கல்விக்கடன்..ஒரு பின்னூட்டமே.. பதிவாக...


கல்விக்கடன் குறித்த...என் முந்தைய பதிவுகளைப்படித்துவிட்டு..திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பின்னூட்டமாக எழுதியிருந்த கருத்துக்களே இந்தப் பதிவாகிறது.....! ஒரு முன்னாள் வங்கியாளராக தனது கருத்துக்களை மிகச்சிறப்பாகச் சொல்லியுள்ளார். திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ! இடையிடையே எனது விளக்கம் மட்டும்....

ஒரு முன்னாள் வங்கியாளனாக இந்த மூன்று பதிவுகளையும் ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டிருந்தேன்.

முதலில், இந்த மூன்றாம் பகுதியில் இருக்கும் சில விஷயங்களைப் பற்றி....

என்ன வரையறைக்கு உட்பட்டு , கடன் கொடுக்கலாம் என்பதை யாரும் சொல்லவே இல்லை என்று சொல்லியிருப்பது சரியல்ல.

வரையறைகள் இருக்கத் தான் செய்கின்றன. ஆனால், அன்று நிதியமைச்சராக இருந்த பானா சீனா என்ன செய்தார்? கல்விக் கடன் கொடுக்க மறுக்கிறார்களா, எனக்கு ஒரு போன், தபால் கார்ட் போடுங்கள், தலையைச் சீவுகிறேன் என்ற மாதிரி மிரட்டல்கள்! கொஞ்ச நாட்களில், அதுவும் அலுத்து விட்டது.

இதைத்தான் வாய்மொழி என்று நாசூக்காகச்சொன்னேன்...! :) நீங்கள் போட்டு உடைத்துவிட்டீர்கள்.

கல்விக் கடன் என்பது ஒரு அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சியாகத் தான் ஆரம்பித்தது!

அடுத்ததாக, நம்முடைய மக்களுக்கும் சரி, அரசியல்வாதிகளுக்கும் சரி, ஒரு அடிப்படை விஷயம் எப்போதுமே புரிவதில்லை.

கடன் என்பது திருப்பிச் செலுத்தவேண்டிய ஒன்று. தர்மம், இலவசம் என்பது வேறு! வங்கிகள், கடன் கொடுப்பதை, ஒரு தொழிலாகச் செய்கின்றன. அதுவும் தவிர, அப்படிக் கொடுக்கப் படும் பணம், வங்கியுடையதோ அல்லது அரசின் சொத்து ஒன்றும் இல்லை. அது வங்கிகளில் முதலீடு செய்து வைத்திருக்கும் முதலீட்டாளர்களுடையது.


ஆம்.. இதுவும் முதல்பாகத்திலேயே...தள்ளுபடி என்ற கோணத்தில் சொன்னேன்..ஆனால் உங்கள் வரிகளில் நிறைய உண்மை தெறிக்கிறது.


இந்த இடத்தில் இரண்டு விஷயங்கள் தெளிவுபடச் சொல்லப்பட வேண்டும்.

இப்படி சமூகப் பொறுப்புடன், வழங்கப்படும் கடன்களுக்கு, இந்திய அரசு, உத்தரவாதம் எதையாவது அளித்திருக்கிறதா?

இல்லை!

கடன் வாங்கும்போது ஆயிரம் கேள்விகள் கேட்டுத் துளைத்து வாங்கும் அத்தனைபேருமே, தங்களுடைய கடன் திருப்பிச் செலுத்தப்படவேண்டியது என்ற உணர்வோடும் பொறுப்போடும் இருக்கிறார்களா?

இல்லை!

ஆக, வங்கிகள் தட்டிக் கழிக்கின்றன என்ற குற்றச்சாட்டை வைப்பதற்கு முன்னால், கல்விக்கடன் என்பது, வங்கித் தொழிலின் மற்ற கடன்களைப் போலத் தானா, அல்லது அரசினால் மறைமுகமாக, எவருடைய பணத்தையோ எடுத்து, அரசியல் ஆதாயத்திற்காகச் சூறை விடப்படும் தேங்காய் தானா?

வங்கிகள் செய்வது ஒன்று வியாபாரமாக இருக்க வேண்டும் அல்லது வங்கித் தொழிலை விட்டு விட்டு அரசு நடத்தும் தர்ம சத்திரமாக இருக்க வேண்டும். இந்த ஒன்று தான் அரசினால் வரையறை செய்யப் படாமல் இருப்பது!

கல்விக் கடன் என்று மட்டுமில்லை, எந்தக் கடனாக இருந்தாலும், திருப்பிச் செலுத்தும் சக்தி கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

பொதுத்துறை வங்கிகள் பாவம்!

அப்புறம் கடைசிப்பாராவில் சொல்லியிருப்பது,அதற்கும் மாற்று இருக்கிறதே!

எண்பது சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றுப் பொருளாதார ரீதியாக அதாவது பெற்றோரின் வருமான அடிப்படையை வைத்து, கல்வி நிறுவனங்கள் குறைந்தது இருபத்தைந்து சதவீத இடங்களையாவது இலவசமாகத் தான் ஒதுக்க வேண்டும் என்று நிபந்தனை வைக்கலாமே!

அதுவும் சரிதான்..என் கோணமே அதுதான்..! நல்லாப்படிக்கிறியா? ஏழையா? எங்கவேணும்னாலும் சேந்து படி...பணம் கட்டவேணாம்னு சொல்லும் அளவுக்கு அரசுக்கு திராணி இல்லை!

இங்கே மாற்றம் நிறைய விஷயங்களில் தேவைப்படுகிறது!

கண்டிப்பா சார்...!


Comments

  1. முன்னாள் வங்கியாளரே சொல்லிட்டாரு.

    அப்புறம் என்ன??

    ReplyDelete
  2. முன்னாள் வங்கியாளன் சொன்னது ஒருபக்கம் இருக்கட்டும் அம்மா! நீங்கள் என்ன தீர்வு சொல்ல நினைக்கிறீர்கள்?

    இந்த மூன்று பகுதிகளில் நான் ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டிருந்த விஷயமே, கடன்களைப் பற்றியது அல்ல!

    முதலாவதாக, இந்தக் கடன்கள் யாருக்கு உண்மையிலேயே பயன் படுகின்றன?

    அடுத்து, பிச்சை புகினும் கற்கை நன்றே என்று மூதுரையை கேட்டு வளர்ந்த நாட்டில், கல்வியின் அவசியத்தை எந்த அளவுக்கு நாம் உணர்ந்திருக்கிறோம்? கடன் வாங்கியாவது தரமான கல்வியை பெற வேண்டும் என்ற வேட்கையோடு விண்ணப்பிப்பவர்கள் எத்தனை பேர்?

    கடைசியாக, இங்கே அரசு மூலமாக அறிவிக்கப் படும் கடன் திட்டங்கள் எல்லாமே,திருப்பிச் செலுத்தவேண்டியவை அல்ல என்ற மனோபாவத்தோடு வாங்குகிற கடன்கள் என்னாகும்?

    வங்கிகளுடைய சமூகப் பொறுப்பை மறுத்தோ, கடன் வழங்குவதில் பல நேரங்களில் காட்டும்அலட்சியம், முகச்சுளிப்பை நான் நியாயப் படுத்தவும் இல்லை. எந்த ஒரு விஷயத்தையும் 360 டிகிரியில் இருந்து பார்க்கப் பழகுவது எல்லோருக்குமே நல்லது.

    ReplyDelete
  3. வாங்க புதுகைத்தென்றல்...அதான் உடனே பதிவாவே போட்டுட்டேன்.

    ReplyDelete
  4. வாங்க சார்!

    //முன்னாள் வங்கியாளன் சொன்னது ஒருபக்கம் இருக்கட்டும் அம்மா! நீங்கள் என்ன தீர்வு சொல்ல நினைக்கிறீர்கள்?
    //

    உங்கள் கருத்தைத்தான் தீர்ப்பாக நினைக்கிறாங்க. அதான் உங்களையே மேற்கோள் காட்டுறாங்க..! அப்புறம் ஏன் அவுங்க தீர்வு சொல்லணும்?
    :)


    மற்ற விஷயங்கள் ...கரெக்ட்..
    360டிகிரியில் பார்க்க நினைச்சதால்தான்..
    ஒரேயடியா ஒருதரப்பை மட்டும் திட்டாம எழுதினேன்.

    அதனால்தான் அழகான உங்க கோணமும் கிடைச்சது! :)

    ReplyDelete
  5. கல்வியை வியாபாரமாக்கிய அரசுதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
    நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அரசே பணம் கட்டவேண்டும்.
    இல்லாவிட்டால் அவர்கள் வங்கி கடனுக்கு நிதியமைச்சர் ஜாமீன்
    கையெழுத்து போட வேண்டும்.
    அமைச்சர்களுக்கே கோடிக்கணக்கில் வங்கி பாக்கி (கட்டாமல்)
    இருப்பது தனிக்கதை.

    ReplyDelete
  6. வாங்க கைலாஷ்..!

    உண்மைதான்..ஆனால் அரசாங்கத்தின் எல்லா அரசியல்வாதிகளும்..ஏதாவது ஒரு வங்கியில் கடனை வாங்கிவிட்டு அல்வா கொடுத்துவிட்டு அலைகிறார்களே!

    அவர்கள் எப்படி நல்லது செய்வார்கள்?

    ReplyDelete
  7. கைலாஷ், நீங்கள் கேட்டிருக்கும் கேள்வியை, இப்படி யோசித்துப் பாருங்கள்!

    கல்விக் கடனை ஏன் அரசே, budget allocation இல் நிதி ஒதுக்கி நேரடியாகவே கடன் வழங்கக் கூடாது?

    மற்ற நிறுவனங்கள் தான் கடன் கொடுக்க வேண்டுமென்றால், ஏன் அரசே அதற்கு நூறு சதவீத உத்தரவாதம் தரக்கூடாது?

    அப்படி அரசு உத்தரவாதம் தருகிற பட்சத்தில், அடிப்படைக் கட்டமைப்புக்களில். ராணுவம்,இதர அத்தியாவசிய துறைகளில் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை, கட்டாய சேவையை வலியுறுத்தக் கூடாது?

    கல்வியை வியாபாரமாக்கிக் கோடிக் கோடியாகக் கொழிக்கும் கல்வித்தந்தைகளின் கொழுப்பைக் கொஞ்சம் குறைக்கிற மாதிரி, அவர்களும் இந்தச் சுமையின் ஒரு பகுதியைத் தாங்க வேண்டும் என்று கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது?

    கொஞ்சம் ஆழமாகப் பார்த்தீர்களானால், அரசும் சரி, கல்விக் கடனுக்காக விண்ணப்பிப்பவரும் சரி, கல்வி நிறுவனங்களும் சரி, தங்களுடைய பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டு, வேறொரு பக்கம் கைகாட்டி விட்டு, ஹாயாக இருப்பது புரியும்.

    என்ன செய்யப் போகிறீர்கள்?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!