’கேபிளால்’ எழுதலாம்!!

என்ன எழுதலாம்?

காமன் வெல்த் டகால்ட்டிகளைபபத்தி எழுதுவோம்னா..எல்லா நியூஸ் சேனலும் தின, வார, மாத, சாயங்கால, அதிகாலை, மதிய, ராத்திரி இதழ்களும்,டப,சக,டுப்,கரபுர எனும் அனைத்து ரேடியோக்களும் எல்லா விளையாட்டையும் வினையாக்கும் வெப்தளங்களும் போட்டுக் கிழித்துவிட்டன.

அப்புறம் என்னத்த எழுத?

சுரேஷ் கல்மாடி....! யோவ்...உனக்கு மேல் மாடில கல்தான்!


அயோத்தி...தீர்ப்பு...

அண்ணன் தம்பிக்கு ஆளுக்குப்பாதின்னு பிரிச்சதை எழுதலாம்னா முன்னாடி 10 நாள்,
பின்னாடி 3 நாளா எல்லாரும் கருத்தா சொல்லிச்சொல்லி இதாஞ்சரி! அதாஞ்சரி! என்று நல்ல நட்புகளையும் சேர்த்து இடித்து 18வயசுப்பொண்ணை , கெடுத்தவன்
கையில பிடிச்சுக்கொடுத்ததை நியாயப்படுத்தும் நடுநிலையாவது,வெங்காயமாவதுன்னு காங்கிரஸைப் பார்த்து கேக்கலாம்னா...

அதையும் எழுதிப்புட்டாங்க!

அலகாபாத்!! ஓட்டுவங்கி அகலா பாத்து!

எந்திரன்...

விமர்சனமோ ,வியாக்கியானமோ, வியந்தோ எழுதினா..வியாபரத்திலேயே குறியா இருக்கும் சூரியக் குடும்பம் சுடச்சுட அல்வா சாப்பிட்ட மாதிரி, எந்திரன் படத்தைப்பற்றி இணையத்தளங்களில் எண்பதாஆஆஆஆயிரம் இடுகைகள் இடப்பட்ட இமாஆஆலய சாதனை என்று அதையும் அஞ்சு நிமிசத்துக்கொருமுறை போட்டுக்காட்டி கல்லாவை கலகலன்னு நிரப்பிருவாங்க! மேலும், எல்லாரும் எழுதோ எழுதுன்னு எழுதி கீபோர்டில் இருக்கும் எந்திரன் காம்பினேஷன் யுனிகோட் இங்கிலீஷ் எழுத்தெல்லாம் சிதறி ஓடுது! அதையும் மீறி....எப்புடி எழுதறது?

எந்திரன்...
வசவோ வாழ்த்தோ ...வரவுதான்! 120 ரூவா டிக்கெட்டு 300 ரூவாதான்!


அப்புறம் எதைத்தான் எழுதுறது?

போனவாரம் படப்பிடிப்பில் இருந்தப்போ, நானும், கேபிள் அண்ணாச்சியும் மானிட்டர் கிட்ட நின்னுக்கிட்டிருக்கோம்.

 கேமராமேன் ஷ்யாம் சொன்னாரு...

பீல்டுல கேபிள்!
பீல்டுல கேபிள்!

கேமராவுக்கே சம்பந்தமில்லாம ஓரமா நின்னு பேசிக்கிட்டிருந்த கேபிள் அண்ணாச்சி, திரும்பத்திரும்ப பாத்துட்டு நகந்தாரு..! 

மறுபடியும் கேமராமேன்... கேபிள் பீல்டுல..!

நம்ம அண்ணாச்சி.... நான் ஓரமாத்தானே இருக்கேன்னு சொல்ல,

அப்பதான் தெரிஞ்சது...ஷ்யாம் சொன்னது தரையில் கிடந்த  உண்மையான கேபிளை..இந்த மனுசன்... உலகத்திலேயே தான்மட்டும்தான் கேபிள்ன்னு நினைச்சிருக்காரு!
என்ன கொடுமைன்னா...அங்க யாருக்குமே அவரோட கேபிள் சங்கர்ங்கிற பேர் தெரியாது.! என்னா ஒரு கடமை உணர்ச்சி!

இப்படி போய்க்கிட்டிருக்கு உலகம்!!

இப்ப சொல்லுங்க என்னத்த எழுதுறது?

Comments

 1. என்னத்த எழுதன்னு சொல்லிட்டு எல்லாத்தையும்தான் சொல்லிட்டீங்க தலைவரே :))

  ReplyDelete
 2. வாங்க கட்டுரை நாயகரே! :)

  ReplyDelete
 3. வாங்க புதுகைத்தென்றல்... எப்படி இருக்கீங்க?

  சும்மா எழுதிப்பாத்தேன்...ஹி..ஹி..

  ReplyDelete
 4. வாங்க வாங்க அப்துல்லா அவர்களே! :)
  வணக்கம்! :))

  ReplyDelete
 5. வாங்க தேனம்மை ஜி!

  சிரிப்புக்கு நன்றி!

  ReplyDelete
 6. கேபிள ஃபீல்ட விட்டு அப்புறப்படுத்த நடந்த சதியைக் கண்டிக்கிறேன் ;)

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

இறைவி - எண்ணங்கள் எனது !

உன்னைக் காணாது நானிங்கு..