சுகாதாரமான லஞ்சம் மற்றும் நாளைய செய்தி!

கடந்த சில நாட்களாக, மருந்துகள் கண்காணிப்புத்துறையும், சுகாதாரத்துறையும் மண்டை பிய்த்துக்கொண்டும், பிய்த்துக்கொள்ள வைத்துக்கொண்டும்தான் இருக்கிறார்கள். இதற்குப்பின்னணியில் இவர்களது லஞ்ச ஆட்டம் இருப்பது வசதியாக மறைந்துவிடுகிறது. அந்த ஆற்றாமையுடன் திரியும்போது இன்று ஒரு விஷயம் வினையாற்றவைத்திருக்கிறது.

சாராள் இல்லம் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன்.
அதன் நிர்வாகி டைசன் மிகவும் சிரமத்துக்கிடையில் ஒரு வாடகை வீட்டில் அந்த இல்லத்தை நடத்திவருகிறார்.

இதற்கிடையில் சமூகநலத்துறையின் அங்கீகாரத்துக்காக , மற்ற துறைகளில் சான்றிதழ் வாங்கவேண்டும் என்று அவரிடம் அதிகாரிகள் கூற, ஒவ்வொரு துறையாக சுற்றிவந்திருக்கிறார். எங்கு பார்த்தாலும் லஞ்சம்!

அது ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட ஒரு தனிமனிதரிடம் வாடகைக்கு இருக்கும் பலமாக உள்ள கட்டிடம் - இது உண்மை
' பலமாக உள்ளது ' என்று பொதுப்பணித்துறை பொறியாளர் சான்றிதழ் தர, ரூபாய் 1500/-

ஒரே ஒரு கழிவறை உள்ளது. அனேகமாக எல்லாக்குழந்தைகளும் பக்கத்திலேயே உள்ள ஏரியைச்சுற்றியுள்ள கருவேலங்காட்டில் இயற்கை உபாதையைக்கழிக்கிறார்கள். - இது உண்மை!
, இருபது கழிவறை உள்ளது. நான் பார்த்தேன் என்று சுகாதாரத்துறை அதிகாரி சான்றிதழ் கொடுக்க ரூபாய் 1000/-

ஆறு வாளிகளில் மண்ணும், நீரும் வைத்திருக்கிறார்கள் - இது உண்மை!
தீயணைப்பு வசதிகள் அனைத்தும் உள்ளன. fire extinguisher இரண்டு உள்ளது என்று சான்றிதழ் கொடுக்க ரூபாய் 1000/-

அங்கு போர் வைத்து நீர் எடுத்து செலவழித்துக்கொண்டிருக்கிறார்கள். - இது உண்மை!
அது நல்ல நீர்தான் , நீர் ஆதாரம் சிறப்பாக உள்ளது என்று சான்றிதழ் கொடுக்க ரூபாய் 500/-


இன்று நானும் ஊரில் இருந்ததால், அவர் என்னிடம் வந்து புலம்பினார். இவரை நீண்டநேரம் வலியுறுத்தி, நான் எப்போதும் எடுக்கும் லஞ்ச ஒழிப்பு ஆயுதத்தை, எடுத்து நாளை சுகாதார அதிகாரி பிடிபடப்போகிறார்.

என் முன்னிலையில், அவர் சுகாதார அதிகாரியிடம் பேசியது ...

0331182000.wavலஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் பேசியது

0331185500.wav

நாளைய செய்தி? - சுகாதாரத்துறையில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது ! - அப்புறம் என்ன ஆகும்?.....

போலி மருந்துகளையும், மாத்திரைகளையும் உண்டு உயிரிழந்த எண்ணற்ற மனிதர்களுக்கு இவர்கள் செய்த துரோகத்துக்கு முன்னால்........ :(

Comments

 1. உங்கள் தைரியத்துக்கும்,,அறிய முயற்ச்சிக்கும் நான் தலை வணங்குகிறேன்,,தொடரட்டும் உங்களின்
  நற்பனி,,வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. esnips player இப்போது டூல்பாரில் டவுன் லோட் செய்து வைத்திருந்தால்தான், ஒளியைக் கேட்க முடியும். மாற்று வடிவத்தில் ஒளியைப் பதிந்து தளத்தில் இருந்தே கேட்கிறமாதிரி செய்ய முடிந்தால் நல்லது!

  திருட்டுப் பூனைகளுக்கு யாராவது இப்படி சூடு வைத்தால் தான், கொஞ்சமாவது பயம் இருக்கும்!

  ReplyDelete
 3. உங்க தைரியம் பாராட்டுக்குரியது. உண்மை தான் சுரேகா. ஆனா லஞ்சம் வாங்கலைனாலும் "பொழைக்க தெரியாதவன்னும்" "சாவு கிராக்கினும்" "வாங்காம நம்ம உயிர வாங்கரானும்" சொல்றத நானே காது பட கேட்டு இருக்கேன். ரெண்டு பக்கமும் திருந்தனும். தகுந்த தண்டனை கிடைக்கும்னா தான் மாற்றம் வரும். அதுக்கு வழி இல்லாதப்ப இன்னும் நூறு வருஷம் ஆனாலும் மாற்றம் சாத்தியம் இல்லை

  ReplyDelete
 4. வாங்க இளந்தென்றல்...நன்றிங்க!

  ReplyDelete
 5. வாங்க ..moulefrite

  மிக்க நன்றிங்க.. இது எல்லாருக்கும் வரணும்கிறதுதான் ஆசை!

  ReplyDelete
 6. வாங்க அப்பாவி தங்கமணி!

  உங்கள் வருத்தம் உண்மைதான்!

  ReplyDelete
 7. வாங்க கிருஷ்ணமூர்த்தி சார்!

  esnipsல் அவசரத்தில், வேவ் கோப்பாகவே போட்டதால் இந்த பிரச்னை..

  இனி சரி செய்துவிடுகிறேன்.

  மிக்க நன்றி!

  ReplyDelete
 8. நல்ல முயற்சி,

  மனமார்ந்த பாராட்டுக்கள் சுரேகா

  ReplyDelete
 9. வாங்க புதுகைத்தென்றல்... நன்றிங்க!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

இறைவி - எண்ணங்கள் எனது !

சென்னைப் பிழை!