்கும் ஒரு சொல் காவல் - காவல்துறை அலுவலகம் - என்ன விதமான நடைமுறைகள் என்று தெரியாமலே அதை பற்றி அறிந்து க்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்காததே இதற்கு ஒரு காரணமாக சொல்லலாம்! - இப்படிப்பட்ட சூழலில் விவ்ரம் தரும் வகையிலான இது போன்ற புத்தகங்கள் அதுவும் இலவசமாக அளிக்கப்படும்போது கண்டிப்பாய் நல்லதொரு பயனை பெற்று தரும் என்பது நிச்சயம்!
ReplyDeleteவாழ்த்துக்கள் - எஸ்.பி மூர்த்தி அவர்களுக்கு!
(எங்க ஊர்ல ஒரு 5 வருசத்துக்கு முந்தி டிஎஸ்பியாக மூர்த்தி ஒருவர் இருந்தார் - ஹீரோவாகவே வலம் வந்துக்கொண்டிருந்தவர் - அவராகவே இருக்கலாம் என்று நினைப்புடன்...!)
:)
where shall I get this book. Friends any idea.
DeleteThanks N regards,
Magesh Kumar .P
how i will get a copy of this book ? can u plz tell me bro ?
ReplyDeleteநல்ல பயனுள்ள தகவல்கள்.
ReplyDeleteமூர்த்தி அவர்களுக்குப் பாராட்டும் உங்களுக்கு நன்றியும்.
இருவருக்கும் நன்றி..
ReplyDelete//(எங்க ஊர்ல ஒரு 5 வருசத்துக்கு முந்தி டிஎஸ்பியாக மூர்த்தி ஒருவர் இருந்தார் - ஹீரோவாகவே வலம் வந்துக்கொண்டிருந்தவர் - அவராகவே இருக்கலாம் என்று நினைப்புடன்
ReplyDelete//
அவரேதான்.
அண்ணே ரொம்ப நாளா உங்க பதிவில் ஒரே டெம்ப்ளட்ட பார்த்து போரடிக்குது.எல்லாரும் மாத்திட்டோம்.நீங்க மட்டும்தான் பாக்கி :)
ReplyDeleteபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
ReplyDeleteதமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவன்
உலவு.காம்
எல்லா இடத்திலும் நல்லவங்க இருக்காங்கப்பா , நாமதான் தேடித்தெரிஞ்சுக்கணும் !//
ReplyDeleteவழிமொழிகிறேன்
அப்படியா? :=0
ReplyDeleteவெளிக்கொணர்ந்தமைக்கு நன்றியப்பூ...
நல்லாருக்கியா? எல்லாரும் செளக்கியமா ...
அன்பின் சுரேகா
ReplyDeleteஅருமை அருமை - புத்தக அறிமுகம் அருமை
ஒரு காவல்துறை உயர் அதிகாரி மிகுந்த பணிச் சுமைகளுக்கிடையேயும் புத்தகம் எழுதுகிறார் எனில் பாராட்ட வேண்டாமா ? நல்வாழ்த்துகளுடன் கூடிய பாராட்டுகள் நண்பர் மூர்த்தி அவர்களுக்கு
இலவசம் எனில் எப்படிப் பெறுவது என்பதனையும் கூறினால் நலமாக இருக்கும் சுரேகா
மூர்த்தி அவர்களுக்குப் பாராட்டும் உங்களுக்கு நன்றியும்.
ReplyDeleteநன்றிங்க ஆயில்யன்..
ReplyDeleteஆமா..அவர்தான்! அவரேதான்!
வாங்க இளைய கவி!
ReplyDeleteநலமா?
அந்தப்புத்தகம் பி.டி.எப் வடிவத்தில் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறேன்.
விரைவில் கிடைக்கும் தகவல் தெரிவிக்கிறேன்.
வாங்க வடகரை வேலன் சார்!
ReplyDeleteமிக்க நன்றி !
வாங்க கார்க்கி!
ReplyDeleteபோட்டோ நல்லா இருக்கே!
அன்பு அப்துல்லா!
ReplyDeleteசொன்னமாதிரியே டெம்ப்ளேட் மாத்திட்டேன்.
வாங்க வாங்க புதுகைப்புயல் பதிவர் தென்றல் அவர்களே!
ReplyDelete:)
ஆமாங்க ...நாமதான் தேடிக்கவேண்டியிருக்கு!
வாங்க தெகா அண்ணா!
ReplyDeleteஎல்லாரும் நல்லா கீறோம்..!
வணக்கம் சீனா சார்!
ReplyDeleteபோட்ட புத்தகங்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டனவாம். என்னிடம் இருக்கும் பிரதியை வைத்து PDF வடிவத்தில் இணையத்தில் தருகிறேன்.
வாங்க சிவா!
ReplyDeleteமிக்க நன்றிங்க..!
you have done a good job, and the way you publish this matter thru blog is good idea,
ReplyDeleteநல்ல செய்தி .. நன்றி
ReplyDeleteஎல்லோருக்கும் உதவக்கூடிய புத்தகம் அறிமுகம்,
ReplyDeletearivhedeivam@gmail.com சிரமம் பார்க்காமல் மெயில் தகவல் கொடுத்து விடுங்கள்
முக்கியமாக திரு.எஸ்.பி மூர்த்தி மற்றும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDelete