தொப்பைக்கு லீவு - குசும்பனுக்காக...!

இந்தப்பதிவு என் லிஸ்ட்லயே இல்ல!

ஆனாலும் நாலு பேருக்கு நல்லது நடக்கணும்னா இதை செஞ்சா தப்பில்லன்னு..வேலு நாயக்கர் சொன்ன மாதிரி...நண்பர் குசும்பனுக்காக!

படிக்கறப்ப ஒல்லிப்பிச்சானாவோ..கொஞ்சம் பூசினமாதிரியோ இருந்துட்டு, ஒரு நல்ல வேலைக்குச்சேரும்போதுதான்..இந்த தொப்பச்சாமி நம்மகிட்ட லேசா ஒரு இடம் கேக்கும். நம்பளும்..இருந்தா நல்லதுதானேன்னு இடம் கொடுத்துருவோம். அப்புறம்தான் இருக்கு தீபாவளி! அது மெதுவா சுற்றுவட்டாரத்தை ஆக்கிரமிச்சு, ஒரு பழைய பேண்டை 'டர்' றாக்கும்போதுதான் தெரியவரும்..ஆஹா..வில்லன் வீட்டுக்குள்ள பாய் போட்டு படுத்துட்டாண்டான்னு..!

விருந்தாளி வீட்டு ஓனராகும் வாய்ப்பு ஆரம்பிக்கும்.!

அது சொல்றபடியெல்லாம் நாம கேக்குறமாதிரி ஆரம்பிக்கணும். துணி அதிகமா தேவைப்படுவதால், மணியும் அதிகமா தேவைப்பட்டு...

தொப்பை சரணம் கச்சாமின்னு ஆகிடுவோம்...

அப்பதான்..வீட்டுல கல்யாண பேச்ச ஆரம்பிப்பாங்க! அதுவரைக்கும் கூடவே இருந்த ஆள கழட்டிவிடும் பழக்கம் மனைவி வருவதற்கு முன்னரே ஆரம்பிக்கிற கால கட்டம் இதுதான்..!எப்படியாவது இந்த தொப்பச்சாமியை கழட்டிவிட்டுடலாம்னு முடிவுக்கு வந்துடுவோம். அதுக்கான வழிமுறைதான் இப்ப வருது.!

1. யோகாசனத்தில் ஒரு முறை இருக்கு !
2. உணவுப்பழக்கத்தில் ஒரு முறை இருக்கு!

1. யோகாசனம்

அ. கால்களை நன்கு நீட்டி தரையில் படுக்கவும் ( கட்டிலுக்கும்.மெத்தைக்கும் அனுமதியில்லை)
ஆ. இரு கால் கட்டைவிரல்களும் ஒன்றை ஒன்று தொடவேண்டும்,
இ. உடலை 'ட 'வடிவத்தில் மாற்ற வசதியாக கால்களை மேலே தூக்கவேண்டும்.
ஈ. இப்போது , முழங்காலின் பின்புறத்தில் இரு கைகளாலும் இறுக்கவேண்டும்.
உ. தானாக கால் மார்புப்பகுதியை நோக்கி வரும். இறுக்கிப்பிடித்துக்கொள்ளவேண்டும்.
ஊ. இதே அமைப்புடன் மெதுவாக எழுந்திருக்கவேண்டும்.
எ. மீண்டும் படுக்கவேண்டும்.
ஏ. அ...முதல் எ..வரை 20 முறைக்கு குறையாமல் செய்யவேண்டும்.

நேரம் : அதிகாலை....அல்லது காலையில் தூங்கி எழுந்தவுடன்..!
மாலை...அல்லது இரவு உணவுக்கு முன்.!
40 நாட்களில் பலன் நிச்சயம்.!

2. உணவுப்பழக்கம்

காலையில் ராஜா மாதிரி.,
மதியம் மந்திரி மாதிரி
இரவு பிச்சைக்காரன் மாதிரின்னு சொல்லுவாங்க!
(இதை வச்சு நிறைய காமெடி பண்ணலாம்.. ஆனா இது நல்ல தகவல்)

இரவு உணவு முழுமையான இயற்கை உணவா இருந்தாத்தான் முழுப்பலனும் கைமேல...மன்னிக்கவும்..வயித்துமேல கிடைக்கும்.!அதுக்கும் நல்ல காய்கறிகள் இருக்கு.!

முட்டைக்கோஸ், பரங்கிக்காய், பீட்ரூட், தக்காளி, வெள்ளரி, வெங்காயம், வெண்டைக்காய் ஆகியவற்றை பல விதமான உணவுகளா செஞ்சு சாப்பிட்டா....நல்ல பலன் உண்டு.

மு.கோஸ், தக்காளி, வெங்காயம், வெள்ளரி ஒரு காம்பினேஷன்.! முடிந்தவரை சின்னதாக நறுக்கி, உப்புமட்டும் சேர்த்து..உண்ணலாம்.!

பீட்ரூட்டை மட்டும் நறுக்கி..மோர் கலந்து பிசைந்து உண்ணலாம்.

பரங்கிக்காயை சிறு துருவல்களாகத்துருவி, உப்புப்போட்டு பிசைந்த்து உண்ணலாம்.

வெண்டைக்காயை அப்படியே தொட்டுக்கொள்ளலாம்.

இதெல்லாம் அடுப்பிலேயே ஏத்தக்கூடாது !
காரமெல்லாம்...மூச்!
இப்படில்லாம் நடந்துக்கிட்டா...ஆத்தா ஸ்லிம்மாயி அருள் உங்களுக்கு கிடைச்சு...தொப்பச்சாமிக்கு லீவு கொடுத்து அனுப்பிடலாம்.தொடர்ந்து..(இடையிடையேயாவது) கடைபிடிக்கலைன்னா..லீவு முடிஞ்சு நச்சுன்னு வந்து ஜாயின் பண்ணிருவாரு.!

ஆக...40 நாளில் முழுமையான பின்பற்றுதலில்..தொப்பையற்ற பதிவர்..ரெடி!

டிஸ்கி : இது முழுக்க முழுக்க சொந்த அனுபவம்..பலன் 100% கிடைத்தது.

Comments

  1. நீங்கள் சொல்லி இருக்கும் உணவு முறை இரவு சாப்பாட்டுக்கு முன்பா அல்லது பின்பா? கொஞ்சம் புரியும் படி சொல்லவும்.

    ஆமாம் உங்களுக்கு குசும்பன் என்று வேறு யாரையும் தெரியுமா? இந்த பதிவு எனக்குதான் என்று எல்லாம் தப்பாக நினைச்சுட போறாங்க பிரதர். அது வேற குசும்பன் என்று அறிக்கை கொடுத்துவிடுங்க:)

    ReplyDelete
  2. அட...இது என் 25 வது பதிவு!

    ReplyDelete
  3. குசும்பன் said...

    //நீங்கள் சொல்லி இருக்கும் உணவு முறை இரவு சாப்பாட்டுக்கு முன்பா அல்லது பின்பா? கொஞ்சம் புரியும் படி சொல்லவும்.//

    சுரேகா.தன் ஆள்காட்டி விரலை
    தன் முகத்துக்கு
    முன்னால்நீட்டி..!
    "உனக்கு வேணும்டா! பெரிய இவருன்னு நெனப்போ.. !இப்ப இதுக்கு என்ன பதில் சொல்லப்போற!?"

    -இரவு சாப்பாடே அதுதாங்க!

    //ஆமாம் உங்களுக்கு குசும்பன் என்று வேறு யாரையும் தெரியுமா? இந்த பதிவு எனக்குதான் என்று எல்லாம் தப்பாக நினைச்சுட போறாங்க பிரதர். அது வேற குசும்பன் என்று அறிக்கை கொடுத்துவிடுங்க:)///

    ஆமாம்...

    பதிவின் தலைப்பை மாற்றிப் படிக்கவும்.

    தொப்பைக்கு லீவு - குசும்பனுக்காக இல்லை..!

    'எங்க குசும்பன் குதுருக்குள்ள இல்லையே !'

    ReplyDelete
  4. நல்ல பதிவு. நான் ஒரு ஆறுமாசம் யோகா க்ளாஸ்க்கு போய் கொஞ்சம் கத்து வேச்சிருக்கேன் ஆனா தினமும் செய்ய முடியறதில்லை.

    ஆனால் தினமும் வாக்கிங் உண்டு. இங்கு மங்களூரில் 5 - 6 மாதம் மழை பெய்யும் அப்போது வாக்கிங் போக முடியாது அந்த சமயத்தில் தினமும் யோகா செய்வேன்.

    சாப்பாட்டிலும் அதிக கவனம் கொள்வேன் ஸோ நோ தொப்பை!!

    குசும்பா இந்த பின்னூட்டம் உன்னை எரிச்சல் படுத்த அல்ல! அல்ல!! அல்ல!!!

    ReplyDelete
  5. Unga kusumbukku oru alave illaya? Ana lesana thoppai irukkirathum koncham alaguthan.

    ithu patri?

    ReplyDelete
  6. மங்களூர் சிவா said...

    //அந்த சமயத்தில் தினமும் யோகா செய்வேன்.

    சாப்பாட்டிலும் அதிக கவனம் கொள்வேன் ஸோ நோ தொப்பை!!//

    அதான் மேட்டரு! இரவு உணவு ஒரு பெரும் காரணின்னு தெரிஞ்சாலே தொப்பை நம் கட்டுக்குள் வந்துடும்!

    ReplyDelete
  7. sayu said...

    //Unga kusumbukku oru alave illaya?//

    வாங்க! என்னங்க இது!? குசும்பன்கிற பேரைத்தவிர இதில் குசும்பொன்றும் இல்லைங்க!

    //Ana lesana thoppai irukkirathum koncham alaguthan.

    ithu patri?//

    அது அவுங்கவுங்க வசதி :-) வாய்ப்பைப் பொறுத்தது இல்லையா?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!