ஞானாலயா
புதுக்கோட்டையில் எனக்குத்தெரிந்த நண்பரின் நண்பர் கூப்பிட்டு, நான் சொல்லும் முகவரிக்கு வாருங்கள். கொஞ்சம் கம்ப்யூட்டர் வேலை இருக்கிறது என்றார். நானும் என் வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளி இருக்கும் அந்த வீட்டுக்குப்போனபின், பிரமித்துப்போனேன். அந்த வீடு முழுவதும் புத்தகங்கள்! வரிசைக்கிரமமாக அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டு ஒரு நூலகம்போல் இருந்தது. அப்புறம்தான் உறைத்தது.
அது ஞானாலயா! தமிழகத்தின் தனிச்சிறப்பு மிக்க தனியார் நூலகம்.! புதுக்கோட்டையின் பெருமைகளில் முக்கியமானது! இன்றைய தமிழ் அறிஞர்களும், எழுத்தாளர்களும் வந்துபோகும் கோவில்! அந்த நூலகம் எங்கள் பகுதியில்தான் இருக்கிறது என்று எனக்குத்தெரியும். ஆனால் அப்புறம் போய்க்கொள்ளலாம் என்று மூன்று ஆண்டுகளை ஓட்டிவிட்டேன். ( அதற்காக இன்றும் வருந்திக்கொண்டிருக்கிறேன் ). ஆனால் இப்போது நான் ஞானாலயாவின் செல்லப்பிள்ளை! :)
அதன் நிறுவனர்கள் திரு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் டோரதி கிருஷ்ணமூர்த்தி தம்பதியர். அவர் பள்ளி தலைமை ஆசிரியராய் இருந்தவர். திருமதி டோரதி அவர்கள் கல்லூரி முதல்வராய் இருந்தவர். இருவரும் பணி ஓய்வு பெற்றுவிட்டு ஞானாலயாவை வளர்த்துக்கொண்டு வருகிறார்கள்.
திரு,கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உடலாலும், அறிவாலும், உள்ளத்தாலும்அளவிடமுடியா உயரமானவர்! மனிதர்களை நேசிப்பவர். நேர்மையை சுவாசிப்பவர். ஒரு செய்தியின் அடி ஆழம்வரை சென்று அலசுபவர்! அங்கு வரும் ஆர்வலர்களுக்கு முகம் கோணாமல் விபரங்களை அள்ளித்தருபவர். அவர் விளக்கம் சொல்லாமல் ஒரு புத்தகத்தை படிப்பது உப்பில்லாப்பண்டம் உண்பதைப்போல! அவர் ஒரு நூலகர் அல்ல.! நல்ல வாசகர்! நீங்கள் எந்த தமிழ்ப்புத்தகம் தேடிக்கொண்டிருந்தாலும் இங்கு இருக்கும் சாத்தியம் அதிகம்! மேலும் அதைப்பற்றிய பின்னணித் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார்.
திருமதி.டோரதி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அன்பான தாய் மற்றும் அறிவுசால் ஆசான்! கணவரின் எல்லாச்செயல்களிலும் துணை நின்று ஒரு நல்ல ஆலோசகராகவும் திகழ்பவர்! மிகவும் அற்புதமாகச் சமைப்பார். (நம்மல்லாம் படிக்க போகச்சொன்னா தின்னுப்புட்டு வர்ற கூட்டம்! என்ன பண்றது? ) தவிர..மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர்! அவர் எழுதி பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் மலேசியாவிலும், ஐரோப்பாவிலும் கௌரவப்படுத்தப்பட்டு, விருதுகள் பெற்றிருக்கிறார்கள். ஆனால் நம் மத்திய, மாநில அரசுகளோ...ம்ஹூம்.. !
இங்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் நூல்கள் உள்ளன. தமிழில் அரிய நூல்கள் அனைத்தும் இருக்கின்றன. நான் ஒரு எழுத்தாளர் பற்றியோ, படைப்புகள் பற்றியோ தெரிந்துகொள்ள விரும்பினால், அடுத்து போய் விழும் இடம் அதுதான். இங்கு எல்லா சிற்றிதழ்களும் ஆரம்பம் முதல் உள்ளன. இன்றும் வந்துகொண்டிருக்கின்றன. வட அமெரிக்க FETNA வின் தென்றல் இதழைக்கூட நான் படித்திருக்கிறேன்.டெல்லியிலிருந்து வெளிவரும் வடக்கு வாசல் இங்கு வருகிறது.பல நாடுகளிலிருந்தும் ஆராய்ச்சி மாணவர்கள் வந்து செல்கிறார்கள்.
இந்த அறிவுப்பெட்டகத்துக்கு ஒரு மாதம் அந்துருண்டை வாங்கவே அவர்களுக்கு ஒரு தொகை செலவாகிறது. மேலும் இதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல கணிணி மயமாக்குவதும், புத்தகங்கள் அனைத்தையும் மின்புத்தகமாக மாற்றுவதும், அதை இணைய நூலகமாக்கி உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்த வைப்பதும் காலத்தின் கட்டாயம்.! . இவர்கள் இன்றுவரை தங்கள் சொந்த ஓய்வூதியத்தையும், சேமிப்பையும் வைத்தே நூலகத்தை பராமரித்து வருகிறார்கள். ஆர்வலர்கள் நிறைய புத்தகங்களைத் தந்து குவிக்கிறார்கள். ஆனால் பொருளுதவிக்காக இப்போதுதான் மத்திய, மாநில அரசுகளிடம் திட்ட முன்வரைவு வைக்கப்பட்டுள்ளது.
நாம் ஏதாவது இந்த நூலகத்துக்குச்செய்யவேண்டும்.! என்ன செய்யலாம்?
ஏதாவது ஒரு நல்ல நோக்கத்தோடோ, பாராட்டவோ, அவரைத்தொடர்பு கொள்ள விரும்பினால்.. +91 99656 33140

பகிர்விற்கு நன்றி..
ReplyDeleteகலக்குங்க..
தகவலுக்கு நன்றிங்க!
ReplyDelete// butterfly Surya said...
ReplyDeleteபகிர்விற்கு நன்றி..
கலக்குங்க..
//
பகிர்ந்ததுக்கு அப்புறம் கலக்குறதுதானே?
நட்சத்திர வாழ்த்துக்கள். தகவலுக்கு நன்று சுரேகா. அவர்கள் சேவை பாராட்டப்பட வேண்டியதே. ஆனால் அனைத்து நூல்களையும் மின் நூலாக மாற்றுவதில் சட்ட சிக்கல் இருக்கக் கூடும். நூலகத்தைப் பராமரிக்க அரசு நிச்சயமாக உதவ வேண்டும்.
ReplyDeleteபயனுள்ள பதிவு தலைவரே. புதுக்கோட்டை ஏரியா பக்கம் போகுற வேலை இருந்தா கண்டிப்பா இந்த நூலகம் சென்று வருகிறேன்
ReplyDeleteபட்டர்ஃப்ளை சூர்யா அண்ணே!
ReplyDeleteமிக்க நன்றி! மற்றும் சென்னைலதானே இருக்கீங்க? நடு ராத்திரி படிச்சிருக்கீங்களே! நீங்கதான் கலக்குறீங்க!
வாங்க பழமை பேசி!
ReplyDeleteமிக்க நன்றிங்க..!
கலக்கிட்டு பகிர்ந்தாலும் நல்லா இருக்குமோ? :)
வாங்க அமரபாரதி!
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி!
நீங்கள் சொல்வது உண்மைதான்!
அவை விற்பனை நோக்கத்தில் செய்தால்தான் ஏற்படும். ஆனால் இது பாதுகாக்கும் எண்ணத்தில் செய்யப்படுகிறது. மேலும் நூறாண்டுகள் கண்ட புத்தகங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றுக்காகத்தான்...!
வாங்க ரோமியோ!
ReplyDeleteகண்டிப்பா தங்குற மாதிரி வாங்க!
நான் லோக்கலில் இருக்கும்போது வாங்க!
நம்ப வீட்டிலேயே தங்கிக்கிட்டு, போய்ட்டு வரலாம்.
பகிர்விற்கு நன்றி
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிங்க
ReplyDeleteநல்ல தகவல்
ReplyDeleteஉங்கள் எழுத்து நடையும் நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.
நன்றி
கேள்விப்பட்டிருக்கிறேன். விரிவான தகவல்களுக்கு நன்றி.
ReplyDeleteவாங்க டி.வி.ஆர்!
ReplyDeleteஉங்கள் அன்புக்கும் நன்றிக்கும்..நன்றி!
வாங்க ஜோதி!
ReplyDeleteமிக்க நன்றிங்க!
வாங்க ஹெச் கே அருண்
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கு நன்றி!
வாங்க ஜெ.ஜெமா! :)
ReplyDeleteஇதுவே ஒரு சின்ன அறிமுகம்தான்..!
வந்து பாருங்க!!
உயர்திரு.கிருட்டிணமூர்த்தி ஐயா பள்ளியில் என்னுடைய தமிழ் ஆசான். என்னிடம் இருக்கும் கொஞ்சூண்டு படிக்கும் பழக்கத்திற்குக் காரணமானவர்.
ReplyDeleteநன்றி சுரேகாண்ணா.
பகிர்வுக்கு நன்றி. 'ஞானாலயா' தம்பதிகளின் தொண்டுக்கும் உழைப்புக்கும் தலைவணங்குகிறேன்.
ReplyDeleteதம்பதிகளின் தொண்டுக்கும் உழைப்புக்கும் தலைவணங்குகிறேன்
ReplyDeleteவாங்க அப்துல்லா!
ReplyDeleteஆமா..பிரகதாம்பாளோ? சொல்லவிட்டுட்டேனே!
இந்த வாசிப்பே கொஞ்சூண்டா!?
:)
நம்ம ஊரைப்பத்தி நாமதானே நல்லவிதமா சொல்லணும்..! நமக்குள்ள என்ன நன்றியெல்லாம்?
வாங்க சந்தனமுல்லை!
ReplyDeleteநன்றிங்க!
வாங்க பாபு!
ReplyDeleteஅப்துல்லா தேடிக்கிட்டிருந்தாரே!
:)
ஆம்..உங்கள் அனைத்துப்பாராட்டுகளுக்கும் உரித்தானவர்கள்தான் அவர்கள்!
/இதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல கணிணி மயமாக்குவதும், புத்தகங்கள் அனைத்தையும் மின்புத்தகமாக மாற்றுவதும், அதை இணைய நூலகமாக்கி உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்த வைப்பதும் காலத்தின் கட்டாயம்.!/
ReplyDeleteஅழிந்து வரும் மரபுச் செல்வங்களைப் பாதுகாக்க,(புத்தகங்களும் இதில் அடக்கம்) தமிழ் மரபு அறக்கட்டளை என்ற அமைப்பு கடந்த எட்டு ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மின்தமிழ் என்று கூகிள் க்ரூப்சில் தேடிப்பாருங்கள், இது தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்வளைக் குழுமம்.
அவர்களைத் தொடர்புகொண்டாலேயே, digigitisation of books எப்படிச் செய்வது என்பதைச் சொல்வார்கள். தவிர, தமிழ்மணம் நிர்வாகக் குழுவில் இருக்கும் திரு நா.கணேசன் ஞானாலயாவைப் பற்றி மிந்தமிழிலும், வேறு சில வலைக் குழுமங்களிலும் பல சந்தர்ப்பங்களில் தொடர்ந்து அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கிறார். உள்ளூரிலேயே இருக்கும் பழைய மாணவர்கள், ஆர்வலர்கள் சேர்ந்தால், அங்கே இருக்கும் புத்தகச் செல்வங்களைக் கணினி மயமாக்கிப் பாதுகாக்க முடியும்.
இதே உதவியை, சென்னையில் பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாபரும் இயக்குனருமான திரு.முக்தா வி. ஸ்ரீநிவாசன் தி.நகரில் தன்னுடைய இல்லத்தில் வைத்துப் பராமரிக்கும் நூலகத்திற்கும், சென்னையில் உள்ள ஆர்வலர்கள் செய்துதரலாம்.
காப்புரிமைப் பிரச்சினையில் குறுக்கிடுவதாகவோ, எழுத்தாளர்கள், பதிப்பகத்தாரை ஏமாற்றும் முயற்சி அல்ல இது. பழைய, அரிய புத்தகச் செல்வங்களைப் பாதுகாக்கவும், நமக்கு அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்கவும் செய்கிற கல்வித் தெய்வத்தின் பணி இது என்பதைப் புரிந்து கொண்டு ஆர்வமுள்ளவர்கள் பங்கு கொள்ளலாம்.
அரசின் உதவியையோ, ஒத்துழைப்பையோ இதில் எதிர்பார்க்காமல், நமக்கு நாமே என்பதன் உண்மையான அர்த்தத்தில் புரிந்து கொண்டு செய்ய வேண்டிய அவசரமான கடமையும் இது!
நிச்சயம் ஏதாவது செய்யணும்..
ReplyDeleteஎனக்கும் புது தகவல். கிருஷ்ணமூர்த்தி தம்பதிகளுக்கு என் வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல பகிர்வு... ஊருக்கு வரும்போது அங்கு சென்று வர முயற்சிக்கிறேன். நன்றி சுரேகா...
ReplyDeleteவாவ், இப்படியெல்லாம் சேவை செய்யும் மனிதர்கள் இருக்கிறார்கள்! நன்றி சுரேகா.
ReplyDeleteஅனுஜன்யா
பகிர்விற்கு மிக்க நன்றி நட்சத்திரமே..!
ReplyDeleteமினிமம் ஒரு போன் போட்டாவது வாழ்த்து சொல்றேன்...
முதலில் நான் அந்த தம்பதியருக்கு என் முதல் வணக்கத்தை கூறிக்கொள்கிறேன். உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். ஆசிரியராக இருந்து ஒய்வு பெற்ற பிறகும் இருவரும் மற்றவர்களின் அறிவை வளர்ப்பதற்காக அயராது உழைத்து கொண்டு இருக்கும் நீங்கள் பல நூறு ஜென்மங்கள் வாழவேண்டும் என்று அந்த கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்.
ReplyDeleteஅடுத்து இப்படி பட்டவர்களை பதிவு உலகத்திற்கு வெளிக்கொண்டு வந்த உங்களின் சிறந்த சேவையை நான் மணதார பாராட்டுகிறேன். இனிமேல் அந்த தம்பதியரின் புகழ் வெளி உலகத்துக்கு சீக்கிரமாக பரவிவிடும். உங்களுக்கு நேரமிருந்தால் அந்த தம்பதியரின் நூலகத்தை பற்றிய குறிப்புகள் மற்றும் அவர்கள் இருவரும் வாங்கிய விருதுகள் ஆகியவற்றை தினமலர் நாளிதழ் அனுப்புங்கள். அவர்கள் கண்டிப்பாக அந்த தம்பதியரை வெளிக்கொண்டு வருவார்கள். மீண்டும் நன்றியை கூறி விடைபெறுகிறேன்
நன்றி வணக்கம்.
இப்படிக்கு
சசிகுமார்
வாங்க கிருஷ்ணமூர்த்தி சார்!
ReplyDeleteஉங்கள் பெயர்தான் அவருக்கும்..!
உங்களைப்போலவே சமூக அக்கறை!
நீங்கள் சொல்லிய விபரங்களைக் குறித்துக்கொண்டு செயல்படுகிறோம். ஏதாவது நடக்கட்டும்! உங்கள் ஆசிகளோடு!
ஞானாலயா நூலகம் தொடர்பான தகவலை தமிழ்மணம் குழுமத்தின் ஊடாகவும் அறியக் கிடைத்தது.
ReplyDeletehttp://groups.google.com/group/tamilmanram/browse_thread/thread/b4450180ebdf4277?hl=ta
சிலவேளை தமிழகம் வந்தால், நிச்சயம் வரவேண்டிய ஒரு இடமாக குறித்து வைத்துக்கொண்டேன்.
பகிர்வுக்கு நன்றி
வாங்க கேபிள் ஜி!
ReplyDeleteநீங்களே ஏதாவது ஆரம்பிச்சு வையுங்க!
எந்த யோசனையா இருந்தாலும் சொல்லுங்க!
செய்வோம்!
வாங்க புதுகைத்தென்றல்..
ReplyDeleteஆஹா..உங்களுக்குத்தெரிந்திருக்கும்னுல்ல நெனைச்சேன்..!
வாங்க ரோஸ்விக்!
ReplyDeleteநன்றிங்க
வாங்க அனுஜன்யா அண்ணே!
ReplyDeleteநீங்க வந்திருந்து வாழ்த்துவது மிகவும் மகிழ்வாக இருக்கிறது.
ஆம்..! அவர்கள் சேவை மகத்தானது!
வாங்க பேரரசன்..இன்னும் போனே வரலையாமே!
ReplyDelete:))
வாங்க சசிக்குமார்!
ReplyDeleteஉங்கள் அன்புக்கு மிக்க நன்றி!
அவர்களுக்கு இப்போது புகழ்வெளிச்சத்தின்மேல் ஆசை இல்லை!
பல்வேறு ஊடகங்கள் செய்திவெளியிட்டுவிட்டன.
ஆனால், அவர்களுக்கு அதை எப்படி அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வது என்ற கவலைதான் இப்போது உள்ளது.
அதற்குத்தான் பதிவர்கள் ஏதாவது செய்யணும் என்கிறேன்.
வாங்க ஹெச் கே அருண்..
ReplyDeleteஉடனே சுட்டியில் சென்று பார்த்துவிட்டேன். மிக்க நன்றி!
ஆகா இப்பிடியும் இருக்கோ
ReplyDeleteசிறிலங்காவில இருந்து வரலாமா
ஐயா அவர்களின் பணி குறித்த விபரத்தை ஒரு பத்திரிக்கையில் படித்ததுண்டு.விபரமாக உங்கள் பதிவில் அறியக்கிடைத்தது. நன்றி!
ReplyDeleteEvery one should appreciate their efforts that leads to endless generation.
ReplyDeletePrabakar
பூங்கொத்து அவர்களுக்கும் உங்களுக்கும்!
ReplyDeleteஅன்பின் சுரேகா
ReplyDeleteஞானலாயா - இடுகை அருமை - கலக்கிடீங்க போங்க
தகவலுக்கு நன்றி
நல்ல இடுகை.
ReplyDelete