எதிர்(ரி)வினை!

நண்பர்கள் வட்டத்தின் ஆரத்தை அதிகப்படுத்தி அதன் சுற்றளவைப் பெரிதாக்குவதில் பதிவுலகை விட மிகச்சிறந்த அமைப்பு இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.

ஆனால், அத்தகைய நட்பு தரும் பதிவுலகில் நாம் எந்த அளவுக்கு நன்மையை விதைத்திருக்கிறோம் என்பதில் எனக்கு ஒரு ஐயம் இருந்துகொண்டே இருக்கிறது. மாபெரும் பதிவர்கள் என்று போற்றப்பட்டவர்கள் தங்கள் அடையாளங்களை அழித்துக்கொள்வதும், ஒரு காலகட்டத்தில் அயர்ச்சியால் பதிவே எழுதாமல் இருப்பதும் நடந்தேறி வருகிறது.

இதற்கு என்ன காரணமென்று பார்த்தால், ஏதோவொரு சர்ச்சை அவர்களது எழுத்தை முடக்கியிருக்கும். அல்லது இன்னொரு சர்ச்சையின் விளைவு அவர்களுக்கு ஆயாசத்தை ஏற்படுத்தி , நமக்கும் இது நடக்கலாம் என்ற பயம் கிளம்பியிருக்கும்.

அதைவிட மேலாக, இதை எழுதினால்..இவருக்குப்பிடிக்காது. அதை எழுதினால், அவருக்குப்பிடிக்காது என்று - எந்த எழுத்தால் நட்பு வளர்ந்ததோ - அந்த எழுத்தை நசுக்க வேண்டியிருக்கும்.

தொடர்பில்லாமல் பத்துப்பதிவுகளை எடுத்துப்பார்த்தால், குறைந்தபட்சம் ஆறு பதிவுகள் ஏதாவதொன்றின் எதிர்வினையாக அமைந்துவிடுகிறது. அது ஒன்றும் தவறில்லை. எதிர்வினைகள் தொடர்கதையாக மாறி அந்தச்சங்கிலி இறுகி சம்பந்தப்பட்டவர்களின் நட்புச்சங்கிலியை அறுக்கும்வரை!

வலையுலகின் மிகப்பிரபலமான, இன்று நாம் எழுதும் கட்டமைப்பு வசதிகளுக்கு ஆதாரமாக இருந்த, இருக்கும் ஒரு தளத்துக்கு நிர்வாகிகளில் ஒருவராக இருக்கும் ஒரு அன்பான பதிவரை சமீபத்தில் சந்தித்தேன். ஏன் இப்போதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை என்று கேட்டேன். அவர் சொன்ன பதில் அப்படியே மேற்சொன்ன கருத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. எதிர்வினைகள் அதிகமாகிவிட்டன என்றார்.

உண்மைதான். நீங்கள் ஒரு விஷயத்தைப்பார்க்கிறீர்கள். உங்கள் கோணத்தில் பதிக்கிறீர்கள். அது மற்றொரு நண்பருக்கு தவறாகப்படுகிறதென்றால், உங்களுக்கு பின்னூட்டமிடலாம். அல்லது தன் மாற்றுக்கருத்தை தனது தளத்தில் தாராளமாகப்பதியலாம். அத்துடன் அது நின்றுவிட்டால், எதிர்வினைகள் தொடர்ச்சியாகி, வன்மம் வளர்ந்து, அந்தப்பதிவர் எதிரியாகவே பாதிக்கப்பட்டு, பதிவுலகில் நுழைவதே ஒரு வருத்தமான விஷயமாய் ஆகாது.

ஆனால், விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என்று முன்னவரும், அந்த விளக்கத்தை உடைக்கிறேன் என்று பின்னவரும் கச்சை கட்டிக்கொண்டு இறங்கும்போது நட்பு தன் பலத்தை இழந்து, விளக்கங்களும், தர்க்கங்களும் கோலோச்ச ஆரம்பிக்கின்றன. பின்னர் இந்தப்பக்கம் நாலுபேர் , அந்தப்பக்கம் நாலுபேர். அதற்குப்பிறகு பதிவுலகம், தன் கையில் தயாராக வைத்திருக்கும் பெயிண்ட் டப்பாவிலிருந்து ஒவ்வொரு தரப்பிற்கும் தகுந்த வண்ணங்களை அடித்து அனுப்பிவிடுகிறது.ஆக..எதிர்வினைகளின் தொடக்கம் விளக்கம் சொல்வதில்தான் ஆரம்பிக்கிறது.

ஒன்று மட்டும் நிச்சயம்!

நம்மை நம்புகிறவர்களுக்கு விளக்கம் சொல்லவேண்டியதில்லை!
நம்மை நம்பாதவர்களுக்கு விளக்கம் சொல்லி பிரயோஜனமில்லை!


அழகான சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டு, வெற்றி பெறுவோம்.

Comments

  1. கடைசியா சரியா சொன்னப்பா?

    ReplyDelete
  2. ரொம்பச் சரியான பதிவு தலைவரே,

    அதுவும் தமிழ்மண நட்சத்திரமா ஜொலிக்கும் பொழுது மணிமகுடம் வைத்தாற்போல்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. sunfull movement என்று கூகிள் இட்டுப் பாருங்கள்!

    இணையத்தில் பயன்படுத்தப்படும் கடுமையான வார்த்தைகள், விமரிசனங்கள் எத்தகைய அழிவை உருவாக்கியிருக்கின்றன என்பதைக் கொரியாவில் கவலையோடு கவனித்து, அதைச் சரி செய்யும் இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

    நல்லதாக, ஆதரவாக, இதமாக இணையத்தில் உற்சாகமூட்டும் பின்னூட்டங்கள், ஆதரவுப் பதிவுகளை வளர்க்கும்படி அங்கே ஒரு இயக்கமாகவே நடந்து கொண்டிருக்கிறது.

    மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில், தமிழிலும் இது மாதிரி முன்கைஎடுத்துச் செயல்படவேண்டும் என்ற கருத்து முனைவர் நா.கண்ணன் அவர்களால் முன்வைக்கப் பட்டது.

    http://consenttobenothing.blogspot.com/2009/12/blog-post_1652.html

    இந்தப் பக்கங்களிலும், நீங்கள் சொல்கிற கருத்துக்களோடு உடன்படுவதொடு, முன்னெடுத்துச் செல்ல என்ன செய்ய வேண்டும் என்பதையும் பேசியிருப்பதைப் படிக்கலாம்.

    ReplyDelete
  4. ரைட்டு இந்த வார கோட்டா முடிஞ்சுட்டு:)

    ஆமான்னே ஸ்டார் ஆனா அந்த வாரம் ஒரு அட்வைஸ் பதிவு போடனும் என்ற மரபில் இந்த பதிவு வந்துவிட்டது:)

    ReplyDelete
  5. //அதைவிட மேலாக, இதை எழுதினால்..இவருக்குப்பிடிக்காது. அதை எழுதினால், அவருக்குப்பிடிக்காது என்று - எந்த எழுத்தால் நட்பு வளர்ந்ததோ - அந்த எழுத்தை நசுக்க வேண்டியிருக்கும்.//

    அந்த வரிகள் நெம்பவே யோசிக்க வைக்குதில்ல. இளம் இரத்தங்கள் அப்படித்தான் இருக்கும், போகப் போக எல்லாம் யோசிச்சு நேர் கோட்டுக்கு வந்திருவாய்ங்க. கடுமையா கவலைப் பட்டுருக்கேன்னு தெரியுது :) .

    ReplyDelete
  6. //நம்மை நம்புகிறவர்களுக்கு விளக்கம் சொல்லவேண்டியதில்லை!
    நம்மை நம்பாதவர்களுக்கு விளக்கம் சொல்லி பிரயோஜனமில்லை!//

    சரியாகச் சொன்னீர்கள்.
    மிக அழகான ஆய்வு.
    நானும் ஓடியவனில் ஒருவன்! வரிக்கு வரி உணர்கிறேன்.

    ReplyDelete
  7. //நம்மை நம்புகிறவர்களுக்கு விளக்கம் சொல்லவேண்டியதில்லை!
    நம்மை நம்பாதவர்களுக்கு விளக்கம் சொல்லி பிரயோஜனமில்லை!//


    ஒத்துக்கிறேன்!

    ReplyDelete
  8. /புதுகைத் தென்றல் said...

    ரொம்பச் சரியான பதிவு தலைவரே,

    அதுவும் தமிழ்மண நட்சத்திரமா ஜொலிக்கும் பொழுது மணிமகுடம் வைத்தாற்போல்.

    வாழ்த்துக்கள்/


    ரிப்பீட்டு...

    ReplyDelete
  9. அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் சுரேகா.

    கேபிள் நிகழ்ச்சியில் உங்களை சந்தித்து பேச முடியாமல் போய்விட்டது :(

    ReplyDelete
  10. பின்னே, நட்சத்திர பதிவராசே , விடுவீங்களா!! ( வால்பையன் கருத்துதாங்க நம்மதும்)

    ReplyDelete
  11. வாழ்த்துகள் நட்ச்சத்திரமே :)

    ReplyDelete
  12. மிக்க நன்றி குடுகுடுப்பை ஜி!

    ReplyDelete
  13. வாங்க புதுகைத்தென்றல்..
    நீங்கள்லாம் இருக்கும்போது எனக்கென்ன கவலை!
    உங்கள் வாழ்த்துக்களால் வாழ்கிறேன்.

    ReplyDelete
  14. வாங்க கிருஷ்ணமூர்த்தி சார்!
    கண்டிப்பா போய் பார்க்கிறேன்.

    நீங்க தெரிந்தோ தெரியாமலோ என் பதிவுலக வழிகாட்டியாகிவிட்டீர்கள்.

    ReplyDelete
  15. வாங்க குசும்பரே!

    ஆமா..நாங்க சொல்லி ஒடனே கேட்டுர்ற மாதிரி...ஊதுற சங்கை ஊதியாச்சு!!

    அம்புட்டுதேன்!
    :)

    ReplyDelete
  16. அட்வைஸ்னு உணராத அளவிற்கு ஒரு அட்வைஸ் இடுகை :0)

    நீங்க பெரிய தில்லாலங்கடி தலைவரே
    :)))))

    ReplyDelete
  17. வாங்க தெகா அண்ணா!

    நம்ப பல தடவை "ச்சாட்டிய" விஷயங்கள்தான்!

    என்னமோ நீங்க சொன்னா சரி!!

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் ...! நட்சத்திரங்களின்.,,!
    நட்சத்திரமே...

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் சார்..

    நான் எப்படி என் பிரண்ட்ஸ் கிட்ட சொல்லுவேன்னா..

    நம்மள ஒருத்தருக்கு பிடிச்சிருந்தா நாம தப்பு பண்ணினாலும் சரி..
    நம்மள ஒருத்தருக்கு பிடிக்கலைன்னா நாம சரியா பண்ணியிருந்தாலும் தப்பு..

    (((என்னமா யோசிக்கறேன்ல... ;))))

    ReplyDelete
  20. வாங்க யோகன் பாரிஸ்...வாழ்த்துக்களுக்கு நன்றிங்க!

    ReplyDelete
  21. வாங்க வால்பையன்..!

    மிக்க நன்றி பாஸூ!

    ReplyDelete
  22. வாங்க நிஜமா நல்லவரே!

    மிக்க நன்றிப்பா!

    எஸ் எம் எஸ் கிடைத்தது...மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
  23. வாங்க நிலா ரசிகன்!
    வந்திருந்தீங்களா?

    ஆஹா தெரியாம போச்சே!

    என் புத்தகத்தை கேட்டு வாங்கியிருப்பேனே! :)

    என்ன பண்றது? வினை எச்சம் அப்படிப்பட்டதா இருக்கு! :))

    ReplyDelete
  24. வெள்ளி நிலா ஷர்புதீன் !

    மிக்க நன்றிங்க!
    நீங்க செய்யும் அற்புதமான காரியத்தை யாராலும் செய்யமுடியாது.

    உளம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  25. அய்..ராகுல் காந்தி!

    ஸாரி சஞ்சய் காந்தி!

    மிக்க நன்றி பாஸு!

    ReplyDelete
  26. //அட்வைஸ்னு உணராத அளவிற்கு ஒரு அட்வைஸ் இடுகை :0)

    நீங்க பெரிய தில்லாலங்கடி தலைவரே
    :)))))//

    அன்பு அப்துல்லா!
    கண்டுபிடிச்சுப்புட்டீகளே!

    /தில்லாலங்கடி / ஐ லைக் இட்! :))

    மிக்க நன்றிப்பா!

    ReplyDelete
  27. வாங்க பேரரசன்..
    மிக்க நன்றி!

    ReplyDelete
  28. //நம்மள ஒருத்தருக்கு பிடிச்சிருந்தா நாம தப்பு பண்ணினாலும் சரி..
    நம்மள ஒருத்தருக்கு பிடிக்கலைன்னா நாம சரியா பண்ணியிருந்தாலும் தப்பு..//

    சூப்பரு...அன்புடன் மணிகண்டன்!

    கலக்கிப்புட்டீகளே !! :))

    ReplyDelete
  29. nalla karuththu . nambukirom boss. enkalukkaaka eluthungka. natpu thaanaaka malarum. vaalththukkal.

    ReplyDelete
  30. கலக்கல் பாஸ்! இனிய நட்சத்திர வார வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  31. சமீபத்தில் நடந்த ஒரு ஆடை சம்மந்தமான பதிவும் இது போலத்தான் ஆகி விட்டது..நல்ல பதிவு தோழரே

    ReplyDelete
  32. நீங்க சொல்வது சரிதான் நட்சத்திரமே... :-) வாழ்த்துகள்.

    இங்கு சில பதிவர்களிடம் கரைவேட்டியும், உருட்டு கட்டையும் தான் இல்லை. மத்த எல்லாம் இருக்கிறது.

    சில நல்ல எழுத்துக்கள் வீணாவதும், நல்ல எழுத்துக்கு சொந்தக்காரர்கள் வீணாய் போவதும் நடந்துகொண்டு தான் இருக்கிறது.

    ReplyDelete
  33. வாங்க மதுரை சரவணன்...

    மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  34. வாங்க தமிழ்ப்பிரியன்..!

    இப்பதான் வரீங்களா!
    சொந்தக்காரங்க லேட்டா வரலாமா?

    நன்றிப்பா!

    ReplyDelete
  35. வாங்க புலவன் புலிகேசி!

    நன்றிங்க!

    ReplyDelete
  36. வாங்க ஸ்ரீ.கிருஷ்ணா!

    கண்டிப்பா! நல்ல நட்பை கண்முன்னால் தருகிறது...நமது பதிவுலகம்!

    ReplyDelete
  37. வாங்க ரோஸ்விக்!

    மிகச்சரி!
    எல்லோரும் அன்புடன் எழுதவேண்டும். எதிர்க்கருத்துக்கள், எதிரிக்கருத்துக்கள் ஆகிவிடக்கூடாது என்பதுதான் ஆவல்!

    நன்றிங்க!

    ReplyDelete
  38. //அதைவிட மேலாக, இதை எழுதினால்..இவருக்குப்பிடிக்காது. அதை எழுதினால், அவருக்குப்பிடிக்காது என்று - எந்த எழுத்தால் நட்பு வளர்ந்ததோ - அந்த எழுத்தை நசுக்க வேண்டியிருக்கும்.//

    மிகவு சரி, நான் எழுதும் போது நண்பர்களின் சார்பு நிலைகளை கவனத்தில் கொள்வது இல்லை.

    //தொடர்பில்லாமல் பத்துப்பதிவுகளை எடுத்துப்பார்த்தால், குறைந்தபட்சம் ஆறு பதிவுகள் ஏதாவதொன்றின் எதிர்வினையாக அமைந்துவிடுகிறது. அது ஒன்றும் தவறில்லை. எதிர்வினைகள் தொடர்கதையாக மாறி அந்தச்சங்கிலி இறுகி சம்பந்தப்பட்டவர்களின் நட்புச்சங்கிலியை அறுக்கும்வரை!//

    உண்மை.

    ReplyDelete
  39. அட.. நீங்கதானா அந்த சுரேகா.. வாவ் ..வாழ்த்துக்கள் ..11

    உங்க விழா தொகுப்பு அபாரம்.. நல்ல மொழி வளமை..!!

    இந்தப்பதிவு கூட மிக அருமை சுரேகா

    ReplyDelete
  40. அன்பின் சுரேகா, இப்படித்தானே என்னை மீட்டெடுத்தீர்!

    ReplyDelete
  41. வாங்க கோவி.கண்ணன் அண்ணே!

    எவ்ளோ நாளாச்சு ? :)

    ஆமா..நானும் கவனித்திருக்கிறேன். உங்கள் எழுத்துக்களில் சார்பு இல்லாமையை!

    மிக்க நன்றி அண்ணே!

    ReplyDelete
  42. வாங்க தேனம்மை லக்ஷ்மணன்.

    ஆமாம்..அதே சுரேகாதான்! :))

    மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  43. அய்..! செல்வா ! வாங்க வாங்க!

    அன்புக்கு நன்றிப்பா!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!