கடவுள் தேவையா? தேவையில்லையா?

கடவுள் இருக்கிறாரா?

என் அறிவுக்கு எட்டாத, என் சிந்தனை போய் முட்டி நிற்கும் எல்லாச்செயலிலும் கடவுளைக்கொண்டுவந்து நிறுத்தி, திருட்டுப்போன பொருளுக்கு மட்டும் போலீஸைத்தேடியும், முடியாத உடலுக்கு மருத்துவரைத்தேடியும் கடவுளை நட்டாற்றில் நிறுத்துகிறான் ஆத்திகன்!

கடவுள் இல்லையா?

என் பகுத்தறிவை கூறாக்கி,,, பின் அதனைக்கூராக்கி..எல்லாம் உன்னால் முடியும்.! அதற்கு ஏன் இன்னொரு ஆளை இழுக்கிறாய் ? அதற்கு கடவுள் என்று பெயர் இடுகிறாய் என்று தெளிவான முடிவைச்சொல்லிவிட்டுவீட்டுக்கார அம்மாவின் பக்தியைத்தடுக்க முடியாமல் தவிக்கிறான் நாத்திகன்.!

எனக்கு இந்த இரண்டில்கூட குழப்பமில்லை!!
ஆனால் ஒரு முக்கியக்கேள்வி!

அதெல்லாம் சரி! கடவுளைப்பயன்படுத்தி நாம் சாதித்தது என்ன?

நாம் பெரியவர்களா? கடவுள் பெரியவரா? என்று எழும் கேள்விக்கு..எப்போதும் என் பதில், நாம்தான்..ஏனெனில்..நம்மைப்படைத்ததாகக்கூறி கடவுளையே படைத்தவர்கள் நாம்.! ஆனாலும் கடவுள் பெரியவராக ஆகிவிடுகிறார். நம்மைவிட்டே தம்மைப்படைக்கவைத்துவிட்டு!
என்னதான் கோயில்,சர்ச், மசூதி, இன்னபிற மத ஆலயங்கள் போய் கும்பிட்டு வந்தாலும் நாம் சொல்லும் பொய்களும், புரட்டும், திருட்டும்,வஞ்சகமும்...கொஞ்சம் கூடக்குறையாதவர்களாக நம்மைச்சுற்றியவர்களும்..சில சமயம், நாமும்... இருந்துவிடுகிறோம்.

அப்படியென்றால்....கடவுள் தேவையா?

நிறைய மதங்களைத்தோற்றுவித்தோம். இந்தக்காலத்தில் ஒரு மனிதவள ஆலோசகர் செய்யும் வேலையை..மத குருமார்களை விட்டு செய்யச்சொன்னோம். இன்றைய உயரதிகாரிகளின் சொகுசைப்போலவே அவர்களுக்கும், நிறைய சொகுசைப்பழக்கினோம். அவர்களும் கொஞ்சம் நல்லது பண்ணிப்பார்த்துவிட்டு..இதெல்லாம் வேலைக்காகாது என்று எதையெல்லாம் சிஷ்யர்களுக்கும், இவர்களது பக்தர்களுக்கும் செய்யவேண்டாமென்று சொல்லுகிறார்களோ
அதையெல்லாம் அச்சுப்பிறழாமல் செய்து வைத்து...அதிகமாகத் தப்பித்து..ஆசி வழங்க ஆரம்பித்தார்கள்! ஆக...அந்த மாதிரி மதகுருக்களுக்கு..பிழைப்பு நடத்த..கடவுள் தேவை!

இந்தக்கோயிலுக்கு இவ்வளவு நிதிவழங்கினோம்..அந்த பேராலயத்துக்கு அவ்வளவு நிதிவழங்கினோம் ஆகவே உங்கள் மதத்தார் மேல் எங்களுக்குத்தான் லவ்வு அதிகம்! உங்க ஓட்டெல்லாம்..எங்களுக்கே..ஹி ஹி எனும் அரசியல்வாதிகளுக்கு..... கட்டாயம்
கடவுள் தேவை!

உம்மாச்சி கண்ணைக்குத்தும்...கருப்புசாமி நகர்வலம்வருது..வெளியவராத! அப்பத்தை கடிச்சா இரத்தமாவரும்..அப்பம்தான் இயேசு!..எச்சில் முழுங்கினா நோம்பு நிக்காது.., மறுமை ன்னு
குழந்தைகளையும் மாற்று மதத்தினரையும் பயமுறுத்தும் -அப்போதைக்கு தவறுகளையும், தலையீட்டையும் தள்ளிப்போடும்-பெற்றோர்களுக்கும், நண்பர்களுக்கும்...கடவுள் தேவை!

என்னதான் தவறுசெய்யும் உறுதி இருந்தாலும், "கண்காணி இல்லாதார்...." ன்னு தமிழ் இலக்கியம் வந்து பயமுறுத்தும் நேரத்தில் எதுக்கு இந்த வேலை.? நடக்கறபடி நடக்கட்டும்னு 'அவன்' மேல் பாரத்தைப்போட்டுட்டு தவறு செய்ய அஞ்சும் சாமான்ய மனிதனுக்கு....நிச்சயம் கடவுள் தேவை!

எப்படா அவளைப்பார்ப்போம்னு பகலெல்லாம் காத்திருந்து, வீட்டில் டேக்கா கொடுக்கக்கூடிய ஒரே காரணமான கோயிலைச்சொல்லிவிட்டு அவனைப்பாக்கவே வரும் அவளுக்கும் அவனுக்கும் 'அவர்' இருப்பதாகச்சொல்லப்படும் கோயில் தேவைப்படுவதால்...அவர்களுக்கும் கடவுள் தேவை!   
வாழ்வில் எவ்வளவு துன்பம் வந்தாலும், கடவுள்விட்ட வழி என்று..அதை ஏற்றுக்கொண்டு சமூகத்தவறுகளில் ஈடுபடாமல் ஒரு வித கட்டுப்பாட்டுடன் வாழும் அப்பாவி மனிதனுக்கும்...கடவுள் தேவை!

கோயில்கோயிலாகச்சுற்றி, அந்த சாமி அதுக்கு நல்லது..இந்த மாதா இதுக்கு நல்லது..அந்த தர்கா
அதுக்கு நல்லதுன்னு பத்திரிக்கையில் எழுதி பளபளன்னு பென்ஸ் வாங்க நினைக்கும் எல்லா பக்தி எழுத்தாளிக்கும்...கடவுள் தேவை! (அங்க போனவன் நாசமாப்போனா இவனுக்கென்ன?)

அப்புறம்...கல்யாணம், கருமாதி, காதுகுத்துன்னு எல்லா எழவுக்கும் காசாகவே அவனைப்பாக்கும் புரோகிதர்கள்,

வாஸ்து நிபுணர்கள்,

இறை சிகிச்சை மருத்துவர்கள்,

உங்களுக்காக பிரார்த்திக்கிறோம் என்று ஊருக்கு ஊர் உண்டியல் வைத்து காலேஜா கட்டித்தீர்ப்பவர்கள்,

எங்க பரம்பரையே இந்தக்கோயில் சொத்துன்னு ஊர்க்காசை கொள்ளையடிக்கும் தீட்சிதர்கள்,

கோயில் ஆகம கொள்ளையர்கள்,

அனைத்துக்கோயில் பூசாரிகள்,

பாதிரிமார்கள்,
உழைக்காமல் ஊர்சுற்றும் பல்வேறு மத பிரசாரகர்கள்..

(இன்னும் பலர் பட்டியலில் விட்டுப்போயிருக்கும்) ஆகிய அனைவருக்கும் வயிறு வளர்க்க...
கடவுள் தேவை!


அப்ப கடவுள் தேவையில்லையா?

யாருக்கெல்லாம் தேவையில்லை?



                                                                                                                             - தொடரும்

டிஸ்கி: நீங்கள் என்னவேண்டுமானாலும் பின்னூட்டலாம். ஒரு விவாதம்தான் வேண்டும்!
இந்த சிந்தனையைத்தூண்டியவர், நண்பரும்..அண்ணனும் ஆன
சுரேஷ் என்ற கிருஷ்ணமூர்த்தி.! அற்புத சிந்தனையாளர்!

Comments

  1. தம்பீப் பயலே,

    எவ்வளவு பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் கேட்ட கேள்விய, நீ இவ்வளவு சிம்பிலா கேட்டுப்பிட்டு, அதிலிருந்தும் அடி வாங்காம நழுவி வெளியே விழுந்திட்டியே...

    ஆகா மொத்தத்தில நீ பொழச்சுக்குவடா... இன் த நோம் ஆஃப் கடவுள் - தெகா :))

    ReplyDelete
  2. தம்பீப் பயலே,

    எவ்வளவு பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் கேட்ட கேள்விய, நீ இவ்வளவு சிம்பிலா கேட்டுப்பிட்டு, அதிலிருந்தும் அடி வாங்காம நழுவி வெளியே விழுந்திட்டியே...

    ஆகா மொத்தத்தில நீ பொழச்சுக்குவடா... இன் த நேம் ஆஃப் கடவுள் - தெகா :))

    ReplyDelete
  3. சுரேகா,

    //அதெல்லாம் சரி! கடவுளைப்பயன்படுத்தி நாம் சாதித்தது என்ன?//

    அதான் ராமனை பிராண்ட் அம்பாசிடராக கொண்டு பிஜேபி என்று கட்சி உருவாகி இருக்கே அதுவே சாதனை தானே :-))

    //யாருக்கெல்லாம் தேவையில்லை?//

    அப்போ இன்னும் தீர்ப்பு வெளியிடவில்லையா, தீர்ப்பு வந்ததும் வருகிறேன்.
    ----------------------------------
    தெகா,
    //அதிலிருந்தும் அடி வாங்காம நழுவி வெளியே விழுந்திட்டியே...//

    அதுக்குள்ள முடிவுக்கட்டினா எப்படி, அடிக்கொடுக்க ஒரு சங்க் பரிவாரே வரும் காத்திருங்கோ!(ஆனா எல்லாம் அனானியா வரும்!)

    இப்படிக்கு
    நான் கடவுள் aka வவ்வால்!

    ReplyDelete
  4. Namma padhivai adhigam per padikkavendumanal namakku vendam enru sollum KADAVUL namakku thevaippadugirar

    ReplyDelete
  5. அருமை!
    சீரிய சிந்தனை...
    நன்கு எழுதியிருக்கிறீர்கள்.
    சிந்திக்கத் தெரிந்த நேர்மையாளனுக்கு கடவுள் தேவையில்லை.
    சரிதானே சுரேகா?

    ReplyDelete
  6. என்னய்யா தலைப்பு இது??

    கடவுள் தேவையா ?
    தேவை இல்லையா ?

    அப்பிடின்னு.

    வேணுங்கிறவனுக்கு வேணும், வேணாங்கிறவனுக்கு வேணாம்.

    ReplyDelete
  7. என்னய்யா தலைப்பு இது??

    கடவுள் தேவையா ?
    தேவை இல்லையா ?

    அப்பிடின்னு.

    வேணுங்கிறவனுக்கு வேணும், வேணாங்கிறவனுக்கு வேணாம்.

    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.

    ReplyDelete
  8. //வேணுங்கிறவனுக்கு வேணும், வேணாங்கிறவனுக்கு வேணாம்.//

    ரிப்பிட்டேய்...........!

    ReplyDelete
  9. //கடவுள் இருக்கிறாரா?//

    இப்படிக் கேட்டால் விவேகானந்தர் வாரிசாகீடலாம்னு நினைப்பா?

    மனச சுத்தமோ சுத்தமாக்குங்க, அப்புறமா வந்து கேளுங்க.

    வேணா கேக்கணும்னு அவசியமில்ல, நீங்களே புரிஞ்சுக்குவீங்க விளையாட்ட!

    ReplyDelete
  10. ILA(a)இளா said...

    //anyway it is gold..means old//

    நன்றிங்க!

    - பழசுதான்..நமக்குத்தோணினதை எழுதலாமேன்னுதான்..!

    ReplyDelete
  11. Thekkikattan|தெகா said...

    //தம்பீப் பயலே,

    எவ்வளவு பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் கேட்ட கேள்விய, நீ இவ்வளவு சிம்பிலா கேட்டுப்பிட்டு, அதிலிருந்தும் அடி வாங்காம நழுவி வெளியே விழுந்திட்டியே...//

    அது எப்படி 2வதா பின்னூட்டம் போட்டுட்டு சொல்றீங்க! அடி விழுந்தாலும் பரவாயில்லைன்னுதானே போட்டிருக்கு! :-)

    //ஆகா மொத்தத்தில நீ பொழச்சுக்குவடா... இன் த நேம் ஆஃப் கடவுள் - தெகா :))//

    :-))))

    ReplyDelete
  12. Thamizachi said...

    //நல்ல பதிவு//

    நன்றிங்க!

    ReplyDelete
  13. வவ்வால் said...

    //அதான் ராமனை பிராண்ட் அம்பாசிடராக கொண்டு பிஜேபி என்று கட்சி உருவாகி இருக்கே அதுவே சாதனை தானே :-))//

    ஆமாங்க!
    அவுங்களுக்கெல்லாம் கடவுள் கண்டிப்பா தேவை!


    //அப்போ இன்னும் தீர்ப்பு வெளியிடவில்லையா, தீர்ப்பு வந்ததும் வருகிறேன்.//

    கண்டிப்பா வாங்க!..

    ReplyDelete
  14. T.V.Radhakrishnan said...

    //Namma padhivai adhigam per padikkavendumanal namakku vendam enru sollum KADAVUL namakku thevaippadugirar//

    வாங்க TVR..

    ஓ...நீங்க அப்படி வர்றீங்களா? கடவுளே..கடவுளே..! :-)
    அடுத்த பாகம் முழுசா படிச்சுருங்க..விரைவில் வந்துவிடும்!

    ReplyDelete
  15. Anonymous said...

    //அருமை!
    சீரிய சிந்தனை...
    நன்கு எழுதியிருக்கிறீர்கள்.
    சிந்திக்கத் தெரிந்த நேர்மையாளனுக்கு கடவுள் தேவையில்லை.
    சரிதானே சுரேகா?//

    வாங்க.!
    ஆமாங்க..ஆனாலும் இன்னும் நிறைய பேருக்கு கடவுள் தேவையில்லை..!

    ReplyDelete
  16. மங்களூர் சிவா said...

    //என்னய்யா தலைப்பு இது??

    கடவுள் தேவையா ?
    தேவை இல்லையா ?

    அப்பிடின்னு.

    வேணுங்கிறவனுக்கு வேணும், வேணாங்கிறவனுக்கு வேணாம்.//

    :-)
    நன்றி சிவா.., புதுகைத்தென்றல் மற்றும் இறக்குவானை நிர்ஷன்!

    கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது மாறுபட்ட வாதம்!

    இந்த உலகில் நடக்கும் அனைத்து விதமான சமூக, அரசியல், பொருளாதார, அறிவியல்,தொழில் மாற்றங்களுக்கும்..குற்றங்களுக்கும்...
    -கடவுள் தேவையா, இல்லையா -என்பதுதான் விவாதம்..! அதற்காகத்தான் அப்படி தலைப்பிட்டேன். அவ்வளவுதான்.!

    ReplyDelete
  17. Kadavul irukirar athuvum sila nalla manithargal uruvil...........Valkaien sila sikkalana nerangalil vanthu aruthal kodukkum sila uyirvalzhum manithakaduvulkal irukkirargal....


    yeena ithu o.k. va?

    ReplyDelete
  18. sayu said...

    //Kadavul irukirar athuvum sila nalla manithargal uruvil...........Valkaien sila sikkalana nerangalil vanthu aruthal kodukkum sila uyirvalzhum manithakaduvulkal irukkirargal....//
    வாங்க...!

    நீங்க சொல்வது சரிதான்..!
    அதன் பெயர் கடவுள் தன்மைங்க!

    ஆமா..உங்களை எனக்கு நல்லா தெரியும் போல இருக்கே..? :)

    ReplyDelete
  19. கடவுள் இருக்கா இல்லையா என வாதாடவும் "கடவுள்" தேவை!!

    ReplyDelete
  20. Unfortunately everyone needs some hope from "outside".

    ReplyDelete
  21. Surekaa!

    yenna kandupudichittengala?..............

    ReplyDelete
  22. கருப்பன்/Karuppan said...

    //கடவுள் இருக்கா இல்லையா என வாதாடவும் "கடவுள்" தேவை!!//

    ஆமா..கண்டிப்பா..!

    அதானே இவ்வளவு தூரம் கொண்டுவந்து விட்டுடுச்சு! :)

    ReplyDelete
  23. Anonymous said...



    //இப்படிக் கேட்டால் விவேகானந்தர் வாரிசாகீடலாம்னு நினைப்பா?

    மனச சுத்தமோ சுத்தமாக்குங்க, அப்புறமா வந்து கேளுங்க.

    வேணா கேக்கணும்னு அவசியமில்ல, நீங்களே புரிஞ்சுக்குவீங்க விளையாட்ட!//

    கடவுள் மாதிரி வந்து எழுதிட்டுப்போன உங்களுக்கு நன்றி ! :))

    ReplyDelete
  24. சதுக்க பூதம் said...

    //Unfortunately everyone needs some hope from "outside".//

    yeah ! this what i thought!
    You came to the same vibration!

    Thank you Sadhukka boodham!

    ReplyDelete
  25. sayu said...

    Surekaa!

    //yenna kandupudichittengala?..........?//

    இல்லையே!

    ஆனா ஒரே ஒரு க்ளூ கொடுத்தா..முயற்சி பண்றேன்.!

    ReplyDelete
  26. kannda idathil kadavulai thedi kaithu seiya ninaikaathirkal kadavul kidai kka mattar
    kadavul unakkullum yennakkullum than irukkiraar ........
    atharkaka nee kadavulaka pavithukkollathe

    kadavul oru purapporul alla
    kadavul yenbathu oru thanmai kadavul thanmai
    nee kattayam kadavulai kanavenduma
    Anbu sei pira uir kal mel anbu kattu ......
    parivu kaataathe ....
    irakka unarvu anbu alla
    anbu yenbathu iyarkai thanmai
    athu oru malai pol unnidamirunthu poliya vendum
    appothu nee kadavul thanmayai yai mari iruppai..........

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !