ராமனைக் கொன்றுவிட்டேன்







அன்று எனக்கு அப்படி ஒரு நீராதாரம் கிடைத்தது. பொங்கி ஓட ஆரம்பித்தேன். இருமருங்கிலும் மக்கள் தங்கள் அழுக்குகளை என்னுடன் ஓடவிட்டுக்கொண்டிருந்தார்கள்.படித்துறைகளின் பக்கம் மட்டும் கொஞ்சம் வேகத்தைக்குறைத்துக்கொண்டேன். என்னுள் இறங்கி விளையாடும் அத்தனை குழந்தைகளும் சிரமமின்றி கரையேறுமாறு பார்த்துக்கொண்டேன். நான் அக்காள் கங்கையைப்போல் கோபக்காரி அல்ல! சரயு நல்லவள்! ஆவேசம் அடையாதவள் என்று பெயர் எடுத்திருக்கிறேன். அதைக்காப்பாற்றவே தவறுதலாக விழுபவர்களைக்கூட சிறிது தூரம் இழுத்துச்சென்று பின்னர் கரையேற்றிவிடுவேன்.

மன்னன் ராமன் ஆளும் பகுதியில்தான் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்பதில் எனக்கு மிகப்பெருமை! எவ்வளவு நல்லவன்! காதல் ஒருத்தியைக்கைப்பிடித்து, அவளைக் காக்க படையெடுத்து, எதிரிகளையும், அதர்மத்தையும் சேர்த்து வீழ்த்தி..நெஞ்சம் நிமிர ஆட்சி புரிகிறான்.

என்ன ஒரு வருத்தம்! ..சீதையை சந்தேகப்பட்டு, அவளை விலகச்செய்து, இத்தனை ஆண்டு போராட்டத்தை வீணடித்திருக்கவேண்டாம்.

படித்துறைகளில் பேசும் பேச்சை பல ஆண்டுகளாய்க்கேட்டுவருகிறேன். ராமனின் ஆட்சிபற்றி எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்! இப்போது ராமனுக்கு வயதாகிவிட்டதாம்.! சீதையின் நினைவில் மிகவும் வாடுகிறானாம்.!

இரவாகிவிட்டது. எல்லாப்படித்துறைகளிலும் ஆள் நடமாட்டமே இல்லை! வேடிக்கை பார்த்துக்கொண்டே நானும் பயணித்தேன். அழகான ஒரு மனிதன் படித்துறையில் இறங்கினான். அருகில் வந்ததும் பார்த்தேன். முதுமை அடைந்திருந்தான். ஆனாலும் பேரழகு! ஏதோ முணுமுணுக்க ஆரம்பித்தான்!

இந்த வாழ்வு போதுமெனக்கு! முடித்துக்கொள்கிறேன் ! சீதா என்னை மன்னித்துவிடு!

ஓ..ராமனாக இருக்குமோ? என்று நான் அதிர்ந்துகொண்டே...

'அன்பரே! நீர் இராமபிரான் தானே? என்றேன்.

யார் பேசுவது? என்றான்!

நான் சரயு! ஓடிக்கொண்டிருக்கும் நதி!

சொல் சரயு! என்ன விஷயம்?

என்ன ராமா? வாழ்வை முடித்துக்கொள்ள வந்துவிட்டு சாதாரணமாகக்கேட்கிறீர்?

ஆம்! சரயு! ஏகபத்தினி விரதன் ராமன் தற்கொலை செய்து இறக்கப்போகிறேன்!

எனக்கு சிரிப்பும் அழுகையும் சேர்ந்துவந்தது.

என்ன ராமா இப்படிச்சொல்கிறீர்?

ஆம் சரயு! மனித ஜென்மம் எடுத்துவிட்டேன். கட்டிவந்த காதல் மனைவியை - என் நேர்மையை நிரூபிக்க - இழந்துவிட்டேன். எத்தனை ஆண்டுகள்தான் மனைவி இல்லாமல் மறுகுவது? சீதா திரும்புவாள் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் அவள் வரவே இல்லை! வேறு ஒரு பெண்ணை மணந்தாலும் தவறில்லை. ! ஆனால் உலகமே போற்றும் ஏகபத்தினி விரதனென்ற பெயரைக்காப்பாற்ற உணர்வுகளைப் பலியிட்டேன்! இதற்கு மேல் முடியவில்லை! என்னை சாகவாவது விட்டுவிடு!

மன்னிக்கவேண்டும் ராமா! நீங்கள் இறந்து என்னை கெட்டவளாக்காதீர்கள். சரயு நல்லவள் , ஆவேசப்படாதவள் என்று நற்பெயர் எடுத்துவைத்துள்ளேன். மேலும்...

மேலும்..?

உங்கள் அறியாமையை எண்ணி சிரிப்புதான் வருகிறது !

என்ன அறியாமை?

சீதையைத்தவிர வேறொரு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காத நீங்கள், என்னை மட்டும் தழுவலாமா?

பரவாயில்லை சரயு! ஆண்டாண்டு காலமாய் அடக்கிவைத்த உணர்ச்சிகள் அழிந்து போக வேண்டிதான் தற்கொலைக்கு முடிவெடுத்தேன். அதே உணர்ச்சிகளுக்கு நீயொரு வடிகாலாகவும் அமைந்தால், மகிழ்ந்துகொண்டே மரணிப்பேன்.

அடப்பாவி ராமா! தவறே செய்யாதவளை தண்டித்துவிட்டு, அவள் கோபம் கொண்டதற்காக, இன்னொருத்தியைத் தேடி வந்திருக்கிறாயே? உன்னை மனிதரிலேயே சேர்க்க முடியாது! தெய்வமென்று யார் சொன்னது? உன் பராக்கிரமங்கள் கேள்விப்பட்டு பிரமித்தவள் நான்..ஆனால் என் அனுமதி இல்லாமல் என்னை நீ தீண்டுவதை நான் விரும்பவில்லை!

நான் உன்னைத்தீண்டுவது , உனக்கும் எனக்கும் மட்டுமே தெரியும் சரயு!

உலகமே உன்னை தெய்வமெனக்கொண்டாடுகிறது ராமா! நீ இவ்வாறு முடிவெடுத்தால், நாளை என்ன சொல்லும்?

நான் இருக்கும் வரை என்ன சொன்னது? அதையே சொல்லட்டும்! ராமன் தற்கொலை செய்துகொண்டுவிட்டான் என்று சொல்லும்!

உனக்கும், உலகுக்கும்தான் அது தற்கொலை ! ஆனால் என்னை நீ தீண்டிவிட்டாலே அது நீ என்னை செய்யும் கொலை!

உன்னிடம் பேசிக்கொண்டிருக்க நேரமில்லை சரயு! உன் அனுமதியும் தேவை இல்லை! இதோ உனக்குள் இறங்குகிறேன்.

வேண்டாம் ராமா! வேண்..........

உள்ளே இறங்கிய ராமனை நான் கரைப்பக்கம் தள்ளப்பார்க்க... என்னை ஆரத்தழுவி ஏகாந்தமாய் அமிழத்தொடங்கினான். சீதையை ஏந்திக்கொடுத்த அக்னிதேவனாக இருக்கமுடியாது என்னால்!
கடைசிவரை, தன் நற்பெயருக்காக எவர் வாழ்வையும் நாசம் பண்ணத் துணிந்த ராமா! இனி உன்னை யாராலும் காக்க முடியாது.

ஆவேசமாய்ச் சுழன்றடித்தேன் நான்!


Comments

  1. இந்த புனைவான சிறுகதையில் சில விஷயம் புரியவில்லை.
    1.சரயு கற்பிழக்கப்பட்டாளா ராமனால்? அப்படியானால் ராமன் ஏகபத்தினி விரதன் இல்லியா?
    2. சரயு தான் கோபக்காரி இல்லியே? தவறுதலாக விழுந்தாளே கரை சேர்க்கும் நல்லவள் ஆகிற்றே? பின் ஏன் அமிழும் ராமரை சுழன்றடித்து கொன்றாள்?

    இப்படியாக கதை படித்த பின்னும் (கதை படித்து முடித்து போய் படுத்த பின்னும்) சில கேள்விகள் தொக்கி நின்றன.

    பின்னர் எழுந்து வந்து இந்த பின்னூட்டம் இடுகின்றேன். படித்து முடித்த பின்னும் இத்தைகைய சலனத்தை ஏற்படுத்துவது தான் சிறுகதையின் வெற்றி என கேள்வி பட்டிருக்கின்றேன். அந்த விதத்தில் இது ஒரு வெர்றி பதிவு தான் சுரேகா உங்களுக்கு.

    ReplyDelete
  2. மிகவும் வித்தியாசமான் கதை.

    ReplyDelete
  3. வாங்க வாங்க அபி அப்பா! :)

    1. ஆமாம் அப்படித்தான் கொண்டுபோயிருக்கிறேன்.

    2.மதிக்கும் ஒருவன் , தன்னை நல்லவனாகக்காட்டிக்கொள்ள எப்பேற்பட்ட காரியமும் செய்யத்துணியும்போது அவனைப் போட்டுத்தள்ளுவதுதானே மனமாற்றம்?
    " சாதுவான ஹீரோ திடீர்ன்னு பத்துபேரை அடிக்கிறாருல்ல? "

    மிக்க நன்றி அண்ணா!
    :)

    ReplyDelete
  4. வாங்க ராமசாமி கண்ணன்

    மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  5. அன்பின் சுரேகா

    வித்தியாசமான சிந்தனை - நல்லவனான ராமன் - அவனே எடுத்த முடிவினால் - சரயுவைத் தழுவும் போது - சடாரென சரயூ மனம் மாறி அவனைக் கொன்றது - ம்ம்ம்ம்ம்ம்ம்

    சிந்திக்க வேண்டும் - சரியா தவறா என்று

    நல்வாழ்த்துகள் சுரேகா
    நட்புடன் சீனா

    ReplyDelete
  6. என்னய்யா அவதாரத்தையே போட்டுத் தள்ளிட்டே ... மணி சாரே படத்தின் மூலமா சொல்லத் தயங்கிய முடிவை ஒரு சிறுகதை மாதிரிலச் சொல்லி புரட்சிப் பண்ணிட்டியே.

    ReplyDelete
  7. வாங்க சீனா சார்!

    மிக்க நன்றி உங்கள் அக்கறையான அன்புக்கு!

    ReplyDelete
  8. வாங்க தெகா அண்ணா!

    இதுல என்ன இருக்கு? புனைவில்,நாம் சொல்ல நினைப்பதை தைரியமா சொல்றதுதான் படைப்புக்கு நேர்மைன்னு நினைக்கிறேன்.!

    இருந்தாலும் நீங்க ரொம்ப புகழ்றீங்க! :)) நன்றி அண்ணா!

    ReplyDelete
  9. வாசிக்க மட்டுமல்ல, சிந்திக்கத் தூண்டும் ஒரு பதிவு.

    //கட்டிவந்த காதல் மனைவியை - என் நேர்மையை நிரூபிக்க - இழந்துவிட்டேன்.//

    //ஆனால் உலகமே போற்றும் ஏகபத்தினி விரதனென்ற பெயரைக்காப்பாற்ற உணர்வுகளைப் பலியிட்டேன்//

    //நான் அக்காள் கங்கையைப்போல் கோபக்காரி அல்ல! சரயு நல்லவள்! ஆவேசம் அடையாதவள் என்று பெயர் எடுத்திருக்கிறேன். அதைக்காப்பாற்றவே தவறுதலாக விழுபவர்களைக்கூட சிறிது தூரம் இழுத்துச்சென்று பின்னர் கரையேற்றிவிடுவேன்//

    //சரயு நல்லவள் , ஆவேசப்படாதவள் என்று நற்பெயர் எடுத்துவைத்துள்ளேன்//

    சரயுவுக்கும் ராமனுக்கும் அதிக வித்தியாசமில்லை போல தெரிகிறதே, இருவரும் நற்பெயருக்காக மாத்திரம் வாழ்(ந்)பவர்களோ?????

    ReplyDelete
  10. வாங்க தராசு!

    மிக்க நன்றிங்க!

    எப்படி வேண்டுமானாலும் சிந்திக்கலாம்!
    சிந்திக்கணும்! அதுதான் அடிப்படை! :)

    ReplyDelete
  11. மிக அருமையான புனைவுக்கதை

    ஆண்டவனே ஆனாலும் தப்பென்றால் தப்புதான்

    ReplyDelete
  12. வாங்க வேலு.ஜி!

    நன்றிங்க!

    ReplyDelete
  13. புதுமைப் பித்தனின் நாரத ராமாயணம் படித்திருக்கிறீர்களா?

    ராமனை அவன் சமகாலத்தில் இருந்து நிறையப் பேர் வம்புக்கிழுத்து கொல்லப் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்! ராமனுக்கு அப்படி ஒரு ராசி! போகட்டும், விட்டு விடுங்கள்!

    ReplyDelete
  14. வாங்க கிருஷ்ணமூர்த்தி சார்!

    இந்தக்கோணத்தில் யோசிச்சுப்பாத்து எழுதினேன் அவ்வளவுதான்..!

    மேலும்..உதாரணபுருஷன் என்று சொல்லப்பட்டவன் தற்கொலை செய்துகொண்டான் என்பது நெருடுகிறது.!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!