புன்னகைத் தூக்கு!




ஊரோரப்
புளியமரத்தில்
தூக்கில் தொங்குவேன்
நான் !

அழுதரற்றிக்
கால்பிடித்து
கழுத்திறுகல்
உறுதிசெய்து
என்
இறப்பில்
மகிழ்வான்
அவன்!

பக்கத்தில்
கண்ணீருடன்
பதைபதைப்பாள்
அவள்!
பத்தாம் நாள்
காரியத்திற்கு
பத்துநாள் இருக்கிறதே?

அதுவரை
அவள் வீட்டில்
ராத்தங்க
விடாமல்
செய்துவிட்ட
மகிழ்வொன்று
புன்னகையாய்
வெளிவந்து
என்
நாக்கை நீட்டும்!

Comments

  1. எப்படிங்க இப்படி...?வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. என்னது இது ??? ஒண்ணுமே புரியலையே.

    ReplyDelete
  3. நன்றி மதுரை சரவணன்!

    ReplyDelete
  4. புரியலையா? அப்படின்னா கட்டாயம் இது கவிதைதான்..! :))

    ரோமியோ ஜி!
    இப்ப புரியுதா பாருங்க!

    கணவனின் நடவடிக்கையால்,
    தூக்கில் தொங்கும் மனைவி..!
    தான் இறந்த பத்து நாட்களில்
    அவன், இன்னொருத்தி
    வீட்டுக்குப் போகமாட்டான்
    என்ற மகிழ்வுடன்!

    ReplyDelete
  5. இதே கவிதையை வைஸ் வெர்ஸாவாக போட்டாலும் சரியாகத்தான் இருக்கும் ஜி.

    ReplyDelete
  6. பயம்ம்ம்ம்ம்மா இருக்கு.

    ரொம்ப நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  7. வாங்க கேபிள் ஜி!

    ஆமாம்..! சரிதான்..!

    ReplyDelete
  8. வாங்க விக்னேஷ்வரி!

    மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  9. ஆஹா.. கவிதைக்கு உடனுக்குடன் விளக்கவுரையும், பொழிவுரையையும் தெரிவித்த அண்ணன் கவிஞர் சுரேகா வாழ்க..!

    ReplyDelete
  10. நல்லா இருக்கு சுரேகா

    ReplyDelete
  11. வாங்க உண்மைத்தமிழன் நட்சத்திரமே!

    நான் உங்களுக்கு அண்ணனா.....????

    டொம்.....!!!!!

    ReplyDelete
  12. வாங்க ட்டி.வி.ஆர்.சார்!

    மிக்க நன்றி!

    ReplyDelete
  13. http://pudugaithendral.blogspot.com/2010/03/blog-post_5598.html

    thodar pathivuku koopitruken

    ReplyDelete
  14. யாருக்கு இந்தக்கவிதை! படு பயங்கரமா இருக்கு!

    ReplyDelete
  15. வாவ்...இதை இப்படி கூட சொல்ல முடியுமா...நல்லா இருக்குங்க

    ReplyDelete
  16. வாங்க புதுகைத்தென்றல்..!

    பாத்துருவோம்!

    ReplyDelete
  17. வாங்க சாந்தி லெட்சுமணன்!

    கிராமங்களில், மனைவியை பகிரங்கமாக ஒதுக்கும் கணவர்களுக்குத்தான்!

    //பயங்கரமா இருக்கு!//
    அப்படியா? என்ன செய்றது? :))

    ReplyDelete
  18. வாய்யா சிவா!

    இதுக்கும் சிரிப்பா?

    ReplyDelete
  19. வாங்க அப்பாவி தங்கமணி!

    மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  20. நான் முதலில் ஒரு ஆணின் மனவெளிப்பாடாக படித்துவிட்டேன்.. இரண்டாம் முறை வாசிக்கும் போது புரிந்தது..
    அருமையாக வந்திருக்கிறது.. சூப்பர் சார்..

    ReplyDelete
  21. jakathish thuthukuti

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!