காகங்களல்ல! மேகங்கள்!
நீங்களா இப்ப்டி ரிப்போர்ட்டில்
இத்தனை தவறு செய்கிறீர்கள்?
மேலதிகாரியின் மெயிலில்
அனலாய்க் காய்கிறது வேலையிடம்!
சாதம் ஏன் இனிக்கிறது?
பாயசம் ஊற்றிப்பிசைந்தபின்னே
குழம்புக்கிண்ணம் பக்கத்தில்
கொக்கரித்துச் சிரிக்கிறது.
ஆறுமாதமாய் அடிக்காமல விட்ட
பாழாய்ப்போன சரக்குகூட
சகலத்துக்கும் உதவிசெய்யும்
சகோதரனாய்த் தோன்றுகிறது!
வாகனம் ஓட்டிக்கொண்டே
சிந்தித்ததில் வழியெங்கும்
வசவுப்போக்குவரத்தின்
வாய்கொள்ளா இரைச்சல்!
இருந்தாலும் மாப்பிளை நீ
இப்படி எழுதியிருக்கக்கூடாது!
சூப்பர்டா என்றவன் கூட
சூத்திரம் சொல்லித்தருகிறான் !
இதுக்கு என்ன பதில் எழுதலாம்?
அதை எப்படி மறுத்துச்சொல்லலாம்!
எண்ணச்சங்கிலிகள் சுற்றிவந்து
என்னைக் கொல்லாமல் விடாதுபோல!
இத்தனை நாள் காத்திருந்த
எல்லா ஹிட்டும் தாண்டிவிட்டேன்!
தேடித்தேடித் தின்னும்
பின்னூட்டங்கள் கசக்கின்றன.
மனம் நோகவேண்டாமென்று
மட்டுறுத்தினாலும் பின்னூட்டம்
பெருகுகிறது.
கூரான வார்த்தைகளால்
குறையாமல் விழுகிறது குருதி!
அந்தப்பதிவை மட்டும்
அனேகம்பேர் படிக்கக்கூடாதே..
அல்ப ஆசை ஒன்று
ஆக்கிரமிக்கும் நெஞ்சுக்குள்!
சொன்னது சரிதானென்று
சொக்காய் கிழிய வாதிடலாம்!
சொன்னது முற்றிலும் தவறே என்று
சொக்கவைத்து காலில் விழலாம்!
அப்படிச்சொல்லவே இல்லை என்று
அழித்துவிட்டு அரசியல் செய்யலாம்!
ஒரு எழவும் எழுதாமல்
ஒழுங்காக இருந்திருக்கலாம்.!
'ஒளியத்தெரியாதவன்
தலையாரி வீட்டில் ஒளிந்த கதையா'
சோக்கா சொன்னய்யா சுரேகா!
(இப்ப இருக்குற ' ட்ரெண்ட' பாத்துட்டு எண்ணத்தில் தோன்றியது ! )
நாம் ஒரு பிரம்மாண்டமான பதிவர்கள் சமூகத்தை நம்மையறியாமல் கட்டமைத்துக்கொண்டிருக்கிறோம். அதன் வளர்ச்சி நிலையில் ஏற்படும் சில குளறுபடிகள்தான் இப்போது நடந்து கொண்டிருப்பதும்!
இது ஒரு தனிமனிதனை எப்படி பாதிக்கும் என்று நினைத்தபோது வந்த வார்த்தைகள்தான் இவை! :)
திரு. செந்தில்நாதனை காப்பாற்ற தோள்கொடுத்த கூட்டம்தான் நாம்!
பதிவர் பட்டறைகளை நடத்திய கூட்டம்தான் நாம்!
சிறுகதைப்போட்டிகளை சிறப்பாக நடத்தியவர்கள்தான் நாம்!
குட் டச்! பேட் டச்! குறைவில்லாமல் நடத்திக்(கொண்டு) காட்டியவர்கள்தான் நாம்!
எத்தனையோ பத்திரிகைகளின் எதிர்(நிகழ்)காலத்தீனிதான் நாம்!
எத்தனையோ திரைப்படங்களின் இலவசக் காட்சி வழங்கிகள் நாம்!
பிரபலங்களும் தன்னை இச்சமூகத்தின் அங்கமென்று பெருமைப்பட வைத்தவர்கள்தாம் நாம்!
நமக்குள் ஏற்படும் சச்சரவுகள் நம் வீட்டுப் பிரச்னை!
நாம் பொழுதுபோக்காய் ஆரம்பித்தது , மன உளைச்சலின் சாவியாகக்கூடாது!
அழகாகச்சிந்திப்போம்..!
அனைவரையும் அரவணைப்போம்!
தெரியாமல் தவறுசெய்தால்
தெளியவைக்கும் திறன் கொடுப்போம்!
தனிமனிதத் தாக்குதல்களை
தரம்பிரித்து தள்ளி நிற்போம்!
மீண்டும் மீண்டும் பணிவுடன் விளம்புகிறேன் !
கூடிக்கரையும் காகங்களல்ல நாம்!
கூடி மழை பொழியும் மேகங்கள்!
//அந்தப்பதிவை மட்டும்
ReplyDeleteஅனேகம்பேர் படிக்கக்கூடாதே..
அல்ப ஆசை ஒன்று
ஆக்கிரமிக்கும் நெஞ்சுக்குள்!
///
வெளிப்படுத்த இயலா வார்த்தைகளாய் இருந்தது இன்று இங்கு வரிகளாய் !
//மீண்டும் மீண்டும் பணிவுடன் விளம்புகிறேன் !
ReplyDeleteகூடிக்கரையும் காகங்களல்ல நாம்!கூடி மழை பொழியும் மேகங்கள்!//
அருமை பாஸ் :)
இது இதத்தான் எதிர்ப்பார்க்கிறேன். ஒரு தாயின் கருணை, ஒரு சகோதரரனின் பரிவு, ஒரு நல்ல நண்பனின் அரவணைப்பு...
ReplyDeleteஅருமை தம்பீ!
உன்னோட இந்தப் பதிவின் மூலமாக கொடுத்திருக்கும் "பதிவூடகம் கொஞ்சம் மேலேதான்"க்கு போட்ட என்னோட பின்னூட்டமும் நல்லாத்தான் இருக்கு, பொருத்தமாக என்பதால் மீண்டும் இங்கே வைக்கிறேன்... லூசில விடு :-)
ReplyDelete...Thekkikattan|தெகா said...
February 26, 2008 7:14 PM
சுரேகா!
இது, இது தான் பதிவு ;)! அப்ப முன்ன போட்டதெல்லாம் என்னாவாமின்னு கேக்கப்டாது... :-P.
ரொம்பச் சரியாக சொன்னாய். இதில் கிடைக்கும் தட்டிக் கொடுத்தலும், குமட்டில் கிடைக்கும் குத்தல்களும் இன்னும் நம் கண்களை அகல விரிய வைக்கும் மாற்றுக் கல்விச் சாலை.
என்னைப் பொருத்த மட்டில் இதனை விட சிறந்ததொரு மாற்று ஊடகம் வளர்ந்த, வளரும் நிலையில் இருப்பவர்களுக்கிடையில் கிடைக்கற்கரிய... இங்கே பங்களிப்பவனும், பயனாளியும் ஒருங்கே பயனடைகிறார்கள் - எ சிம்பயொடிக் மீடியம்.
பி.கு: இதில் இன்னொரு சிறப்புமிருக்கிறது, எல்லோருக்கும் இந்த ஊடகத்தின் மூலமாக தான் நினைத்ததையெல்லாம் எழுத முடிவதால் என்னவாகுகிறதென்றால், உ.தா: 28வது வயதில் இருக்கும் ஒருவர் தனக்குக் கிடைத்த எக்ஸ்போசர்களைக் கொண்டு அரிதியிட்டு (அது குறுகிய எண்ணமே என்ற போதிலும்...) ஒரு கருத்தினை முன் வைக்கும் பொழுது, தன்வாழ்வின் விளிம்பு நிலையிலிருக்கும் நன்றாக வளர்ந்த வயதளவிலும் ஒருவர் இங்கே இருக்கும் பொழுதும் அதே தேக்கமுற்ற கருத்திற்கு தனது நிலையினை முன் வைக்கும் பொழுது அதனை தன் "வளர்நிலை அளவுகோலாக" கொண்டு மற்றவர் கருத்துகளையும் படிக்கும் பொழுது புதிய சிந்தனைக்கு அங்கே விதை தூவப்படுவதும் ஒரு சிறப்பே... மற்ற எந்த ஊடாகங்களாலும் முடியாத ஒன்று... இல்லையா
நன்றி ஆயில்யன்!
ReplyDeleteலட்சியத்தை உயரத்தில் வச்சா
இது போன்ற சின்ன விஷயமெல்லாம்
தூசி..!
தூள் கிளப்புங்க பாஸு !
அண்ணா..!
ReplyDeleteஉங்கள் நிஜமான அக்கறையின் பிரதிபலிப்புதான்
வார்த்தைகளாய் வாழ்த்துக்களை வாங்கிக்கொண்டிருக்கின்றன.!
இவையனைத்தும்
உமக்கே
சமர்ப்பணம்!
சுரேகா.. said...
ReplyDeleteஅண்ணா..!
உங்கள் நிஜமான அக்கறையின் பிரதிபலிப்புதான்
வார்த்தைகளாய் வாழ்த்துக்களை வாங்கிக்கொண்டிருக்கின்றன.!
இவையனைத்தும்
உமக்கே
சமர்ப்பணம்!//
என்னம்மா இப்படிச் சொல்லி குபுக்கின்னு கண்ணில் நீர்க் கேர்க்க வைக்கிறாயே... ம்ம்ம் உள்ளொளியை மட்டும் தரிசிப்பதை நிறுத்த வேண்டாம், நாம் என்றும் .
// ஆறுமாதமாய் அடிக்காமல விட்ட
ReplyDeleteபாழாய்ப்போன சரக்குகூட
சகலத்துக்கும் உதவிசெய்யும்
சகோதரனாய்த் தோன்றுகிறது! ///
ஆஹா.... ஓஹொ..... அருமை... அருமை.... என்னவொரு சிந்தனைதுவ வரிகள்....!!
// ஒரு எழவும் எழுதாமல்
ஒழுங்காக இருந்திருக்கலாம்.! //
நல்ல முடிவு.....
ஒக்காந்து யோசிச்சீங்களோ......????
எதுவும் உள்குத்து இல்லாம இருந்தா சரி....!!!
நல்லாவே சொல்லீருக்குறீங்க....!! கலக்கல் தல.........
நல்லா வந்திருக்கு சுரேகா!
ReplyDeleteபுதுகை ப்ளாக்கர்களின் தலைவரே,
ReplyDeleteபதிவில் சொல்லியிருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மை, அருமை.
தசரா நல்வாழ்த்துக்கள்
வாங்க மேடி! ரொம்ப நன்றிப்பா!
ReplyDeleteநன்றி சிவா!
ReplyDeleteவாங்க புதுகைத்தென்றல்!
ReplyDeleteஎன்னங்க நீங்கபாட்டுக்கும் தலைவர்..அது இதுன்னு! உள்ள பொறுப்புகளே முடியலை! :))
வீட்டில் அனைவருக்கும் என் அன்பைத்தெரிவியுங்கள் !
ungala tag panniteney.....ungala vitta yaaruna irukka:))
ReplyDeletekavithai sooperu
ReplyDeleteஅருமை அருமை
ReplyDelete